அன்புள்ள, ஆசையுள்ள, இதயங்கவர்ந்த, ஈதல் குணம் நிறைந்த, உள்ளங்கவர்ந்த
( என்), ஊருக்கெல்லாம் உழைப்பவளான, என்னுடைய, ஏங்கவைக்கும் ( என்னை ), ஐம்புலன்களிலும்
நிறைந்திருக்கும் ( என்னுடைய ), ஒருவனை ( என்னை)யே நினைத்திருக்கும், ஓட்டைவாய் தேனு
பொம்மிக்கு,
நான் இங்கே என் நினைவுகள் அங்கே.
எனக்கும் உன் ஞாபகமாகவே இருக்கிறது. வீட்டில் ஒவ்வொரு செயலைச்
செய்யும்போதும் உன் ஞாபகம்.
இன்று ஊர் வந்து சேர்ந்ததும் நமது ரூமுக்குச் சென்று படுக்க
எத்தனித்தபோது தனிமை என்னை மிகக் கடுமையாகத் தாக்கியது. நீயில்லாமல் நமது ரூமே வெறிச்சோடிக்
கிடந்தது போல் ஒரு தோற்றம்.