எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 24 செப்டம்பர், 2026

திரையிசைப் பாடல்களில் ஆங்கில மாதங்கள்

ஜனவரி நிலவே நலம்தானா

ஏப்ரல் மாதத்தில் வாலி அஜித்  சிம்ரன்

ஏப்ரல் மேயிலே பசுமையேயில்லை

ஏப்ரல் மழை மேகமே ஜ்யோதிகா படம் 123

மே மாதம் படம்

ஞாயிறு, 20 செப்டம்பர், 2026

ஏக வீரனும் ஏகாவளியும்

ஏக வீரனும் ஏகாவளியும்


ஸ்ரீ தேவியின் மேல் பக்தி கொண்டு தேவியின் திருநாமங்களைத் தொடர்ந்து சொல்லி வந்தால் அவள் எந்த இக்கட்டிலிருந்தும் நம்மைக் காப்பாள் என்பதற்கு இக்கதையே உதாரணம். 

வெள்ளி, 18 செப்டம்பர், 2026

இரண்டாவது நாவல் - அத்யாயம் - 10

 

10

”தம்பி உங்க அப்பச்சி இந்த இடத்தை லீஸுக்கு எடுத்துத்தான் வீடெல்லாம் கட்டி வாடகைக்கு விட்டுருக்காக. இப்பக் கோயில்காரவுக குத்தகைத் தொகையை ஏத்திப்புட்டாக. உங்க அப்பச்சிகிட்ட இது பத்தின பத்திரமெல்லாம் இருக்கும். குத்தகை முடிஞ்சு போச்சு. அதக் கொண்டாங்க மறுக்கா அதிகப் பணங்கட்டி லீஸைப் புதுப்பிச்சுக்குங்க. இல்லாட்டி பழைய லீஸுப் பேப்பரை ஒப்படைங்க. வாடகை எல்லாம் தராம வேற அங்க நெறையப்பேரு குடியிருக்காக.” என்றாக அந்தவருடம் பெருமாள் கோவில் கணக்கு வழக்குப் பார்க்கும் நாராயணன் செட்டியார்.

பெருமாள் கோவில் இடத்தை லீஸுக்கு எடுத்து அப்பச்சி கட்டிவிட்ட வீடுகளில் பித்தளைக்கு ஈயம் பூசுற சொடலமுத்து ஆசாரி, அப்பளம் போட்டு விக்கும் ஒலகி அக்கா, பள்ளிக்கூடப் பக்கம் மாங்காய்ப்பத்தை, எலந்தவடை விக்கும் ஈசுவரி அக்கா, கார் டிரைவர் வேலு, சமையக்காரக் கருப்பையாண்ணே குடும்பம், கடலைமிட்டாய் போட்டு கடைகளுக்குச் சப்ளை செய்யும் மோகன், அம்மி கொத்தும் பழனியண்ணேன், காளியம்மா கோயில் பூசாரி பெருமாண்ணேதான் குடியிருந்தார்கள்.

புதன், 16 செப்டம்பர், 2026

சில மொக்கைக் குறிப்புகள் - 10

 **பெண்டாட்டி ஊருக்குப் போயிட்டா எனப்

புல்லரிக்கும் கணவர்கள் போல
ஃப்ரெண்டு பிரிஞ்சு போயிட்டாலும்
ஃபுல் அடிச்சுக் கொண்டாடுறாங்க.

 

**காதலின் தேடலைக்
காலம்கடந்து தெரிவிக்கிறது
சுற்றியலைந்து
கூடு திரும்பும் புறாத்தூது.

திங்கள், 14 செப்டம்பர், 2026

பதினாறாம் அத்யாயம் ஆறாவது ஸ்லோகம்

பதினாறாம் அத்யாயம் ஆறாவது ஸ்லோகம்


    குணை: உத்தமதாம் யாதி

ந உச்சை: ஆஸன ஸம்ஸ்திதா: l

    ப்ராஸாதசிகரஸ்த: அபி

காக: கிம் கருடாயதே ll

ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

யூ ட்யூபில் 6321 - 6330 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

6321.திருமந்திரம்  - 611 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/yRdR2TjJKN0


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



6322.திருமந்திரம்  - 612 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/INppOVgy8sg


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

சனி, 12 செப்டம்பர், 2026

படிக்காசு பெற்ற முத்துத் தாண்டவர்

படிக்காசு பெற்ற முத்துத் தாண்டவர்


பாடலே பாடத் தெரியாதவர் பல நூறு கீர்த்தனைகள் பாடியதும் அதற்குப் பரமேஸ்வரனின் திருச்சன்னதியில் தினந்தோறும் படிக்காசு பெற்றதும் வியப்பான செய்திகள் தானே? 15 ஆம் நூற்றாண்டில் பிறந்து அப்படிப் படிக்காசு பெற்ற சிறப்பான ஒருவரைப் பற்றி பார்ப்போம்.

சீர்காழியில் இசை வேளாளர் குடும்பத்தில் தோன்றியவர் தாண்டவர். தில்லையில் தாண்டவம் ஆடும் மூர்த்தியை எண்ணி தம் மகவுக்கு அப்பெயரை இட்டனர் பெற்றோர்.

சீரும் சிறப்புமாகக் கழிந்தது அவரது குழந்தை பருவம். என்ன நிகழ்ந்ததோ தெரியவில்லை வளரிளம் பருவத்தில் அவர் உடம்பில் இன்னவென்று சொல்ல  இயலாத ஒரு நோய் புகுந்து துன்புறுத்தியது. அதைத் தொழுநோய் என்று நினைத்த பெற்றோர் அவரை வீட்டுக்குள்ளேயே ஒதுக்கி வைத்தார்கள்.

வெள்ளி, 11 செப்டம்பர், 2026

யூ ட்யூபில் 6301 - 6310 வீடியோக்கள்.

6301.அழகு தெய்வம் l நாச்சியப்பன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/Z-6fomYlDf4


#அம்மன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #THENAMMAILAKSHMANAN,



6302.சிலையழகன் l ஆற்றலரசு l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/btH1J-xEn7I


#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 10 செப்டம்பர், 2026

எதிர்நீச்சல் சௌகார் ஜானகி

எதிர்நீச்சல் சௌகார் ஜானகி


கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு மேலாகத் திரையுலகில் கோலோச்சி வரும் சௌகார் ஜானகிக்கு வயது 94. எப்போதும் இளமையாக உணரும் அவர் இந்த வயதிலும் டிவி தொடர்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு ஜெயித்த பெண்மணிகளில் இவரை முதல் இடத்தில் வைக்கலாம்.

டிசம்பர் 12, 1931 ல் அப்போதைய மெட்ராஸ்  ராஜமுந்திரியில் பிறந்தார். பெற்றோர் வெங்கோஜி ராவ், சசி தேவி. இவரது தங்கை கிருஷ்ணகுமாரியும் பிரபல நடிகைதான். 1947 இல் சங்கரமாஞ்சி ஸ்ரீனிவாசராவ் என்பவரை மணந்தார். மூன்று குழந்தைகள். 1949ல் இருந்து தற்போது வரை நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி எனக் கிட்டத்தட்ட 400 படங்கள்.

இவர் மட்டுமல்ல இவருடைய பேத்தி வைஷ்ணவியும் மிகச் சிறந்த நடிகைதான். இவர் முதலில் நாடக நடிகையாகத்தான் அறிமுகமானார். ஒரு பேட்டியில் குழந்தைகளுக்குப் பால் வாங்க வேண்டியே தான் நடிக்க வந்ததாகக் குறிப்பிட்டு இருப்பார். அவ்வளவு போராட்டம் நிறைந்த மணவாழ்க்கையில் இருந்து வெளியேறி இவர் எதிர்நீச்சல் போட்டுத் தனியாகக் குழந்தைகளை வளர்த்து இன்றும் தன்னம்பிக்கைப் பெண்ணாக மிளிர்கிறார்.

செவ்வாய், 8 செப்டம்பர், 2026

மூலம்

மூலம்

சிறிது நடுக்கமாகத்தான் இருந்தது மெச்சிக்கு அந்த ஜாதக விபரங்களைப் பார்த்ததும். மகனுக்குக் கல்யாணத்துக்கு வரன் தேடிக் கொண்டிருந்தார்கள் மெச்சியும் அவள் கணவர் அழகப்பனும்.

பையனுக்கு ஆறு நட்சத்திரங்கள் ஆகாது என்று கீழச்சீவல்பட்டி ஜோசியர் குறித்து கொடுத்திருந்தார். ஆனால் வச்சு அடிப்பது போல அந்த ஆறு நட்சத்திரங்களும் மாறிமாறிப் பெண் ஜாதகங்களில் வந்து கொண்டிருந்தன, எல்லாம் பொருந்தி இருந்தால் மெச்சி வீடு சார்ந்த அதே கோயிலையும், அதே பிரிவையும் சேர்ந்த பெண்களாகவே வந்தனர். அப்படி என்றால் சகோதரி முறையாச்சே பண்ணக் கூடாதே என விலக்க வேண்டியதாயிற்று. 

பத்தும் பத்தாததற்கு மகன் வயதில் உள்ள பெண்களுக்கு பத்துப் பதினைந்து வயதுக்குள் உள்ள குழந்தைகள் வேறு இருந்தார்கள். சில சமயம் மகனை விடப் பத்து வயது சிறிய பெண்களும் விவாகரத்தாகி இருந்தார்கள். திருமண மேட்ரிமோனிகளைச் சுற்றிச் சுற்றி வந்தும் மகனைப் போல பத்தாண்டுகளாக மறு திருமணம் ஆகாமல் அன்று கண்ட அதே இருபது முப்பது பெண்களே எஞ்சி இருந்தார்கள். அவர்களுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை இவனுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதுதான் ஒரே பொருத்தம்.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

வியாழன், 3 செப்டம்பர், 2026

யூ ட்யூபில் 6271 - 6280 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

6271.திருமந்திரம்  - 601 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/t5GILsFz1qo


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



6272.திருமந்திரம்  - 602 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/eXvmVan9TIM


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

புதன், 2 செப்டம்பர், 2026

புனிதப் போராளி மாய் பாகோ

புனிதப் போராளி மாய் பாகோ

நாட்டிற்காகப் போராடியவர்களைப் பார்த்திருக்கிறோம். அந்நியர்கள் வசப்படலாகாது என்று ஆத்மஹத்தி செய்து கொண்டவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் தன்னுடைய சீக்கிய மதத்தைக் காக்கவும் அதன் குருவான குரு கோவிந்த் சிங் ஜிக்குக் காவலாக இருக்கவும் மாபெரும் முகலாய சாம்ராஜ்யத்துடன் தைரியமாக மோதியவர் மாய் பாகோ. சீக்கியர்களின் மீட்பர் இந்த மாய் பாகோ எனப்படும் மாதா பாக் கவுர் என்ற பெண்மணி என்று சொன்னால் மிகையாகாது. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வடமேற்கு இந்தியாவில் வாழ்ந்தவர். துணிச்சல் மிக்கவர். சமத்துவ சமூகத்தைப் பாதுகாக்க விரும்பியவர். கவுர் என்றால் இளவரசி. மாய் மற்றும் மாதா என்றால் அம்மா என்று பொருள்படும்

மாய் பாகோ 1705 இல் முகலாயர்களுக்கு எதிரான முக்த்சார் போரில் முகலாயர்களின் 10,000 வீரர்கள் கொண்ட படையுடன் 40 சீக்கிய வீரர்களை மட்டுமே கொண்டு போரிட்ட, அசாத்தியத் துணிச்சல் கொண்ட பெண் துறவி. ஆனந்த்பூர் சாஹிப்பின் முற்றுகையின் போது 40 சீக்கியர்கள்  சாலி முக்தே) குரு கோவிந்த் சிங்கைக் கைவிடும்படி நேர்ந்தது. ஒரு பெண்ணாய் இருந்தும் ஆண்போல் துணிவு கொண்டு அவர்களை குருவுக்கு ஆதரவாக ஒன்று திரட்டி மீண்டும் முகலாயர்களுக்கு எதிராகச் சண்டையிடும்படிக் கொண்டு வந்தார்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

யூ ட்யூபில் 6251 - 6260 வீடியோக்கள்

6251.விநாயகர் துதி 2 l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/P45qoiNm82A


#கணபதி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#GANAPATHI, #THENAMMAILAKSHMANAN,



6252.ஐயப்ப மாலா மந்திரம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/rd7tueFZn6E


#ஐயப்பமாலாமந்திரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AIYYAPPA, #THENAMMAILAKSHMANAN,