எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 29 ஏப்ரல், 2022

எஸ் பி எம்.. சகாப்தங்களை உருவாக்கிய சகாப்தம்

 எஸ் பி எம்.. சகாப்தங்களை உருவாக்கிய சகாப்தம்


”ஹத்தியக்கு சுக்காவா ஸ்லாலுவக்கு ஜிந்த்தாவா
சயாபாண்டாங் டெரிமு சயா பர் ஹரி ஹரி டோக்கா
பர்தஸ் ஓராங் ஹத்தி படா மு” இந்தமாதிரி டிடெக்டிவ் ரஜனி மலாய்ப் பெண்ணுடன் பிரியா படத்தில் பாடுவதைப் போலச் சிலகாலம் மொழி புரியாமலே சிறுவயதில் சந்தோஷமாய்ப் பாடித் திரிந்திருக்கிறோம். 

”என்னை நீ டைரக்‌ஷன் பண்ணாதே..” என்று என் உறவினர் தன் மனைவியிடம் கூறும்போது டைரக்‌ஷன் என்றால் எல்லாரையும் ஆட்டுவிப்பது என அந்த வயதில் நினைத்துக் கொண்டிருந்தேன். டைரக்டரை மற்றவர்களும் கால்ஷீட் குளறுபடிகளால் ஆட்டி வைப்பார்கள் என்று பின்னாளில் புரிந்தது.

ஏவிஎம்மின் பாசறையில் இருந்து வந்தவர். கடின உழைப்பாளி. கல்லைக் கொடுத்தாலும் கனியாக்கிக் காட்டும் திறமையாளர்.  விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டு திரு எஸ் பி எம் அவர்கள். மக்களின் ரசனையை நாடி பிடிக்காமலே அறிந்த சினிமா டாக்டர் இவர் என்றால் தகும். போட்டிகள் பொறாமைகள், குழிபறித்தல்கள் நிறைந்த சினிமா உலகில் எதிரிகளே இல்லாத வெற்றிகரமான மனிதர். ஆம் வெற்றி என்பது மூன்றெழுத்து. எஸ் பி எம் என்பதும் மூன்றெழுத்து

திங்கள், 25 ஏப்ரல், 2022

வரமே சாபமானது

வரமே சாபமானது


தன் வினை தன்னைச் சுடும், தலைக்கு மேலேயும் சுடும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் ஒரு அரக்கன் இருந்தான். அவனுக்கு நல்வரம் கொடுத்துவிட்டு முப்பெரும் தேவர்களில் ஒருவரான ஈசனே அவதிப்பட்டார். அவரை விஷ்ணு காப்பாற்றினார். அந்தக் கதை என்னவென்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

அரக்கர் குலத் தலைவன் பத்மாசுரன். அவன் மாபெரும் கோட்டை கட்டி ஆண்டு வந்தான். சிவனின் மேல் மிகுந்த பக்தி கொண்டவன். அல்லும் பகலும் சிவநாமத்தை ஓதி ஓதி சிவபூஜை செய்து கொண்டிருந்தான். இவ்வாறாகப் பல்லாண்டுகாலம் கடந்தது. அகமும் புறமும் மறந்து இறைத் தியானத்திலேயே ஆழ்ந்துவிட்டான்.

வெள்ளி, 22 ஏப்ரல், 2022

பாட்டிக்ஸ் மௌச்சஸ் - 2.

 ஃப்ரான்ஸ் சென்றிருந்த போது பாரீஸில் “பாட்டிக்ஸ் மௌச்சஸ்” என்னும் பறக்கும் படகில் சென்றது குறித்து முன்பே எழுதி இருக்கிறேன். மிக வித்யாசமான அனுபவம் அது. ஒர்ஸே மியூசியம், லூவர் மியூசியம், நாட்டர்டேம் கதிட்ரல் , ஈஃபில் , சுதந்திர தேவி சிலை, பல்வேறு கட்டடங்கள்,  பாலங்களைக் கண்டு களிக்கலாம். 

1870 இல் ஃப்ரான்கோ- ப்ருஷ்யன் போரில் காயம் பட்ட வீரர்களை ஆம்புலன்ஸின் வேகத்துடன் பறந்து சிகிச்சைக்குக் கொண்டு சென்றதால் இப்படகுகளுக்குப் பறக்கும் படகுகள் என்று பெயர். இதற்கு ரெட் கிராஸின் மெடல்களும் வழங்கப்பட்டிருக்கு ! 

ஃப்ரான்ஸில் ஓடும் நதியின் பெயர் ஸீன். 

வெள்ளி, 15 ஏப்ரல், 2022

மகாகாலேஷ்வர்,ஓம்காரேஷ்வர்,சோம்நாத்,நாகேஷ்வர் ஜோதிர்லிங்க தரிசனம்.

 மகாகாலேஷ்வர்,ஓம்காரேஷ்வர்,சோம்நாத்,நாகேஷ்வர் ஜோதிர்லிங்க தரிசனம்.


மஹாகாலேஷ்வர், ஓம்காரேஷ்வரர்/மமலேஷ்வரர், சோம்நாத், நாகேஷ்வர் ஆகிய நான்கு ஜோதிர்லிங்கத்தையும் துவாரகை கிருஷ்ணன், உஜ்ஜயினி மஹாகாளியையும்  தரிசனம் செய்து நாளாகிவிட்டது ஆனால் இப்போதுதான் பதிவு செய்கிறேன். குஜராத், & மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள கோயில்கள் இவை.

மகாகாலேஷ்வர்.  மிகவும் பந்தோபஸ்துடன் அமைந்த கோவில் இது. முதல்நாளே  ரேஷன்கார்டு, பான்கார்டு , வோட்டர் ஐடி ,ஆதார் போன்ற அடையாள அட்டைகளில் ஏதோ ஒன்றைக் காண்பித்துப் பதிவு செய்துகொள்ளவேண்டும். மறுநாள் விடியற்காலையில் உள்ள ஸ்பெஷல் பஸ்மாஹாரத்தி எனப்படும் மயானபூஜையைப் பார்க்கவே இது.

புதன், 13 ஏப்ரல், 2022

அம்மா என்றால் அன்பு.. அம்மு..

 அம்மா என்றால் அன்பு.. அம்மு.


நான் பிறந்த வருடம் நடிக்க வந்தவர். 17 வயதில் இருந்து 32 வயதுவரை நடிப்புலகில் ஜொலித்தவர். மகத்துப் பெண் ஜகத்தை ஆள்வாள் என்ற சொலவடைப்படி 30 வருடங்கள் அரசியலில் ( ஐந்து முறை முதல்வராகி ) கோலோச்சியவர் ஜெ ஜெயலலிதா.. திருவளர்ச் செல்வியோ நான் தேடிய தலைவியோ என்று வாத்தியார் பாடி அழைத்த தலைவி.  பெண்களுக்குக் கோட் ஒரு எடுப்பான உடை என்று தோன்றவைத்த அந்த அழகுக்கு மறுபெயர் பெண்ணா !

வெள்ளி, 8 ஏப்ரல், 2022

சகோதர பாசத்தில் சிறந்த சம்பாதி.

 சகோதர பாசத்தில் சிறந்த சம்பாதி.  


பொதுவாகவே பறவைகளுக்கு இருக்கும் கூரியபார்வையை நாம் அறிவோம். எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் நீரில் இருக்கும் தம்முடைய இரையை அவை கூர்ந்து கவனித்து இறங்கிப் பிடிக்கும். ஆனால் ஒரு பறவையின் பார்வையில் கடல் தாண்டி இருக்கும் தீவே தெரிந்ததாம். அதனால் நன்மையே விளைந்தது அப்பறவைக்கும். சகோதர பாசத்திலும் சிறந்த அப்பறவையின் கதை என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே. 

மஹேந்திரமலையில் ஏறிக்கொண்டிருந்தார்கள் சுக்ரீவனின் வானர வீரர்கள். அங்கதன், அனுமன் இவர்களோடு ஜாம்பவானும் சென்று கொண்டிருந்தார். அனைவரின் முகங்களிலும் ஆயாசம். பலமாதங்கள் ஆயிற்று அவர்கள் கிளம்பி. சீதா தேவியாரைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள் அவர்கள்.

திங்கள், 4 ஏப்ரல், 2022

தமிழால் இணைவோம் தந்த தங்க மங்கை விருது - 2022.

 தமிழால் இணைவோம் குழுமத்தினர் 2022 க்கான தங்க மங்கையரின் ஒருவராகத் தேர்ந்தெடுத்து விருது வழங்கினார்கள். 



நன்றி அக்குழுமத்தினருக்கும், தலைவர் திரு சத்யநாராயணா சார், துணைத்தலைவர் பரமேஸ்வரி பாலகுரு & இணைத்தலைவர் மீனாக்ஷி திருப்பதி. 


Related Posts Plugin for WordPress, Blogger...