எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 19 நவம்பர், 2019

டூயிஸ்பர்க்கில் ரோடு துடைக்கும் ட்ரக்ஸ்.

ஃப்ளைட் ஏறிப் போயாச்சு , போய் சுத்தமான ரோடப் பார்த்தாச்சு  என்று பாடத்தான் ஆசை.

விடிகாலையில் அதாவது ஆறு மணிக்கே ரோட்டில் மெல்லிசாக தினமும் கடகடவென சத்தம் கேட்கும். கார்பேஜ் கலெக்‌ஷன் மற்றும் ரோடு துடைக்கத்தான் இந்த மினி சத்தம் எனக் கண்டு கொள்ள நாளாயிற்று.

ஒருநாள் கிச்சன் கதவைத் திறந்து பார்த்தால் தூரத்தில் குட்டியானை போன ஒன்று தும்பிக்கையைத் தரையில் தடவிக் கொண்டு தட தடவெனத் தாறுமாறாக ஓடி வந்தது.

சுவாரசியம் அதிகப்பட அது என்ன என்று நின்று நிதானித்துக் கவனித்தேன். சீராக இல்லாமல் அதகளம் செய்யும் யானை போல் ரோடு முழுவதும் குறுக்கும் நெடுக்கும் எட்டுப் போட்டுக் கொண்டிருந்தது அது. நீங்களே புகைப்படங்களில் அதன் அதகளத்தைப் பாருங்களேன்.

குப்பை மட்டுமில்லாமல் சாலையில் ஒட்டும் பிசுக்குகளையும் நீக்குகிறது இது. ஆர்கானிக் வேஸ்ட், இன்னார்கானிக் வேஸ்ட் ப்ளாஸ்டிக் என இது தரம் பிரித்துச் சேர்த்தும் விடுமாம். ரோட்டில் குண்டூசி கூடக் கிடக்க முடியாது . அப்படி சுத்தம் செய்கிறது.

குளிர்காலத்தில் பயன்படுவது மேன் ட்ரக் மெஷின்ஸ். அது கொட்டிக் கிடக்கும் பனியை எல்லாம் வாரி வழித்து எறிந்து விடுமாம். வீடுகளின் அமைப்பையே பாருங்களேன். கூம்பு வடிவக் கூரைகள். அதிலும் ஓடுகள் பதித்தது. இந்த அமைப்பினால்தான் கூரைகளில் படியும் பனி அனைத்தும் கீழே வழியும். சூரியனைக் கண்டதும் உருகி இறங்கவும் வசதி. ஆனால் ரோட்டில் விழும் பனியை இந்த மாதிரி ட்ரக்ஸ் மூலம்தான் சுத்தம் செய்ய முடியும். அதன் பெயர்தான் மேன் ட்ரக் மெஷின்ஸ்.

பாரம்பரிய ஓடுகள் பதிக்கும் முறை அனைத்துக் கட்டிடங்களிலும் உண்டு. இப்படி வைத்தால்தான் அரசாங்கம் வீடு கட்டும் ப்ளானையே அப்ரூவ் செய்யும். இல்லாட்டி பனித்தங்கி தண்ணியா உருகித் தேங்கி வீடே நாஸ்தியாகிரும்ல.


தூரத்தில் கடகடவென ஓடிவந்து எங்கோ கடைப்பக்கம் திரும்புகிறது இந்த ட்ரக்.


கடைகளுக்கும் ரோட்டுக்கும் இடையே பாதசாரிகள் நடக்க பாதை உண்டு. அந்தப் பாதையில் செல்லும் அளவே சின்னஞ்சிறியது இந்த ட்ரக் வண்டி.

இங்கே வரப் போகுது என காமிராவோடு காத்திருந்தால் பின்புறத்தைத் திருப்பிக்கொண்டு கடைப்பக்கம் ஓடிருச்சு.


யெஸ். இதோ ஓடிப்போய் ரவுண்டடிச்சுத் திரும்பி வருது. விடிகாலை நேரம் என்பதால் ப்ரைட் லைட்டுடன் அலையுது. ( ஃபோட்டோ எல்லாம் இருட்டா கிடந்தது. பாலிஷ் பண்ணி ப்ரைட்டாக்கிப் போட்டிருக்கனாக்கும். )


முன்புறம் இரண்டு ப்ரஷ் ஹோல்டர்கள் . சர்க்குலர் மோஷனில் ரொட்டேட் ஆகிக்கொண்டே அதே சமயம் ஜெயண்ட் சைஸ் வாக்யூம் க்ளீனர்ஸ் போல சுற்றி உறிஞ்சிக் கொண்டே வருகிறார்கள்.

இதோ ஜெயண்ட் சைஸ் சர்க்குலர் பிரஷ்களில்  நீரையும் விட்டு ஈரத்தோடு லேசாகத் துடைத்தபடியும் வருகிறது வண்டி.


நல்லா கிட்டக்கப் பாருங்க. ட்ரக் ட்ரைவரே நம்மூர் க்ரேன் ஆப்பரேட்டர், மண் அள்ளும் மிஷின் ஆப்பரேட்டர் மாதிரி இதை சுத்திக்கிட்டு வர்றாரு.

துடைச்சு முடிச்சிருச்சு.

இன்னும் ஒரு ரவுண்ட் அடிச்சு மிச்சம் மீதியையும் துடைச்சிட்டுக் கிளம்புது. ரெடி ஜூட். சூரியன் வரத் தயாராயிடுச்சு. வாசல் தெளிச்சுத் துடைச்சு ஈரக் கோலம் போட்டாச்சுல்ல :)

நிறைய இடம் இருக்கும்போது சடார் சடார்னு திரும்பித் திரும்பித் துடைக்கும் இது.


அழகான ரோடுதான். அதுக்கேத்த கோடுதான். :)


அஞ்சு நிமிஷம்தான் அதுக்குள்ள ரோடு க்ளீனாயிடுச்சு. சூப்பர் சிஸ்டம்ல.. :) நாம போய் ஃபில்டர்ல போட்ட டிக்காக்‌ஷனை எடுத்துக் காய்ச்சின பால்ல ஊத்தி காஃபி சாப்பிடலாம் வாங்க. என்னது ஃபில்டர் காஃபியா ஆமாங்க அதான் ரெண்டு மாசம் தங்குறதுக்காக ஃபில்டர் ஒரு கிலோ நரசுஸ் எல்லாம் வாங்கிட்டுப் போனோம்ல. தினம் தினம் மணக்க மணக்க காஃபிதான். 

4 கருத்துகள்:

 1. அருமை
  நம்ம ஊரு எப்பொழுது இப்படி சுத்தமாகுமோ..

  பதிலளிநீக்கு
 2. சிறப்பு
  நம்ம ஊரு வீதிகள் எப்ப சுத்தமாகுமோ தெரியல

  பதிலளிநீக்கு
 3. மேன் ட்ரக் மெஷின்ஸ்.,...சூப்பரா வேலை செய்யுது ..

  வாசல் தெளிச்சுத் துடைச்சு ஈரக் கோலம் போட்டாச்சுல்ல :)....செம்ம

  பதிலளிநீக்கு
 4. அதான் தெரில ஜெயக்குமார் சகோ

  ஆமாம் யாழ்பாவண்ணன் சகோ

  நன்றிடா அனு :)

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...