எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சென்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சென்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 செப்டம்பர், 2025

ஹோட்டல் ராயல் பாரிஸில் இரு நாட்கள்

 சென்னையின்  பெரியமேடு காவல் நிலையத்துக்கு எதிரில் அமைந்துள்ளது ராயல் பாரிஸ் ஹோட்டல். இது பாரீஸில் உள்ள ராயல் பாரிஸ் ஐவரி ஹோட்டல்களின் சங்கிலித்தொடரா தெரியவில்லை. ஆனால் 3 ஸ்டார் ஹோட்டல். ஓரிரு நாட்கள் சென்னையில் தங்கக் கச்சிதமான இடம்.  இதன் முகவரி 55, ஸைடன்ஹாம்ஸ் ரோட், பார்க்டவுன். தின வாடகை 2500/- ரூ 

மதியம் 12 இல் இருந்து மறுநாள் மதியம் 12 வரை செக் இன் & செக் அவுட் செய்யலாம். காம்ப்ளிமெண்டரி ப்ரேக்ஃபாஸ்ட் உண்டு. 


திங்கள், 17 செப்டம்பர், 2018

பனகல் பார்க்கில் ஒரு பொடி நடை.

சிலஆண்டுகளுக்கு முன் காலையில்  கட்டாய வாக்கிங் செல்லும் பழக்கம் இருந்தது. சென்னை டி நகர் , பி கே ஆரில் தங்கியிருந்தபோது பக்கத்தில் இருக்கும் பனகல் பார்க்கில் வாங்கிங் சென்று வந்தோம். ரொம்பப் புத்துணர்வா இருந்தது. இப்ப எல்லாம் மக்கள் ஹெல்த்துக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. மூத்த குடிமக்கள் அநேகர் அங்கே கான்வாஸ் ஷூ போட்டு வாக்கிங் போயிட்டு இருந்தாங்க. சிலர் உடற்பயிற்சி செய்துட்டு இருந்தாங்க. அங்கே வாக்கிங் செய்த்துட்டு வந்தப்புறம். காலை நேரப் புத்துணர்வு வெகு நேரம் நீடித்தது.

சுமார் ஒன்றேகால் கோடி ரூபாயில் 2009இல் இது புதுப்பிக்கப்பட்டிருக்கு. 3 பக்கமும் எண்ட்ரி ஆகலாம். நாலாபக்கமும் சாலைகள், சொல்லப்போனா ஆறு பக்கம் பெரிய சாலைகள் இருக்கு.

உஸ்மான் ரோடு, வெங்கட்ரமணா சாலை, ஜி என் செட்டி சாலை, தியாகராஜா சாலை, தெற்கு உஸ்மான் ரோடு, துரைசாமி சாலை என்று.

பரபரப்பான சென்னை மாநகரின் நடு மையத்தில் அமைந்திருக்கும் இந்தப் பூங்காவை உருவாக்கியவர் சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சரா இருந்த பனகல் அரசர். அதுனால அவருக்கு அங்கே சிலை ஒண்ணு எழுப்பி இருக்காங்க. ( விவரத்தைத் தெலுகுல எழுதி இருக்காங்க.)


நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும்.

ஞாயிறு, 21 மே, 2017

மெரினா பீச்சில் தண்ணீர்.!!!



மெரினா பீச்சில் கொஞ்சம் காத்து வாங்குவோம். 

தம்பி பிள்ளைகள் சம்மர் லீவுக்கு வந்திருந்தார்கள். இந்தக் காலத்தில் லீவுக்கு அத்தை சித்தப்பா பெரியப்பா வீட்டுக்குச் செல்லும் பிள்ளைகள் குறைவு. அத்தையிடம் ( என்னிடம் ) தம்பி பெண் கோலம் , பூத்தொடுப்பது போன்றவை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தம்பியின் கட்டளை ( மகளுக்கு J ) சமையல் கற்றுக் கொள்ள நாள் இருக்கிறதே. ஆனாலும் தோசை அழகாக ஊற்றுவாள். 

வீட்டில் சோஃபாவின் இருபக்கக் கைப்பிடிகளும் இருவருக்கு விதிக்கப்பட்டது. மாறி அமர்ந்தால் நாம் பஞ்சாயத்துத் தலைவராக அவதாரம் எடுக்க வேண்டிவரும். ( நம்ம ரெண்டு பசங்களுக்கும் அவதாரம் எடுத்தது மறக்கலைல J ) இப்ப புனர் ஜென்மம். 

எவ்ளோ நேரம்தான் கார்ட்டூன் நெட்வொர்க்கையே ( நாமளும் ! )  பார்ப்பது. J அதான் வாங்கடா என்று பீச்சுக்குக் கூட்டிச் சென்றேன். துபாயில் காரிலேயே பயணித்திருந்தாலும் இங்கே பஸ்ஸில் சமர்த்தாக .
வந்தார்கள். பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டிலும் செல்ல குழந்தைகளைப் பழக்கலாம் என்று எண்ணம். இந்தியாவுக்கு மேல்படிப்புப் படிக்க வந்தால் எல்லாவற்றிலும் பயணம் செய்யப் பழகித்தானே ஆகணும் J

சேட்டையா கிலோ என்ன விலை என்று பால் வடியும் இந்தப் பூக்குட்டிகளுடன் மெரினா பீச்சில் சுகமாகக் காத்து வாங்கி கோன் ஐஸ் சாப்பிட்டு, அலையில் விழுந்து, பலூன் சுட்டு, பாலைச் சுத்தி விளையாடி வந்தோம். பஜ்ஜி கேட்கவே இல்லை பசங்க. ’என்ன எண்ணையோ’ என்று நானும் நாவைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். குழந்தைகளைக் கூட்டிச் செல்வதால் வீட்டிலிருந்து சுண்டல் செய்துகொண்டு போயிருந்தேன். ஆனாலும் அந்தப் பேப்பர் வாடையோடு சுண்டல் சாப்பிடும் சுவை மிஸ்ஸிங் J
 
இனி கொஞ்சமென்ன நிறையவே காத்து வாங்குவோம் வாங்க J  

வெய்யில் கொளுத்தி எடுக்குது. தண்ணீர் தண்ணீர்னு மக்கள் குடத்தோட  
அலையிறாங்க. இங்க கடல் நிறையத் தண்ணீரும் ஆளைக் குளிர்விக்கும் அலையும் இருக்கே. கொஞ்சம் கடலாடலாம் J


நாங்க ரொம்பச் சமத்தாக்கும் J



ஐஸ்ஸ்ஸ் ஜில்லுங்குது J


செவ்வாய், 13 டிசம்பர், 2016

நடந்துசென்ற நடாவும் விளாசித் தள்ளிய வர்தாவும்.

வீட்டின் ஜன்னல் கதவு எல்லாம் கடகடன்னு ஆடுது வீட்டுக்குள்ளேயே இரைச்சலாய் டெடரா இருக்கு என்று என் பக்கத்துவீட்டுக்காரரின் மகள் தொலைபேசியில் சொன்னார். அதற்குச் சிறிது நேரம் கழித்து வீட்டில் முன்பக்க பால்கனி ஜாலி வழியாக மழைத்தண்ணீர் விசிறி அடித்து வீட்டின் ஹால் மற்றும் கிச்சன்  & பெட்ரூம் பால்கனி வழியாக வீடெல்லாம் தண்ணீர் என்று என் மகன் ஃபோன் செய்தார்.

அலைபேசி கோபுரங்கள் பாதிக்கப்பட்டதால்  வாட்ஸப்பிலும் தகவல்கள் இல்லை. பவர் பாங்க் இருந்தாலும் இன்னும் எத்தனை நாள் கழித்து கரண்ட் வருமோ அதுவரை அத்யாவசியத் தகவல் பரிமாற்றத்துக்காக சேமித்து வைக்கும்படியும் அவ்வப்போது ஆன் செய்து தகவல் தெரிவிக்கும்படியும் சொல்லி இருக்கிறோம்.

இரவில் ஒரே கொசுக்கடியும் குளிரும் தாக்கியதாகவும் சரியாக உறங்கவில்லை என்றும் சொன்னார்கள். ஃப்ளாட் வீடுகளில் இருப்பவர்களை விட தனி வீடுகளில் வசிக்கும் இன்னும் சில உறவினர்களிடமிருந்து தகவல் இல்லை. ஃபோன் செய்தால் கட் ஆகிறது. வீட்டைச் சுற்றி ஒரே தண்ணீர் என்று சொன்னார்கள். சென்ற வருடம் வெள்ளம் மூழ்கடித்தது போல் இந்த வருடம் புயல் விளாசித் தள்ளி வருகிறது.

மணிக்கு 180 கிமீ வேகத்தில் காற்று அடிக்கும் என்று அறிவித்திருந்தார்கள். கிட்டத்தட்ட 172 கிமீ வேகம் வரை அடித்திருக்கிறது. இதில் மழையிலும் புயலிலும் நனைந்தபடி ஒவ்வொரு சானலிலும் தொகுப்பாளர்கள் செய்தி சேகரித்து அனுப்பி  அப்டேட் செய்துகொண்டே இருந்தார்கள். 

நடா தாக்கும் என்று பயந்திருந்தபோது அது குறைந்த காற்றழுத்தம் கொண்டதாக மாறிக் கடந்துசென்றுவிட்டது. ஆனால் வர்தா நேற்று சென்னையையும் இன்று கர்நாடகத்தையும் நாளை கோவாவையும் தாக்கும் என்று செய்திகள் வருகின்றன.

திங்கள், 4 ஜூலை, 2016

காதல் ஆழியும் ”ங்கா”வும்.

"காதலினால் மானுடர்க்கு கலவி உண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலைதீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை உண்டாம்
கானம் உண்டாம்; சிற்பம்முதல் கலைகளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே"
--பாரதி

கொஞ்சம் லாங் லாங் அகோ போடவேண்டிய போஸ்ட். :) ரொம்ப அதிகமில்லை ஜெண்டில் மேன் & உமன் இது 2012 இல் காதலர் தினத்தன்று நடந்தது. எவ்ளோ சுறு சுறுப்பு நாம. :)


டிஸ்கவரி புத்தக நிலையத்தில் “இணையப் பயன்பாட்டில் ஏற்படும் காதல் மற்றும் அதன் தொடர்பானவை” குறித்து ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. திரு ஞானி தலைமையேற்க ஆழி திரு செந்தில்நாதன் கலந்துரையாடலை துவங்கினார். மிக ஆரோக்கியமான விவாத மேடையாக அது இருந்தது. ஆண்கள் மிகச் சரளமாக பகிர்ந்தார்கள் .. இனி வரும் தலைமுறையினருக்கு ஆரோக்கியமான இணையப் பயன்பாட்டை உருவாக்க வேண்டும் என்று ஆழி திரு செந்தில்நாதன் கூறினார். ..நன்றி வேடியப்பன். 


இதில் நினைவில் மிஞ்சி இருந்த விஷயம். கேபிள் சங்கர் அவர்களும் அதிஷா வினோ அவர்களும் கூறியதுதான். ஒரே காதல் ஊரில் இல்லையடா என்ற பாடலைப் போலப் பலரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

சென்னையைக் காத்த சில அன்புக்கரங்களுக்கு வாழ்த்துகள்.

என் அன்புத் தோழி ராமச்சந்திரன் உஷா 

////நான்கு நாட்களாய் டீவி இல்லை, செல் பேசி பாட்டரியும் தீர்ந்துவிட்டது, இணைப்பும் இல்லை, லாண்ட் லைனும் அவுட். ஓரே நாள் வந்து மாத சம்பளம் வாங்கிப்போன வேலைக்காரம்மா மைதிலி சொன்ன விஷயங்களைக் கேட்டு ஏதாவது செய்ய வேண்டும் என்று மட்டும் மனசு அடித்துக்கொண்டது.
நாங்கள் இருக்கும் பெருங்குடி பெரும்பால இடங்களில் பெரிய பிரச்சனையில்லை. ஆனால் பெருங்குடி ஸ்டேஷனை ஒட்டி இருக்கும் கல்லுக்குட்டை என்ற இடம் வெகுவாய் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்களை பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிந்தது.
அப்பா அம்மாவுக்கு துணையாய் மகனை உட்கார வைத்துவிட்டு, நானும் என் மகளும் கிளம்பினோம்.

வெள்ளி, 9 ஜனவரி, 2015

புத்தம் புதிய புத்தகமே..

2015 சென்னை புத்தகத் திருவிழாவை ஒட்டி தினம் ஒரு புத்தகத்தின் அட்டைப் படத்தை முகநூலில் பகிர்ந்து வருகிறேன். அந்த  நூல்கள் பற்றி சிறு அறிமுகம் இங்கேயும்.

என் அன்பிற்குரிய கவித சொர்ணவல்லியின் முதல் சிறுகதைத் தொகுப்பு.  

பொசல் 
நிலமிசை வெளியீடு
சிறுகதைகள். 
ஆசிரியர் :- கவிதா சொர்ணவல்லி. 
விலை ரூ 80/-

புதன், 6 ஆகஸ்ட், 2014

பக்தர்களா.. பதர்களா.

மாங்காடு
திருவேற்காடு
சென்றவாரம் சென்னை சென்ற போது மாங்காடு திருவேற்காடு அம்மனைத் தரிசிக்கப் போனோம். ஆடிச்செவ்வாய் விசேஷ தினம் மேலும் ரம்ஜான் விடுமுறையானதால் கூட்டம் எக்கித் தள்ளிக்கொண்டிருந்தது.

முதலில் மாங்காடு. ப்ரகாரத்திலேயே அம்மனைப்  ப்ரதிஷ்டை செய்து சுற்றிலும் கும்பங்கள் அடுக்கப்பட்டிருந்தன. அம்மனுக்கும் வளையல்கள் அடுக்கிப் பரவசப்பட்டுக்கொண்டிருந்தார்கள் பெண்மயில்கள்.

அங்கே மூன்று விதமான க்யூ, பொது தரிசனம், 20 ரூ டிக்கெட், 50 ரூ டிக்கெட். மூன்று சுற்றுக்களாக சுற்றிச் சுற்றி வந்ததால் கூட்டத்தைக் கண்டு மலைத்து மயங்கி அமர்ந்து இருந்தபோது  பக்கத்தில் இன்னும் இரண்டு மூன்று கோயில்களுக்குச் சென்றுவிட்டுவந்த பெண் ஒருவர் குடும்பத்தோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

வெள்ளி, 24 மே, 2013

கொள்ளையடிக்காமல் கொள்ளையடிக்கும் ஷேர் ஆட்டோக்கள்.

எத்தனையோ வண்டிகள்ல பயணப்பட்டிருப்போம். ஆனா சிலது மட்டும் சாதாரணமா இருந்தாலும் நம்ம ஞாபகத்துல இருக்கும். அதுல ஒண்ணு கே கே நகரில் இருந்து டி. நகருக்குப் போகும் ஷேர் ஆட்டோக்கள்.

மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன்ல விடியற்காலையில் வந்து இறங்கினா ஆட்டோவுக்கு 100 அல்லது 120 கேப்பாங்க. இப்ப இன்னும் அதிகம் இருக்கும்.பஸ்ல கூட்டம் போக முடியாது. இதே கால் டாக்சின்னாலும் 150 - 200 ரூபாய் வரும். இந்த செலவைத் தவிர்க்க முடியாது. ஏன்னா லக்கேஜ் அதிகம் இருக்கும்.

வியாழன், 14 மார்ச், 2013

ஆசிரியர் தினத்தில் பல்லாவரம் எஸ் ஆர் வி வியில்

ஆசிரியர் தினத்தில் பல்லாவரம் எஸ் ஆர் வி வியில் :-

முகநூல் நண்பர் சதீஷ் பல்லாவரம் லயன்ஸ் க்ளப்பில் செயலாளராக இருக்கிறார். முகநூலில் என்னுடைய இலக்கியப் பங்களிப்பைப் பார்த்துவிட்டு ஆசிரியர் தினத்தன்று  உரையாற்ற அழைத்திருந்தார்.

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

சென்னையில் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா. TAMIL BLOGGER'S MEET

பதிவர் சந்திப்பு பற்றிய இந்த அழைப்பிதழை சகோ மின்னல் வரிகள் கணேஷின் வலைத்தளத்தில் இருந்து பெற்றேன்.

வெள்ளி, 21 ஜனவரி, 2011

சங்கமம் பற்றிய எனது கருத்து கலைஞர் தொலைக்காட்சி செய்தியில்..




கலைஞர் தொலைக்காட்சியில் சங்கமம் பற்றிய எனது கருத்து செய்திகளில் வந்த போது டிஷ்ஷில் எங்கள் தொடர்பில் அதை பார்க்க இயலவில்லை.. எனவே என் சகோதரன் செல்லில் செய்தியை சேகரித்து கணினிக்கு அனுப்பினார்.. அதை என் பையன் யூட்யூபில் பதிந்து இருக்கி்றான்..

ஸ்பீச் என்று பயந்துவிட வேண்டாம் மக்காஸ்.. என்னோட கருத்துக்கள் சும்மா 20 செகண்ட் வருது ..ஸ்பீச் என்று சும்மா அவசரத் தலைப்பிட்டிருக்கிறது.. :))

முன்னேற்பாடு இல்லாமல், தயாரிப்பு இல்லாமல் ., பதட்டத்தோடு பல்லை இறுக்கியபடி ..ஒரு கருத்து..:)) பிண்ணணியில் தொலைக்காட்சி பார்த்த தம்பி மனைவி தம்பியின் கமெண்ட்ஸ்களோடு.. நீங்களும் என்சாய் மக்காஸ்.. :))

செவ்வாய், 18 ஜனவரி, 2011

என் பெயர் பெண்.. சென்னை சங்கமம் கவிதை..



தமிழ் அன்பருக்கும்.,
தமிழ் அன்பர்களுக்கும்
நண்பர்களுக்கும் வணக்கங்கள்..

* ஆதி மூர்க்கம் விலா
கொய்து செய்த
பாதி மூர்க்கம் நான்..

* இன்றும் இருக்கும்
சாதிச் சண்டையில்
சமரசப் பெண்சாதி நான்..

சனி, 8 ஜனவரி, 2011

காகித ஓடத்தில் சங்கமத்துக்கு..

”புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்ற குரலில் எனக்கு நெருக்கமான ஒரு வாஞ்சை.. நல்ல விஷயம் சொன்னார் என் அன்பிற்குரிய., நம் அனைவரின் அன்பிற்கும் உரிய பத்மா.. ( padma reaches மற்றும் காகித ஓடம் என இரண்டு வலைத்தளங்களின்வாசி ...!! )..

மிகச் சமீபமாக இவரது இடுகைகள் சில என்னை உலுக்கும் அளவு வலிமையான படைப்புகளாய் இருக்கின்றன.. ஆடியின் முன்னும் பின்னுமாய் தானாய் தன்னோடு போராட்டம்.. முடிவுறாமல்.. மிக அருமையான வித்யாசமான படைப்புக்கள்.. ( கிறிஸ்துமஸ் தாத்தா கவிதையும் ) ..

முதலாளி வேலை செய்வோருக்கு விசேஷ நாட்களில் துணிகள் வாங்கித் தரலாம். நான் கேள்வியே படாத செயலாக இவரின் உதவியாளர் இவருக்கு பதில் அன்பாக புடவை வாங்கித் தந்துள்ளார்.. அந்த அளவு அன்புச் சுரங்கம் பத்மா..

ஞாயிறு, 15 நவம்பர், 2009

தும்பைப்பூ

கடலில் மூழ்கிய
கப்பலாய் சென்னை...
மழையில் ராயவரம்
குடிசைகள் தெப்பமாய்...

ஆலை ஊருக்குள்
தும்பைப்பூ வேஷ்டி செய்யும்
தினக் கூலியாயிருந்து ...
வேலையிழந்து...

ரிக்ஷாக்காரனாய்.
மீன்பாடிவண்டி ஓட்டியாய்
திருவல்லிக்கேணியில்...

நியானோ சோடியமோ
ஒளிவீச என்னுடன்
சேர்த்துக்கொண்ட
என் கறுத்த உதட்டழகி ...
கன்னத்து மருவழகி...

காடுகளில் முளைத்துக்
கிடக்கும் தும்பைப்பூவாய்
என் மார்பில் மகன் ...
சிறுகோழிக்குஞ்சாய்...
Related Posts Plugin for WordPress, Blogger...