நரசிம்ம ஜெயந்திக் கோலங்கள்
பூக்களில் உண்டா ஆண், பெண் என்று என்ற கேள்வியுடன் பூக்களின் பெயர்தாங்கி வரிசை கட்டி நிற்கின்றன 57 கவிதைகள் என பதிப்பாளர் ஜெபக்குமார் வாழ்த்துரை வழங்கியிருக்கிறார்.
எவர்க்ரீன் பாட்டி எஸ் என் லட்சுமி
ஹீரோவாகவோ ஹீரோயினாகவோ ஆகவேண்டும் என்ற தீவிரக் கனவுகளுடன் ஊரை விட்டு ஓடிவரும் எல்லாரையுமே சினிமா உலகம் பூச்செண்டு கொடுத்து வரவேற்பதில்லை. வில்லனாக அறிமுகமானவர் சூப்பர் ஸ்டார் ஆவதும், காமெடியனாக அறிமுகமானவர் ஹீராவாக ஆவதும் சினிமாவில் சாத்தியமே என்றாலும் கிடைக்கும் ரோலில் நடித்து வாழ்க்கைப் படகை ஓட்டிச் சென்றவரே அநேகம்.
அப்படி அறிமுகமான ஒரே ஒரு படத்தில் மட்டும் இளம்பெண்ணாக நடித்தவர், மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள் கிட்டத்தட்ட 58 – 60 வருடங்கள் எவர்க்ரீன் அம்மாவாகப் பாட்டியாக நடித்துச் சென்றவர் நடிகை திருமிகு எஸ் என் லட்சுமி அவர்கள்.
இவர் 1934 இல் பிறந்தவர். விருதுநகர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் பழனியம்மாள் தம்பதியின் பதிமூன்றாவது குழந்தை. தந்தை மறைவுக்குப் பின் கூடப் பிறந்தவர்கள் வாழ்வாதாரத்துக்காகக் கல் உடைக்க இவர் 6 வயதிலேயே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். 11 வயதில் பாய்ஸ் கம்பெனி நாடகக் குழுவுடன் சென்னைக்குச் சென்றார்.
வாராவாரம் சனிக்கிழமை இரவு ஒன்பது மணிக்குப் பொதிகைத் தொலைக்காட்சியில் நடைபெறும் நிகழ்ச்சியின் பெயர் மங்கையர் சோலை.
இந்நிகழ்வில் பங்குபெறும்படி திரு. விஜயகிருஷ்ணன் அவர்கள் அழைத்திருந்தார்கள். ஒவ்வொரு வாரமும் அறிமுகமாகும் பெண்கள் வித்யாசமான துறைகளைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல. வயது வரம்பில்லாமல் விதம்விதமான சாதனைகளைச் செய்தவர்களும் கூட.
பாண்டியனைத் துரத்திய பிரம்மஹத்தி
பாண்டிய மன்னன் ஒருவன் அறியாமல் ஒரு பாவம் செய்தான். அதனால் அவனைப் பிரம்மஹத்தி துரத்தியது. ஆனால் அவன் பக்தியைக் கண்டு கடவுளே அந்தப் பிரம்மஹத்தியிடமிருந்து தப்பிக்கும் உபாயத்தை அப்பாண்டிய மன்னனுக்கு அருளினார். அது என்ன கதை என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே!.
எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டை வரகுணன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். இவனுடைய பாட்டனார் சடையவர்மன். இவனது தந்தை இரண்டாம் இராஜசிம்மன். சிவபக்தியில் சிறந்தவன். கோயில்களுக்குப் பொன்னும் நிதியமும் அளித்துத் திருப்பணிகள் செய்தவன். கோயில்களில் நித்தமும் திருவிளக்கு எரிந்திட இறையிலி அளித்து ஆவன செய்தவன்.
இவனுடைய சமயத் தொண்டுகளைச் சிறப்பித்து மணிவாசகர்,பட்டினத்தடிகள், நம்பியாண்டார் நம்பி ஆகியோரும் கூடப் புகழ்ந்து பாடி இருக்கிறார்கள். சிவ பக்தர்களுக்கு இடையூறு நேராமல் காத்தவன். எப்பொருளிலும் சிவனைக் கண்டு வணங்கியவன். இப்படிப்பட்ட மன்னனுக்கும் ஒரு சோதனை வந்தது. அதுவும் அவன் அறியாமல் செய்த தவறால் வந்தது.
ஒற்றைப் பெற்றோர் எதிர்கொள்ளும் சவால்கள்
”தனியே தன்னந்தனியே
நான் காத்துக் காத்து நின்றேன்” என்று ஒரு பாடல் ரிதம் படத்தில் வரும். அந்தப் படத்தில்
மீனா ஒரு சோலோ பேரண்டாக ஒரு குழந்தையை வளர்த்து வருவார். அதுவும் அவர் பெற்ற குழந்தை
அல்ல. தத்து எடுத்து வளர்க்கும் குழந்தை என்பது க்ளைமேக்ஸில்தான் தெரியவரும்.
பொதுவாக சிங்கிள்
பேரண்ட், சோலோ பேரண்ட் என்கின்ற வார்த்தைகள் தனித்துக் குழந்தைகளை வளர்த்து வரும் ஒற்றைப்
பெற்றோரான தந்தையுமான தாயைக் குறிப்பதாகத் தோன்றினாலும் இக்காலத்தில் அது தாயுமான தந்தையையும்
சுட்டுகிறது. எடுத்துக்காட்டாக நடிகர் இயக்குநர் பார்த்திபன் தன் குழந்தைகளைத் தனியாளாக
வளர்த்துத் திருமணம் செய்துவைத்த நிகழ்வைச் சொல்லலாம்.
ஓரிரு குழந்தைகளோடு தனித்து வாழும் விதவை, மனைவியை இழந்தவர், விவாகரத்துப் பெற்றவர், திருமணம் செய்துகொள்ளாமல் முன்னர் சேர்ந்து வாழ்ந்து இப்போது பிரிந்தவர்கள் மட்டுமல்ல, திருமணமாகாமல் தனித்து வாழ்ந்து ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பவரும் ( சுஷ்மிதா சென் போன்ற மாடல் மங்கையர்) இந்த ஒற்றைப் பெற்றோர் குடும்பத்தில் அடங்குவர்.
எனது பெண் பூக்கள் நூலுக்குத் தோழியும் ஆர்டிஸ்டுமான திருமதி மீனாக்ஷி மதன் சில ஓவியங்கள் வரைந்து கொடுத்தார். அது ஆழி பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்படுவதாக இருந்தது. திரு செந்தில்நாதன் அதற்கான முயற்சிகள் எடுத்திருந்தார். ஏதோ ஒரு காரணத்தால் அது ஓவியங்களுடன் வெளியாகவில்லை.
இது நடந்து பத்து வருடங்கள் இருக்கும். அவர் வரைந்த ஓவியங்கள் என்னிடம் அப்படியே இருந்தன. அவற்றை இன்று இங்கே பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.
இவற்றுக்குப் பொருத்தமான எனது கவிதைகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். காதலர் தினத்தில் வெளியாகவிருந்த இந்நூல் மாபெரும் பேர் பெற்றிருக்கும். ஏனோ அந்த வாய்ப்பை இழந்துவிட்டது.
இருந்தாலும் என் வலைப்பூவின் மகத்துவமும் குறைந்தது அல்லவே. :)
இதுதான் பெண் பூக்களுக்கான அட்டைப்படம்.
போகன் வில்லாப் பூக்கள்
http://honeylaksh.blogspot.com/2009/10/blog-post_28.html
நாதத்தால் வென்றிட்ட சீர்காழி கோவிந்தராஜன்
மணியனின் தொடர்கதை ஒன்றில் ”என்னைவிட்டு ஓடிப்போக முடியுமா. இனி முடியுமா. நாம் இருவர் அல்ல ஒருவர் என்று தெரியுமா” என்று ஹீரோ ஹீரோயினுக்காக ரேடியோப் பாடல் ஒன்றைப் போடுவார். அதன்பின் சிலோன் ரேடியோவில் கேட்ட ஸ்ட்ராங்கான வாய்ஸ் திரு. சீர்காழி கோவிந்தராஜனுடையது. டேப்ரெக்கார்டரில் சங்கே முழங்கு என்று கேட்ட கம்பீரக் குரல்.
எங்களுக்கெல்லாம் மார்கழி என்றாலே சீர்காழிதான். அரைப்பரிட்சை நடக்கும் சமயம் மார்கழி திருப்பள்ளி எழுச்சி ஆரம்பித்து விடும். அப்போது கோயில்களில் லௌட் ஸ்பீக்கர்களில் திருவிளையாடலும், சீர்காழியில் தெய்வீகக் குரலும் கைகோர்த்து நமை எழுப்பும். குளிரும் பனியும் சூழ்ந்து நின்றாலும் விடியற்காலையில் குளித்துக் கோயிலுக்குச் சென்று தரிசனம் முடித்தபின், சீர்காழியின் முழங்கும் குரலோடு சுடச் சுட வெண்பொங்கல் சாப்பிடுவது இதம்.
“தமிழிசையைப் பரப்பியதில் பெரும் பங்கு வகித்தவர்’ எனத் திரு எம். ஏ. எம் அவர்களால் பாராட்டப்பட்டவர். சென்ற நூற்றாண்டில் தமிழிசைச் சங்கங்கள் தோன்றி தமிழை வளர்த்ததுபோல் சீர்காழி போன்றோர்கள் திரையிலும் கூட இனிய, இலக்கண சுத்தமான தமிழ்ப் பாடல்களைப் பாடி வெகுஜனத்தின் மனம் கவர்ந்தனர்.
இராமசாமி தமிழ்க் கல்லூரியில் மகளிர் தின சிறப்பு விருந்தினராக.
காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியில் 8.3.2022 அன்று நடைபெற்ற மகளிர் தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டேன்.
முனைவர் திரு செ நாகநாதன் மிக அழகான வரவேற்புரை நல்கினார். முனைவர் கீதா தலைமை வகித்தார். அடுத்து நான் சிறப்புரை ஆற்றினேன். மாணவர்களுக்குப் பரிசளிக்கும் நிகழ்வில் முனைவர் பா. ஸ்ரீவித்யா பாரதி மாணவர்களை அழைக்க அவர்களுக்கு நூல் பரிசு வழங்கினேன்.
மூத்தோர் தினவிழாக் கட்டுரைப் போட்டி
சர்வதேச முதியோர் தினத்தை ஒட்டி மதுரை தானம் அறக்கட்டளை வெளியிட்ட கட்டுரைப் போட்டி நூல் ஒன்றுக்கு அணிந்துரை எழுதும் வாய்ப்பு அமைந்தது.
தான் கருணை இல்லக் குழந்தைகளின் கட்டுரைகள்.
தான் கருணை இல்லம் நிலக்கோட்டை
முகவுரை
அணிந்துரை:-
தான் கருணை இல்லக் குழந்தைகள் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் சிப்பியின் முத்துக்கள். பள்ளியில் பயிலும் வயதிலேயே தங்கள் வாழ்வியல் அனுபவங்களைக் கொண்டு ஒவ்வொரு மாணாக்கரும் வடித்திருக்கும் கட்டுரைகள் அதி சிறப்பு. இந்நூலில் சிறார்களுக்குச் சிறார்களின் கட்டுரைகளே ஞானக் கண்ணைத் திறக்கும் திறவுகோலாக அமைந்திருக்கின்றன.
”முதியவர்களை மதிப்பவர்கள் வெற்றியை நோக்கித் தங்கள் சொந்தப் பாதையை அமைத்துக் கொள்கிறார்கள்” என்பது ஆப்ரிக்கப் பழமொழி. ”மூத்தோர் சொல் அமிர்தம்” என்பது தமிழ் மொழி. அதை வழிமொழிகிறது செல்வி ஜெயஸ்ரீயின் கட்டுரை. முதியோர்கள் நமது வழிகாட்டிகள் என்று முத்தாய்ப்பாய்க் கூறி இருக்கிறார்.
கெனால்ஸ் செயிண்ட் மார்ட்டின் என்ற கால்வாயின் ஸீன் நதியுடன் இணைகிறது. இந்தப் படகுசெல்லும் பாதை நகரைப் பிளக்கும் ஸீன் நதியின் ஏதோ ஒரு கால்வாய் என்றுதான் தோன்றுகிறது.
ஜீன் ப்ரூயல் என்பவரால் 1917 இல் இந்தப் படகுப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டதா சொல்றாங்க. இந்தப் படகுகளை ஃப்ரான்ஸின் மூன்றாவது பெரிய நகரமான லையன் என்கிற படகுத் துறைமுகத்துல தயாரிக்கிறாங்களாம்.
இதன் அப்பர் டெக்கில்தான் பயணிகளை அமரவைத்துக் கூட்டிட்டுப் போறாங்க. மழை போன்றவை வந்தால்தான் லோயர் டெக்கில். இது பக்கவாட்டுகளில் மூடி இருக்கும். இந்தப் படகுப் போக்குவரத்துல நகரின் முக்கிய அம்சங்கள், கட்டிடங்கள், நிகழ்வுகள் , பற்றிப் பதிவு செய்யப்பட்ட ரன்னிங் கமெண்டரி போடுறாங்க.
குறும்பனால் சாபவிமோசனம் பெற்ற குபேரன் மைந்தர்கள்
புராண காலங்களில் தங்கள் துர்நடைத்தையாலும் அகந்தையாலும் முனிவர்களையும் மகரிஷிகளையும் மதிக்காமல் நடந்து சாபம் பெற்றோர் பலர். சாபம் பெற்றபின் தங்கள் தவறுணர்ந்து சாப விமோசனத்துக்காக சாபமிட்டவரிடமே வணங்கி மன்னித்தருளும்படி வேண்டுவார்கள். உடனே சாபமிட்ட மகரிஷிகளும் முனிவர்களும் சாபவிமோசனத்துக்கான வழிமுறைகளைக் கூறி மன்னிப்பார்கள். இப்படி சாபம் பெற்ற இருவர் பற்றியும் அவர்கள் பெற்ற சாபத்திலிருந்து எப்படி விமோசனம் அடைந்தார்கள் என்பது பற்றியும் பார்ப்போம் குழந்தைகளே.
குபேரனின் புதல்வர்களின் பெயர் நளகூபரன், மணிக்ரீவன். அவர்கள் இருவரும் ஒருநாள் மிதமிஞ்சிய களியாட்டத்தில் அரண்மனை வாவியில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். கூடவே பல்வேறு வகையான மங்கையர்களும் அவர்களுடன் ஜலக்ரீடை ஆடிக் கொண்டிருந்தனர்.
வளையாபதி குண்டலகேசி - மூலமும் உரையும். வெளியீடு.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ளது பாரதி பதிப்பகம். இந்நிறுவனம் 70 ஆண்டுகளாகச் சிறப்பாக நடந்து வரும் பெருமை உடையது.
இதன் தற்போதைய நிர்வாக இயக்குநர் செல்வி நித்யா ராஜேந்திரன். துடிப்பான இளம்பெண்.
இந்த வருடம் புத்தகத்திருவிழாவிற்காகக் கிட்டத்தட்ட 50 புது நூல்களை புது ஆசிரியர்களைக் கொண்டு எழுத வைத்துப் பதிப்பித்து இருக்கிறார். அதில் நானும் ஒருத்தி எனச் சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகின்றேன்.
சிறகில்லா தேவதை தேவயானி
மென்மையான முயல்குட்டிப் பாதங்கள்தான். மனம் மயக்கும் மோனாலிஸா புன்னகைதான். ஆனால் அவர் இராஜகுமாரனை மணந்துகொண்ட அழகிய சிண்ட்ரெல்லா. ”வெள்ளை வெளேர்னு ஒரு ஜப்பான் பொம்மை” என்று சூரியவம்சம் 25 ஆம் ஆண்டு நிறைவில் எடுக்கப்பட்ட பேட்டியில் கணவரால் புகழப்பட்டவர். அவர்தான் அழகு ராணி தேவயானி.
இத்தனை வருடம் கழித்தும் இன்னமும் இராஜகுமாரன் சொல்வது போல் வெண்மையா மென்மையா ஜப்பான் பொம்மை போலவேதான் இருந்தார். சௌந்தர்யா, சுவலெட்சுமி, சினேகா போல் தன்மையான அழகு தேவதை தேவயானி. க்ளாஸ்கோ பேபி, அமுல் பேபி போல் தோற்றம். எப்போதும் சிறிது நீரைப் பொழியத் தயாராய் இருக்கும் ஈரமான கண்கள். குட்டியாய்க் குவிந்த இதழ்கள் அடர்த்தியான சுருண்ட கேசம். பூவினும் மெல்லிய பூங்கொடி இதுதான் தேவயானி.
ஏற்கனவே இரண்டு சுற்று ஸீன் நதியின் மேல் வந்திருக்கிறோம். வாங்க மூணாவது சுற்றும் போய் வருவோம்.
வான்கூவர், லூவர், மியூசியங்கள் , பிர்லா ஹவுஸ், ஈஃபில் டவர், சுதந்திர தேவி சிலை , அலக்ஸாண்டர் 3 ப்ரிட்ஜ் ம் பாண்ட் நியூஃப், ஓர்ஸே மியூசியம், நெப்போலியனைப் புதைத்த இடம், லே இன்வாலிட்ஸ் என்ற இடம் இதெல்லாம் இந்த பாட்டிக்ஸ் மௌச்சஸ் என்னும் பறக்கும்படகில் போகும்போது பார்க்கலாம்.
அதோ தெரியுதுல்ல . மண்டபம் போல ஒண்ணு. அதுதான் பாட்டிக்ஸ் மௌச்சஸ் எனப்படும் பறக்கும் படகுகளின் துறைமுகம். பின் பக்கம் தெரிவது வெயிட்டிங் ஹால்.
மன்னார்குடி மதில் அழகு என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த ராஜ மன்னார்குடியில் இராஜ கோபாலனையும் செங்கமலத் தாயாரையும் தரிசிக்கும் வாய்ப்பு சென்ற ஆண்டு கிட்டியது.
நான் மன்னார்குடி செல்லக் காரணமே என் தோழி ப்ரேமலதாதான். அவளுடைய அன்புதான் என்னை அங்கே கட்டி இழுத்துச் சென்றது என்று சொல்லலாம். அவள் மூலம் வசந்தி, வஹிதா, அமுதா ஆகியோரையும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.( தஞ்சையில் தேன்மொழி & சாந்தியின் பெண் நந்தினி )
எஸ் பி எம்.. சகாப்தங்களை உருவாக்கிய சகாப்தம்
”ஹத்தியக்கு சுக்காவா ஸ்லாலுவக்கு ஜிந்த்தாவா
சயாபாண்டாங் டெரிமு சயா பர் ஹரி ஹரி டோக்கா
பர்தஸ் ஓராங் ஹத்தி படா மு” இந்தமாதிரி டிடெக்டிவ் ரஜனி மலாய்ப் பெண்ணுடன் பிரியா படத்தில் பாடுவதைப் போலச் சிலகாலம் மொழி புரியாமலே சிறுவயதில் சந்தோஷமாய்ப் பாடித் திரிந்திருக்கிறோம்.
”என்னை நீ டைரக்ஷன் பண்ணாதே..” என்று என் உறவினர் தன் மனைவியிடம் கூறும்போது டைரக்ஷன் என்றால் எல்லாரையும் ஆட்டுவிப்பது என அந்த வயதில் நினைத்துக் கொண்டிருந்தேன். டைரக்டரை மற்றவர்களும் கால்ஷீட் குளறுபடிகளால் ஆட்டி வைப்பார்கள் என்று பின்னாளில் புரிந்தது.
ஏவிஎம்மின் பாசறையில் இருந்து வந்தவர். கடின உழைப்பாளி. கல்லைக் கொடுத்தாலும் கனியாக்கிக் காட்டும் திறமையாளர். விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டு திரு எஸ் பி எம் அவர்கள். மக்களின் ரசனையை நாடி பிடிக்காமலே அறிந்த சினிமா டாக்டர் இவர் என்றால் தகும். போட்டிகள் பொறாமைகள், குழிபறித்தல்கள் நிறைந்த சினிமா உலகில் எதிரிகளே இல்லாத வெற்றிகரமான மனிதர். ஆம் வெற்றி என்பது மூன்றெழுத்து. எஸ் பி எம் என்பதும் மூன்றெழுத்து
வரமே சாபமானது
தன் வினை தன்னைச்
சுடும், தலைக்கு மேலேயும் சுடும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் ஒரு அரக்கன் இருந்தான்.
அவனுக்கு நல்வரம் கொடுத்துவிட்டு முப்பெரும் தேவர்களில் ஒருவரான ஈசனே அவதிப்பட்டார்.
அவரை விஷ்ணு காப்பாற்றினார். அந்தக் கதை என்னவென்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
அரக்கர் குலத் தலைவன் பத்மாசுரன். அவன் மாபெரும் கோட்டை கட்டி ஆண்டு வந்தான். சிவனின் மேல் மிகுந்த பக்தி கொண்டவன். அல்லும் பகலும் சிவநாமத்தை ஓதி ஓதி சிவபூஜை செய்து கொண்டிருந்தான். இவ்வாறாகப் பல்லாண்டுகாலம் கடந்தது. அகமும் புறமும் மறந்து இறைத் தியானத்திலேயே ஆழ்ந்துவிட்டான்.
ஃப்ரான்ஸ் சென்றிருந்த போது பாரீஸில் “பாட்டிக்ஸ் மௌச்சஸ்” என்னும் பறக்கும் படகில் சென்றது குறித்து முன்பே எழுதி இருக்கிறேன். மிக வித்யாசமான அனுபவம் அது. ஒர்ஸே மியூசியம், லூவர் மியூசியம், நாட்டர்டேம் கதிட்ரல் , ஈஃபில் , சுதந்திர தேவி சிலை, பல்வேறு கட்டடங்கள், பாலங்களைக் கண்டு களிக்கலாம்.
1870 இல் ஃப்ரான்கோ- ப்ருஷ்யன் போரில் காயம் பட்ட வீரர்களை ஆம்புலன்ஸின் வேகத்துடன் பறந்து சிகிச்சைக்குக் கொண்டு சென்றதால் இப்படகுகளுக்குப் பறக்கும் படகுகள் என்று பெயர். இதற்கு ரெட் கிராஸின் மெடல்களும் வழங்கப்பட்டிருக்கு !
ஃப்ரான்ஸில் ஓடும் நதியின் பெயர் ஸீன்.மகாகாலேஷ்வர்,ஓம்காரேஷ்வர்,சோம்நாத்,நாகேஷ்வர் ஜோதிர்லிங்க தரிசனம்.
மஹாகாலேஷ்வர், ஓம்காரேஷ்வரர்/மமலேஷ்வரர், சோம்நாத், நாகேஷ்வர் ஆகிய நான்கு ஜோதிர்லிங்கத்தையும் துவாரகை கிருஷ்ணன், உஜ்ஜயினி மஹாகாளியையும் தரிசனம் செய்து நாளாகிவிட்டது ஆனால் இப்போதுதான் பதிவு செய்கிறேன். குஜராத், & மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள கோயில்கள் இவை.
மகாகாலேஷ்வர். மிகவும் பந்தோபஸ்துடன் அமைந்த கோவில் இது. முதல்நாளே ரேஷன்கார்டு, பான்கார்டு , வோட்டர் ஐடி ,ஆதார் போன்ற அடையாள அட்டைகளில் ஏதோ ஒன்றைக் காண்பித்துப் பதிவு செய்துகொள்ளவேண்டும். மறுநாள் விடியற்காலையில் உள்ள ஸ்பெஷல் பஸ்மாஹாரத்தி எனப்படும் மயானபூஜையைப் பார்க்கவே இது.
அம்மா என்றால் அன்பு.. அம்மு.
நான் பிறந்த வருடம் நடிக்க வந்தவர். 17 வயதில் இருந்து 32 வயதுவரை நடிப்புலகில் ஜொலித்தவர். மகத்துப் பெண் ஜகத்தை ஆள்வாள் என்ற சொலவடைப்படி 30 வருடங்கள் அரசியலில் ( ஐந்து முறை முதல்வராகி ) கோலோச்சியவர் ஜெ ஜெயலலிதா.. திருவளர்ச் செல்வியோ நான் தேடிய தலைவியோ என்று வாத்தியார் பாடி அழைத்த தலைவி. பெண்களுக்குக் கோட் ஒரு எடுப்பான உடை என்று தோன்றவைத்த அந்த அழகுக்கு மறுபெயர் பெண்ணா !
சகோதர பாசத்தில் சிறந்த சம்பாதி.
பொதுவாகவே பறவைகளுக்கு இருக்கும் கூரியபார்வையை நாம் அறிவோம். எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் நீரில் இருக்கும் தம்முடைய இரையை அவை கூர்ந்து கவனித்து இறங்கிப் பிடிக்கும். ஆனால் ஒரு பறவையின் பார்வையில் கடல் தாண்டி இருக்கும் தீவே தெரிந்ததாம். அதனால் நன்மையே விளைந்தது அப்பறவைக்கும். சகோதர பாசத்திலும் சிறந்த அப்பறவையின் கதை என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
மஹேந்திரமலையில் ஏறிக்கொண்டிருந்தார்கள் சுக்ரீவனின் வானர வீரர்கள். அங்கதன், அனுமன் இவர்களோடு ஜாம்பவானும் சென்று கொண்டிருந்தார். அனைவரின் முகங்களிலும் ஆயாசம். பலமாதங்கள் ஆயிற்று அவர்கள் கிளம்பி. சீதா தேவியாரைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள் அவர்கள்.
தமிழால் இணைவோம் குழுமத்தினர் 2022 க்கான தங்க மங்கையரின் ஒருவராகத் தேர்ந்தெடுத்து விருது வழங்கினார்கள்.
நன்றி அக்குழுமத்தினருக்கும், தலைவர் திரு சத்யநாராயணா சார், துணைத்தலைவர் பரமேஸ்வரி பாலகுரு & இணைத்தலைவர் மீனாக்ஷி திருப்பதி.
1. எனது நாற்பத்தி இரண்டாவது மின்னூல் “ நம்ம பெங்களூரு & மைசூரு “ அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 100/- மட்டுமே.
நம்ம பெங்களூரு & மைசூரு
https://www.amazon.in/dp/B0984ZSLC8
செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.
இன்று காலை காரைக்குடியில் நடைபெற்ற ஏகன் அநேகன் தொடர் நிகழ்வில் நாச்சி ரெஸிடென்சியில் "அந்தாதியும் அனுபூதியும்" என்ற தலைப்பில் பேசினேன். அதற்காக எடுத்த குறிப்புகளை இங்கே பதிவிட்டேன் . நன்றி
அந்தாதியும் அனுபூதியும்
ஏகன் அநேகன் குழுவினருக்கும் நாச்சி ரெஸிடென்ஸிக்கும், நாச்சம்மை அண்ணாமலை அவர்களுக்கும் மற்றுமுள்ள ஆன்றோருக்கும் சான்றோருக்கும் பக்தப் பெருமக்களுக்கும் என் அன்பு வணக்கம்.
1.அவள் அருளாலே அவள்தாள் வணங்கி ஆரம்பிக்கின்றேன். ஆதியந்தம் அற்றவனின் இடப்பாகம் கொண்டவள், அவனின் சரிபாதி ஆனவள் அம்மை. எனவே அவளும் ஆதி அந்தம் அற்றவள். அதனால் அவள் அந்தாதிக்கு உரியவள்.
2.புவி ஏழையும் பூத்தவள் , புவனம் பதினான்கையும் காத்தவள், அண்டமெல்லா பூத்தவள், புவி அடங்கக் காத்தவள். அபிராமிப் பட்டர்போன்ற மெய்ஞானிகள் கண்ட இப்பேருண்மையை இன்றைய விஞ்ஞானமும் ஒப்புக் கொள்கிறது. பிக் பாங்க் தியரி என்று.
ஒன்றிலிருந்து வெடித்துப் பலவாய்ப் பெருகி ஒன்றிலேயே அடங்குதல் என்பதை. ஒன்றாய் இருந்து பலவாய் விரிந்து ஒன்றுள் ஒடுங்கும் உலகை உபநிஷதங்கள் மட்டுமல்ல அபிராமி அந்தாதியும் அழகாய் விளக்குகின்றது.
71.கோவை கடற்கரை - நூல் பார்வை, தேனம்மை லெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=8QgNdtlvEXA
#கோவைகடற்கரை #நூல்பார்வை #தேனம்மைலெக்ஷ்மணன் #தகிதா #மணிவண்ணன் #அசோக்குமார்
#KOVAIKADARKARAI #BOOKINTRO #THEBAMMAILAKSHMANAN #DAKITA #MANIVANNAN #ASHOKKUMAR
72. பெண்களுக்கு - நூல் பார்வை, தேனம்மை லெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=CN7tUoxwgmM
#பெண்களுக்கு #நூல்பார்வை #தேனம்மைலெக்ஷ்மணன் #பாரதிபதிப்பகம்
#PENGALUKKU #BOOKINTRO #THENAMMAILAKSHMANAN #BHARATHIPATHIPPAGAM
உலகம்பட்டி உலகநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா 2017 மலர் தொகுத்த விதம் மிக அருமை.
பாட்டிக்ஸ் மௌச்சஸ் என்னும் பறக்கும் படகுகளில் ஃபிரான்ஸ் சென்றிருந்தபோது பயணம் செய்தோம். சுமார் 200 பேர் டெக்கில் அமர்ந்து ஸீன் நதியின் மேல் பயணித்த அனுபவம் மறக்க முடியாதது. லே மிஸரபிள்ஸ் என்ற விக்டர் ஹியூகோவின் நாவல் எல்லாம் ஞாபகம் வந்தது.
இந்த வருடம் நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சியில் பாரதி பதிப்பகத்தின் அரங்கு எண் 6, 7 இல் எனது 4 புது நூல்கள் கிடைக்கும்.
இந்த வருடம் புதிதாய் இரு பெண் பதிப்பாளர்கள் பற்றியும் அவர்கள் வெளியிடும் என் நூல்கள் பற்றியும் இங்கே அறிமுகப்படுத்துவதில் களிபேறுவகை கொள்கிறேன்.
#பெண்பூக்கள் ..