எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 30 ஜூன், 2020

அரியநாச்சி – ஒரு பார்வை.


அரியநாச்சி – ஒரு பார்வை.

இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஆறாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

சனி, 27 ஜூன், 2020

வாரா வாரம் ஆரவாரம்.

2681. ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி லெக்ஷ்மி தங்க நெல்லிகனி பொழிந்த கதையும், பட்டினத்தார் கதையும், சபரியின் கதையும் என்றுமே அலுப்பதில்லை. துறவு என்பது அவ்வளவு எளிதானதுதானா ? அதிலும் சபரியின் பக்தி பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லை..

2682. தத்வமஸியாக இருக்க விரும்புகிறோம்.. நிஜத்தில்.. நாமும் காமக் க்ரோத லோப மத மாச்சர்யங்களில் சிக்கிச் சீரழிகிறோம். தெய்வதத்தை உணர்கிறோம். ஆனால் அதாகவே மாற எத்தனை கல்பகோடி காலமோ.. எத்தனை பிறவியோ..

2683. பள்ளியில் தவறு செய்தால் முட்டி போடுவோம். பிரார்த்தனையின் போது முட்டி போடுவோம். இங்கே ப்ராணனை எடுக்க முட்டி போட்ட காட்சி கொடூரம். கொரோனா அவலங்களை திசைதிருப்ப ஒரு உயிரை பலியாக்கிட்டாங்களா ? இரவு முழுதும் தூக்கமில்லை. என்ன வாழ்க்கை இது. ? எங்கோ தொடங்கி எங்கோ முடியுது.

2684. நட்டநடு ரோட்டுல நாலு பாவிங்க கழுத்துமேல முட்டிய வச்சு கொல்ற வீடியோ.. பதறுது பாவிகளா. என்னாலயும் மூச்சுவிட முடில.. அப்பிடி என்ன கொலவெறி..

2685. ஒரு ஆட்டுக்குட்டி மாதிரி அந்தாள் செத்துப் போனான் . இப்ப நெனைச்சாக்கூட விதிர்விதிர்க்குது. ஒரு மாதிரி குழப்பமா இருக்கு. எந்த உறுத்தலுமில்லாம ஒருத்தன் மேல எப்பிடி முட்டி போட முடியும். அந்த முழங்காலை எல்லாம் வெட்டி எறியணும்னு கூட அன்னிக்குக் கோவம் வந்தது.

வியாழன், 18 ஜூன், 2020

உல்லாசிகளும் உழைப்பாளிகளும்.

ஹைதையில் உள்ள கலாச்சார கிராமமான ( கைவினைப் பொருட்கள் விற்பனை அங்காடிகளும் உண்டு ) சில்பாராமத்தில் கைவினைக் கலைஞர்களையும் உழைப்பாளி மக்களையும் கௌரவப்படுத்தும் விதத்தில் டாப்ளோ போல சிலைகள் அமைத்துள்ளார்கள்.

அங்கேயே வெய்யில் கால உல்லாச விளையாட்டுகளும் இடம் பெற்றுள்ளன. போட்டிங் இருக்கிறது. அதோடு இந்த மாதிரி ஏர் பலூனில் தண்ணீரில் ஆட்டமும் போடலாம். இது குழந்தைகளுக்கு மட்டுமே.

காற்று நிரப்பிய இந்தப் பந்து/பலூனில் பிள்ளைகள் ஏறியவுடன் இந்த கறுப்பு ஜிப்பை ஒட்டி விடுகிறார்கள். அதன் பின் பிள்ளைகள் உள்ளே தவழலாம், உருளலாம், ஓடலாம். இணைப்பாக கயிறும் உள்ளது. அவர்கள் தடுமாறினால் இழுத்துப் பிடித்து நிறுத்தி வெளியே கொண்டு வரலாம். இந்த உல்லாச பலூனில் ஏற கட்டணம் உண்டு.

பணம் படைத்தவர்க்கான உல்லாச விளையாட்டுகள் இன்னும் பல உண்டு. :)


புதன், 17 ஜூன், 2020

பேர் பெற்ற வீடு.

காரைக்குடி கானாடுகாத்தான் மற்ற செட்டிநாட்டு ஊர்களில் வீட்டுக்கெல்லாம் பெயர் உண்டு. இது பற்றி முன்பே குறிப்பிட்டு இருக்கிறேன். இது 1581.மல்லுப்பட்டியார் வீடு. பொதுவாக செட்டிநாட்டு ஊர்களில் வீடுகள் மேற்குப் பார்த்துத்தான் கட்டப்படுகின்றன. கிழக்கில் பின் வாசல் இருக்கும். 

வெள்ளி, 12 ஜூன், 2020

கூம்பு ஆலாத்தியும் சதுராலாத்தியும்.

கூம்பு ஆலாத்தியும் சதுராலாத்தியும். 

1571. சுவாமிக்குக் காசு முடிந்து வைத்தல் -  திருமணம் போன்ற நல்ல நிகழ்வுகளின் போது ஊரில் இருக்கும் எல்லாச் சாமிக்கும் நிகழ்வு நல்லபடியாக நிறைவேற வேண்டுமென்று காசு முடிந்து வைப்பார்கள். இது அந்தக்காலத்தில் நாலணா, எட்டணா என்ற அளவில் இருந்தது. சோமண்ணன் என் அம்மாவிடம் இந்தப் பணத்தைப் பெற்று ( விட்டுப் போன சாமிகளையும் அவரே சொல்லுவார் – நெல்லிமரத்துப் பிள்ளையார் கோவில், கீழ ஊரணிப் பிள்ளையார் கோவில், முத்தாளம்மா, முத்துமாரி, அத்திமரத்துக்காளி என்று இன்னும் பல சாமிகள் உண்டு ) கோவில்களில் செலுத்தி விடுவார்.

1572. படிஅளத்தல் :- உக்கிராணத்துக்குப் பொருட்களைக் கொடுக்கும் முன் தலைமைச் சமையல்காரரிடம் அரிசி அளந்து கொடுப்பார்கள். வீட்டின் பெரியவர் தலைப்பாகை கட்டிச் சாமி வீட்டில் எதிரில் தடுக்குப் போட்டு அமர்ந்து இருப்பார். அவர் முன் அரிசி நிறைந்த பாத்திரமும் மரக்கால் அல்லது படியும் இருக்கும். தலைமைச் சமையற்காரர் வீட்டுப் பெரியவரிடம் ஒரு பெரிய அண்டாவில் அரிசி அளந்து போடச் சொல்லி வாங்கிக் கொள்வார். சாமியைக் கும்பிட்டு விட்டு வீட்டுப் பெரியவரும் ஒரு கைப்பிடி முதலில் போட்டுவிட்டு அதன்பின் மரக்காலிலோ படியிலோ அரிசி அளந்து அண்டாவில் போடுவார்.

செவ்வாய், 9 ஜூன், 2020

நடைவழிப் பயணமும் நாணலும்.

2661.ஜன்னல் வழியாக யாரையாவது பார்த்தால் வேற்றுகிரகவாசிகளைப் பார்ப்பதுபோல் புதிதாயிருக்கிறது

2662. நமக்கு இருக்கும் உடல் உபாதைகள், சிற்சில பிரச்சனைகளோடும் கொரோனாவால் அவதிக்குள்ளாகி அன்றாடக் கடமைகளை நடத்த சிரமப்படுபவர்களைத்  தொலைக்காட்சியில் பார்க்கும்போது, ( முடிந்தபோது முடிந்ததை பக்கத்தில் இருக்கும் சிலருக்கு கொடுத்து உதவினாலும் ) நாம் வீட்டில் சமைத்துச்  சாப்பிடுவது கூட ஏதோ குற்றம்போல் மனதைச் சங்கடப்படுத்துகிறது..

2663. என்னன்னவோ குறிக்கோள்களுடன் இருந்து , அடையாளமற்ற இல்லத்தரசியாகி பிள்ளைகள் வளர்ந்தபின் ஏற்பட்ட விரக்தி, வெறுமையைக் களையவே எழுத வந்தேன். நதியின் போக்கில் நானொரு நாணல். உங்கள் நடைவழிப் பயணத்தில் தென்பட்ட கோபுரங்களுக்கருகில் நானொரு குடில். சாதிக்க வயது ஒரு தடையல்ல என்பதை அறிவேன். இருக்கும்வரை இன்னும் சிறப்பாய்க் கொடுக்க முயல்வேன்.

2664. விசிறிகள் பலவகை..

வெள்ளி, 5 ஜூன், 2020

எனது பதிமூன்றாவது நூல் “ ஆ.. ஆ.. ஆ.. ஆத்திச்சூடிக் கதைகள் “

அதென்ன ஆ..ஆ.. ஆ.. என்று கேட்கின்றீர்களா. ”ஆராவமுதனும்,ஆதித்யாவும், ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும்” என்ற தலைப்பைத்தான் டிஸ்கவரி உரிமையாளர் சகோதரர் வேடியப்பன் அவர்கள் ஷார்ட் ஃபார்மில் ஆ.. ஆ.. ஆ.. ஆத்திச்சூடிக் கதைகள் என்று மாற்றிக் கொடுத்துள்ளார். :)

வியாழன், 4 ஜூன், 2020

அமேஸானில் எனது இருபத்தி ஐந்தாவது நூல் “பெண் அறம்”

எனது இருபத்தி ஐந்தாவது மின்னூல் “ பெண் அறம்”.

///இந்தியாவின் அரசியல் ஆளுமையாக விளங்கிய அன்னை இந்திராகாந்தி அம்மையாருக்கும், தமிழகத்தின் ஆளுமையாகத் திகழ்ந்த ஜெ ஜெயலலிதா அம்மாவுக்கும், மகளிர் அனைவருக்கும் சமர்ப்பணம்.///

இந்நூல் மின்னூலாக அமேஸானில் கிடைக்கிறது. விலை ரூ. 49. 

https://www.amazon.in/dp/B0881NQHLM

பெண் அறம் : PEN ARAM 

இந்த இணைப்பைச் சொடுக்கினால் நீங்கள் அமேஸான் தளத்துக்குச் சென்று வாங்கலாம். அமேஸானில் உங்களுக்கு அக்கவுண்ட் இருந்தால் என் எல்லா நூல்களையும் படிக்கலாம்.  

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் ).

படிச்சுப் பார்த்துட்டு கருத்தைச் சொல்லுங்க மக்காஸ். 

திங்கள், 1 ஜூன், 2020

தும்பு பிடித்தலும் மாப்பிள்ளைக்கு மிஞ்சி அணிவித்தலும்.

தும்பு பிடித்தலும் மாப்பிள்ளைக்கு மிஞ்சி அணிவித்தலும்.

1561. கோவில் மாலை வருதல் :- கோவிலில் பாக்கு வைத்து மணமக்கள் குறித்த விபரங்களைப் பதிவு செய்தபின் திருமணத்தன்று முதல்நாள் கோவில் மாலை வரும். இதை சங்கு ஊதி வாங்கி வைத்துக் கொண்டு வந்த அர்ச்சகருக்கு ( குலதெய்வக் கோவிலில் இருந்து கொண்டு வரும் வேளாருக்கும் ) சில்வர் வாளியில் பழம் தேங்காய் பிஸ்கட்  பணம் வைத்துக் கொடுப்பார்கள்.

1562. நிச்சயம் செய்தல் :- திருமணத்தன்று முதல்நாள் மாப்பிள்ளை வீட்டிலோ பெண் வீட்டிலோ கல்யாணத்தைப் பேசி முடித்து நிச்சயம் செய்து கொள்வார்கள். காலைப் பலகாரம் பேசி முடித்துக் கொள்ளும் வீட்டில் நடைபெறும். இதற்கு மாப்பிள்ளை வீட்டார் பதினொன்று பதினாறு என்ற வகையில் சீர்வரிசை எடுத்துச் செல்வார்கள். அண்டாவில் மஞ்சள் தடவிய தேங்காய் 31, வாழைப்பழச் சீப்பு ( மலைப்பழம் அல்லது செவ்வாழை ) 51 அல்லது 101, சாத்துக்குடி - 16, ஆரஞ்சு - 16, ஆப்பிள்- 16, திராட்சை - 2 கிலோ, மாதுளை - 16, எலுமிச்சை - 21, பேரீச்சம்பழம் - பெரிய பாக்கெட், கல்கண்டு - 1 கிலோ, வெளிநாட்டு பிஸ்கட் - 1 டின் , வேஃபர்ஸ் - 1 டின்,  வெளிநாட்டுச் சாக்லெட் - 1 டின், வெற்றிலை - 5 கவுளி, பாக்கு - 1 கிலோ, மல்லிகைப் பூ - 3 பந்து, இவை வைக்க சில்வர் அண்டா, பேஸின், வாளிகள் தூக்குச் சட்டிகள் எடுத்துச் சென்று பரப்புவார்கள். பெண் வீட்டில் இந்த முறையில் கொஞ்சம் திருப்பித் தருவார்கள்.   

1563. முகூர்த்தம் வைத்தல்/ கழுத்துருவுக்குப் பொன் தட்டுதல்/ கொடுத்தல் :- கழுத்துருவைப் பெண் வீட்டில் முன்பே செய்து வைத்திருப்பார்கள். அதனால் மாப்பிள்ளை வீட்டில் பொற்கொல்லரை அழைத்துச் சென்று புதிதாகப் பவுனைக் கொடுத்துத் தட்டித்தரச் சொல்லி அதைக் கழுத்துரு செய்யும்போது சேர்த்துக் கொள்ளச் சொல்வார்கள். அந்தக்காலத்தில் ஏழுநாள் திருமணம் என்பதால் பொன் கொடுத்துத் தட்டிச் சேர்த்துக் கொள்ளச் சொல்லும் பழக்கம் இருந்தது. இந்த நாளிலும் அது ஒரு நாள் திருமணமாகச் சுருங்கிய பின்னும் இந்த முறைகளைப் பின்பற்றுகிறோம்.

Related Posts Plugin for WordPress, Blogger...