எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 6 ஜனவரி, 2010

புத்தகங்கள்

புங்கைப் பூக்கள் மிதக்கும்
குளத்தின் கல்லில்
கால் நனைத்து அமர்ந்து...
மீன்களைப்போல் எண்ணங்கள்
என்னைக் கடித்துக்கொண்டு...
தொலைந்து போகிறேன் ...
ஒவ்வொரு சின்ன அலையிலும் ...
அழித்து அழித்து எழுதுகிறது ..
ஒவ்வொரு பெயராய்...

புத்தகங்கள் கொடுத்த
அனைவரையும் அடுத்தடுத்து...
கற்றுக் கொடுத்த தகப்பனாய் ..
கற்றுக்கொண்ட மகனாய் ..
கடிந்து கொள்ளூம் சகோதரனாய் ..
கனிந்து நிற்கும் நண்பனாய்...
அதற்கும் மேலான
அனைத்துமான ஒருவனாய்...
என் வீட்டின் புத்தக அலமாரியில்
ஏகப்பட்ட புத்தகங்கள்...
பிரிக்கப்படாமல் ...
பிரிக்கப்பட்டு படிக்கப்படாமல்...
அரைகுறையாய் சில...
சில மட்டுமே முழுமையாய் ...
சில அனுபவித்து விழுங்கி ...
சில ஆவியோடு சேர்ந்து...
தினம் பார்க்கிறேன்., தொடுகிறேன் .,
படிக்கிறேன்., உணர்கிறேன் ....
உணர்வுகளின் வெம்மையையும்.,
கதகதப்பையும் .,குளுமையையும் ...
சூரியன் குளத்து நீரில்
மீன்செதில்கள் போல் மினுமினுப்பாய் ...
அழித்து அழித்து எழுதிக் கொண்டு
இருக்கிறது காற்றும் அலையும்....

43 கருத்துகள்:

 1. ம் பூக்களின் காதலிக்கு புத்தகங்கள் மீதுமா? நல்லா இருக்குங்க.

  பதிலளிநீக்கு
 2. சூரியன் குளத்து நீரில்
  மீன்செதில்கள் போல் மினுமினுப்பாய் ...
  அழித்து அழித்து எழுதிக் கொண்டு
  இருக்கிறது காற்றும் அலையும்....
  அருமை...
  புத்தகங்கள் என் அலமாரியில் இதேபோலத்தான்..
  சில மட்டுமே முழுமையாய் ...
  சில அனுபவித்து விழுங்கி ...
  சில ஆவியோடு சேர்ந்து...
  தினம் பார்க்கிறேன்., தொடுகிறேன்
  ஆனாலும் அவற்றின் ஸ்பர்சம் வேண்டியிருக்கிறதே..மனசின் உன்னதம் தொடுவதற்கு!

  பதிலளிநீக்கு
 3. அருமை தேனு . ..
  புத்தங்களை சிறபித்தமைக்கு நன்றி பல

  பதிலளிநீக்கு
 4. ஆற்றொழுக்கான நடை..கட்டியிழுக்கிறீங்க... நல்லாயிருக்கு...

  பதிலளிநீக்கு
 5. ///புங்கைப் பூக்கள் மிதக்கும்
  குளத்தின் கல்லில்
  கால் நனைத்து அமர்ந்து...
  மீன்களைப்போல் எண்ணங்கள்
  என்னைக் கடித்துக்கொண்டு...
  தொலைந்து போகிறேன் ...///

  வாவ். ஆரம்பமே அசத்தலா இருக்கே

  பதிலளிநீக்கு
 6. ///புத்தகங்கள் கொடுத்த
  அனைவரையும் அடுத்தடுத்து...
  கற்றுக் கொடுத்த தகப்பனாய் ..
  கற்றுக்கொண்ட மகனாய் ..
  கடிந்து கொள்ளூம் சகோதரனாய் ..
  கனிந்து நிற்கும் நண்பனாய்...
  அதற்கும் மேலான
  அனைத்துமான ஒருவனாய்...///

  ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க

  பதிலளிநீக்கு
 7. //மீன்களைப்போல் எண்ணங்கள்
  என்னைக் கடித்துக்கொண்டு...
  தொலைந்து போகிறேன் ...//

  எப்படிங்க இவ்ளோ அழகா யோசிக்க முடியுது !!!
  ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு இந்த கவிதை..

  பதிலளிநீக்கு
 8. நல்லாருக்குங்க. புத்தகம் மாதிரியே:)

  பதிலளிநீக்கு
 9. புத்தகங்கள் நம்மை வழிநடத்தும்
  அவற்றை வாசித்தால்...
  ஆனால் அதற்குத்தான் எனக்கு நேரமில்லை..!

  பதிலளிநீக்கு
 10. படித்த புத்தகங்கள்...பிரித்த (மட்டும்) புத்தகங்கள்...கற்றுக் கொடுத்தவை...அனுபவ வரிகள்...

  பதிலளிநீக்கு
 11. மீனுக்கு காத்திருக்கும் கொக்கு போல், கவிதை கரு கிடைக்க ஒற்றைக்காலில் நின்று தவம் செய்வீரா. உங்களுக்கு பின்னால் வருபவர் எழுத, ஏதேனும் மிச்சம் வையுங்கள்

  பதிலளிநீக்கு
 12. நல்ல கவிதை அக்கா.

  நல்ல வாசகியால்தான் நல்ல் எழுத்தாளராகவும் இருக்க முடியும்.

  பதிலளிநீக்கு
 13. எல்லா வலைத்தளங்களையும் சென்று படித்து பின்பே உங்கள் பின்னூட்டத்துக்கு பதில் இடுவதால் சிறிது தாமதம் ஆகிறது ..

  எனவே பொறுத்தருள்க..

  இப்போ விட்டுப்போன சுருண்ட இறால்கள் பின்னூட்டமிட்டுவிட்டு பின் குருஷேத்திரம் அதன் பின் தான் இந்த இடுகைக்கான பதில் போட வேண்டும்

  பதிலளிநீக்கு
 14. நன்றி பாரா


  ராஜா ராணி மாதிரி மட்டும் நெனைச்சுப்பிடாதீக மக்கா
  ஏமாந்து போவீக ,...

  தூரம் உங்க மனசுல ரொம்ப வர்ணங்களைக் கூட்டுது ...

  நாங்களும் சரளைக்காட்டு ஜீவன்கதான்

  பதிலளிநீக்கு
 15. உங்கள் கவிதைகளைப் போலவே உங்களுக்கு வரும் விமர்சனமும் ஆக்கபூர்வமாய் இருக்கிறது ஆச்சரியமாய் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 16. புத்தகங்கள் மூளையின் சொத்துக்கள்

  வாழ்த்துக்கள்

  விஜய்

  பதிலளிநீக்கு
 17. கண்ணன் காதலைத் தொடர்ந்து புத்தகக் காதலா !கண்ணன் கோவிக்கப் போறார் தேனு !

  பதிலளிநீக்கு
 18. //கற்றுக் கொடுத்த தகப்பனாய் ..
  கற்றுக்கொண்ட மகனாய் ..
  கடிந்து கொள்ளூம் சகோதரனாய் ..
  கனிந்து நிற்கும் நண்பனாய்...
  அதற்கும் மேலான
  அனைத்துமான ஒருவனாய்...//

  மிக அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 19. ”ஏகப்பட்ட புத்தகங்கள்...
  பிரிக்கப்படாமல் ...
  பிரிக்கப்பட்டு படிக்கப்படாமல்...
  அரைகுறையாய் சில...”
  நிறய மனிதர்களும் அப்படித்தான்....

  பதிலளிநீக்கு
 20. நன்றி புலிகேசி

  நல்ல அருமையான மறுமணம் புலிகேசி

  பெண்கள் இது போல் துணிந்து முடிவெடுக்க வேண்டும்

  பதிலளிநீக்கு
 21. நன்றி ரிஷபன்

  ஹாஹாஹா சங்கீதமே சௌபாக்யமே

  பதிலளிநீக்கு
 22. நன்றி வேல்

  உங்க உயிரோசை அருமை வேல் விழியும் கூட

  பதிலளிநீக்கு
 23. நன்றி அஷோக்

  நல்லா புக் ஃபேர் எல்லாம் போயிட்டு சூப்பர் இடுகை எல்லாம் போடுறீங்க அஷோக்

  ஹ்ம்ம்ம்ம்ம் எங்களால் தான்போக முடியல

  பதிலளிநீக்கு
 24. நன்றி தமிழ் வெங்கட் என்னோட வலைத்தளத்துக்கு முதல் முறையா வர்றீங்க


  உண்மைதான் தமிழ் வெங்கட்

  பதிலளிநீக்கு
 25. நன்றி ராம்

  உண்மை அரசியலில் நாகரீகம் குறைந்துதான் போய்விட்டது

  பதிலளிநீக்கு
 26. சாலை பாதுகாப்பு பற்றி ஒரு அருமையான இடுகை போட்டு இருக்கீங்க வினோத் நன்றி

  பதிலளிநீக்கு
 27. தினம் தினம் மிக அருமையான பகிர்வு தமிழுதயம்

  எனக்கு நீங்க எழுதுறது எல்லாமே பிடிச்சு இருக்கு தமிழுதயம்

  பதிலளிநீக்கு
 28. நன்றி அக்பர் காந்தம் வைத்து இரும்பை எடுத்த கதை அருமை

  பதிலளிநீக்கு
 29. இந்திய உழவும் உலக உளவும் அருமை ஜோதிஜி

  தமிழ்மணத்தில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

  பதிலளிநீக்கு
 30. நன்றி விஜய் பொங்கல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 31. நன்றி சுஸ்ரி உங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 32. ஹேமா போட்டிக் கவிதை சூப்பர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

  பதிலளிநீக்கு
 33. நன்றி ராம லெக்ஷ்மி தமிழ் மணம் பொட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

  பதிலளிநீக்கு
 34. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...