எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 31 மே, 2019

இருப்பதை ஈந்ததனால் ஐஸ்வர்யம் பெற்றவள். தினமலர் சிறுவர்மலர் - 17.


இருப்பதை ஈந்ததனால் ஐஸ்வர்யம் பெற்றவள்

சிலர் தம்மிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும் அதில் துளிக்கூடப் பிறருக்குக் கொடுக்க மாட்டார்கள். மாடி வீடு, மகிழுந்து, மாடு மனை என்றிருப்போரும் கூட அடுத்தவருக்குக் கிள்ளிக் கூடக் கொடுக்க மாட்டார்கள். ஆனால் ஒரு ஏழைப் பெண்மணி , எளிய ஓட்டுவீட்டில் வசித்தவள் தன்னிடம் இருந்த ஒரே ஒரு பொருளை உணவாக தானம் கொடுத்தாள். அதனால் அவள் பெற்றதோ அவள் வறுமையை நீக்கும் வளமான தங்கமழை. ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா குழந்தைகளே. வாருங்கள் அவள் கதை பற்றிப் பார்ப்போம்.
அது நான்காம் நூற்றாண்டுக்காலம். கேரளாவில் காலடி என்னும் சிற்றூரில் ஆர்யாம்பாள் சிவகுரு தம்பதிகளுக்கு மகவாகத் தோன்றினார் ஆதி சங்கரர். தனது எட்டாவது வயதில் துறவறம் மேற்கொண்டு கோவிந்த பகவத் பாதரிடம் சீடராகச் சேர்ந்தார்.
இளம் துறவிகள் தங்கள் குருமார்களுக்கு சேவை செய்ய வேண்டும். வேதம், தத்துவங்களைக் கற்றுக் கொள்ள முடியும். ஆனால் துறவியாயிருப்பதால் தனக்கான உணவை அன்றன்றே உஞ்சவிருத்தியாகப் பெற்று அன்றைக்கே உண்டு விட வேண்டும். எதையும் சேமித்து வைத்துக் கொள்ளக் கூடாது.

புதன், 29 மே, 2019

காரைக்குடிச் சொல்வழக்கு. துடுப்பும் ஒலுகும்.


1221. நட ஒட - நடை உடை என்பதைப் பேச்சுவழக்கில் இப்படிச் சொல்லுவார்கள்.

1222. பொறகாடி - பின்னாடி, பின்னால், அதன் பிறகு, ஒருவருக்குப் பின்னால் பேசுதல், பின்னால் நடப்பதைக் குறித்தல்.

1223. சிஞ்சமிருதம் - ஒருவருக்கு /அவர் சொல்வதற்கு ஆமாம் சாமி போடுதல், ஜால்ரா அடித்தல். காக்கா பிடித்தல், ஐஸ் வைத்தல். சோப்புப் போடுதல். 

1224. தோது - சரிக்குச் சரி. தோது என்றால் பொதுவாக சீர் செனத்தியில் வரும். பெண்ணுக்கு என்ன தோது கொடுப்பார்கள் என்றால் மூணும் ஒண்ணும், ஐஞ்சும் ரெண்டும், பத்தும் மூணும் எனக் குறிப்பார்கள். சிலர் கோடிக்கணக்கில் கூட கொடுப்பார்கள். இதில் முதலில் சொல்வது தொகை, பின்னே சொல்வது நகை. மூன்று லட்சம் ஒரு வைர நகை, ஐந்து லட்சம், இரண்டு வைர நகை, பத்து லட்சம், மூன்று வைர நகை. ( வரதட்சணைதான். - இப்ப இதெல்லாம் கிடையாது.  பெண் வீட்டில் கொடுப்பதை பெண் அல்லது பையன் & பெண் பெயரிலேயே போட்டு விடுகிறார்கள், போட்டு விடுகிறோம் . நகை பெண்ணுக்குக் கொடுப்பது, அவள் போட்டுக்கொள்வது என்பதால் அதிலும் இப்போது டிமாண்ட் கிடையாது. போட்டாலும் சரி போடாவிட்டாலும் சரி என இருக்கிறார்கள் மாப்பிள்ளை வீட்டார். ) 

வியாழன், 23 மே, 2019

தாய்வீடு – ஒரு பார்வை.


தாய்வீடு – ஒரு பார்வை.


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஆறாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

செவ்வாய், 21 மே, 2019

செய்.. செய்யாதே - ஒரு பார்வை.


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஆறாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

வல்லாரை சரஸ்வதியும் வெற்றிலை வேந்தனும்.

வெய்யிலைத் தாக்குப்பிடிக்க உணவில் கொஞ்சநாளைக்குக் கீரைகள் எடுத்துக் கொள்ளுங்களேன். பதினோரு வகையான கீரைகளையும் அவற்றின் மருத்துவப் பயன்களையும் கொடுத்துள்ளேன். மேலும் அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகளும் இடம் பெற்றுள்ளன. 

1. அரைக்கீரை :- கடைந்தும் கூட்டாகவும் சாப்பிடலாம். செரிமானம், மூளைவளர்ச்சி, பத்தியம், குளிர்ச்சி, உடல்வலி அகற்றி உடல் வலுவுண்டாக்கும். வாய்வுக் கோளாறு, மலச்சிக்கல் அகற்றும். குருதித் தூய்மை உண்டாக்கும். 

#அரைக்கீரை மசியல்.



2. தூதுவளை:- ஈளை, இருமலைப் போக்கும்.

ஞாயிறு, 19 மே, 2019

காரைக்குடிச் சொல்வழக்கு. கிட்டங்கியும் பொட்டகமும்.

1201.சாத்து ( வணிகர்) - வியாபார நிமித்தம் இடம் பெயர்ந்து செல்லும் குழுவினர். எனவே சாத்தப்பன் என்ற பெயர் இங்கே உண்டு. சாத்தையனார் என்பதும் ஐயனார் பெயர். ஊனையூர் கோவிலில் உள்ள சாமிக்கு முத்துவெள்ளைச் சாத்தையனார் என்று பெயர். 

1202. செலவு நடை - நடைமுறைச் செலவுகள்/ தினசரிச் செலவுகள் / ஒரு வருடச்செலவு / செலவானவைகளைக் குறிப்பெடுத்தல்.  

1203. மேலாள், அடுத்தாள், சமையலாள், எடுபிடிப் பையன்கள் - சைகோன், மலாயா, சிங்கப்பூர் போன்ற ஊர்களில் வட்டிக்கடைக் கிட்டங்கியில் வேலை செய்தோர். மேலாள் மேனேஜர் போன்ற பதவி, அடுத்தாள் அதற்கு அடுத்த உத்யோகமான கணக்குவழக்குப் பார்ப்பவர் ,  சமையலாள் இவர்களுக்கு சமையல் செய்து கொடுப்பவர், எடுபிடிப்பையன்கள் இவர்கள் வட்டிப் பணம் வசூல் செய்யப் பணிக்கப்பட்டவர்கள். கிட்டங்கியிலேயே வசிப்பார்கள். காலையில் பெட்டியடியை சுத்தம் செய்வதும் இறைவன் திருவுருவங்களைத் துடைத்து பூமாலை பாமாலைகளால் ( திருப்புகழ்) தொழுது, தினப்படி நடைமுறைச் செலவுகளை அடுத்தாளிடம் ஒப்புவித்து பின் கிஸ்தி ( தினப்படி வட்டி ) வசூலுக்குச் செல்வார்கள். 

செவ்வாய், 14 மே, 2019

1987 காதல் கடிதம் !


அன்புள்ள, ஆசையுள்ள, இதயங்கவர்ந்த, ஈதல் குணம் நிறைந்த, உள்ளங்கவர்ந்த ( என்), ஊருக்கெல்லாம் உழைப்பவளான, என்னுடைய, ஏங்கவைக்கும் ( என்னை ), ஐம்புலன்களிலும் நிறைந்திருக்கும் ( என்னுடைய ), ஒருவனை ( என்னை)யே நினைத்திருக்கும், ஓட்டைவாய் தேனு பொம்மிக்கு,

நான் இங்கே என் நினைவுகள் அங்கே.

எனக்கும் உன் ஞாபகமாகவே இருக்கிறது. வீட்டில் ஒவ்வொரு செயலைச் செய்யும்போதும் உன் ஞாபகம்.

இன்று ஊர் வந்து சேர்ந்ததும் நமது ரூமுக்குச் சென்று படுக்க எத்தனித்தபோது தனிமை என்னை மிகக் கடுமையாகத் தாக்கியது. நீயில்லாமல் நமது ரூமே வெறிச்சோடிக் கிடந்தது போல் ஒரு தோற்றம்.

கவிதாயினியின் பார்வையில் என் இரு கவிதைகள்.


முபின் ஸாதிகா.. இவங்க எழுதுற கவிதைகளைப் படிச்சா என் மூளை ஸ்தம்பிச்சிடும். நவீன கவிதைகளில் இவங்களை விஞ்ச ஆளே கிடையாது. இவங்க பூக்கோ, மதிப்பீடு எல்லா எழுதுறதப் படிச்சா நாம் எழுதுறதெல்லாம் கவிதையான்னு திகைப்பு வந்திடும்.
இவங்க ஒரு விமர்சனம் எழுதி அனுப்பி இருந்தாங்க. என் இரண்டு கவிதைகளைப் படிச்சிட்டு. அதையே ரெண்டு தரம் படிச்சேன்னா பார்த்துக்கோங்க. நன்றி ஸாதிகா மேம்.

ஒட்டுக் கேட்கும் யந்திரம்..

வெள்ளி, 10 மே, 2019

போக்கும் ப்ளாக்கும்

2181. எனது இருபதாவது நூல்,”கம்பன் விழாவும் கம்பன் பற்றிய நூல்களும் “ அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 49/- மட்டுமே. :)

கம்பன் விழாவும் கம்பன் பற்றிய நூல்களும்: KAMBAN VIZHAVUM KAMBAN PATRIYA NOOLGALUM (Tamil Edition)

https://www.amazon.in/dp/B07R5CWWRH

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் )

///ச. கைலாசபதியின் அகலிகையும் கற்பு நெறியும் பல்கோணப்பார்வை. பழைய காப்பியக் கதைகளை நவீனத்துவமாக எழுதிப்பார்ப்பது குறித்து எடுத்துக் காட்டுக்களோடு கூறியுள்ளார். கோவிந்தன் எனப்படும் விந்தன் ( பாலும் பாவையும் – நவீன அகலிகை கதை ) , ஜெயகாந்தன் ( அக்கினிப் பிரவேசம் ) ஆகியோர் புதுமைப் பார்வையில் படைத்திருப்பதை ஐரிஷ் எழுத்தாளர் ஜேம்ஸ் ஜோய்ஸ் மற்றும் அமெரிக்க நாடகாசிரியர் ஓநீல் ஆகியோரின் எழுத்துக்களோடு ஒப்புமைப் படுத்துகிறார்.
கருத்து முதல் வாதம், வர்க்க சமுதாயம் தோன்றிய பின் பெண்ணினம் பெற்ற இடம். , ஆணின் யதேச்சதிகாரம், தாயுரிமையை ஒழித்துத் தந்தை உரிமையைப் புகுத்தியது, ஆண் தலைமை, அரசியல் அதிகாரம், மத அதிகாரம், வம்ச அதிகாரம், ஆண் அதிகாரம் ஆகியவற்றைச் சாடுவதோடு சாப விமோசனம் பெற பெண்ணுக்குத் தொழிலோ உத்யோகமோதான் முடிவு என்னும் கருத்தை முன் மொழிகிறார். ///

2182. சீச்சீ ஜீனியா அதெல்லாம் வெஷம் மாதிரி புளிக்கும். ஃப்ரெஷா காச்சுன பசும்பால்ல ஃப்ரெஷா எடுத்த ஃபில்டர் டிக்காக்‌ஷன் மட்டும் போட்டு சாப்பிட்டு பழகுங்க.
ஆஹா ஓஹோ பேஷ் பேஷ். இந்த ஜீனி எல்லாம் அந்நிய நாட்டு இறக்குமதி சதி :) ;) :p

புதன், 8 மே, 2019

பரதன் என்னும் பத்தரை மாற்றுத் தங்கம். தினமலர் சிறுவர்மலர் - 16.

பரதன் என்னும் பத்தரை மாற்றுத் தங்கம்
அண்ணன் தம்பி பாசத்துக்கு எத்தனையோ பேரை உதாரணமாகக் கொள்ளலாம். ஆனால் மாற்றாந்தாய்க்குப் பிறந்து தன் சகோதரன் மேல் அதீத பாசம் வைத்து அவன் வராததால் தீப்பாயத் துணிந்தவனை நீங்கள் எங்கேனும் கண்டதுண்டா. இல்லைதானே அப்படிப்பட்ட பாசக்காரப் பரதன் என்னும் தம்பியைப் பற்றிப் பார்க்கப் போகிறோம் குழந்தைகளே இன்று.
அயோத்தி அரண்மனையில் ஒரே மக்கள் வெள்ளம். அமைச்சர்களும் அரச மாதாக்களான கைகேயி கோசலை சுமித்திரை ஆகியோரும் பரிதவித்துப் பார்த்திருக்கிறார்கள்.

ஞாயிறு, 5 மே, 2019

கோடை விளையாட்டு பாப்பா. அதைக் கூடி விளையாடு பாப்பா. (சம்மர் கேம்ஸ் & காம்ப்ஸ்.)

கோடை விளையாட்டு பாப்பா. அதைக் கூடி விளையாடு பாப்பா. (சம்மர் கேம்ஸ் & காம்ப்ஸ்.)
காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகள் முடிந்ததும் குழந்தைகளைக் குதூகலிக்க வைப்பவை விடுமுறை நாட்கள். பாட்டி தாத்தா இருக்கும் கிராமத்துக்குச் சென்று இயற்கையோடு இயைந்த வாழ்க்கையும் உடலை வலுவாக்கும் விளையாட்டுக்களும் அவர்களைப் புதுப்பிக்கும்
இன்றோ அவர்கள் சம்மர் கேம்ப்களில் அடைபடும் சிறைப்பறவையானார்கள். அல்லது வீட்டுக்குள்ளேயே வீடியோ விளையாட்டிகளில் சிக்கிய ஆங்கி பேர்ட் ஆனார்கள். முன் காலத்திய விளையாட்டுகள் கூடி வாழ்வதையும் விட்டுக்கொடுப்பதையும் ஆளுமைப் பண்பையும் வளர்த்தெடுத்தன. இன்றைய விளையாட்டுகள் தனிமனிதர்கள் இன்னும் தனக்குள் சுருங்கிப் போவதையும் சுயநலத்தையும் தனிமை வெறுமை விரக்தியையும் உருவாக்குகின்றன். ப்ளூவேல் போன்ற சில அபாயகரமான விளையாட்டுகள் மரணம் வரை இட்டுச் செல்கின்றன.
பெருநகரங்களில் வசிப்பவர்க்கு அக்கம் பக்கத்தினரோடு அதிகம் தொடர்பு இருப்பதில்லை. இருந்தாலும் அவர்களுக்கு குழந்தைகளோடு செலவழிக்க நேரம் இருப்பதில்லை. எனவே சம்மர் கேம்ஸ் மற்றும் வகுப்புகளுக்கு அனுப்புகிறார்கள். இதில் அகாடமிக் ஆர்ட், ஸ்போர்ட்ஸ், டெக்னாலஜி, அட்வென்சர், டூர் & ட்ராவல், ட்ரெக்கிங், ஸ்விம்மிங், ட்ரைவிங், ஹார்ஸ் ரைடிங், மிலிட்டரி, டே காம்ப்ஸ், ட்ரெடிஷனல் ஓவர்நைட் கேம்ப்ஸ் ஆகியன அடங்கும். பாரம்பர்யத்தைக் கற்றுக்கொள்ளப் பல்லாயிரம் பணம் கட்டிக் கற்றுக்கொள்ள வேண்டிய பயிற்சிகளாகும்.

சனி, 4 மே, 2019

சாட்டர்டே போஸ்ட். பத்மகிருஷ் விருதுகளால் பெருமைப்படுத்தும் காம்கேர் கே. புவனேஸ்வரி.

பார்க் கல்லூரியின் மகளிர் மன்றத்தைத் திறந்துவைக்க சிறப்பு விருந்தினராக பார்க் கல்லூரியின் முதல்வராக இருந்த திரு திருமாறன் ஜெயராமன் அவர்களால் அழைக்கப்பட்டிருந்தேன். அந்நிகழ்வு முடிந்த சில நாட்களிலேயே காம்கேர் புவனேஸ்வரி அவர்களையும் அக்கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக மற்றோர் நிகழ்ச்சிக்கு அழைத்ததாகவும் அந்நிகழ்ச்சியும் மிக்க பயனுள்ள்தாக அமைந்ததாகவும் குறிப்பிட்டார் முதல்வர் திருமாறன். அதற்கு முன்பே காம்கேர் புவனேஸ்வரி அவர்கள் எனக்கு முகநூல் தோழி என்றாலும் அதன் பின் தான் அவருடைய பணிகளை ஊன்றிக் கவனிக்க ஆரம்பித்தேன். 

பொதுநலத் தொண்டும் சமூகத் தொண்டும் மற்றைய நேர்மறைக் கருத்துக்கள் கண்டும் வியந்ததுண்டு. தன்னம்பிக்கைப் பேரரசியான அவரிடம் என் ப்லாகுக்காக நேற்று எழுதித்தரச் சொல்லிக் கேட்டிருந்தேன். உடனே அனுப்பி விட்டார். அவர் தன் தாய் தந்தை பெயரில் விருதுகள் வழங்குவது குறித்து அன்பும் பாராட்டும். நீங்களும் படித்துப் பாருங்கள். அவரது சுயவிவரத்தைச் சுருக்கும் எண்ணமில்லாமல் அப்படியே வெளியிட்டிருக்கிறேன். அத்தனயும் முத்து.   

////காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்
Since 1992
ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் என பல்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர்.

வெள்ளி, 3 மே, 2019

ஆபுத்திரனும் அமுத சுரபியும். தினமலர் சிறுவர்மலர் - 15.

ஆபுத்திரனும் அமுத சுரபியும்.
மணிமேகலை எடுக்க எடுக்க அன்னம் குறையாத அமுதசுரபி மூலம் பாரில் பசித்தவர்க்கெல்லாம் உணவிட்டாள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் மணிமேகலைக்கு அந்த அமுதசுரபி எப்படிக் கிடைத்தது என்ற விபரம் தெரியுமா. அதற்கு முன்னர் ஆபுத்திரன் என்பவன் அந்த அட்சயபாத்திரத்தை எப்படிப் பெற்றான் அது எப்படி மணிமேகலையின் கைக்கு வந்தது என்பதைப்பற்றியும் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
Related Posts Plugin for WordPress, Blogger...