எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சில மொக்கைக் குறிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சில மொக்கைக் குறிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

சில மொக்கைக் குறிப்புகள் - 8

 **வாழ்ந்திருந்தது ஒரு காலம்

வாழ்ந்ததை நினைத்திருப்பது ஒரு காலம்
காலங்கள் மாறுகின்றன நினைவுகள் மாறுவதில்லை.


**நிலவுடன்  உருண்டு
இருளுடன் இணையுமுன்
பெருநெருப்பொன்று
உரசி எழுகிறது தினசரி..
சூரியனாம்.

வெள்ளி, 10 ஜூலை, 2026

சில மொக்கைக் குறிப்புகள் - 7

 ** ஒரு சந்தி விரதம்

இரு சந்தி தியானம்
இவை களைந்த காமம்
நிறுத்துகிறது முச்சந்தியில்.

 

**ஒத்த மிஞ்சி கொடுத்தேண்டி
தங்கமே தங்கம்
அது ஒண்ணுக்கு மூணா மின்னுவதென்ன
தங்கமே தங்கம்
ஒத்த மிஞ்சி நீ கொடுத்தே
மச்சானே மச்சான்
அது ஒன் பிரியம் போலப் பெருகிப் போச்சு
மச்சானே மச்சான்

--
இதுக்கும் எம் எல் எம் பிஸினஸுக்கும் சம்பந்தமில்ல மில்ல மில்ல

புதன், 24 ஜூன், 2026

சில மொக்கைக் குறிப்புகள் - 6

 

**கோட்டை கொத்தளங்கள்
சிதறிக் கிடக்கின்றன.
இடுவல்களின் உள்ளே
பத்திரமாயிருக்கிறது
சிறுகுருவிகளின் கூடு.

 

** அளவுகதிகமாகவே   வழங்கிவிட்டாய்
உப்புக்கண்ணீர் வடிக்கின்றன
நன்றிமிகு கண்கள்.

செவ்வாய், 9 ஜூன், 2026

சில மொக்கைக் குறிப்புகள் - 5

 **கண்ணிலொன்று

இதழிலொன்று
கழுத்திலொன்று
சாரல் துளியாய்
மெல்ல இட்ட முத்தங்களை
மொத்தமாக என்மேல் கொட்டுகிறது
திடீரென வந்த மழை.

 

**சிற்றில் கலைத்து
சிறுதினை மேய்ந்து
சிறு உயரம் பறந்து
பாலை காய்கிறது
பெடையொடு செம்போத்து.

சனி, 16 மே, 2026

சில மொக்கைக் குறிப்புகள் - 4

 **பப்பு மம்மு பிசைந்து

புஜ்ஜுவுக்கு ஊட்டும்
பாட்டியின் கன்னமெங்கும்
பப்பு மம்மு.


**பாண்டவர்களுக்குப் பன்னிரெண்டு
ராமனுக்குப் பதினான்கு
எனக்கு நானே
விதித்துக் கொள்ளும் ஆரண்யவாசம்
ஆயுள் வரை.

திங்கள், 27 ஏப்ரல், 2026

சில மொக்கைக் குறிப்புகள் - 3

 

**நீரற்ற உலகில்
வாழக் கற்கிறேன்
நீரற்ற உலகில்
வாழப் பழகுவேனா.


**ஒளிந்து ஒளிந்து
உன்னை ரசிக்கிறேன்.
திருட்டுக் கண்காணிப்புக்கும்
ருசி அதிகம்தான்

வியாழன், 9 ஏப்ரல், 2026

சில மொக்கைக் குறிப்புகள் - 2

**டாட்டூப் பட்டாம்பூச்சி வரைந்து

அழகுபடுத்துகிறாய்.
வெட்கித் தலைசாய்ந்து
தோளசைக்கும்போதெல்லாம்
சிறகசைக்கின்றன பட்டாம்பூச்சிகள்.

 

**கூடு என்னுடையதுதான்
கோபித்துக்கொண்டு
கட்டியிருக்கிறேன்
உன்னுடைய மரத்தில்

வியாழன், 2 ஏப்ரல், 2026

சில மொக்கைக் குறிப்புகள் - 1

 **கவிதை மயிலாடக்
காதல் மேகம் பொழிய
மனமெங்கும் மழை.

 

 

**வலமும் இடமும்
தலையை ஆட்டிப்
பிடிவாதமாய் உதடு இறுக்கி
பாராமல் பார்க்கும்போது
விருட்டென அணைத்து
விழுத்தாட்டிச் செல்கிறாய்
கொத்தும் முத்தத்தால்

 

Related Posts Plugin for WordPress, Blogger...