பிலடெலி என்று ஸ்டாம்ப்ஸ் கலெக்ஷன் பற்றி முன்பே போட்டிருந்தேன். இப்போது என் தாயாரும், என் சின்ன மகனும் மற்றும் நானும் சேகரித்த நாணயங்களைப் பற்றிப் பகிர்கிறேன். உலகளாவிய அளவில் இது ஒரு காலத்தில் பெரும் பொழுது போக்காவும் அரிய சேமிப்பாகவும் இருந்திருக்கிறது. செல்லாமல் போன இந்திய/அந்நிய நோட்டுக்களை எண்ணிப் பார்த்தால் அதுவே லட்ச ரூபாய்களை எட்டும்.
இதில் இந்இதிய நாணயங்களையும் ரூபாய் நோட்டுக்களையும் பகிர்ந்துள்ளேன்.
வரவு எட்டணா,செலவு பத்தணா என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு அணா என்பது ஆறு காசு.
நாலணா என்றால் 24 காசு. ஆனால் 25 காசை நாம் நாலணா என்றும் 50 காசை எட்டணா என்று கூறி வருகிறோம். ( 48 காசுதான் எட்டணா ). ஒரு ரூபாய்க்குப் பதினாறணா. 96 காசுகள்.
அப்போதெல்லாம் டவுன்பஸ்ஸில் எட்டணா டிக்கெட்டில் பயணிக்கலாம்.
அப்போது என்பது ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு.
தேசிய விலங்கான புலியைப் பாதுகாப்பது குறித்து, மீனவர் நலன்குறித்து, இந்திராகாந்தி அம்மையார், ஜவஹர்லால் நேருஜியின் படங்கள், தண்டி யாத்திரை, இந்தியா மேப், (விவசாயத்தின் நெற்கதிர்களின் செழிப்பு), பசுமைப் புரட்சி, சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் கடந்ததைக் கொண்டாடும் விதமாக என காசுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன.