எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 ஜூலை, 2021

மண்ணின் மணமும் உலகின் அன்பும்.

 2901. நாம் நடத்திய கூட்டத்தில் கேட்டது. மீண்டும் கேட்டேன். மீண்டும் , மீண்டும் கேட்கலாம். அவ்வளவு அருமை. வாசிப்பு விருப்பம் , எழுத்து விருப்பம் உள்ளவர்களுக்கு அவ்வளவு தகவல் இருக்கிறது இதில் 

இத் தருணத்தில் உங்களிடம் சொல்ல சில செய்திகள்இந்த மண்ணை மக்களை - குறிப்பாக நகரத்தார் வாழ்வியலை நீங்கள் எழுத வேண்டும். பெருமிதங்களை மட்டுமல்ல, சிறப்புகள் என்கிற போது குறைகளும் இருக்கும் தானே.. இவைகள் அடங்கிய எழுத்தாக இருக்க வேண்டும். சுஜாதா சொன்னது தான். எவருடைய மனமும் நோகாமல் என்றல்ல.வடிவம் நாவலாக இருக்கலாம். அவசரமாக செய்ய வேண்டும் என்பதில்லை.சொல்ல வந்த செய்தி, அதன் நம்பகத்தன்மைக்கான தேடல், நேர்சந்திப்பில் தகவலை திரட்டுவது என நிதானத் தோடு செய்யலாம் . ரத்தமும் சதையும் மான உண்மை மனிதர்களின் நடமாட்டம், பேச்சு இவைகளை உங்களால் சிறப்பாக கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. எத்தனையோ வாழ்வியலை இலக்கிய உலகம் பதிவு செய்திருக்கிறது. இந்த வாழ்வை நீங்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும். வேறு வகையில் பதிவுகள் நிரம்ப இருக்கிறது.

ஆனால் நாவலாக, நான்குறிப்பிட்ட தன்மையோடு இல்லை.

என் வாசிப்பு கவனத்திற்கு வந்தவரை .

இது என்னுடைய அன்பான விருப்பம் - வேண்டுகோள்.

முடிவு உங்களுடையது.

நன்றி மேடம்.

 ஜீவ சிந்தன்.

வெள்ளி, 30 ஜூலை, 2021

யூ ட்யூப் சேனலில் 21 - 30 வீடியோக்கள்.

நூல்பார்வைகள் பற்றிய வீடியோக்களோடு  பயணங்களில் (யூரோப் டூர்)  எடுத்த வீடியோக்களையும் என் யூ ட்யூப் சேனலில் பதிவேற்றி வருகிறேன். இதற்கு முன் இருபது வீடியோக்கள் வெளியாகி உள்ளன. 

இதில் இருபத்தியொன்றாவது வீடியோவில் இருந்து முப்பதாவது வீடியோ வரை பதிவு செய்து உள்ளேன். 

21. FROM LEANING TOWER OF PISA, ITALY, EUROPE TOUR, THENAMMAI LAKSHMANAN

https://www.youtube.com/watch?v=twFGQmfhnp8

புதன், 28 ஜூலை, 2021

ஒட்டக அச்சுகளும் உப்புருசி சாக்லேட்டுகளும்.

சார்லி அண்ட் தெ சாக்லேட் ஃபேக்டரி என்றொரு படம் பார்த்திருக்கலாம்.

சாக்லேட் ஆங்காங்கே நதியாக ஓட மிக எக்ஸைடிங்காக இருக்கும். 

இங்கே கொலோனில் சாக்லேட் கப்பலில் உள்ள சாக்லேட் மியூசியத்தில் சாக்லேட் செய்யும் அச்சுக்களைக் காட்சிப்படுத்தியுள்ள இடம் இது. 

இங்கே முயலும் முட்டைகளும் அச்சுகளைப் பார்த்தேன். அத்தோடு ஒட்டக அச்சுகளையும் விதம் விதமாகப் பார்த்தேன். 

ஒட்டகத்தைக் கட்டிக்கோ என்ற பாட்டு ஞாபகம் வந்தது. அடேயப்பா எத்தனை ஒட்டகங்கள். மிகச் சிறிய சைஸிலிருந்து மிகப் பெரிய சைஸ் வரை ஒரு அரேபியப் பிரயாணி ஒட்டகச் சவாரி செய்யும் அச்சுகள்.  இதற்கு ஒரு கதை உண்டு. அது கடைசியில்.

திங்கள், 26 ஜூலை, 2021

ராமனுக்கு உதவப் புறப்பட்ட குலசேகரர்.

ராமனுக்கு உதவப் புறப்பட்ட குலசேகரர்.

தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்க்கும் குழந்தைகள் அதில் ஆழ்ந்து அதைப் போலவே வீரசாகசங்களைத் தாங்களும் செய்து பார்ப்பதுண்டு. இப்பழக்கம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஒரு அரசருக்கே அந்த நாளில் இருந்தது. யார் அந்த அரசர் அப்படி அவர் என்ன காரியம் செய்தார் எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
எட்டாம் நூற்றாண்டில் சேரநாட்டின் திருவஞ்சைக்களம் என்னும் இடத்தில் திடவிரதன் என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். அவருக்குக் குலசேகரன் என்ற மகன் பிறந்தார்.
தன் தந்தைபோலவே சிறப்பாக ஆட்சி புரிந்த இவர் ஒரு சமயம் நாடு பிடிக்கும் ஆசையில் சோழ பாண்டிய நாடுகளின் மீதும் படையெடுத்து வென்றார். பாண்டிய மன்னன் இவருக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தார். இவர்களுக்குச் சேரகுலவல்லி என்ற மகள் பிறந்தாள்.
மகன் பிறந்ததும் தான் ஈடுபட்ட கொடுமையான போர்க்களங்களை நினைத்து வருந்திய குலசேகரர் ஒரு கட்டத்தில் கடவுளைச் சரணடைந்தார். நாளும் கிழமையும் கடவுளின் புகழ் கூறும் உபன்யாசகர் யாரையாவது அழைத்து வந்து காவியங்களின் விளக்கத்தைக் கேட்டு இன்புற்று வந்தார்.

வியாழன், 22 ஜூலை, 2021

கொஞ்சம் பஞ்சாங்கம், கொஞ்சம் ஜோசியம். பகுதி - 4

கொஞ்சம் பஞ்சாங்கம், கொஞ்சம் ஜோசியம். பகுதி - 4. 

சிரஞ்சீவிகளாவன, ராசி மாசங்களாவன, பஞ்ச பூதங்களாவன, பூதலிங்கஸ்தலங்களாவன, வாரசூலமாவன, மேலோகங்களாவன, பாதாளலோகங்களாவன, அஷ்டலெக்ஷிமிகளாவன, நவகிரகங்கள் சஞ்சரிக்கும் நாள், திக்குபாலர்களாவன. 


சிரஞ்சீவிகளாவன.

அனுமார்

விபீஷணர், 

வேத வியாசர்

பரசுராமர்

மகாபலி

மார்க்கண்டேயர்

அஸ்வத்தாமா

ஆக சிரஞ்சீவிகள் எ.


ராசி மாசங்களாவன.

சித்திரை - மேஷம்

வைகாசி - ரிஷபம்

ஆனி - மிதுனம்

ஆடி - கடகம்

ஆவணி - சிம்மம்

புரட்டாசி - கன்னி

அய்ப்பிசி - துலாம்

கார்த்திகை - விருச்சிகம்

மார்களி - தனுசு

தை - மகரம்

மாசி - கும்பம்

பங்குனி - மீனம். 

ஆக மாசம்  12 க்கு ராசி மாசம் 12.


பஞ்சபூதங்களாவன.

பிரிதிவு

அப்பு

தேயு

வாயு

ஆகாசம்

ஆக பஞ்சபூதங்கள் ரு. 


பூதலிங்கஸ்தலங்களாவன.

பிரதிவு காஞ்சீபுரம்

அப்பு  திருவானைக்காவல்

தேயு  திருவண்ணாமலை

வாயு  திருக்காளாஸ்திரி

ஆகாசம் சிதம்பரம்

ஆக பூதலிங்கஸ்தலங்கள் ரு. 


செவ்வாய், 20 ஜூலை, 2021

இண்டஸ்ட்ரியல்/மருத்துவ ஆக்ஸிஜன் பற்றி வள்ளிபழனியப்பன் அவர்களுடன் ஒரு பேட்டி

 திருச்செந்தூரான் கேஸஸ் சேல்ஸ் & சர்வீசஸ் ப்ரைவேட் லிமிடெட் திருமதி வள்ளிபழனியப்பன் அவர்களுடன் ஒரு பேட்டி


கொரோனா காலத்தில் ஆக்ஸிஜனின் தேவை அதிகம். இந்த சமயத்தில் அம்பத்தூர் நகரத்தார் சங்கத்தின் மகளிர் அணித் தலைவி திருமதி வள்ளி பழனியப்பன் அவர்கள் தன் கணவரோடு இணைந்து திருச்செந்தூரான் கேஸஸ் சேல்ஸ் & சர்வீஸ் என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது இண்டஸ்ட்ரியல் ஆக்ஸிஜனை தொழிற்சாலைகளுக்கு சப்ளை செய்யும் நிறுவனம். இவரின் கணவர் திரு பழனியப்பன் சிவில் காண்ட்ராக்டராக இருக்கிறார்.  பள்ளத்தூர் இலுப்பைக்குடிக் கோயிலைச் சேர்ந்த இவர்கள் சென்னை, அம்பத்தூரில் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்கள். இண்டஸ்ட்ரியல் ஆக்ஸிஜனை மருத்துவத் தேவைக்குப் பயன்படுத்த முடியுமா.. வேறு என்னென்ன உபயோகங்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்தது. 

திங்கள், 19 ஜூலை, 2021

திரு அல்லிக்கேணி பார்த்தசாரதி மாலை

 திரு அல்லிக்கேணி பார்த்தசாரதி மாலை என்ற இந்த நூலைப் பிரசுரித்தவர்கள் ஆர். ஜி. பதி கம்பெனி, 4 வெங்கட்ராமய்யர் தெரு, சென்னை - 1

இது 1966 இல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. 

விலை 25 பைசா!


ஸ்ரீவில்லிபுத்தூர் சௌரியப் பெருமாள் தாசர் அருளிய திரு அல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி மாலை. 

ஞாயிறு, 11 ஜூலை, 2021

இராமனின் முன்னோர்கள்

இராமனின் முன்னோர்கள்


நாம் நம்முடைய முன்னோர்களை அறிந்திருக்கிறோமா. அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா பெயரை அறிந்திருப்போம். அதிகபட்சமாக எள்ளுத் தாத்தாவின் பெயரை அறிந்தவர்கள் அபூர்வமே. ஆனால் இராமன் தோன்றின சூரிய குலத்தில் இட்சுவாகு வம்சத்தில் இராமனுக்கு முன்னே அரசாண்ட அவனது தாத்தாக்கள் யார் அவர்களது வீர தீரப் பராக்கிரமம் என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

வியாழன், 8 ஜூலை, 2021

SCHOKOLADEN MUSEUM, சாக்லேட் மியூசியமும் சாக்லேட் செடியும்.

 சாக்லேட் கப்பல் பார்த்திருக்கின்றீர்களா.

இல்லாவிட்டால் அதைப் பார்க்க நீங்கள் ஜெர்மனி கோலோன் நகரின் ரைன் நதிக்கரைக்குத்தான் ( RHEINAUHAFEN) வரவேண்டும் . ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தோம். இதைப் பார்க்கச் செல்ல பல்வேறு வாகனங்களுக்கு வழி கொடுத்துள்ளார்கள். போட் என வித்யாசப் பயணமும் உண்டு. ஆனால் அங்கே மினி ரிக்‌ஷாவில் சிலர் வந்திறங்கியது கவர்ச்சிகரமாய் இருந்தது :) நாங்கள் (எங்கள் மகன் வீடு இருக்கும் ) டூயிஸ்பர்க்கிலிருந்து  ட்ராம், மெட்ரோ ட்ரெயின் & பஸ்ஸில் போனோம்.  

உலோகத் தரை, கண்ணாடிச் சுவரால் அமைக்கப்பட்ட மிக அழகான இந்த சாக்லேட் கப்பலில் சாக்லேட் மியூசியம்,சாக்லேட் ஷாப், சாக்லேட் தயாரிக்கும் முறை, 5000 வருடப் புராதன சாக்லேட்டின் வரலாறு, சாக்லேட் தயாரிக்கப் பயன்படுத்தும் அச்சுகள், பிரபல ப்ராண்டுகளின் சாக்லேட், சாக்லேட் தயாரிப்பின் பூர்வீகம், சாக்லேட் தயாரிப்பவரின் குடும்ப விவரம்,கோகோ பீன்ஸில் இருந்து தயாரிப்பது முதல்  இன்றைய ப்ளாக் சாக்லேட் வரை விதம் விதமான சாக்லேட் வகைகளைக் காணலாம். கேட்கும்போதே நாவூறுகிறதல்லவா !

நெஸ்லே,லிண்ட் சாக்லேட்டுகள் என உலகத் தரம் மிகுந்த சாக்லேட்டுகள் தயாராகின்றன. 


இதோ ஒரு மினி மோட்டார்  ரிக்‌ஷா. 

புதன், 7 ஜூலை, 2021

கொஞ்சம் பஞ்சாங்கம், கொஞ்சம் ஜோசியம். பகுதி - 3

கொஞ்சம் பஞ்சாங்கம், கொஞ்சம் ஜோசியம். பகுதி - 3

தீவுகள், கடல்கள், தேவ வருஷம், வாரங்கள்,  பெரும்பொழுது 6 , சிறுபொழுது 6, பஞ்ச கன்னிகைகள். பாண்டியஸ்தலங்கள், இங்கிலீஷ் மாசங்கள், 

தீவுகள் 7.

சம்புத்தீவு

பிலட்சத் தீவு

குஞ்சத் தீவு

கிரௌவுஞ்சத் தீவு

சாகரத் தீவு

சான்மலித் தீவு

புஷ்கர தீவு


7 கடல்களும் நீரும்.

லவணம் - உப்பு நீர்

இட்சு - கருப்பஞ்சாறு

சுரா - கள்ளு

சர்பி - நெய்

ததி -தயிர்

க்ஷீரம் - பால்

சுத்தோதகம் - நல்ல நீர்


தேவ வருஷம் 7.


பாரத வருஷம்

கிம்புருட வருஷம்

அரி வருஷம்

இளாவித வருஷம்

இரம்மிய வருஷம்

ஐரன் வருஷம்

குரு வருஷம்

ஆக இல எ.

செவ்வாய், 6 ஜூலை, 2021

சித்தன்ன வாசல் குகை ஓவியங்களும் சமணர் படுகைகளும்

 ஜனவரி மாதம் தஞ்சையில் இருந்து புதுக்கோட்டை வழியாகக் காரைக்குடிக்கு வரும்போது  சித்தன்ன வாசல் சென்று வந்தோம். 

இங்கே குடைவரைக் கோயிலுக்கு உள்ளே உள்ள குகை ஓவியங்களைக் காணவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அது அன்றுதான் வாய்த்தது. கிபி ஏழாம் நூற்றாண்டு ஓவியங்களைக் காண்பது என்றால் சும்மாவா. மூலிகை வண்ணங்கள் கொண்டு வரையப்பட்டவை என்பதால் பதினான்கு நூற்றாண்டுகளாகியும் அவை பொலிவு குறையாமல் உள்ளன. 

மனிதர்களின் அஜாக்கிரதையால் அவை நிறம் மங்கித்தான் உள்ளன என்றாலும் அவற்றின் பொலிவும் எழிலும் குன்றவில்லை. 

மிக அழகான அலங்கார வளைவுகளோடு கோட்டைபோல் வரவேற்றது சித்தன்ன வாசல் நுழைவாயில். இதன் அருகேதான் குடுமியான் மலை. ஆனால் ஒரே நாளில் தஞ்சைப் பெரிய கோவில், சித்தன்ன வாசல், குடுமியான் மலை எல்லாவற்றையும் நடந்து நடந்து பார்க்க முடியாது என்பதால் குடுமியான் மலை செல்லவில்லை. 

ஞாயிறு, 4 ஜூலை, 2021

சில்வர் ஃபிஷும் ஜீவநதியும்.

 2861. இந்தப் பெரும் மௌனத்தை அவள்தான் உடைக்க வேண்டி இருந்தது. முன்னைப் போல எதுவும் மாறிவிடவில்லையென்றாலும் அந்தச் சோம்பலை, முயற்சியி்ன்மையைச் சாடிக் கொண்டிருந்தாள் அவள். நீரோடிப் பொருக்குத் தட்டிய சுவர் உதிர்ந்தது. தவ்விக் குதித்தோடியது மூலைச்சிலந்தி. முடங்கிக் கிடந்த பூனைகள் வெளிறி வெளியேறின. அடைய இடமில்லாமல் திகைத்தது ஆமை. கிரணக் கீற்றுகளால் அறையைத் துண்டாடிக் கொண்டிருந்தது நிலா. நிம்மதி இன்மையுடன் எங்கிருந்தோ சலம்பிக்கொண்டிருந்தது சாமக்கோழி. புரண்டு புரண்டு உறக்கம் தொலைத்து ஓடிக்கொண்டிருந்தது பக்கத்து வாய்க்கால். சில நாகங்கள், நட்டுவாக்கிளிகள், தேள்கள் நிசப்தமாய் ஊர்ந்துகொண்டிருந்தன. கண்ணுக்குத் தெரியா உலகமொன்றில் லயித்தபடி மூளைப்பாதையில் உறைந்து கிடந்தாள் இவள். வெளிச்சம் துப்பும் பகலின் நினைவு கண்ணைக் கூசச் செய்கிறது. விடிவதற்கு இன்னும் வெகுநேரம் இருக்கிறது. மாய உறக்கம் விழிப்புடன் இருக்கிறது. எழுந்திருக்கத்தான் வேண்டும் இன்னும் பிரகாசமாய், பெருநெருப்பாய். !

2862.ரிக்வெஸ்ட் கொடுக்குற அன்புத்தோழமைகளுக்கு ஒரு அறிவிப்பு. 

கதை, கவிதை, கட்டுரைகளோடு கோலம், சமையல் ஃபோட்டோக்கள் எல்லாம் பகிர்வேன். 

அப்புறம் வந்துட்டமேன்னு நொந்து நூடுல்ஸாகக் கூடாது. 

பாருங்க இப்பக்கூட நான் ஒரு FOODIE ன்னு நிரூபிக்கிறேன். 😉 ) 

அப்புறம் உங்க அதிர்ஷ்டம் 😂😂🤣🤣🤣🤣🤣🤣

2863.நடைவண்டி 


2864.இது என்ன & எங்கே இருக்குன்னு சொல்லுங்க.

சனி, 3 ஜூலை, 2021

சங்கும் சீப்பாம்பட்டைக் கரண்டியும் அடுக்குச் சட்டிகளும்

 169.


காரைக்குடியில் புழங்கும் சாமான்கள் பற்றி எழுத விரும்பினேன். அவற்றில் முதற்படியாக 1921*சில்வர் சாமான்கள் பற்றி எழுதி வருகிறேன். 

இவை 1922*உயர அடுக்குச் சட்டிகள். ஐந்து முதல் ஏழு, ஒன்பது என அடுக்குச் சட்டிகள் திருமணச் சீராகப் பெண் வீட்டில் இருந்து பெண்ணுக்குக் கொடுப்பார்கள். அதைப் பரப்பி அடுக்கி வைத்துக் கொடுப்பார்கள். 1923*மைசூர் அடுக்கு, 1924*உயர அடுக்கு, 1925*சப்பட்டை அடுக்கு, 1926*அடி உருண்ட சட்டிகள் என வகைப்படுத்துவார்கள். 

இது 1922*உயர அடுக்கு. 


ஒன்றுக்குள் ஒன்றாகக் கொள்ளும்படியான ஐந்து சட்டிகள் கொண்டது. 
Related Posts Plugin for WordPress, Blogger...