ரோமின் டஸ்கனியில்தான் ( ஃப்ளாரன்ஸ் , இத்தாலி ) அமைந்துள்ளது இந்த உஃபிஸி காலரி. பலாஸ்ஸோ வெக்கியொவிலிருந்து உஃபிஸி காலரிக்குச் செல்ல முடியும். இது சரித்திரப் பிரசித்திபெற்ற சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் அடங்கிய இடம்.
ஓபன் கேலரியான இது வஸாரி காரிடாரில் இருந்து ஆர்னோ நதி தாண்டி பிட்டி பேலஸ் வரை நீள்கிறது. இந்த உஃபிஸி தாழ்வாரம் மற்றும் சிலைகளை மெடிசி குடும்பத்தினர் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் நிறுவிப் பாதுகாத்து வருகிறார்கள்.
பலாஸ்ஸோ வெக்கி என்ற டவுன்ஹாலையும் அரசாங்க அலுவலகங்களையும் ( உஃபிஸி = ஆஃபீஸ் ) இணைக்கும் இந்த காலரி மெடிஸி என்ற குடும்பத்தினருக்குச் சொந்தமான தனியார் இடத்தில் அமைந்துள்ளது வித்யாசம்.
லோரேய்ன் ஹப்ஸ்பர்க் பிரியடின் போது தனியாருக்கு மட்டுமான பாதையாகப் பயன்பட்டது தற்போது பொதுமக்கள் பார்வைக்காகவும் திறந்துவிடப்படுகிறது . ஆனால் அவ்வப்போது கேட்டை இழுத்து மூடிவிடுவார்கள். அதாவது பார்க்கத் தடா விதித்து விடுவார்கள்.
மேலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு நேரத்தில் ( அதாவது குறிப்பிட்ட முக்கால்மணி நேரம் - 9. 30 - 10.15, 11 - 11. 45 இதுபோல் ) 25 பேர்தான் அதிகபட்சம் செல்லமுடியும்
இது கேலரியா டெக்லி உஃபிஸி என்றும் அழைக்கப்படுகிறது. இதில் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கலைஞர்களின் சிலைகள் லாகியேட்டோ எனப்படும் குவிமாடத்திற்குள் செதுக்கி நிறுத்தப்பட்டுள்ளன. இவை காலரியின் வெளிப்புறத்தில் காணப்படுபவை.
பின்வரும் கிரானைட் சிலைகள் அனைத்தும் ரோமின் ஒரு வீதியில் அமைந்துள்ளன. சாக்ரடீஸ், ப்ளேட்டோ , அரிஸ்டாட்டில் ஆகிய சிலைகள் காணப்பட்டன.
தத்துவ அறிஞர்களைக் கலைப்படைப்பில் முன்னிலைப்படுத்துவதில் முதலிடம் வகிக்கிறது ரோம்.