எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 25 பிப்ரவரி, 2016

காரைக்குடிப் புத்தகத் திருவிழாவில் பெண் பூக்கள்.

காரைக்குடிப் புத்தகத் திருவிழாவில் மதுரை மீனாட்சி புக் ஷாப்பில் எனது நூல்கள் கிடைக்கின்றன.

கடந்த 19 ஆம் தேதியிலிருந்து  புத்தகத் திருவிழா நடந்துகொண்டிருக்கின்றது.

புதன், 24 பிப்ரவரி, 2016

ஜெயங்கொண்டத்தில் ஜெயாம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்.

 ஜெயங்கொண்டத்தில் உள்ள மரகதவல்லித் தாயார் சமேத வீரநாராயணப் பெருமாள் கோயிலில் நேற்று அம்மாவின் அறுபத்தெட்டாவது பிறந்த நாளை முன்னிட்டு மகளிருக்குப் புடவை பரிசாக வழங்கப்பட்டது. 100 புடவைகள் இருக்கலாம். டோக்கன் வழங்கப்பட்டு சுமார் பத்துமணி அளவில் அவர்கள் அனைவரும் அங்கே மடைப்பள்ளி அருகே இருந்த ஒரு மண்டபத்தில் அமரவைக்கப்பட்டிருந்தார்கள்

சுவாமி தரிசனம் செய்யச் சென்றோம். அப்போது  நம் உறவினர்  விசாரித்தற்கு அங்கே அமர்ந்தால் டோக்கன் கொடுக்கப்பட்டு நமக்கும் புடவைகள் தரப்படும் என்றார் ஒருவர். விலைப்பட்டியலைப் பார்த்தோம் சுமார் 150 ரூபாய் புடவைகளும் அதோடு 50 ரூபாய் மதிப்புள்ள ரவிக்கைத் துணிகளும் பிணைக்கப்பட்டிருந்தன.

திங்கள், 22 பிப்ரவரி, 2016

நம்பிக் கெட்டோம்.

அறையப்பட்டது நாங்களல்ல.
எங்கள் நம்பிக்கைகள்.

உண்ணும் உணவைப் புறக்கணிக்க வைத்தார்கள்
உச்சரித்த மொழியைப் புறந்தள்ள வைத்தார்கள்.
உடுப்பதையும் நடிப்பதையும் கற்றுக் கொண்டோம்
உறவுகளை ஒதுக்குவதில் பெருமை கொண்டோம்.


விதைகளைக் கொடுத்தார்கள்
உரங்களைக் கொடுத்தார்கள்
விஷங்களையும் வினைகளையும்
விலை கொடுத்து வாங்கிகொண்டோம்

சனி, 20 பிப்ரவரி, 2016

பிலாடெலி - PHILATELY - ALBUM -2,3. முக்கோணத் தபால் தலையும் தேசியத் தலைவர்களும்.

ஸ்டாம்பு கலெக்‌ஷனைத் துவங்க உந்துசக்தியாக இருந்தது எனது அம்மாவும் நாகு மாமாவும்தான். அவர்கள்தான் என் சின்ன மகனுக்கும் இதை அறிமுகப்படுத்தியது. :)

நாடுகள் வாரியாகத்தான் நாங்கள் அடுக்கி இருக்கின்றோம். ஆனால் பறவைகள், பூக்கள், ரயில், பழங்கள், நிகழ்வுகள், தேசியத் தலைவர்கள்  என ஒரு தீம் வைத்து ஸ்டாம்புகளைச் சேகரிப்பவர்களும் உண்டு. 

இனி ஆல்பம் 2, 3 இன் படங்கள். :) 




பங்ளாதேஷ் ,ஹங்கேரி நாட்டுத் தபால் தலைகள். சில சதுரத்திலும் இரு முனையிலும் செங்குத்தாய்ப் படங்கள். முக்கோணத் தபால் தலையும் கூட.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

எங்கள் ப்ளாகில் பெண் பூக்கள் பற்றிய மதிப்புரை.


பெண் பூக்கள்

 



முள்ளும் மலரும் என்கிற தலைப்புக்கு முள் மற்றும் மலர் என்று ஒரு அர்த்தம், மற்றும் முள் கூட மலரும் என்று விளக்கம் சொல்வார்கள் அந்தக் காலத்தில்.


அதுபோலவே இந்தப் புத்தகத்தின் தலைப்பு.  பூக்களில் ஆண், பெண் உண்டா என்ற கேள்வி.  பூக்களாகிய பெண்கள் என்று ஒரு அர்த்தம்.  பெண்கள் எல்லாம் பூப் போன்றவர்கள் என்று சொல்வது..

வியாழன், 18 பிப்ரவரி, 2016

காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

216. எசகேடு - இடைஞ்சல்

217. ஊருணி, ஊரணி,கம்மாய்  - குளம்

218. வெள்ளன்ன - விடியக்காலம்பற

219. நொண்ணன் - உன் அண்ணன்

220. நோத்தா - உன் ஆத்தா

221. நொப்பச்சி - உன் அப்பச்சி

222. தெங்கணம் - அரை வேக்காடு. சமய சந்தர்ப்பம் தெரியாமல் நடந்து கொள்பவர்களைக் குறிப்பது. குறிப்பாகப் பெண் குழந்தைகளை. :)

223. ஒச்சம்- குறை. ( கை கால் போன்ற உடலுறுப்பில் குறை ) பொண்ணுக்கு ஒச்சம் ஏதுமில்லையே என்று திருமண சமயத்தில் விசாரிப்பார்கள்.

புத்தகத் திருவிழா - 2016. காரைக்குடி.

புத்தகத் திருவிழா - 2016. காரைக்குடி.

காரைக்குடியில் வரும் வெள்ளியிலிருந்து பத்து நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.பள்ளிச் சிறார்கள் பங்குபெறும் கலை கலாச்சார நிகழ்வுகளும் பரிசளிப்புகளும் உண்டு.

அனுமதி இலவசம். 10 % தள்ளுபடி :)  கம்பன் (கற்பகம் ) மணி மண்டபத்தில் வழக்கம் போல நிகழ்கின்றது.

14 ஆம் ஆண்டில் பீடு நடை போடுவதற்கு காரைக்குடி 


கண்டு களித்துப் புத்தகங்கள் வாங்கிப் பயன்பெற வாருங்கள்.

புதன், 17 பிப்ரவரி, 2016

பிலாடெலி - PHILATELY - OUR COLLECTION. ஸ்டாம்ப்ஸ் இன்னும் இருக்கா.

தற்போது அருகி வரும் ஹாபிக்களில் ஒன்று ஸ்டாம்ப் கலெக்‌ஷன்.

சும்மா சுவாரசியத்துக்காக சேர்க்க ஆரம்பிச்சு அப்பிடியே கிடப்பில் கிடக்கும் விஷயங்களில் இந்த தபால் தலை சேகரிப்பும் ஒண்ணு. கிட்டத்தட்ட 15 வருடத்துக்கு முன் வரை சேகரிச்சு வைச்சிருக்கேன். அதுக்கப்புறம் தபாலும் அதிகம் வரல. தபால் தலைகளும் சேகரிக்கலை. அதுவரை இருந்ததை இங்கே போடுறேன். இது பத்தி அதிக தகவல்களை இந்தப் பக்கம் கொடுக்குது.

https://en.wikipedia.org/wiki/Philately

என் கலெக்ஷன் மட்டுமில்ல இது என் அம்மா & சின்னப் பையனின் கலெக்‌ஷனும் கூட. இதில் என் மாமா, தம்பி எல்லாரின் பங்களிப்பும் இருக்கு ( ஏன்னா அவங்க வெளிநாட்டில் இருந்து அனுப்பிய தபால் தலைகளும் இருக்கு :)

ஸ்டாம்ஸ் மட்டுமில்ல. கவர்களும் சிலது சேர்த்திருக்கு. அது கிடைச்சதும் போடுறேன்.

இனி ஃபோட்டோஸ்.

முதல்ல மலேயா/ மலேஷியா. இதுல முக்கோண தபால் தலைகளும் கூட இருக்கும்.இதுல மலேய ஆட்சியாளர்களுடன் ப்ரிட்டிஷ் ராணியின் தபால்தலைகளும் இருக்கு.


அடுத்தது சிங்கப்பூர். இதுல மங்குஸ்தான் ரம்புஸ்தான் ஆர்க்கிட்ஸ் ப்ரதானம்.

வாழ்த்துகள் உமா, அகிலா, ஷான், ராஜசுந்தர்ராஜன் !!! வாருங்கள் கொண்டாடுவோம். :)

எங்கள் அன்பின் உமா, அகிலா மற்றும்  நண்பர்கள் ஷான், ராஜசுந்தர்ராஜனின் நூல் வெளியீட்டை என் வலைத்தளத்தில் பகிர்வதில் பெருமையுறுகிறேன்.

தோழி உமாவின் நூல் துயரங்களின் பின்வாசல் - கவிதைத் தொகுதி.

 தலைமை,வெளியீடு,சிறப்புரை:
திரு.பிரபஞ்சன் அவர்கள்

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பதைத் தனி முத்திரையோடு பதிவு செய்ங்க. கல்கி குழுமத்திலிருந்து ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாயைப் பரிசா அறிவிச்சிருக்காங்க.

சிறுகதை, நாவல் , குறுநாவல் அப்பிடின்னு கலந்துகிட்டும் பரிசு கிடைக்கலைன்னு சொல்றீங்களா. இது புது தளம் . இதையும் முயற்சி செய்ங்களேன். உங்களுக்குள்ள இருக்க ஒரு புது இயக்குநரைப் உலகத்துக்குத் தெரியப்படுத்துங்களேன். நிச்சயம் புதுமையான படைப்புகள் இடம்பெறும்னு நம்புறேன்.

திங்கள், 8 பிப்ரவரி, 2016

செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ்


நான் சமைத்த உணவுப் படங்களுடன் டிசம்பர் மாத இணைப்பு குட்டி புக்கில்  செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 வெளியாகி உள்ளது.


தக்காளித் திறக்கல்
பொரித்த தோசை
வரமிளகய்த் துவையல்
இட்லி அவியல்
வெங்காயக் கோஸ்
புதினா புலாவ்
இங்கிலீஷ் காய்கறி பிரட்டல்
பைனாப்பிள் ரசம்
டாங்கர் சட்னி
முருங்கைகாய் கத்திரிக்காய் பச்சடி
அவரைக்காய் இளங்குழம்பு
தென்னம்பாளை பொடிமாஸ்
தட்டைப்பயறு மாவற்றல் குழம்பு
பலாக்காய் பிரட்டல்
மணத்தக்காளிக் கீரை மண்டி
மசாலா பணியாரம்
கதம்பச் சட்னி
சும்மா குழம்பு
கொண்டைக்கடலை மாவடு இஞ்சி மண்டி
கத்தரிக்காய் கோசமல்லி
பரங்கிக்காய் புளிக்கறி
காலிஃப்ளவர் சொதி
பாசிப்பருப்புப் பச்சடி
கருணைக்கிழங்கு மசியல்
கருவேப்பிலை சாதம்
காலிஃப்ளவர் சாப்பீஸ்
குடைமிளகாய் பச்சடி
வெண்டைக்காய் மண்டி
சுண்டைக்காய் பச்சடி
மிளகுக் குழம்பு
வெஜ் மசாலை
வாழைப்பூ கோளா

நன்றி மங்கையர் மலர.

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.

25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்



சனி, 6 பிப்ரவரி, 2016

கோகுலத்தில் குழந்தைகள் உணவுத் தொடர் அறிமுகம். GOKULAM KIDS RECIPES.

கோகுலத்தில் குழந்தைகள் உணவுத் தொடர் அறிமுகம்.

கோகுலத்தில் குழந்தைகளின் குதூகலத்தில் பங்களிப்பு செய்ய வாய்ப்பு கிடைத்தது குறித்து மகிழ்ச்சி. நன்றி கோகுலம்.

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

காதல் கவுஜைகளும் முகநூல் காதலும்.

621. தலைப்பிரட்டைகள்
அலையும் குட்டை.
நண்டுக் காலிகள்
நட்டுவாக்கிளிகள்
நடுவில் மாட்டிய
நன்னீர் மீனுக்கு
மேவா சொர்க்கம்
ஊவா முள்.

622. Ennaith tholaippathu pol elithyillai unnaith tholaippathu
😉

‪#‎sunday_thathpiths‬😇

623. சமூக நீதி, தனிமனித நீதி , மனிதர்களுக்குள் சமத்துவம், என்பதெல்லாம் வடநாட்டில் இரண்டாம் பட்சம்தான் என்பதை அங்கு இருந்த சில காலங்களில் உணர்ந்திருக்கிறேன். . ரோஹித் பற்றிய பகிர்வுகள் சொல்லற்று மனதை அடிக்கின்றன.

624. ennoda fb la thinam niraiya frnd kanama poi add kodukurangka. like & post poda mudiyalaiyam. nan kuda nan potta wall post la comment pana mudiyalai..plz help panungkappa.. ennanu parungka.

my sons..mom ningka romba status pottu torture panuringkannu mark ke control panuraro..

625. கேரளாவில் ஒரு டீக்கடை கூட இல்லை. அங்கே இருந்த நாயர்கள் எல்லாம் கேரளா தவிர எல்லா இடத்திலும் டீக்கடை வைத்திருக்கின்றார்கள். அதேபோல அழகிய சேரநன்னாட்டிளம் பெண்கள் எல்லாம் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார்கள். தேடித் தேடிச் சலித்துப் போனேன் சென்றவருடம் திருவனந்தபுரம் இரண்டுநாட்கள் சென்றிருந்தபோது பார்த்தது அநேகம் முதிர்கன்னிகள்தாம்..

குட்டிம்மாவும் குலசாமியும்.

1. செவ்வண்ணப் பறவைகளாய்
ஓடும் ரயிலுக்குள் புலம் பெயர்கிறார்கள்
கண் சிறகில் வெய்யில் விசிறிக்
கைவிரித்துத் தாவும் கைக்குழந்தைகள்.

2. காக்கையில்லாதபோது
தமக்கையின் குழந்தையை
சோறுண்ணவைக்க
அம்புலி மாமாவாகிறான்.

3. நட்சத்திரப் பருக்கைகளை
இரவுக் காக்கைக்கு வீசிவிட்டு
நிலவுக் குழந்தை துயில
மேக மெத்தையை போடுகிறது வானம்.

வியாழன், 4 பிப்ரவரி, 2016

சிலந்தி



நிமிடங்கள்
சிலந்திவலைகளாய்ச் சுருங்கும்.
நேற்றுப் பிறந்த கவிதை போல

சிலந்தியோ இடம்பெயர்ந்து
புதிது புதிதாய்க் கூடுகட்டும்.
வீட்டின் அத்தனை மூலைகளிலும்

புதன், 3 பிப்ரவரி, 2016

புகை.

நெல் அண்டாவில் அகப்பையால்
கிளறிக்கொண்டிருக்கிறது பாக்கியத்தக்கா

வாரி வாரி இழுபடும் நெல்மணிகளில்
வரையப்படுகின்றன அதன் கைரேகைகளுடன்
அவரவர்க்கான சோறும்.

இடிந்துவிடாமல் அரைத்ததைக்
குருணையாகவும் பெருமணிகளாகவும்
சிலாத்திக் கொண்டிருக்கிறது
பாம்பைப் போல் படமெடுத்தாடும் அரிசியை
உஸ் உஸ்ஸென்ற ஒலியுடன்.

சுளகைத் தட்டி உமியைத் தூவும்
அதன் விரல்களில் தவிட்டு வண்ணத்தில்
உறைந்துகிடக்கிறது உழைப்பின் கல்வி.

மாறு உலக்கையில் தூளாகும்
இடியாப்பத் தூசிகள் மாசற்ற பேரழகியாக்குகின்றன
கருத்து நரை திரை விழுந்த முகத்தை.

கல் நெல் இல்லாக் கடை அரிசியும்
பாக்கெட் இடியாப்ப மாவும் புட்டுமாவும்
பாக்கியத்தக்கா இல்லாமலே வந்து சேர்கின்றன

இடிந்த அதன் கனவுகள் போல
புட்டுத் தூசியும் இடியாப்ப ஒட்டடையும் படிந்து
இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கிறது
அது கண் புகையப் புகைய
புகை உண்ட மண் அடுப்பும்.

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

திருக்குறள் சிறுகதைப் போட்டி. ( பன்னாட்டு புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம் )

மதிப்பிற்குரிய முகநூல் சகோதரர் திரு. கந்தையா முருகதாசன் அவர்கள் பக்கத்தில் பகிர்ந்திருந்த இந்தப் போட்டியை என் வலைத்தளத்தில் பகிர்வதில் பெருமையுறுகிறேன். பங்கு பெறுங்க. பாங்கா எழுதுங்க. பரிசை வெல்லுங்க. வாழ்த்துகள் மக்காஸ் :)


////அன்புடன் படைப்பாளிகளே முகநூல் நண்பர்களே
அனைவருக்கும் பணிவன்பான வணக்கம்.
நேற்றைய தினம் பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் வெகுவிரைவைில் திருவள்ளுவர் விழாவினையும் அதனையொட்டி இடம்பெறவிருக்கின்ற திருக்குறளை முன்னிறுத்தி நடத்தவிருக்கும் சிறுகதைப் போட்டி பற்றிய விபரத்தையும் புகைப்படப் பிரதியாக கீழே பதிவு செய்திருந்தோம். அந்த விபரம் சிறு எழுத்திலிருப்பதால் அவற்றை வாசித்து அறிந்து கொள்வதில் உள்ள சிரமத்தை உணர்ந்து பெரிய எழுத்திலும் ஒரே முறையில் வாசித்தறிவதற்காகவும் மீண்டும; பதிவு செய்து உள்ளோம்.

திருக்குறள் சிறுகதைப் போட்டி
இந்த ஆண்டின் நடுப்பகுதியில் நாம் ஒழுங்கு செய்துள்ள திருவள்ளுவர் விழாவினை முன்னிட்டு சிறுகதைப் போட்டி ஒன்றினை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

ப்ரதிலிபியின் கொண்டாடப்படாத காதல்கள் போட்டி.

ப்ரதிலிபியின் கொண்டாடப்படாத காதல்கள் என்ற போட்டிக்குக் கவிதை/ கதை/கட்டுரை அனுப்பி பரிசை வெல்லுங்க . வாழ்த்துகள் மக்காஸ். 
///////காதல் என்ற மாத்திரத்தில் சிந்தனைக்கு வரும் எதையும் (கதை, கவிதை, கட்டுரை என) எழுதலாம். முக்கியமாக அதிகம் பேசப்படாத, கவனிக்கப்படாத காதல்கள் குறித்து ஆரோக்கியமான பார்வைகள் வரவேற்கப்படுகின்றன. சாதி மதங்களை கடந்த, எல்லைகளை கடந்த, நிற வேற்றுமைகளை கடந்த காதல்கள், தன்பால் காதல்கள், பெற்றோர், நண்பர்கள், விலங்குகளின் மீதான காதல்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். காதலின் மீது புதிய கோணங்களை புகுத்தும் எழுத்துக்களை வரவேற்கிறோம்.







Related Posts Plugin for WordPress, Blogger...