எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கொலோன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொலோன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 செப்டம்பர், 2021

வால்நட் கேரமல்லும் ஃபெரேரோ ரோச்செரும்

 உலகப் புகழ்பெற்ற மியூசியங்களில் ஒன்று ஜெர்மனியில் இருக்கும் இம்ஹாஃப் சாக்லேட் மியூசியம். 1993  அக்டோபர் 31 இல் ரைன் நதியில் மேல் கட்டமைக்கப்பட்டது.  

1585 லேயே சாக்லேட்டை பானமாக அருந்தி வந்தாலும் மக்கள் அதைப் பதினேழாம் நூற்றாண்டில்தான் திடப் பொருளாக சாக்லேட்டாகப் பயன்படுத்தத் துவங்கினார்கள். அப்போது இது அரிதாகக் கிடைக்கும் விலையுயர்ந்த ஒரு அபூர்வப் பொருள். எனவே சீமான்களும் சீமாட்டிகளும் மட்டுமே சுவை பார்த்திருக்காங்க. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இது பொதுமக்களுக்கும் எட்டிய கனியாயிடுச்சு. 

கொலோனில் இருக்கும் வித்யாசமான சாக்லேட் ஃபவுண்டன் எனப்படும் சாக்லேட் செடி. இதில் வேஃபர்ஸைத் தொட்டுத் தருவார் இங்கே பணிபுரியும் பெண் ஒருவர். கியூவில் நின்று அனைவருமே வாங்கிச் சுவைத்தோம். 



முதலில் இம்ஹாஃப் ஸ்டார்வெர்க் மியூசியம் என அழைக்கப்பட்ட இது பின்னர் லிண்ட் இதன் பார்ட்னரானவுடன் இம்ஹாஃப் சாக்லெடன் மியூசியம் என அழைக்கப்படுது. 

வியாழன், 16 செப்டம்பர், 2021

சாக்லேட்களின் மகாத்மியம் - லிண்ட் - LINDT - ஜெர்மனி

ஜெர்மனியின் சாக்லேட் மியூசியத்தில் சாக்லேட்களின் வகைகள், தயாரிப்பு, தயாரிக்கும் மெஷின்கள், பாக்கிங், மோல்டுகள், விற்பனையகம், சாக்லேட்டின் பூர்வீகம், நூற்றாண்டுகளாக அதன் பயணம் பற்றி அறிய முடிந்தது. இவற்றை செக்‌ஷன் செக்‌ஷனாகப் பிரித்து விவரித்து எழுதியே வைத்திருக்கிறார்கள். எல்லாம் நமக்குத் தெரியாத ஜெர்மனில் இருக்கு ஹ்ம்ம்!. 

சாக்லேட், சொக்கலைட், சிக்லேட் என்று எல்லாம் என் பெரியம்மா 1950 களின் சாக்லேட்களை ஒரு முறை வகைப்படுத்தினார். டார்க் சாக்லேட், சாஃப்ட் சாக்லேட் என்றெல்லாமும் இருக்கிறது. வெள்ளை நிறம், அரக்கு நிறம், கருப்பு நிறம், வெளிர் மஞ்சள் நிறம் இன்னும் பல நிறக் கலவைகளில் சாக்லேட்டுகள் கிடைக்கின்றன. 

வாயில் போட்டால் கரையும் ஸ்விஸ் சாக்லேட்டுகள் உலகப் புகழ் பெற்றவை. சில சாக்லேட்டுகள் நம்மூரு உஷ்ணத்தில் சாக்லேட் ட்ரிங்க் ஆகிவிடும் அபாயம் உள்ளவை. எனவே ரெஃப்ரிஜிரேஷன் செய்துதான் சாப்பிடணும். 

நம்மூரு டெய்ரி மில்க்கும், ஃபைவ் ஸ்டாரும், காட்பரீஸும், காஃபி பைட்டும்தான் பல்லாண்டுகளாக என் விருப்பமாக இருந்திருக்கிறது.  வான் ஹௌடன் என்று சிங்கப்பூரில் இருந்து என் மாமா கொண்டு வரும் சின்ன சிவப்பு கவர் போட்ட டார்க் சாக்லேட் எங்களுக்கு எப்போதாவது கிடைக்கும் பேரதிசயம். 

பெர்னாட்ஷாவின் போரும் காதலும் என்ற நாடகத்தில் வரும் வீரனுக்கு அதன் நாயகி சாக்லேட் சாப்பிடக் கொடுப்பாள். சர்காஸ்டிக்காக அவனை க்ரீம் வீரன் என்றும் அழைப்பாள். 

வியாழன், 8 ஜூலை, 2021

SCHOKOLADEN MUSEUM, சாக்லேட் மியூசியமும் சாக்லேட் செடியும்.

 சாக்லேட் கப்பல் பார்த்திருக்கின்றீர்களா.

இல்லாவிட்டால் அதைப் பார்க்க நீங்கள் ஜெர்மனி கோலோன் நகரின் ரைன் நதிக்கரைக்குத்தான் ( RHEINAUHAFEN) வரவேண்டும் . ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தோம். இதைப் பார்க்கச் செல்ல பல்வேறு வாகனங்களுக்கு வழி கொடுத்துள்ளார்கள். போட் என வித்யாசப் பயணமும் உண்டு. ஆனால் அங்கே மினி ரிக்‌ஷாவில் சிலர் வந்திறங்கியது கவர்ச்சிகரமாய் இருந்தது :) நாங்கள் (எங்கள் மகன் வீடு இருக்கும் ) டூயிஸ்பர்க்கிலிருந்து  ட்ராம், மெட்ரோ ட்ரெயின் & பஸ்ஸில் போனோம்.  

உலோகத் தரை, கண்ணாடிச் சுவரால் அமைக்கப்பட்ட மிக அழகான இந்த சாக்லேட் கப்பலில் சாக்லேட் மியூசியம்,சாக்லேட் ஷாப், சாக்லேட் தயாரிக்கும் முறை, 5000 வருடப் புராதன சாக்லேட்டின் வரலாறு, சாக்லேட் தயாரிக்கப் பயன்படுத்தும் அச்சுகள், பிரபல ப்ராண்டுகளின் சாக்லேட், சாக்லேட் தயாரிப்பின் பூர்வீகம், சாக்லேட் தயாரிப்பவரின் குடும்ப விவரம்,கோகோ பீன்ஸில் இருந்து தயாரிப்பது முதல்  இன்றைய ப்ளாக் சாக்லேட் வரை விதம் விதமான சாக்லேட் வகைகளைக் காணலாம். கேட்கும்போதே நாவூறுகிறதல்லவா !

நெஸ்லே,லிண்ட் சாக்லேட்டுகள் என உலகத் தரம் மிகுந்த சாக்லேட்டுகள் தயாராகின்றன. 


இதோ ஒரு மினி மோட்டார்  ரிக்‌ஷா. 

Related Posts Plugin for WordPress, Blogger...