எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 10 ஜூலை, 2026

சில மொக்கைக் குறிப்புகள் - 7

 ** ஒரு சந்தி விரதம்

இரு சந்தி தியானம்
இவை களைந்த காமம்
நிறுத்துகிறது முச்சந்தியில்.

 

**ஒத்த மிஞ்சி கொடுத்தேண்டி
தங்கமே தங்கம்
அது ஒண்ணுக்கு மூணா மின்னுவதென்ன
தங்கமே தங்கம்
ஒத்த மிஞ்சி நீ கொடுத்தே
மச்சானே மச்சான்
அது ஒன் பிரியம் போலப் பெருகிப் போச்சு
மச்சானே மச்சான்

--
இதுக்கும் எம் எல் எம் பிஸினஸுக்கும் சம்பந்தமில்ல மில்ல மில்ல




**ஆயிரம் முறை பார்த்தாலும்
அலுப்பதில்லை அழகான ஓவியமாய்..
பேச்சில்தான் வலுக்கிறது பிரச்சனை.


**நானாக உதிர்த்தால் தவிர
என் புன்னகைப் பூவை
உன்னால் பறிக்க முடியாது. :)


**Never look back.
Dont turn..
Run.. Run..
Fast forward..
Time is short.
Reach the goal...


**கண்ணாடியைப் பார்த்துக்
கர்வம் கொள்.
இன்னமும் நீ அழகாய் இருக்கிறாயென்று.

#
நமக்கு_நாமே_பாராட்டிக்குவோம். :)


**ஏவலாட்கள் ( ஏவ ஆட்கள் ) கிடைத்தால்
முதியவர்களுக்கு வியாதிகள்
பெரிதாகத் தெரிவதில்லை.


**கதவுக்குப் பின் ஒளிந்திருக்கும் என்னைக்
கண்டுபிடித்துவிடுவாயோவென
திக் திக்கிட்டு ஜில்லிட்டுவிடுகிறது இதயம் :)


**எப்போதும் ஏதேதோ வேலைகளுக்குள்
நீயும் நானும் மாறி மாறிக்
காணாமல் போய்க் கொண்டிருக்கிறோம்.


**சுத்தமாக அழித்துவிட்டேன்
எங்கிருந்து முளைக்கிறது
புல்லாய் உன் நினைவு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...