புதன், 15 மே, 2013

பேருந்துச் சங்கீதம்.

பேருந்துப் பாடல்கள்
ஒற்றைத் தலைவலியை
உண்டுபண்ண
ஒற்றைக்கால் கொக்காய்
தலைபிடித்துத் தவமிருக்கும் நேரம்
சங்கீதமாய் ஒலித்து
கவனம் ஈர்க்கிறது
அம்மாவிடம் அடம்பிடிக்கும்
குழந்தையின் குரல்.குரலோடு குழையும்
குழந்தைகாண
ஜன்னலோர வெய்யில்கூட
கண்ணாடிக் கசிவில்
காற்றோடு நுழைகிறது.

”ஈயத்தைப் பழுக்கக்காய்ச்சி
அவன்காதில் ஊத்த”
என அடிக்கடி பஸ் ஹாரனடிக்கும்
ஓட்டுனரைச் சபித்த அனைவரும்
கிண்கிணிச் சலங்கையோடு
கால் உதைக்கும் பாப்பா பார்த்து
மென்மையாகிறார்கள்.

வளைந்து வளைந்து செல்லும்
வயல் பாதைகள் கூட
பூப்பள்ளத்தாக்குகள் ஆகின்றன
பஞ்சுமிட்டாயாய்
இனித்துக் கிடக்கும்
குழந்தையின் வாசத்தால்.

டிஸ்கி:- இந்தக் கவிதை மார்ச் 1-15, 2013  அதீதத்தில் வெளியானது.


4 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எல்லாவற்றையும் மாற்றிய குழந்தையை ரசித்தேன்...

தொடர வாழ்த்துக்கள்...

கீத மஞ்சரி சொன்னது…

முதல் பத்தி ஒன்றே போதும்... கவிதையின் முழுரசனையையும் உள்ளடக்கிய அழகு. பாராட்டுகள் தோழி.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்

நன்றி கீதமஞ்சரி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...