எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 30 செப்டம்பர், 2021

வால்நட் கேரமல்லும் ஃபெரேரோ ரோச்செரும்

 உலகப் புகழ்பெற்ற மியூசியங்களில் ஒன்று ஜெர்மனியில் இருக்கும் இம்ஹாஃப் சாக்லேட் மியூசியம். 1993  அக்டோபர் 31 இல் ரைன் நதியில் மேல் கட்டமைக்கப்பட்டது.  

1585 லேயே சாக்லேட்டை பானமாக அருந்தி வந்தாலும் மக்கள் அதைப் பதினேழாம் நூற்றாண்டில்தான் திடப் பொருளாக சாக்லேட்டாகப் பயன்படுத்தத் துவங்கினார்கள். அப்போது இது அரிதாகக் கிடைக்கும் விலையுயர்ந்த ஒரு அபூர்வப் பொருள். எனவே சீமான்களும் சீமாட்டிகளும் மட்டுமே சுவை பார்த்திருக்காங்க. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இது பொதுமக்களுக்கும் எட்டிய கனியாயிடுச்சு. 

கொலோனில் இருக்கும் வித்யாசமான சாக்லேட் ஃபவுண்டன் எனப்படும் சாக்லேட் செடி. இதில் வேஃபர்ஸைத் தொட்டுத் தருவார் இங்கே பணிபுரியும் பெண் ஒருவர். கியூவில் நின்று அனைவருமே வாங்கிச் சுவைத்தோம். முதலில் இம்ஹாஃப் ஸ்டார்வெர்க் மியூசியம் என அழைக்கப்பட்ட இது பின்னர் லிண்ட் இதன் பார்ட்னரானவுடன் இம்ஹாஃப் சாக்லெடன் மியூசியம் என அழைக்கப்படுது. 
அதிக அளவில் தயாரிக்கப்படுபவை செவ்வக அச்சு சாக்லேட்டுகளே. அதன் பின் உருண்டை வடிவ சாக்லேட்டுகளும் கூட. 
கண்ணாடியால் மூடப்பட்ட இந்த சாக்லேட் ஃபாக்டரி பல தளங்கள் கொண்டது. கப்பலைப் போல வடிவமைக்கப்பட்டது. 

மேலே டெக் வரை ஏறிச் சென்று பார்த்தோம். கண்ணாடிக் கூண்டுகளால் முழுதும் மூடப்பட்ட ஃபாக்டரி & மியூசியம் இது. 

தனியாக வடிவமைக்கப்பட்ட கண்ணாடிக் கூண்டுக்குள்ளேயே சாக்லேட் தயாரிக்கும் மிஷின்களும் இயங்குகின்றன. கைபடாமல் தயாரிக்கப்படும் சாக்லேட்டின் பயணத்தை நாம் வேடிக்கை பார்க்கலாம். கூழில் இருந்து அச்சு அச்சாக பேக்கிங்காகும்வரை. 

பட்டனை அமுக்கினால் சாக்லேட் வெளியே வரும். அதற்காக ஒரு பெண் பட்டனை அமுக்கிவிட்டுக் கையை வெளியே நீட்டுகிறார். 
தயாரான சாக்லேட்டுகள் பேக்கிங்குக்காக வெயிட்டிங். 
கொகோ அரைக்கும் மிஷின் அல்லது சாக்லேட் கூழ் தயாரிக்கும் மிஷின். 

சாக்லேட்டுக்குப் பால், சீனி, கோகோ, கொழுப்பு( வெண்ணெய்)  தேவை. 


எனவே பால்,வெண்ணெய் கிடைக்கும் இடங்களையும் , கோகோ பீன்ஸ் சரித்திரங்களையும் எழுதி வைத்திருக்கிறார்கள். மேலும் அங்கேயே கோகோ பீன்ஸ் மரங்களும் கூட பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 


பொதுவாக சதுரம் வட்ட வடிவ சாக்லேட்டுகள்தான் அதிகம் தயாரானாலும் ஈஸ்டர் போன்ற பண்டிகையை ஒட்டி முயல், முட்டைகள் வடிவ சாக்லேட்டுகளும், புனித நிக்கோலஸ் வடிவ சாக்லேட்டுகளும், ஒட்டக வடிவ சாக்லேட்டுகளும் இன்னும் மரங்கள், பறவைகள் வடிவிலும் , காதலர் தினத்துக்காக இதய வடிவிலும் கூடத் தயாராகின்றன. 

சாக்லேட் ப்ளெண்டர். ஏதோ சிமிண்ட் கலவை மிஷின் மாதிரி சாய்ந்திருந்தது ! 

கொன்ச் எனப்படும் சாக்லேட் கலவையைக் கலக்கும்  குடுவை போல் தெரிந்தது.  

இந்த இம்ஹாஃப் ஸ்டால்வெர்க் சாக்லேட் ஃபாக்டரியை லிண்ட் ஏற்று நடத்தத் துவங்கிய பிறகு விற்பனை எல்லாம் அமோகம்தான். 

முன் பகுதியிலேயே விற்பனைக் கூடம் வைத்திருக்காங்க. நிறுவனர் சிலை, சாக்லேட் தயாரிப்பு விவரம், வரலாறு, கோகோ செடிகள், சாக்லேட் தயாரிக்கும் கலவைகள் விவரம், ஆதி காலத்திலிருந்து தற்காலம் வரை பயன்படுத்தும் மிஷின்கள்,  மோல்டுகள் எனப் பிரம்மாண்டமானது இந்த மியூசியம். 

காலையில்10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை திறந்திருக்கும் இந்த மியூசியம். எண்ட்ரன்ஸ் டிக்கெட் விலை ஒரு ஆளுக்கு 15 யூரோ. இதில் சிறிது மாற்றமிருக்கலாம். பள்ளிக் குழந்தைகள் சென்றால் ஏதோ கன்செஷன் உண்டு எனத் தெரிகிறது. 


கைடட் பைக் டூர், ஈ ஸ்கூட்டர் டூர் என்று எல்லாம் கூட உண்டு. 


சரி திரும்ப சாக்லேட்டுக்கு வருவோம். செவ்வக வடிவ சாக்லேட்டுகள் அதிகம். பாராகவும் உருண்டை, ஓவல் , இதயம் மற்றும் எல்லாம் ஷேப்பிலும், பாராகவும்  சாக்லேட்டுகள் செய்யப்படுகின்றன. 

இந்த செவ்வக வடிவ சாக்லேட்டுக்கள் பார்க்க வான் ஹூட்டேன் சாக்லேட்டுக்களைப் போல உள்ளன. ஆனால் பதமான மென்மை. வான் ஹூட்டன் பதமாகவும் இருக்கும். சிறிது கடினமாக டார்க் சாக்லேட்டாகவும் இருக்கும். 

செவ்வக மோல்டிலும் உருண்டை வடிவத்திலும் செய்யப்படுவதைப் பார்வையிட்டோம். 

கோகோ அரைக்கப் பயன்படுத்திய மிஷின் உருளைகள். 

சாக்லேட் தயாரிக்கும் நீண்ட மிஷின். 
பல்வேறு வகை மிஷின்கள். 

ஆஹா இதோ வந்துவிட்டன ஃபெரேரோ ரோச்சர் சாக்லேட்டுகள். 

இந்த பெரேரோ ரோச்சர் இரு லேயர்கள் கொண்டது. 

உள்ளே காற்றை அடைத்தது போலும் க்ரன்சியாகவும்  இருக்கும். 


இந்த மாதிரிச் சாக்லேட்டுகளைச் சாப்பிடுவதால் நம் மூளையில் செரடோனினை அதிக அளவில் சுரக்குது.  எனவே இனிமையாய் உணர்கிறோம். 

சாக்லேட்டில் சிறிதளவு ஈயம் இருக்குங்குறாங்க.முகப்பருவைத் தூண்டும்கிறாங்க. ஆனாலும் காதலர்கள் தங்கள் காதலிக்குப் பரிசா சாக்லேட்டுகளை அனுப்பிக்கிட்டுத்தான் இருக்காங்க உலகெங்கும். 


இது ஜெர்மனியில் வாங்குன ஒரு சாக்லேட் டப்பா. அனைத்தையும் சுவைத்துப் பார்ப்போமென்று வாங்கினோம்.இங்கே நண்பர்கள் வீட்டுக்குச் செல்பவர்களும் கூட பூங்கொத்துக்களும் சாக்லேட்டு(டப்பா)க்களும்தான் பரிசளிக்கிறார்கள். 

இது கொஞ்சம் மெல்டிங் டைப். ஃப்ரீஸரில் வைத்துத்தான் சாப்பிடணும். ரெஃப்ஜிரேட் பண்ணாட்டா உருகி சிப்பியும் முத்தும் ஒண்ணாக் கலந்திடும். டபுள் லேயர், ட்ரிபிள் லேயர், சாண்ட்விச் சாக்லேட்டுகள், மில்க், ப்ரௌன், டார்க் சாக்லேட்டுகள், கோன், ஸ்கொயர், ஒப்லாங், ஓவல், ரவுண்ட் , செவ்வகம் எனப் பல்வடிவங்களில் ப்ளெயின், நட்ஸ் வைத்தது எனப் பலரகமாக இருந்தன. தேங்காய் சுவையிலும் ஒன்று இருந்தது. 

இது கொலோனில் நுழைவுச் சீட்டு வாங்குமிடத்தில் கிடைத்தது. ! நான்கு பேருக்கு 12 சாக்லேட்டுக்கள். இதுபோக இன்னும் நான்கு, உள்ளே வேஃபர்ஸோடு நான்கு, பட்டன் தபா செய்தால் ( பட்டனைத் தட்டினால் ஆளுக்கு ஒன்று ) என ஒரே சாக்லேட் வேட்டைதான் :) 

இது வால்நெட் காரமெல்லே சாக்லேட் பார். ஒன்று சாப்பிட்டால் சிறிது பசி தணிந்துவிடும். அவ்வளவு சுவை. 

இது பையர் வாங்கிக் கொடுத்தது. சூட்கேஸ் நிறைய சாக்லேட் :)புற்று நோயைத் தடுக்கவும், இதய நோயைத் தடுக்கவும் கூட சாக்லேட் பயன்படுதாம். அதிகம் சாப்பிட்டா கொழுப்பு (ச்சத்து ) ஏறிடும். எனவே அவ்வப்போது சாப்பிட்டு மகிழ்வோம். ! 

3 கருத்துகள்:

 1. பிரமித்து போனேன்
  https://vannasiraku.blogspot.com/2019/11/blog-post_18.html

  பதிலளிநீக்கு
 2. நன்றி மை ப்லாக்.

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு
 3. "கோகோ" பாத்திருக்கேன்... ஆனால் கோகோ மிஷனை இப்போதான்மா பாக்குறேன்... கூடவே அழகழகான சாக்லேட்டையும் கண்ணுல காட்டி சும்மா கிடந்த எண்ற வாயை சப்புகொட்ட வைத்துவிட்டீர்களே.. ம்... ம்ம்.. பிரமாதம் போங்க...
  https://www.scientificjudgment.com/

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...