எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 30 ஜூலை, 2016

நொய்யல் நோயில்...

எனது நொய்யல் கவிதை 


நொய்(த)யல்
------------------
ஆற்றில் போட்டாலும்
அளந்து போடு..
சொல்லிக் கொடுக்கப்பட்ட
பழமொழி
சரியாகச் சேரவில்லை
சாயப்பட்டறைக்காரர்களுக்கு..
கடல் வரை
நீட்ட உத்தேசித்து
கையறு நிலையாய்
கிடத்தியதுதான் மிச்சம்..
வயலும் இல்லாமல்
வாழ்வும் இல்லாமல்
வெளிநாட்டின்
மானம் காக்கும் உடைகளில்
காயடித்துக் கிடக்கிறது
கிழிக்கப்பட்ட தோலுடன்
சாயம் பூசி நொய்யல்.

நன்றி:தேனம்மை லெக்ஷ்மணன்,கீற்று இணையத்தளம்

நன்றி காந்திய மக்கள் இயக்கம் திருப்பூர். வெள்ளி, 29 ஜூலை, 2016

2065 ம் ஆறு லட்சமும். !!!

841.ஸ்டேடஸை லைக் பண்ணி போடுறோமோ இல்லையோ லைக்ஸை லைக் பண்ணிப் போடுறதில்லை.

#மெக்கானிக்கல்_லைக்.

842. நமது லைக்ஸெல்லாமுமே நமது லைக்ஸில்லை.

#சிச்சுவேஷன்_லைக்ஸ்

843. தர்க்கரீதியா, கொள்கை ரீதியா, வேதாந்த ரீதியா சித்தாந்தரீதியா விருப்பப்பட்டு எப்பவுமே லைக்ஸ் போடுறதில்லை.

#நட்புரீதி_லைக்ஸ்.

844. என்ன விட்டுட்டு சாப்பிட்டதாலதான் வவுத்துவலின்னு சந்தோஷப்படும் பிள்ளை நட்புகளை என்ன செய்வது ? ப்ளாக் ஃபாரெஸ்ட், ரெட் வெல்வெட்னு கேக் ஃபோட்டோ போட்டு இன்னும் கடுப்பேத்துறதுதான் சரி :P

845. மாஃபியாவா..நோ நோ.. என் ஃப்ரெண்ட்ஸ்தான் போனா போகுதுன்னு கொஞ்சம் லைக்ஸ் போடுறாங்க. அதையும் கெடுத்திடுவாங்க போல இருக்கே.

846.அடையாளங்களை மறைக்க/மறுக்க விரும்புகிறோமோ நாம்...# சில சமயங்களில்..

புதன், 27 ஜூலை, 2016

சிவப்புப் பட்டுக்கயிறு & பெண்பூக்கள் நூல் வெளியீடு & மதிப்புரை பாருவின் பார்வையில். :)

Paaru Kumar

எப்படியாவது இந்த உலகத்த விட்டு போறதுக்குள்ள....கால் பங்காவது இலக்கியவாதி ஆகனுங்கற முயற்சியல்.....

யாரு புத்தகம் வெளியிடறாங்க...இல்ல அதைப்பற்றி பேசுறாங்கன்னாலும்....கலந்துக்கறேன்.

இளமதி பத்மா ...அழைப்பின் பேரில் கலந்துகொண்டேன்...
தேனம்மை லஷ்மணின்.....
சிவப்பு பட்டுக்கயிறு மற்றும் பெண் பூக்கள் புத்தக வெளியீடு மற்றும் மதிப்புரை.

திங்கள், 25 ஜூலை, 2016

கல்யாண் நினைவு கவிதைப் போட்டி - 2016.

ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் உலகளாவிய,
கல்யாண் நினைவு கவிதைப் போட்டி - 2016.


உணர்வுகளை மலரச் செய்யும் கவிதை உங்களுக்குக் கைவரக் கூடியதா?
ஒரு காட்சியை, ஓர் அனுபவத்தை, ஒரு திரைப்படத்தை, ஓர் அற்புதத்தை உங்களால் உணர்வுபூர்வமாகவும் பார்க்க இயலுமா?

வெள்ளி, 22 ஜூலை, 2016

சிவப்புப் பட்டுக் கயிறு & பெண் பூக்கள் நூல் வெளியீடு & மதிப்புரை.

ஜூலை 23 சனிக்கிழமை அன்று மாலை ஆறு மணிக்கு சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் சிவப்புப் பட்டுக் கயிறு & பெண்பூக்கள் நூல் விமர்சனம்.

பெண்பூக்கள் நூல் வெளியீடு - சாஸ்த்ரி பவன் யூனியன் லீடர் திருமதி மணிமேகலை அவர்கள்.

 
 பெற்றுக் கொள்பவர் - திருமதி சுபா தேசிகன் அவர்கள்.

பெண் பூக்கள் & சிவப்புப் பட்டுக்கயிறு  நூல் மதிப்புரை .

இடம் :- டிஸ்கவரி புத்தக நிலையம், முனுசாமி சாலை, கே. கே. நகர், சென்னை.

நேரம். 23 . 7. 2016 சனிக்கிழமை. மாலை 6 மணி.

வரவேற்புரை - டிஸ்கவரி புத்தக நிலைய உரிமையாளர் திரு வேடியப்பன் அவர்கள்.

சிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய மதிப்புரை :-

1. முன்னாள் வனத்துறை அதிகாரி & கோகுலம் எடிட்டர் திரு. லதானந்த். அவர்கள்
 
 

2. மென்திறன் பயிற்சியாளர்.திருமதி கயல்விழி மோகன் அவர்கள்

பெண்பூக்கள் பற்றிய மதிப்புரை :-

1. பொறியாளர் திரு. கே டி இளங்கோ அவர்கள்
 
 

2. லயனஸ் திருமதி. வசுமதி வாசன் அவர்கள்


ஏற்புரை. திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன்.

அனைவரும் வருக.
 

வியாழன், 21 ஜூலை, 2016

தங்கத்தாமரை பதிப்பகத்துக்காக. ஏமாற்றாதே ஏமாறாதே.


மதிப்பிற்குரிய வேதா மேடம் & சுபா அவர்கட்கு,

தேனம்மைலெக்ஷ்மணன் எழுதிக் கொண்டது.

இத்துடன் ஏமாற்றாதே, ஏமாறாதே என்ற தலைப்புக்காக எழுதிஅனுப்பி இருக்கிறேன்.

அன்பும் வாழ்த்தும்

தேனம்மைலெக்ஷ்மணன்.

*************************************

தங்கத்தாமரை பதிப்பகத்துக்காக.

ஏமாற்றாதே ஏமாறாதே.

ஏ எஸ் டி எஃப் ஜி எஃப். செமிகோலன் எல் கே ஜே ஹெச் ஜே.. இதைத் திரும்பத் திரும்ப அடித்தபடி இருந்தாள் வள்ளி அக்கா. டைப்ரைட்டிங் வகுப்புக்கு ஆனா ஆவன்னா, ஏபிசிடி எல்லாம் இதுதான். அவள் தினமும் குன்றக்குடியில் இருந்து ஒரு வாரமாக வந்து கொண்டிருக்கின்றாள். நான் பக்கத்து சேரில் அமர்ந்து லெட்டர் டைப் செய்துகொண்டிருந்தேன். க்ர்ரிக் க்ர்ரிக் என நகர்த்தி நகர்த்தி அடிக்க ஆரம்பித்தேன்.

புதன், 20 ஜூலை, 2016

இளம்பிரிவும் இதயத்தின் பாடல்களும்.

என்னை எப்பொழுதும் மயக்கும் பாடல்கள்.

அழகே வா அருகே வா. நானே வருவேன்.வா அருகில் வா.நான் கவிஞனும் இல்லை

செவ்வாய், 19 ஜூலை, 2016

நெபுலாவும் ப்ரத்யங்கிராவும்.

821. பூக்குடலைத் தூரப் போடு
பாமாலைகளைக் கிழித்தெறி
சரிக்குச்சரி சமராடு
ருத்ரம் உன் திருக்கோலம்
ரத்தம்தான் நிவேதனம்
நீ சரபமல்ல. மஹா ப்ரத்யங்கிரா.

822. தப்பிதமான கற்பிதங்கள் காவு வாங்கி விடுகின்றன, சில சமயம் சரிவரக் காணாத உண்மையை  ,. சில சமயம் தறிகெட்டலையும் மனதை.

823. நான் ஃபேஸ்புக்/ப்லாக்/ஜி மெயில்/ யாஹூ எதுலயும் ஆன்லைன்/ஆஃப்லைன்லயும் வந்தாலும் வராட்டியும் என் ப்லாக் போஸ்ட் எல்லாம் ப்ரீ போஸ்ட் பண்ணி வச்சிருக்கதால தினம் திங்கள் - வெள்ளி என் ப்லாகிலயும் நெட்வொர்க்ஸ் ப்லாக்ஸ் மூலம் என் ஃபேஸ்புக் பேஜ்லயும் பப்ளிஷ் ஆகும்.

நான் ஆன்லைன் வந்துட்டு அப்போ மெயில் பண்றவங்களுக்கு அல்லது என் பேஜ்ல கமெண்ட் பண்ணவங்களுக்கு ரிப்ளை பண்ணாம போயிட்டேன்னு நிறைய பேர் தப்பா நினைக்கிறாங்க..

ப்ளீஸ் மக்காஸ்.. நான் ஆன்லைன் வந்தா நிச்சயம் ரிப்ளை செய்யாம போ மாட்டேன். உங்களுக்கு மட்டும் ரிப்ளை பண்ணலைன்னு கோச்சுக்க வேண்டாம். அல்லது ப்ளாக் பண்ண வேண்டாம்.

824.  சில பேர் பேரு திடீர்னு கருப்பா தெரியுது.. டீஆக்டிவேட் செய்தாங்களா. , ப்ளாக் செய்தாங்களான்னு புரில.. அப்புறம் திடீர்னு ப்ளூவுக்கு மாறிடுறாங்க.. ஹ்ம்ம்.. ரொம்பக் கொழப்பம்பா மார்க்கு.

825.முகநூல் பக்கங்களில் ஒவ்வொருவரும் (AUTOBIOGRAPHY ) அறிந்தும் அறியாமலும் சுயசரிதையை எழுதிக் கொண்டிருக்கிறோம்.

826. கண்ணிலே அன்பிருந்தால் மனசுக்குப் பிடிச்சதெல்லாம் அழகா தெரியும்.. ஹிஹி --- பொன்மொழி பை தேனம்மானந்தமயி.

திங்கள், 18 ஜூலை, 2016

செவ்வாய், 12 ஜூலை, 2016

சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.


சிவப்பு ஓலைக் கொட்டான்கள்.

சிவப்புஓலைக் கொட்டான்கள் அலங்காரக் கொட்டான்கள்.  மற்ற அலங்காரக் கொட்டான்களிலும்  வீட்டு விசேஷங்களுக்கு வருபவர்களுக்கு பூ, பிஸ்கட், மிட்டாய் போன்றவற்றை வைத்துக் கொடுப்பார்கள்.

சனி, 9 ஜூலை, 2016

சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

என் அப்பா அம்மா திருமணத்தின்போது வெண்குதிரையில் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ந்திருக்கிறது. அதே போல் சமீபத்தில் ஒரு நண்பர் வீட்டில் மாப்பிள்ளை அழைப்பு சாரட்டில் நிகழ்ந்தது. அதையும் இன்னொரு உறவினர் வீட்டில் பெண்ணுக்கு வைத்த சாமான்களையும் பகிர்ந்துள்ளேன்.

அதோஓ மாப்பிள்ளை வரார். மாப்பிள்ளை வரார் குதிரை வண்டியிலே. !

முன்னேயே குடை பிடித்து ட்ரம்ஸ் வாத்தியக்  கலைஞர்களோடு ஜோக்கர் வரார். !
முகூர்த்தத்துக்கு நேரமாச்சு வேகமா வாங்க. ! :)
நாதஸ்வரக் கலைஞர்களும் முன்னே வர

வெள்ளி, 8 ஜூலை, 2016

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் – பாகம் – 2. ஒரு பார்வை.மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் – பாகம் – 2.


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( நான்காம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்.


தற்காலத் தமிழ்ச் சூழலில் தொடர்பியல். - ஆய்வுக் கட்டுரை அனுப்புங்க.

எனது தோழியும் பேராசிரியையுமான ஆதிரா முல்லை அவர்களின் முகநூல் பதிவை இங்கே பகிர்கிறேன்.

விருப்பமுள்ளவர்கள் உங்கள் பார்வையில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி அனுப்பலாம். இந்த இரு புகைப்படங்களில் உள்ளவற்றையும் முழுமையாகப் படியுங்கள். 26 தலைப்பு கொடுத்திருக்கின்றார்கள். 750 ரூ க்கு வரைவோலை எடுத்து அனுப்பணுமாம்.

////சென்னைப் பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறையோடு அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் இணைந்து மிகப் பெரிய அளவில் நடத்தப் பட இருக்கின்ற கருத்தரங்கத்திற்குக் கட்டுரைகள் அனுப்ப காலம் நீட்டிக்கப் பட்டுள்ளது. இறுதி நாள் 05.07.16

விரும்புபவர் ஆய்வுக்கட்டுரை அனுப்பலாம்.////

கடைசித் தேதி ஜூலை 5 வரை நீட்டிக்கப்பட்டிருக்கு. சென்ற வலைப்பதிவர் மாநாட்டில் நிறையப்பேர் ஆய்வுக் கட்டுரை எழுதி பரிசு வாங்கினாங்க. அவங்க எல்லாம் பயன்படுத்திக்க ஒரு வாய்ப்பா அமையும்னு நினைக்கிறேன்.

என் அன்புத் தங்கை கீதா மதி கட்டாயம் ஏதேனுமொரு தலைப்பில் எழுதி பங்கு பெறணும் என்பது என் விருப்பம். அதே போல் முத்து நிலவன் ஐயாவும் மற்ற பதிவர்களும் அனுப்ப வேண்டுகிறேன். ஆல் த பெஸ்ட் :) 


புதன், 6 ஜூலை, 2016

சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

801. ஒரு சில ஃபேக் ஐடிக்கு ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களோ இல்லையோ ஃபாலோயர்ஸ் இருக்காங்க. !!!  :)

802. சில விஷயங்கள் சாண்ட்விச் மாதிரி, மனசுக்குத்தான் அசல் ருசி புரிபடும்.

803. எதையாவது படிச்சி சம்பந்தா சம்பந்தமில்லாம நாம ஏன் இங்க வந்து மண்டைய ஒடைச்சிக்கிறோம்னு சமயத்துல புரில. பட் புடிச்சிருக்கு.

804.  விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்பே முன்பே..
.
.கண்ணெதுக்காலயே இருக்கேன்.. ஏன் கஷ்டப்படுறே..
..

ஹிஹி சும்மா பாட்டு பாடினேன்..


805. உங்க கிராமத்து தெய்வங்கள், குல தெய்வங்கள் சிறப்புப் பற்றி சொல்லுங்க.. மக்காஸ்.806. விலகி நின்று பார்க்கும்போது நமக்கு நாமே அந்நியமாகத் தோன்றுகிறோம்.

807. காம்பழகா
மொட்டழகா
கண்விரிக்கும் சூரியன்முன்
நாணிக் கவிழ்கிறது
புதிதாய்ப் பூத்த செடி.

செவ்வாய், 5 ஜூலை, 2016

அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016

அக்கினிக்குஞ்சு இணையத்தளம் நடத்தும் குறுநாவல் போட்டி பற்றிய விபரம்

அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016

அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் இரண்டாவது நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக குறுநாவல் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.


போட்டிகள் பற்றிய பொது விதிகள்1. உலகெங்கும் வாழும் தமிழ் பேசும், எழுதும் எவரும் இப்போட்டியில் பங்கு பற்றலாம்.

2. ஒருவர் ஒரேயொரு குறுநாவலை மட்டுமே அனுப்பிவைக்க முடியும்.

அக்னிச் சிறகுகள் – அப்துல் கலாமுடன் ஒரு பயணம்.அக்னிச் சிறகுகள் – அப்துல் கலாமுடன் ஒரு பயணம்.இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( நான்காம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 


டிஸ்கி:- இது எனது 100 ஆவது புத்தக மதிப்புரை. 


அமரர் அருண்.விஜயராணி ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி 2016

எனது முகநூல் நண்பர் திரு கந்தையா முருகதாசன் அவர்களின் பக்கத்தில் இருந்து இதைப் பகிர்கிறேன்.

( திரு கந்தையா முருகதாசன அவர்கள் ஜெர்மனியில் வசித்து வருகிறார்கள். பன்னாட்டு புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தின் அங்கத்தினர். மிகச் சிறந்த எழுத்தாளர், பண்ணாகம் இணையதளத்தில் இவரது படைப்புகளை வாசிக்கலாம். எந்த நிகழ்வுகளிலும் தன்னை முன்னிறுத்தாத எளிமையாளர் , . மனம் திறந்து மற்றவர்களைப் பாராட்டும் பண்பாளர். )


///அக்கினிக்குஞ்சு இணையத்தளம் நடத்தும் சிறுகதைப் போட்டி பற்றிய விபரம்


அமரர் அருண்.விஜயராணி ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி 2016


அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால், மறைந்த எழுத்தாளர் அருண்.விஜயராணி அவர்களின் நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக சிறுகதைப் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.

திங்கள், 4 ஜூலை, 2016

காதல் ஆழியும் ”ங்கா”வும்.

"காதலினால் மானுடர்க்கு கலவி உண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலைதீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை உண்டாம்
கானம் உண்டாம்; சிற்பம்முதல் கலைகளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே"
--பாரதி

கொஞ்சம் லாங் லாங் அகோ போடவேண்டிய போஸ்ட். :) ரொம்ப அதிகமில்லை ஜெண்டில் மேன் & உமன் இது 2012 இல் காதலர் தினத்தன்று நடந்தது. எவ்ளோ சுறு சுறுப்பு நாம. :)


டிஸ்கவரி புத்தக நிலையத்தில் “இணையப் பயன்பாட்டில் ஏற்படும் காதல் மற்றும் அதன் தொடர்பானவை” குறித்து ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. திரு ஞானி தலைமையேற்க ஆழி திரு செந்தில்நாதன் கலந்துரையாடலை துவங்கினார். மிக ஆரோக்கியமான விவாத மேடையாக அது இருந்தது. ஆண்கள் மிகச் சரளமாக பகிர்ந்தார்கள் .. இனி வரும் தலைமுறையினருக்கு ஆரோக்கியமான இணையப் பயன்பாட்டை உருவாக்க வேண்டும் என்று ஆழி திரு செந்தில்நாதன் கூறினார். ..நன்றி வேடியப்பன். 


இதில் நினைவில் மிஞ்சி இருந்த விஷயம். கேபிள் சங்கர் அவர்களும் அதிஷா வினோ அவர்களும் கூறியதுதான். ஒரே காதல் ஊரில் இல்லையடா என்ற பாடலைப் போலப் பலரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

ஞாயிறு, 3 ஜூலை, 2016

ஏன் பொலிந்தது - முதல் சொற்பொழிவாளர் மாதுவின் பொலிவுரை.

ஏழாமாண்டுத் தொடக்கவிழாவும், டாக்டர் வானதி திரு.இராமநாதன் அவர்களுக்குப் பாராட்டுவிழாவும், அதை மணிமேகலைப் பிரசுரத்தின் திரு. ரவி தமிழ்வாணன் பாராட்டிய விழாவாகவும் முக்கனியாகச் சுவைத்தது காரைக்குடி கம்பன் கழகத்தின் ஜூலை மாதத் திருவிழா.
வழமை போல் செல்வி கவிதாவின் தமிழமுதத்துடன் துவங்கியது விழா.
பேராசிரியர் திரு. மு. பழனியப்பன் அவர்களின் இன்னுரையோடு களை கட்டியது.
விழாவில் முதல் கூட்டத்தில் முதல் சொற்பொழிவாற்றிய  திரு. இரா. மாது அவர்களுக்கு பேராசிரியர் செந்தழிப் பாவை சிறப்புச் செய்தார். 
மணிமேகலைப் பிரசுரத்தின் திரு. ரவி தமிழ்வாணன் அவர்களுக்கு கிருஷ்ணா கல்யாண மண்டபத்தின் உரிமையாளர் திரு. சேவுகன் செட்டியார் அவர்கள் சிறப்புச் செய்தார்கள்.
திருச்சிராப்பள்ளிக் கம்பன் கழகச் செயலாளர் திரு. இரா. மாது அவர்களின் சிறப்புரை.

மாது அவர்களின் தந்தையார் திரு இராதாகிருஷ்ணனும் கம்பனில் தோய்ந்தவர்கள். எனவே கம்பனிலேயே பிறந்து வளர்ந்திருக்கும் மாது அவர்களின் சொற்பொழிவு மிகச் செறிவாக இருந்ததில் வியப்பேதுமில்லை.

மங்கையர் மலரில் ஜெயஸ்ரீ ராஜ் நினைவுச் சிறுகதைப் போட்டி - 2016.

மங்கையர் மலரில் ஒரு சிறுகதைப் போட்டி. ஜெயஸ்ரீராஜ் அவர்கள் ஒரு எழுத்தாளர்.அவர் கல்கி , மங்கையர் மலரில் நிறைய எழுதி இருக்கிறார். அவரது நினைவைப் போற்றும் விதத்தில் அவரது கணவர் திரு ராஜகோபாலன் அவர்கள் இப்போட்டியை நடத்துகிறார்கள்.

சனி, 2 ஜூலை, 2016

MANPASANTH HINDI SONGS ! மனசுக்குப் பிடிச்ச ஹிந்திப் பாடல்கள்.


 1. என்னைக்கு உன்னப் பார்த்தேனோ அன்னிக்கே அவுட்டு.. இந்தப் பாட்டு சொல்றது அதுதாங்க. :)

எந்த நாள்  உன்னுடன் அறிமுகம் நிகழ்ந்ததோ
அன்னிலேருந்து என் இதயம் என்கிட்ட இல்ல.
யாருக்கும் தெரியாது இந்த மழை எப்படிப் பொழிந்ததுன்னு
என் இதயம் தாகத்தால தவிக்குது  என் இதயம் தனிச்சிருக்கு..

முழுசா கேளுங்க. அற்புதம்.2. என் கனவிலும் நீ
என் மூச்சிலும் நீ
என் மனமெங்கும் நீ
என் இதய ராகத்திலும் நீ

இரவு பகல் காலை மாலை
எல்லா நேரமும் உன் பெயர்தான் என் நினைவில்.3. மிக மிகப் பிடித்த படமும் பாடல் காட்சியும்

ஐஸ்வர்யா ராய் நடித்த மிக அழகான படம். தன் தங்கைகளுடன் ஆடும் காட்சி. யோகா செய்வது போல் வளையும் நளினமான உடல் அசைவுகள். பிரமிக்க வைப்பார் ஐஸ். வினோத் கன்னாவின் மகன் அக்‌ஷயி கன்னா ஜோடியாக நடித்திருப்பார். என்கிட்ட உண்மை அன்பு இருக்கு , அது ஜெயிக்கும் என்ற தன்னம்பிக்கையோடு அக்‌ஷயி கன்னா சொல்வது அழகு. !

மழைப் பாடல்கள் என் ஃபேவரைட். :)


Related Posts Plugin for WordPress, Blogger...