வலைப்பின்னல்
”ஐயோ பாம்பு பாம்பு என்று பதறித் துடித்து எழுந்தாள் முத்தழகி. எங்கே எங்கே என்று
ஓடிவந்தார்கள் அவளது தந்தை செந்தில்நாதனும் தாயும். .
“அதோ.. அங்கே.. அங்கே.. பெரிய்ய்ய பாம்பு . இல்ல இங்கதான்” என்று தன் காலடியைச் சுட்டிக்காட்டினாள். பந்துபோல்
உருண்டிருந்த கம்பளியைக் காலடியில் இருந்து உருவினார் செந்தில்நாதன். இன்னும் பயம்
நீங்காமல் அவள் உடம்பு விதிர்விதிர்த்துக் கொண்டிருந்தது.
”என்னம்மா இது. உல்லன் கம்பிளி இதைப் போய் பாம்புன்னு நினைச்சிட்டியா. கால்ல சுருண்டு சிக்கிருக்கு போல. என்று சிரித்தார். ”உங்களுக்கு எப்பவும் விளையாட்டுத்தான். எழுந்து இந்தத் தண்ணியக் குடிம்மா” என்று கொடுத்தாள் அழகியின் தாய். வாங்கிக் குடித்துவிட்டுப் போங்கப்பா என்று சிணுங்கியபடி எழுந்து சென்றாள் மகள்.