வெள்ளி, 24 மே, 2013

கொள்ளையடிக்காமல் கொள்ளையடிக்கும் ஷேர் ஆட்டோக்கள்.

எத்தனையோ வண்டிகள்ல பயணப்பட்டிருப்போம். ஆனா சிலது மட்டும் சாதாரணமா இருந்தாலும் நம்ம ஞாபகத்துல இருக்கும். அதுல ஒண்ணு கே கே நகரில் இருந்து டி. நகருக்குப் போகும் ஷேர் ஆட்டோக்கள்.

மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன்ல விடியற்காலையில் வந்து இறங்கினா ஆட்டோவுக்கு 100 அல்லது 120 கேப்பாங்க. இப்ப இன்னும் அதிகம் இருக்கும்.பஸ்ல கூட்டம் போக முடியாது. இதே கால் டாக்சின்னாலும் 150 - 200 ரூபாய் வரும். இந்த செலவைத் தவிர்க்க முடியாது. ஏன்னா லக்கேஜ் அதிகம் இருக்கும்.


ஆனா சாதாரண நாட்களில் கே கே நகரில் இருந்து லேடீஸ் ஸ்பெஷல் ஆஃபீசுக்கு போறதுன்னா ஷேர் ஆட்டோவில் முதலில் 7 ரூபாய்தான் வாங்கினாங்க. அப்புறம் 10 ரூபாய் அப்புறம் 15 ஆச்சு,

அதே போல டி, நகருக்குப் போக 15 ரூபாய் இருந்தது 20 ஆச்சு. ஆனா இந்த ரூட்ல மட்டும் பஸ் அதிகம் என்பதால் ஷேர் ஆட்டோவில் கூட்டம் இருக்காது. ஷேர் ஆட்டோவும் அடிக்கடி  கிடைக்கும். பார்க்கவும் லக்ஸுரியஸா இருக்கும். நல்ல வெல்வெட் டாப், லெதர் சீட், சில ஷேர் ஆட்டோக்கள்ல ஸ்டீரியோவும் வைச்சிருப்பாங்க.  நல்ல இசை கேட்டுக்கிட்டே பயணிக்கலாம். ஒரு நல்ல டாடா சுமோ அல்லது இண்டிகால போற மாதிரி இருக்கும். கூட்டமில்லாட்டா/யாருமே ஏறாட்டா  நமக்கே 15 ரூபாய் கொடுக்க என்னவோ போல இருக்கும். நல்ல சௌகர்யமா போய் இறங்கி ஷாப்பிங் பண்ணிட்டு அதே மாதிரி 15 ரூபாயில் வந்து மெயின் ரோட்டுல இறங்கிக்கலாம்.

இதே டி. நகர்லேருந்து புரசைவாக்கம் போற வண்டிகள் கூண்டு வண்டிகள் மாதிரி இருக்கும். அதே வடபழனியில் இருந்து வரும் வண்டிகள் வேம்புலி அம்மன் கோயில் வரை அல்லது கே கே நகர் வரை வந்தாலும் அதை உபயோகிப்பது கம்மிதான்.

பல ரக மனிதர்கள் வருவாங்க. காலேஜ் போற பிள்ளைகள் கூட அதில வருவாங்க.  சில பல காலம் ஆயிட்டாலும் என்னைக் கவர்ந்த எளிமையான வண்டின்னா அது  சென்னையின் கே கே நகரில் ஓடும் அழகான ----நம்மளைக் கொள்ளையடிக்காமல்  நம்ம மனதைக் கொள்ளையடிக்கும் ---- ஷேர் ஆட்டோக்கள்தான்..:)

7 கருத்துகள் :

ஸ்கூல் பையன் சொன்னது…

அட... மனதைக் கொள்ளையடிக்க் ஆட்டோக்களா? நான் கூட என்னமோ ஏதோவென்று பயந்துவிட்டேன்....

Manavalan A. சொன்னது…

Nalla pathivu. Share auto makkalukku oru payana thunaivanaaga ve ullathu enbathai azhagha solli irukireer.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ரைட்டு...

sury Siva சொன்னது…

நீங்க ஷேர் டாக்ஸி அதாவது ஷேர் கார் பற்றி சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.

நீங்கள் போட்டிருக்கும் படமும் கார் ஷேர் கார் தான்.

விருகம்பாக்கம் முதல் கே.கே. நகர், வழியே, அசோக் நகர், மாம்பலம், துரைசாமி சப்வே , போதீஸ்,
பாண்டி பஜார் வழியே மௌன்ட் ரோடுக்கு சென்று அங்கு சையத் காலேஜ் ரோடு அது என்ன பேரு
பாரதி தாசன் ரோடு வழியா, கடைசி வரை போய், இடது பக்கம் திரும்பி, ஆள்வார்பேட் சிகனல் கடந்து
அதன் வழியாக லஸ் கார்னர் வரை போகிறது.

நான் அதில் தான் வழக்கமாக ஆள்வார்பேட் சிக்னல் வரை போகிறேன். விருகம்பாக்கம் துவக்கத்தில் இருந்து
முப்பத்தி ஐந்து ரூபாய். பாண்டி பஜாருக்கு 25 . துரைசாமி சப்வே லேந்து விருகம்பாக்கம் 20

ஆனா மினிமம் 7 ரூபா வாங்கிக்கறாங்களே...

சுப்பு தாத்தா.

viyasan சொன்னது…

கொள்ளையடிக்காம‌ல் கொள்ளைகொள்ளும் ஷேர் ஆட்டோக்களா? த‌மிழுக்கு அமுதென்று பேர். ந‌ல்ல‌ ப‌திவு. :‍-)


Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஸ்கூல் பையன்

நன்றி மணவாளன்

நன்றி சௌந்தர்

நன்றி சூர்யா சிவா.

நன்றி வியாசன்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...