எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 17 பிப்ரவரி, 2016

பிலாடெலி - PHILATELY - OUR COLLECTION. ஸ்டாம்ப்ஸ் இன்னும் இருக்கா.

தற்போது அருகி வரும் ஹாபிக்களில் ஒன்று ஸ்டாம்ப் கலெக்‌ஷன்.

சும்மா சுவாரசியத்துக்காக சேர்க்க ஆரம்பிச்சு அப்பிடியே கிடப்பில் கிடக்கும் விஷயங்களில் இந்த தபால் தலை சேகரிப்பும் ஒண்ணு. கிட்டத்தட்ட 15 வருடத்துக்கு முன் வரை சேகரிச்சு வைச்சிருக்கேன். அதுக்கப்புறம் தபாலும் அதிகம் வரல. தபால் தலைகளும் சேகரிக்கலை. அதுவரை இருந்ததை இங்கே போடுறேன். இது பத்தி அதிக தகவல்களை இந்தப் பக்கம் கொடுக்குது.

https://en.wikipedia.org/wiki/Philately

என் கலெக்ஷன் மட்டுமில்ல இது என் அம்மா & சின்னப் பையனின் கலெக்‌ஷனும் கூட. இதில் என் மாமா, தம்பி எல்லாரின் பங்களிப்பும் இருக்கு ( ஏன்னா அவங்க வெளிநாட்டில் இருந்து அனுப்பிய தபால் தலைகளும் இருக்கு :)

ஸ்டாம்ஸ் மட்டுமில்ல. கவர்களும் சிலது சேர்த்திருக்கு. அது கிடைச்சதும் போடுறேன்.

இனி ஃபோட்டோஸ்.

முதல்ல மலேயா/ மலேஷியா. இதுல முக்கோண தபால் தலைகளும் கூட இருக்கும்.இதுல மலேய ஆட்சியாளர்களுடன் ப்ரிட்டிஷ் ராணியின் தபால்தலைகளும் இருக்கு.


அடுத்தது சிங்கப்பூர். இதுல மங்குஸ்தான் ரம்புஸ்தான் ஆர்க்கிட்ஸ் ப்ரதானம்.


அடுத்தது எமிரேட்ஸ். இது எல்லாமே தம்பி அனுப்பிய கடிதாசில இருந்ததுதான் :)
பேரீச்சை மரங்களும் மசூதிகளும் ப்ரதான இடம்.


அரபு நாடுகள்.


ஸ்காட்லாண்டு



ஆஸ்த்ரேலியா

இப்பிடி பாக்கெட்டுல போட்டும் விக்கிறாங்க நெய்வேலியில். :)

இன்னும் இருக்கும் இரு ஆல்பங்களைப் பின்னர் பகிர்கிறேன். :)


8 கருத்துகள்:

  1. திருச்சியில் இருந்தபோது ஒரு ஆர்வத்தில் ஸ்டாம்ப் சேகரிக்க ஆரம்பித்தேன் ஓரளவுக்கு சேர்ந்ததும் என்னைவிட ஆர்வமாகச் சேகரித்த நண்பர் ஒருவருக்குக் கொடுத்து விட்டேன் பிறகு காயின்கள் சேர்க்க ஆரம்பித்தேன் அதுவும் அல்ப ஆயுசில் போயிற்று.

    பதிலளிநீக்கு
  2. இதுபோன்ற விசித்திரமான தபால்தலைகளை எப்போதாவது பிறர் காட்டினால், இப்போதெல்லாம் பார்ப்பது உண்டு.

    சிறுவயதில் நம் எல்லோருக்குமே இதில் ஓர் ஆர்வம் இருந்திருக்கும்தான். வயது ஆக ஆக மன முதிர்ச்சி ஏற்பட ஏற்பட, இதிலெல்லாம் ஆர்வமோ ஸ்ரத்தையோ பொறுமையோ கொஞ்சமும் இருப்பது இல்லை.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. என் கல்லூரி கால நண்பர் ஒருவர் தீப்பெட்டிகள் சேகரித்தார் - அவருக்காக தில்லியிலிருந்து கூட தீப்பெட்டிகள் சேகரித்துக் கொடுத்தது நினைவுக்கு வந்தது.....

    நல்லதோர் சேகரிப்பு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  4. ஆச்சி...எனக்கிட்டேயும் கொஞ்சம் இப்படியான சேகரிப்புகள் இருக்கு. இதில் ஆர்வமுள்ள இதர வலைப்பதிவர்களையும் பங்கெடுக்க வைத்து கூடுதலாக இருக்கும் தபால் தலைகளை பரிமாறிக் கொள்ளல் போன்ற சில விசயங்களைச் செய்வதன் வழி இந்தப் பொழுது போக்கிற்கு மீண்டும் உயிர் தரளாமே.

    பதிலளிநீக்கு
  5. அஹா அருமை பாலா சார் !

    உண்மைதான் விஜிகே சார் சரியா சொன்னீங்க. இது எல்லாம் ஒரு அலமாரியில் கிடந்தது. எடுத்துப் பார்த்துப் பகிர்ந்தேன் :)

    ஆமாம் வெங்கட் சகோ தீப்பெட்டி அட்டைகள், சிகரெட் பெட்டி அட்டைகள் எல்லாம் கூட என் உறவினர்கள் ( சிறுவர்கள் ) சிலர் சேகரித்தார்கள் அப்போது. :)

    அட அருமை. சரியான தகவல் கோபி. கூடுதல் தபால் தலைகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.எப்ப இந்தியா வர்றீங்கன்னு சொல்லுங்க. காரைக்குடியிலோ இராமநாதபுரத்திலோ பார்க்கலாம். அவரவர் கலெக்‌ஷனோடு :)

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  7. ஆஹா! நானும் சேர்த்ததுண்டு. நாணயங்கள் கூட. இப்போதும் மகன் நாணயங்கள் வைத்துள்ளான். ஆனால் தபால்தலைகள் வீடுகள், மாநிலங்கள் பல மாறிய போது தவறிவிட்டது.

    அருமை தேனு..

    கீதா

    பதிலளிநீக்கு
  8. அஹா வெல்கம் கீத்ஸ்.அதையும் இடுகையா போடலாமேப்பா.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...