எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 27 நவம்பர், 2019

உஃபிஸி காலரியும் வஸாரி காரிடாரும்.

ரோமின் டஸ்கனியில்தான் ( ஃப்ளாரன்ஸ் , இத்தாலி ) அமைந்துள்ளது இந்த உஃபிஸி காலரி. பலாஸ்ஸோ வெக்கியொவிலிருந்து உஃபிஸி காலரிக்குச் செல்ல முடியும். இது சரித்திரப் பிரசித்திபெற்ற சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் அடங்கிய இடம்.

ஓபன் கேலரியான இது வஸாரி காரிடாரில் இருந்து ஆர்னோ நதி தாண்டி பிட்டி பேலஸ் வரை நீள்கிறது. இந்த உஃபிஸி தாழ்வாரம் மற்றும் சிலைகளை மெடிசி குடும்பத்தினர் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் நிறுவிப் பாதுகாத்து வருகிறார்கள்.

பலாஸ்ஸோ வெக்கி என்ற டவுன்ஹாலையும் அரசாங்க அலுவலகங்களையும் ( உஃபிஸி = ஆஃபீஸ் ) இணைக்கும் இந்த காலரி மெடிஸி என்ற குடும்பத்தினருக்குச் சொந்தமான  தனியார் இடத்தில் அமைந்துள்ளது வித்யாசம்.

லோரேய்ன் ஹப்ஸ்பர்க் பிரியடின் போது தனியாருக்கு மட்டுமான பாதையாகப் பயன்பட்டது தற்போது பொதுமக்கள் பார்வைக்காகவும் திறந்துவிடப்படுகிறது . ஆனால் அவ்வப்போது கேட்டை இழுத்து மூடிவிடுவார்கள். அதாவது பார்க்கத் தடா விதித்து விடுவார்கள்.

மேலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு நேரத்தில் ( அதாவது  குறிப்பிட்ட முக்கால்மணி நேரம் - 9. 30 - 10.15, 11 - 11. 45 இதுபோல்  ) 25 பேர்தான் அதிகபட்சம் செல்லமுடியும்

இது கேலரியா டெக்லி உஃபிஸி என்றும் அழைக்கப்படுகிறது. இதில் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கலைஞர்களின் சிலைகள் லாகியேட்டோ எனப்படும் குவிமாடத்திற்குள் செதுக்கி நிறுத்தப்பட்டுள்ளன. இவை காலரியின் வெளிப்புறத்தில் காணப்படுபவை.

பின்வரும் கிரானைட் சிலைகள் அனைத்தும் ரோமின் ஒரு வீதியில் அமைந்துள்ளன. சாக்ரடீஸ், ப்ளேட்டோ , அரிஸ்டாட்டில் ஆகிய சிலைகள் காணப்பட்டன.


தத்துவ அறிஞர்களைக் கலைப்படைப்பில் முன்னிலைப்படுத்துவதில் முதலிடம் வகிக்கிறது ரோம்.


இங்கே லியானார்டோ டாவின்ஸி, மைக்கலேஞ்சலோ, டோனெட்டெல்லி ஆகிய கலைஞர்களின் சிற்பங்களும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.மோஸஸ் , ஜூலியஸ் சீஸர், மார்க் ஆண்டனி, அகஸ்டஸ், ப்ரூட்டஸ் ஆகியோரும் கூட காணப்படுகிறார்கள் கிரானைட் சிலைவடிவில்.


ஞான ஸ்நானம் .. ?!

ஜூலியஸ் சீஸர்.

அரிஸ்டாட்டில்


இதுதான் உஃபிஸி காலரிக்குச் செல்லும் வழி. அரண்மனையின் இரு அலகுகளையும்  இணைக்கும் வஸாரி காரிடார் முடிவில் உள்ளது.


லியானார்டோ டாவின்ஸியின் சிலை,மற்றும் மைக்கலாஞ்சலோ போன்ற கலைஞர்களின் சிலை எல்லாம் இந்த வீதியில் இடம் பெற்றுள்ளன.ப்ளேட்டோ.

இதுதான் வஸாரி காரிடார்.  இதன் எதிரில் தான் இருக்கிறது அர்னொ நதி.கலிலியோவும் மன்னர் பீட்டர் அண்டானியோ மிச்செலும்.


பொதுமக்கள் பார்வையிடும் இடங்களில் உஃபிஸி காலரி  உலகளாவில்  25 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கிட்டத்தட்ட 50 அறைகளில் 13 ஆம் நூற்றாண்டில் இருந்து 18 ஆம் நூற்றாண்டு வரையான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனவாம். இங்கே இருப்பவை அநேகம் ஓவியங்கள் மட்டுமே. அதிலும் அன்னை மரியாள் , ஏசுவை சிலுவையில் அறைதல், உயிர்த்தெழுதல், ஆதாம்  ஆகிய ஓவியங்கள் அதிகம் இடம் பெற்றுள்ளன.வழியில் ஒரு உயிர்ச் சிற்பம். ஒரு மனிதன் உடலெங்கும் வெள்ளை நிறக் கலவையைத் தடவிக் கொண்டு சிலையாய் நின்று அவ்வப்போது அசைந்து திகிலூட்டினார். இவர் யாராக வேஷமிட்டிருக்கிறார் எனக் கண்டுபிடித்துச் சொல்லுங்களேன்.
உஃபிஸி காலரிக்குள் செல்ல முடியவில்லை. ஏனெனில் அங்கே சென்று வர நேரமில்லை. அதோடு மழை வேறு பிடித்துக் கொண்டது. எனவே அர்னோ நதியோடு திரும்பினோம்.

குண்டு வெடிப்பு, மழை, வெள்ளம், நெருப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டாலும் இந்த உஃபிஸி கேலரி திரும்பத் திரும்பத் தன் ஓவியங்களுடன்  மீண்டெழுந்து நிற்பது காலத்தின் அதிசயமே.  

2 கருத்துகள்:

  1. அருமையான தகவல்கள் அருமையான படங்களுடன் பகிர்வுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  2. நன்றி டிபிஆர் ஜோசப் சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...