ட்ராச்சென்பர்க் கோட்டை
ஜெர்மனிக்குச் சென்றிருந்த போது பையர் ட்ராச்சன்பர்க் கோட்டைக்கு
அழைத்துச் சென்றார். நம்மூரு என்றால் மலை உச்சியில் கோவில் இருக்கும். இங்கே கோட்டைகள்
இருக்கின்றன.
ட்ராச்சென்பர்க் கோட்டை
ஜெர்மனிக்குச் சென்றிருந்த போது பையர் ட்ராச்சன்பர்க் கோட்டைக்கு
அழைத்துச் சென்றார். நம்மூரு என்றால் மலை உச்சியில் கோவில் இருக்கும். இங்கே கோட்டைகள்
இருக்கின்றன.
ஜெர்மனி சென்றிருந்தபோது நான் மிகவும் ரசித்தவை ரயில் , மெட்ரோ ரயில், மோனோ ரயில், ட்ராம் போக்குவரத்துக்கள்.
இது ஓபர்ஹௌஸன் என நினைக்கிறேன். வூபர்டாலா எனவும் தெரியவில்லை.
ஜெர்மனி தமிழ்க் கடைகள், உணவகங்கள்
இங்கே தமிழர்களுக்கான
உணவகங்கள் அன்னம், அம்மா, இன்னும் சரவணபவன் போன்றவையும் உள்ளன. விருந்து வைபவங்கள் என்றால் இங்கே அனைத்துமே கிடைக்கின்றன.ஆர்டர் செய்யலாம். ஹாயாக இருக்கலாம். பொரித்த பரோட்டா, டீ இங்கே அருமை. வட இந்திய, தென்னிந்திய உணவுகள் அனைத்துமே பெறலாம்.
டோர்ட்மெண்டில் அம்மா உணவகம், அதன் பக்கத்தில் தமிழ் லைப்ரரி, வீடியோ கடை மேலும் ஐடி
என் என்ற தமிழ்த் தொலைக்காட்சி ஒளிப்பதிவுக் கூடமும் உண்டு.
ஒவ்வொரு வாரமும் தமிழர் தெருவிழா, இசைத்தென்றல், வெற்றிமணி விழா, ஒய் ஜி மகேந்திரன் நாடகம் ஆகியன டோர்ட்மெண்டில் அல்லது டுசில்டார்ஃபில் நடக்கின்றன. இங்கே தமிழர்கள் பல்வேறு இடங்களில் இருந்தாலும் டூயிஸ்பர்க், டுசில்டார்ஃப், டோர்ட்மெண்ட், கோலன், ஆஹன், ஓபர்ஹௌசன் ஆகிய இடங்களில் குறிப்பாக ஈழத்தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். ஏறத்தாழ 60,000 ஈழத்தமிழர்கள் இங்கே வசிப்பதாகப் படித்தேன்.
ஜெர்மனியில் பாயும் முக்கியமான நதிகளில் ஒன்று ரைன். இது ஐரோப்பா முழுமைக்குமே பாய்கிறது. முன்பே ரைன் டவரில் ( ரொட்டேட்டிங் சர்க்குலர் டவர் ) ஏறி ரைன் நதியின் அழகுக் காட்சிகளை நாம் கண்டு களித்திருக்கிறோம்.
உலகப் புகழ்பெற்ற மியூசியங்களில் ஒன்று ஜெர்மனியில் இருக்கும் இம்ஹாஃப் சாக்லேட் மியூசியம். 1993 அக்டோபர் 31 இல் ரைன் நதியில் மேல் கட்டமைக்கப்பட்டது.
1585 லேயே சாக்லேட்டை பானமாக அருந்தி வந்தாலும் மக்கள் அதைப் பதினேழாம் நூற்றாண்டில்தான் திடப் பொருளாக சாக்லேட்டாகப் பயன்படுத்தத் துவங்கினார்கள். அப்போது இது அரிதாகக் கிடைக்கும் விலையுயர்ந்த ஒரு அபூர்வப் பொருள். எனவே சீமான்களும் சீமாட்டிகளும் மட்டுமே சுவை பார்த்திருக்காங்க. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இது பொதுமக்களுக்கும் எட்டிய கனியாயிடுச்சு.
கொலோனில் இருக்கும் வித்யாசமான சாக்லேட் ஃபவுண்டன் எனப்படும் சாக்லேட் செடி. இதில் வேஃபர்ஸைத் தொட்டுத் தருவார் இங்கே பணிபுரியும் பெண் ஒருவர். கியூவில் நின்று அனைவருமே வாங்கிச் சுவைத்தோம்.
ஜெர்மனியின் சாக்லேட் மியூசியத்தில் சாக்லேட்களின் வகைகள், தயாரிப்பு, தயாரிக்கும் மெஷின்கள், பாக்கிங், மோல்டுகள், விற்பனையகம், சாக்லேட்டின் பூர்வீகம், நூற்றாண்டுகளாக அதன் பயணம் பற்றி அறிய முடிந்தது. இவற்றை செக்ஷன் செக்ஷனாகப் பிரித்து விவரித்து எழுதியே வைத்திருக்கிறார்கள். எல்லாம் நமக்குத் தெரியாத ஜெர்மனில் இருக்கு ஹ்ம்ம்!.
சாக்லேட், சொக்கலைட், சிக்லேட் என்று எல்லாம் என் பெரியம்மா 1950 களின் சாக்லேட்களை ஒரு முறை வகைப்படுத்தினார். டார்க் சாக்லேட், சாஃப்ட் சாக்லேட் என்றெல்லாமும் இருக்கிறது. வெள்ளை நிறம், அரக்கு நிறம், கருப்பு நிறம், வெளிர் மஞ்சள் நிறம் இன்னும் பல நிறக் கலவைகளில் சாக்லேட்டுகள் கிடைக்கின்றன.
வாயில் போட்டால் கரையும் ஸ்விஸ் சாக்லேட்டுகள் உலகப் புகழ் பெற்றவை. சில சாக்லேட்டுகள் நம்மூரு உஷ்ணத்தில் சாக்லேட் ட்ரிங்க் ஆகிவிடும் அபாயம் உள்ளவை. எனவே ரெஃப்ரிஜிரேஷன் செய்துதான் சாப்பிடணும்.
நம்மூரு டெய்ரி மில்க்கும், ஃபைவ் ஸ்டாரும், காட்பரீஸும், காஃபி பைட்டும்தான் பல்லாண்டுகளாக என் விருப்பமாக இருந்திருக்கிறது. வான் ஹௌடன் என்று சிங்கப்பூரில் இருந்து என் மாமா கொண்டு வரும் சின்ன சிவப்பு கவர் போட்ட டார்க் சாக்லேட் எங்களுக்கு எப்போதாவது கிடைக்கும் பேரதிசயம்.
பெர்னாட்ஷாவின் போரும் காதலும் என்ற நாடகத்தில் வரும் வீரனுக்கு அதன் நாயகி சாக்லேட் சாப்பிடக் கொடுப்பாள். சர்காஸ்டிக்காக அவனை க்ரீம் வீரன் என்றும் அழைப்பாள்.சாக்லேட் கப்பல் பார்த்திருக்கின்றீர்களா.
இல்லாவிட்டால் அதைப் பார்க்க நீங்கள் ஜெர்மனி கோலோன் நகரின் ரைன் நதிக்கரைக்குத்தான் ( RHEINAUHAFEN) வரவேண்டும் . ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தோம். இதைப் பார்க்கச் செல்ல பல்வேறு வாகனங்களுக்கு வழி கொடுத்துள்ளார்கள். போட் என வித்யாசப் பயணமும் உண்டு. ஆனால் அங்கே மினி ரிக்ஷாவில் சிலர் வந்திறங்கியது கவர்ச்சிகரமாய் இருந்தது :) நாங்கள் (எங்கள் மகன் வீடு இருக்கும் ) டூயிஸ்பர்க்கிலிருந்து ட்ராம், மெட்ரோ ட்ரெயின் & பஸ்ஸில் போனோம்.
உலோகத் தரை, கண்ணாடிச் சுவரால் அமைக்கப்பட்ட மிக அழகான இந்த சாக்லேட் கப்பலில் சாக்லேட் மியூசியம்,சாக்லேட் ஷாப், சாக்லேட் தயாரிக்கும் முறை, 5000 வருடப் புராதன சாக்லேட்டின் வரலாறு, சாக்லேட் தயாரிக்கப் பயன்படுத்தும் அச்சுகள், பிரபல ப்ராண்டுகளின் சாக்லேட், சாக்லேட் தயாரிப்பின் பூர்வீகம், சாக்லேட் தயாரிப்பவரின் குடும்ப விவரம்,கோகோ பீன்ஸில் இருந்து தயாரிப்பது முதல் இன்றைய ப்ளாக் சாக்லேட் வரை விதம் விதமான சாக்லேட் வகைகளைக் காணலாம். கேட்கும்போதே நாவூறுகிறதல்லவா !
நெஸ்லே,லிண்ட் சாக்லேட்டுகள் என உலகத் தரம் மிகுந்த சாக்லேட்டுகள் தயாராகின்றன.
ஜெர்மனி கோலோனில் இருக்கும் இந்த சர்ச்சின் கட்டிடக்கலை, முகப்புச் சிற்பங்கள், மார்பிள் & கிரானைட் சிற்பத் தொகுதிகள், (புனிதர்கள் மட்டுமல்ல வித்யாசமான உருவங்களும் பொறிக்கப்பட்டிருப்பது), ஜன்னல் கண்ணாடிகளில் வரலாறு சொல்லும் வண்ண ஓவியங்கள், ஸ்வாலோஸ் நெஸ்ட் எனப்படும் மிகப்பெரும் இசைக்கருவி அனைத்தையும் இன்னும் ஒரு இடுகையில் சொல்லி இருக்கிறேன்.
ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெரோ க்ராஸையும் ஆர்ச்பிஷப்களின்/புனிதர்களின் கல்லறைச் சிற்பங்களையும், இயேசுவின் வாழ்வியல் சிற்பங்களையும் சிலுவைப்பாதையையும் நீங்கள் இங்கே காணலாம்.
எட்டு நூற்றாண்டுகளுக்கு மேல் கட்டப்பட்ட இந்த அற்புத கதீட்ரலை ஜெர்மனி சென்றால் காண மறவாதீர்கள்.முழுக்க முழுக்க ஜெர்மானியக் கட்டிடக் கலையில் ரைன் நதிக்கரையில் இரட்டைக் கூம்பு வடிவக் கோபுரங்கள் கொண்டு அமைக்கப்பட்டது.
வெளியே இருக்கும் இச்சிற்பங்கள் அபோஸ்தலர்களைப் போலத் தோன்றுகிறது. இரட்டைக் கோபுரங்கள் கொண்ட கதீட்ரல் இது. 12 ஆம் நூற்றாண்டில் இருந்து15 ஆம் நூற்றாண்டு வரை கட்டியும் கட்டி முடிக்க முடியல. அதுனால் கிட்டத்தட்ட 8 நூற்றாண்டுகளாக இதைக் கட்டி முடிச்சிருக்காங்க. அதுக்கு ஏத்த அளவு இதுல மார்பிள் வேலைப்பாடுகளும் உண்டு.
பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கோதிக் கட்டிடக்கலை பாணியைப் பின்பற்றிக் கட்ட ஆரம்பிக்கப்பட்ட கொலோன் சர்ச் (ஜெர்மனி ) பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் ( 1880 ) பூர்த்தி செய்யப்பட்டது. ரோமன் கத்தோலிக்க சபையினரால் நிர்வகிக்கப்படும் இந்தக் கதீட்ரலில் சில புனிதர்களின் உடல்கள் உள்ளேயே வைக்கப்பட்டு அதன்மேல் அவர்களின் சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன.
வடக்கு தெற்கு என்று இரண்டு கோபுரங்கள் கொண்ட இந்த சர்ச் பதினெட்டாம் நூற்றாண்டில் பூர்த்திசெய்யப்பட்டபோது உலகிலேயே உயரமான கோபுரமாக இருந்ததாம் !.
அன்றைக்குத் தொங்கும் ரயிலில் பாதியில் விட்டுட்டுப் போயிட்டேனே. வாங்க வூபர் நதியின் மேல் ஒரு சவாரி போவோம்.
ஜெர்மனியின் நார்த் ரைன் வெஸ்ட்பேலியா மாகாணத்தில் ஓடும் ஒரு நதிதான் வூபர். இது ரைன் நதியின் கிளை நதிதான்.தொங்கு தோட்டம் கேள்விப்பட்டிருப்பீங்க. தொங்கும் ரயில் கேள்விப்பட்டிருக்கீங்களா. வாங்க பார்ப்போம். ஜெர்மனியின் வூபர்டால் வோஹ்விங்கல் சஸ்பென்ஷன் மோனோ ரயில்தான் அது.
இரும்பு விளைச்சல் அதிகம் (!) என்பதால் ஜெர்மனியில் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே மாங்ஸ்டன் ரயில்வே பாலம், வூபர்டால் சஸ்பென்ஷன் ரயில் என இரும்பைக் கொட்டி இருப்புப் பாதையை மேலே கீழேன்னு கட்டி ரயில் ஓட்டி இருக்காங்க.
பதினெட்டாம் நூற்றாண்டில் அவங்க தொங்கு ரயில் என்னும் புதிய முயற்சியில் இருந்தபோது இங்கே நாம் அப்போதான் போர்பந்தரில் இருந்து தானே வரை இருப்புப்பாதை அமைச்சு முதன் முதலா ரயில் ஓட்டி இருக்கோம்.
ஜெர்மனிக்கு இந்தியாவில் இருந்து செல்லப் பல்வேறு விமானங்களும் பல்வேறு விமானத்தளங்களும் இருந்தும் நாங்கள் பெங்களூருவைத் தேர்ந்தெடுத்தோம். ஏனெனில் அங்கே எங்கள் பெரிய மகன் வேலை செய்து வருகிறார்.
அபுதாபி வழியாகச் செல்லும் எதிஹாட் ஏர்லைன்ஸில் டிக்கெட்டும் வாங்கியாச்சு. விசா, டிக்கெட், இன்சூரன்ஸ் எல்லாம் உட்பட ஒரு நபர் சென்று வர ஒன்றரை முதல் இரண்டு லட்சம் வரை செலவானது. சின்ன மகன் அழைத்துச் சென்றார் என்பதால் எனக்கு இதன் செலவு விபரங்கள் எல்லாம் சரியாகத் தெரியாது :) :) :)
ஓபர்ஹௌஸனில் இருக்கும் திரு கந்தையா முருகதாசன் சார் அவர்கள் தங்கள் இல்லத்துக்கு விருந்துக்கு அழைத்திருந்தார். அவரும், அவர் மனைவி லைலாவும் மிகவும் தன்மையானவர்கள். முதல் முறை என்னைப் பார்க்க வரும்போதே அவர் எங்களுக்கு இனிப்புகளும் வடையும் கொண்டு வந்திருந்தார்கள். தங்கள் வீட்டுக்கும் அழைத்துச் சென்றார்கள்.
நான் இந்தியா திரும்பும் நாள் நெருங்க நெருங்க மகனிடம் அவர் இல்லத்துக்குச் சென்று வர வேண்டும் எனக் கேட்டேன். தினமும் இருவரும் நடைப்பயிற்சி செல்வோம். ஆரோக்கிய உணவுகள், திருப்புகழ் பாராயணம், சாய் வரலாறு படித்தல்,மகனுக்குப் பிடித்த உணவு வகைகளைச் செய்து கொடுத்தல், அளவளாவுதல், ஹம் காமாட்சி அம்மன் கோவில், மகனது நண்பர்களின் வீட்டில் விருந்து, சாய் பூஜைகள், பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி சார், நிம்மி சிவா, சந்திரகௌரி சிவபாலன் வீட்டிற்குச் சென்றது என நாளும் பொழுதும் ஓடி விட்டது. இவர்கள் எல்லாருமே தங்கள் அன்பினால் எங்களை மூழ்கடித்து விட்டார்கள்.
எனவே ஊருக்குச் செல்வதற்கு முந்தைய வாரத்தில் செப்டம்பர் முதல் வாரத்தில் ஓபர்ஹௌஸன் சென்று லைலா மேடத்தின் விருந்தில் களித்து அவர்கள் என் மகனுக்காகச் செய்து அனுப்பிய இனிப்பு பான்& இனிப்பு சிப்ஸ் ஆகியவற்றை வாங்கி வந்தோம்.
கீழிருந்து மேலாக ஃபோட்டோக்கள் அப்லோடியதால் உங்களுக்கும் லைலா மேம் கொடுத்த பான் & சிப்ஸ். எடுத்துக்கொள்ளுங்கள்.