இமயம் முதல் குமரி வரை பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு தேசங்களும், சமஸ்தானங்களும்,பாளையங்களும் உள்நாட்டுக் கலகத்தாலும், அரியணைப் போட்டிகளாலும், அமைச்சரவை, இராணுவங்களின் கெடுபிடிகளாலும் கலகலத்துக் கிடந்தன.
முகலாயர்கள், வியாபார நிமித்தமாய் வந்த போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஃப்ரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோரின் ஆக்கிரமிப்பால் சுயராஜ்ஜிய தேசங்கள் தங்களுக்குள்ளே ஒன்று பட்டுப் பொது எதிரியை எதிர்த்தார்கள். .நினைவில் சுதந்திரம் பொதிந்த அவர்கள் அந்நியர்களால் அழிந்ததை விடக் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களாலேயே அழிந்தார்கள். அப்படியும் தங்கள் உயிர் உள்ளவரை போராடி உடல், பொருள், ஆவியை இழந்தவர்கள் அநேகம்.
