எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 29 மே, 2023

காதல் வனம் - ராஜநாகம்

காதல் வனம்

 ராஜநாகம்

 து ஒரு நவம்பர் காலம்.

பாதையோரங்களில் குட்டித் தீவுகளை உருவாக்கிக் கொண்டிருந்தது மழை,
மேகங்கள் சூழ மரங்கள் மௌனமாய் நின்றிருந்தன.

ஒரு சின்னப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தது வானம். எதிர்கொள்ளத் தயாராய் இருந்தது வனம்.

ஜீப்பிலிருந்து இறங்கி நடக்கிறார்கள் இருவரும்.

தூரத்தே தெரியும் சிகரங்களும் பசுமையும் மேகமூட்டமும் பாதையை கனவுக் காட்சிக்கான தளம் போல் விரிக்கின்றன.

ஒரு கற்றைக் கயிற்றைச் சுருள விட்டபடி பதுங்கி இருக்கும் அந்த அருவியை ஆச்சர்யத்துடன் பார்க்கிறாள் அவள்

'இங்கே நீராடுவதா. ?!'

யூ ட்யூபில் 1461 - 1470 வீடியோக்கள். கோலங்கள்.

1461.கோலங்கள் - 191 l  அட்சய திரிதியை l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/JlYISViurC0


#கோலங்கள், #அட்சயதிரிதியை,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #ATCHAYATHIRITHIYAI, #THENAMMAILAKSHMANAN,1462.கோலங்கள் - 192 l  அட்சய திரிதியை l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=5fEXnsSsObE


#கோலங்கள், #அட்சயதிரிதியை,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #ATCHAYATHIRITHIYAI, #THENAMMAILAKSHMANAN,

ஞாயிறு, 28 மே, 2023

ஃப்ளாரன்ஸ் கதீட்ரல்.

 பன்னிரெண்டாம் நூற்றாண்டில்  (கிபி 1296 ஆம் ஆண்டு ) இத்தாலியில் பியாஸ்ஸா டெல் டியாமாவில் ( ஃப்ளாரன்ஸில் ) அராபிய மேற்கத்திய ஐரோப்பியக் கட்டிடக் கலை அமைப்பில் கட்டப்பட்ட சர்ச் , கதீட்ரல் ஒன்றை எங்கள் யூரோப் டூரின்போது பார்த்தோம். 27.7.2023 அன்று ரோமைப் பொடிநடையாகச் சுற்றி வாடிகன் மற்றும் மைக்கேலேஞ்சலோவின் ஓவியங்கள் உஃபிஸி கேலரியும் வஸாரி கேரிடாரையும் மற்றும் ஃப்ளாரன்ஸ் கதீட்ரலையும் பார்த்தோம். இதில் யுனெஸ்கோவில் உலகப் பாரம்பரியத் தளத்தின் பகுதியாகிய  பாப்டிஸ்டிரி, ஜியோட்டோஸ் கேம்பைனல் ஆகிய கட்டிடங்களும் அடங்கும். 

1296 இல் தொடங்கப்பட்ட இது 1436 இல் ஃபிலிப்போ ப்ருனெல்லெச்சியால் வடிவமைக்கப்பட்ட குவி மாடத்துடன் பூர்த்தி அடைந்தது. கட்டிடத்தின் உள்ளும் வெளியும் இளம் பச்சை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்திலான மார்பிள் கற்களால் வடிவமைக்கப்பட்டது. இதன் முகப்பு 19 நூற்றாண்டில் கோதிக் கலைப் பாணியில் அழகுற செதுக்கப்பட்டது. இந்த பசிலிக்காவில் கட்டப்பட்ட இந்த டோம் செங்கற்களால் அமைக்கப்பட்டது. 

மிகப் பிரம்மாண்டமா கதீட்ரல் மற்றும் அதன் சுற்றிலும் பல்வேறு சரித்திரப் புராணக் கட்டிடங்கள்.

யூ ட்யூபில் 1451 -1460 வீடியோக்கள்.

1451.ஸ்ரீ பார்த்தசாரதி மாலை - 49 l  சௌரியப்பெருமாள் தாசர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/oqEaU0Fy0Rc


#ஸ்ரீபார்த்தசாரதிமாலை, #சௌரியப்பெருமாள்தாசர்,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIPARTHASARATHIMALAI, #SAURIYAPERUMALDASAR, #THENAMMAILAKSHMANAN,1452.மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=_Wi2EH6vl6w


#மஹிஷாசுரமர்த்தினி, #ஸ்தோத்திரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MAHISHASURAMARTHINI, #STOTRAM, #THENAMMAILAKSHMANAN, 

சனி, 27 மே, 2023

ஷென்ஜென் விசா - SCHENGEN VISA

ஷென்ஜென் விசா

ஜெர்மனிக்குச் செல்வதென்றால் யூரோப் முழுமைக்கும் செல்லுபடியாகக்கூடிய  ஷென்ஜென் விசாவை ( யூரோப் செல்வதற்காக) அப்ளை செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். 

நாங்கள்  சென்ற முறை அப்ளை செய்தபோது ஒரு வருடத்துக்கு மட்டும் கொடுத்தார்கள், அதுவும் மூன்று மாதம் மட்டுமே இருக்க இயலும். இந்த முறை அப்ளை செய்தபோது நான்கு ஆண்டுகளுக்கு வழங்கியுள்ளார்கள். அதுவும் ஒரு வருடத்துக்கு ஒரு முறை சென்று மூன்று மாதங்கள் மட்டுமே இருந்துவர இயலும். மேலும் எந்த வெளிநாடு சென்றாலும் மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். பத்து வருட பாஸ்போர்ட் நாம் சென்று வரும் வரை காலாவதியாகாமல் இருக்க வேண்டும்.

யூ ட்யூபில் 1441 - 1450 வீடியோக்கள்.

1441.சரபேசர் l  இராயசொக்கலிங்கனார் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/V6FtYpRc11s


#சரபேசர், #இராயசொக்கலிங்கனார், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SARABESAR, #RAYACHOCKALINGANAR, #THENAMMAILAKSHMANAN, 1442.பைரவர் துதி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/0X9OFpIi0n8


#பைரவர்துதி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#BHAIRAVARTHUTHI, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 25 மே, 2023

காதல் வனம் முன்னுரை

 காதல் வனம் முன்னுரை

இது எனது ஒன்பதாவது நூல். ஒன்பதாவது மேகத்தில் உலாவுகிறாயா ( CLOUD NINE )  என்பார்கள் காதல் மேகத்தில் மிதந்து பூமியில் கால்பாவாமல் நடப்பவர்களை. இக்காதலர் தினத்தில் ஒரு காதல் புதினத்தோடு உங்களை சந்திப்பதில் மகிழ்வெய்துகிறேன்.

காதல் எல்லா உயிர்களுக்கும் எல்லாப் பருவங்களிலும் ஏற்படும் இயற்கையான உணர்வு. இனக்கவர்ச்சி, காதல், பாசம், நேசம், ப்ரியம், ஈர்ப்பு, பரஸ்பர தேடல், இரு உயிர்களுக்கிடையில் ஏற்படும் பிரிக்கவியலா பிணைப்பு காதல். தெள்ளிய நீரோடை போன்ற வாழ்வில் அருவியின் எதிர்பாரா வீழ்ச்சியும் சிதறல்களான எழுச்சியும் போன்றது காதல். இதயங்களைச் சில்லிடச் செய்வதும், கதகதப்பூட்டுவதும், பொங்கி எழச்செய்வதும், வெறுப்பேற்றுவதும், நெருப்பேற்றுவதும் காதலுக்கே சாத்தியம்.

யூ ட்யூபில் 1431 - 1440 வீடியோக்கள்.

1431.திருமகள் துதி l பாரதியார் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/mdCI8tRmikk


#திருமகள்துதி, #பாரதியார், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMAGALTHUTHI, #BHARATHIYAR, #THENAMMAILAKSHMANAN,1432.மணிகண்டன் ரூபமே l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=h1V7iqlXXuQ


#மணிகண்டன்ரூபமே, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MANIKANDANROOPAMEY, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 23 மே, 2023

கிச்சன் ஹெல்பர்ஸ்

 முன்பு வீட்டில் மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றையே கிச்சன் ஹெல்ப்பர்ஸ் என்று நினைத்திருந்தேன். அடுத்து டிஷ் வாஷர் போன்றவையும் ஜூஸர் மிக்ஸர் போன்றவையும் காய்கறியை சிப்ஸ், துருவுதல் போன்றவற்றுக்கு நறுக்குபவையும் வந்தன. இப்போது எண்ணற்றவை புழக்கத்தில் உள்ளன. அவற்றில் ஒன்றிரண்டை உபயோகித்துப் பார்த்தேன். ஆனாலும் அருகாமனை, காய் துருவி, தோல் சீவி போல் வரலை. பசங்களுக்கோ இவைதான் ஆபத்பாந்தவை. 


யூ ட்யூபில் 1421 - 1430 வீடியோக்கள். கோலங்கள்.

1421.கோலங்கள் - 181 l  ஆனித்திருமஞ்சனம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=7DdxcJNqtB8


#கோலங்கள், #ஆனித்திருமஞ்சனம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #AANITHIRUMANJANAM, #THENAMMAILAKSHMANAN, 1422.கோலங்கள் - 182 l  ஆனித்திருமஞ்சனம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=PKNQzmjlLv0


#கோலங்கள், #ஆனித்திருமஞ்சனம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #AANITHIRUMANJANAM, #THENAMMAILAKSHMANAN, 

வீடென்று எதனைச் சொல்வீர்.

 வீடென்று எதனைச் சொல்வீர்.


வீடென்று எதனைச் சொல்வீர் என்ற மாலனின் கவிதையை நான் கல்லூரிப் பருவத்தில் படித்திருக்கிறேன். இதுவரை மெய்யாலுமே பணி நிமித்தம் மாற்றலால் 25 வீடுகளை வரை குடி இருந்திருப்போம். காரைக்குடியில் வீட்டிற்கெல்லாம் பெயருண்டு. நான் எங்கள் ஆயா வீடான வேகுப்பட்டியார் வீட்டில்தான் பிறந்தேன். எங்கள் அப்பத்தா வீட்டின் பெயர் ஆவுடையான் செட்டியார் வீடு. கானாடுகாத்தானில் எனக்குத் திருமணமான வீட்டின் பெயர் மல்லுப்பட்டியார் வீடு மேலும் கடியாபட்டி இராமன் செட்டியார் வீடு. வித்யாசமாய் இருக்கிறதல்லவா.

இந்த மூன்று வீடுகளுமே எனக்குப் பிடிக்கும். ஏனெனில் முகப்பு (முன் கோப்பு) முகப்புப் பத்தி, பட்டாலை, வளவு, வளவு அறைகள், ஆல்வீடு, இரண்டாங்கட்டு, மூன்றாங்கட்டு என்ற பலகட்டுக்கள் கொண்டது. மேலும் கட்டுத்துறையும் சில வீடுகளில் சாரட் அல்லது கார் நிறுத்தும் ஷெட்டுக்களும் உண்டு. வீட்டின் வடகிழக்கில் ஒரு கிணறும், தென்மேற்கில் ஒரு கிணறும் உண்டு. மேலும் மழைபொழியும் போதெல்லாம் தண்ணீர்க் கிடாரத்தில் வேடு கட்டிப் பிடித்து வைப்பதால் எந்த நாளும் தண்ணீர்த் தட்டுப்பாடே கிடையாது.

யூ ட்யூபில் 1411 - 1420 வீடியோக்கள். புத்தக மதிப்புரைகள்.

1411.புல்லாங்குழலும் இருபது துளைகளும் l சீதா மகிழினி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=1fLz7n2V4_A


#புல்லாங்குழலும்இருபதுதுளைகளும், #சீதாமகிழினி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PULLANGULALUMIRUPATHUTHULAIGALUM, #SEETHAMAZHINI, #THENAMMAILAKSHMANAN,  1412.சிங்கப்பூரில் தமிழ் தமிழர் l  சௌந்தரநாயகி வைரவன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=ZAkSgLkZGoo


#சிங்கப்பூரில்தமிழ்தமிழர், #சௌந்தரநாயகிவைரவன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SINGAPORILTHAMILTHAMILAR, #SOUNDARANAYAGIVAIRAVAN, #THENAMMAILAKSHMANAN, 

திங்கள், 22 மே, 2023

மன்னார்குடி சில நினைவுகள் !

 மன்னார்குடி நினைவுகள் !

கணபதி விலாஸும், செயிண்ட் ஜோசப்பும், லெக்ஷ்மி காலனியும். 

 மன்னார்குடி என்னும் ராஜ மன்னார்குடியில் நாங்கள் கிட்டத்தட்டப் பன்னிரெண்டு வருடம் இருந்தோம். எனது முதலாம் வகுப்பிலிருந்து ப்ளஸ்டூ வரை நான் அங்கேதான் செயிண்ட் ஜோசப்பிலும் பின்னர் கணபதி விலாஸிலும் அதன் பின்னர் திரும்ப செயிண்ட் ஜோசப்பிலும் படித்தேன். 

நாங்கள் குடியிருந்த வீட்டின் பக்கவாட்டுத் தோற்றம். வனஜாக்கா, சித்ராவின் வீட்டிலிருந்து நாங்கள் 2022 இல் மன்னார்குடிக்குச் சென்றிருந்தபோது எடுத்த படம்.

இதே வீட்டில்தான் குடி இருந்தோம். நம்பர் 18, லெக்ஷ்மி காலனி, சிங்காரவேலு உடையார் தெரு. இதுதான் முகவரி. இந்தக் காலனியின் முன்னால் வேலி போட்ட ஒரு காலி இடமும் அதன் முன் செங்குளமும் இருக்கும். கிழக்குப் பார்த்த வீடு.  (இந்த ரோடு மேற்காலே முடியும் இடத்தில் நாதன்ஸ் ஸ்டூடியோ இருந்தது.) 

முன்புறம் தெரிவது முகப்பு, முதல் ஜன்னல் பக்கம் முதல் ரூம், இரண்டாம் மூன்றாம் ஜன்னல்கள் சாமி ரூம். அதன் அந்தப் பக்கம் நடு ரூம், கடைசி ஜன்னல் அடுப்படி. இதே ஓட்டுக் கட்டிடம். ஒருவேளை ஓடு மட்டும் மாற்றி இருக்கலாம், ! 


யூ ட்யூபில் 1401 - 1410 வீடியோக்கள்.

1401.மாத்தூர் நந்தி கல்யாணம் l  ஐநூற்றீசுவரர் பெரியநாயகி அம்பாள் உலா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/5Je2i7L13dU


#மாத்தூர்நந்திகல்யாணம்,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MATHURNANDIKALYANAM, #PART4, #THENAMMAILAKSHMANAN,1402.சின்னஞ்சிறு பெண்போலே l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=cMu9BE7qqxk


#சின்னஞ்சிறுபெண்போலே, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SINNANCHIRUPENPOLEY, #THENAMMAILAKSHMANAN,

சனி, 20 மே, 2023

சாட்டர்டே போஸ்ட் - நான் மீடியா நாகாவின் நான் ஸ்டாப் நான் எஃப் எம்.

என் முதல் நூலான சாதனை அரசிகள் வெளியீட்டு விழாவின் போது 2012 ஜனவரி 8 அன்று ஆர்ஜே நாகா என்னை எஸ் ஆர் எம் யூனிவர்சிட்டியின் எஃப் எம் க்காகப் பேட்டி எடுத்தார். அதன்பின் டிஸ்கவரி  புக் பேலஸில் எஸ் ஆர் எம் யூனிவர்சிட்டியின் எஃப் எம்மின் முத்துச்சரம் சமுதாய வானொலியில் சர்வதேச மகளிர் தினத்திற்கான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக ஏழெட்டுப் பெண் ஆளுமைகளுடன் உரையாடி நிகழ்வைத் தொகுத்தளித்தேன். 


இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து எஃப் எம்மிலும் பல்வேறு துறைகளிலும் இயங்கிக் கொண்டிருக்கும் நாகாவிடம் அவரது எஃப் எம் மற்றைய துறைகள் பற்றிக் கேட்டேன். அதை இங்கே தருவதில் மகிழ்கிறேன். 

யூ ட்யூபில் 1391 - 1400 வீடியோக்கள்.

1391.தக்ஷிணாமூர்த்தி மூலமந்திரம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/4ibb_i0LKsc


#தக்ஷிணாமூர்த்திமூலமந்திரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DAKSHINAMOORTHYMOOLAMANTHIRAM, #THENAMMAILAKSHMANAN, 1392.கல்வியில் சிறக்க சொல்ல வேண்டிய  ஹயக்ரீவர் மந்திரம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/jzYKPCkIlks


#கல்வியில்சிறக்க, #ஹயக்ரீவர்மந்திரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#HAYAGREEVAMANTHIRAM, #THENAMMAILAKSHMANAN

வியாழன், 18 மே, 2023

சொற்போரும் நத்தை உலகும்

 164.


3261.இராத்திரி நேரத்திலும் இங்கே கூட்டமான கூட்டம். போளியோட சாப்பாடு சாப்பிடத்தான். எங்கேன்னு சொல்லுங்க மக்காஸ்.3262.தினமும் இது பத்தி ஒரு வீடியோவை யூ ட்யூப் ஹோம் பேஜில் அனுப்புது. "சங்கரபதிக் கோட்டை". இது இராமநாதபுரம் அரசர், வீரமங்கை வேலு நாச்சியார், மருதிருவர் ஆகியோரின் வீரக்கழல்கள் பதிந்த இடம். 

புதையல் இருந்த இடம், காளையார் கோவிலுக்கும் சிவகங்கைக்கும் சுரங்கப்பாதைகள், 200 குதிரைகள், யானைகள் குளிக்க மாபெரும் படிகள் கொண்ட கண்மாய், செம்புறாங்கற்களாலும் காரை ( முட்டை வெண்கரு, கடுக்காய், கருப்பட்டி ) யாலும் கட்டப்பட்ட இக்கோட்டை அன்று ஆங்கிலேயர் தகர்த்தது போக இன்று ஆலங்களால் தகர்ந்திருக்கிறது. 

யூ ட்யூபில் 1381 - 1390 வீடியோக்கள்.

1381.கலைமகள் l தேசிக விநாயகனார் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/l7da9SuGqtQ


#கலைமகள், #தேசிகவிநாயகனார், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KALAIMAGAL, #DESIKAVINAYAGANAR, #THENAMMAILAKSHMANAN,1382.முருகன் துதி l  அஞ்சுமுகம் தோன்றின் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/khC0_oRDGFI


#முருகன்துதி, #அஞ்சுமுகம்தோன்றின், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGANTHUTHI, #ANJUMUGAMTHONDRIN, #THENAMMAILAKSHMANAN,

புதன், 17 மே, 2023

ஃபோர்டெல் ஹோட்டலில் ஏழு நாட்கள்.

 சென்றவருடம் அக்டோபர் மாதம் சென்னை சென்றிருந்தபோது எக்மோரில் உள்ள ஃபோர்டெல் ஹோட்டலில் தங்கினோம். மிக வசதியான அகாமடேஷன் மற்றும் உணவுகள். அவை பற்றிப் பார்க்கலாம்.


முகப்புத் தோற்றம். 

யூ ட்யூபில் 1371 - 1380 வீடியோக்கள்.

1371.மங்களம் சுபமங்களம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=M-h4f63jq6U


#மங்களம்,  #சுபமங்களம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MANGALAM, #SUBHAMANGALAM, #THENAMMAILAKSHMANAN, 1372.ஹரிவராசனம் l  ஐயப்பன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=lD8LXY7FQEw


#ஹரிவராசனம், #ஐயப்பன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#HARIVARASANAM, #AIYYAPPAN, #THENAMMAILAKSHMANAN, 

திங்கள், 15 மே, 2023

விரிநீர் வியனுலகம்.

விரிநீர் வியனுலகம்.


நதிக்கரை நாகரீகங்களில் தழைத்து வந்தவர்கள் நாம். தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கக்கூடாது என்பார்கள். கோவையின் சிறுவாணித் தண்ணீர் சீனித்தண்ணியாக இனிப்பதாக ஊரே கூறினாலும் நமக்குக் காரைக்குடியின் சம்பை ஊற்றுத் தண்ணீர்தான் கல்கண்டு. வெறுமனே குடிக்கலாம் என்றாலும் பழக்கதோஷத்தின் காரணமாக நகராட்சி வழங்கும் தண்ணீரைக் கொதிக்கவைத்து ஆறவைத்துக் குடிப்பதுண்டு.

எனக்கு ஐந்து வயதாயிருக்கும்போது மன்னார்குடி மஹமூதாபி காலனியில் குடியிருந்தோம். கிணற்று நீர்தான் எல்லாவற்றுக்கும். பிரம்மாண்டக் கிணற்றில் பதினைந்து வீடுகளில் யாராவது ஒருவர் மாற்றி ஒருவர் தண்ணீர் இறைத்துக் கொண்டே இருப்பார்கள். சகடைச் சத்தம் கேட்காத பொழுதே இல்லை. ஒருநாள் படுக்கையிலிருந்து எழுந்ததும் என் கண்ணை மூடி அடுப்பங்கரைக்கு அழைத்துச் சென்றார் அம்மா. வீட்டுப் பைப்பைத் திறந்தார். என்ன ஆச்சர்யம். வாளி வைத்து மாங்கு மாங்கென்று இறைக்காமலே கைகளில் தவழ்ந்து உருண்டோடிய தண்ணீர் இன்றும் என் நினைவின் திவலைகளில் இனிக்கிறது.

யூ ட்யூபில் 1361 - 1370 வீடியோக்கள். கோலங்கள்.

1361.கோலங்கள் - 171 l  காரடையான் நோன்பு l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=emIwQuy5CuY


#கோலங்கள், #காரடையான்நோன்பு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #KARADAIYANNONBU, #THENAMMAILAKSHMANAN, 1362.கோலங்கள் - 172 l  காரடையான் நோன்பு l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=_UzQcT_akeM


#கோலங்கள், #காரடையான்நோன்பு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #KARADAIYANNONBU, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 11 மே, 2023

சித்ரா பௌர்ணமி, நரசிம்மர் ஜெயந்திக் கோலங்கள்

சித்ரா பௌர்ணமி, நரசிம்மர் ஜெயந்திக் கோலங்கள் 


இந்தக் கோலங்கள்  11. 5. 2023  குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.

யூ ட்யூபில் 1351 - 1360 வீடியோக்கள்.

1351.ஸ்ரீ பார்த்தசாரதி மாலை - 29 l  சௌரியப்பெருமாள் தாசர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/-xpSsvfHPt4


#ஸ்ரீபார்த்தசாரதிமாலை, #சௌரியப்பெருமாள்தாசர்,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIPARTHASARATHIMALAI, #SAURIYAPERUMALDASAR, #THENAMMAILAKSHMANAN,1352.பனந்தமுடைக் கருப்பர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=GryQm4FOJc4


#பனந்தமுடைக்கருப்பர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PANANDHAMUDAIKARUPPAR, #THENAMMAILAKSHMANAN,

புதன், 10 மே, 2023

களேபர ரிங்டோனும் நாகம்மாஸ் ரெஸிடென்ஸியும்.

 163.


3241.புத்தகத் திருவிழா. வடமாய் இணையாமல் பிரியாய்க் கிடக்கிறேன்.

3242.எங்கூரு கானாடுகாத்தானிலும் இப்பிடி அழகழகா பாதை இருக்குதுங்கோ


யூ ட்யூபில் 1341 - 1350 வீடியோக்கள். புத்தக மதிப்புரைகள்.

1341.நீ நதி போல ஓடிக்கொண்டிரு l  பாரதி பாஸ்கர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=J42IlqFxduI


#நீநதிபோலஓடிக்கொண்டிரு, #பாரதிபாஸ்கர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NEENATHIPOLAOODIKKONDIRU, #BHARATHIBASKAR, #THENAMMAILAKSHMANAN, 1342.நாடகம் நிகழ்வு அழகியல் l  வெளிரங்கராஜன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=IeR0froMzAU


#நாடகம்நிகழ்வுஅழகியல், #வெளிரங்கராஜன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NADAGAMNIGAZHVUAZHAGIYAL, #VELIRANGARAJAN, #THENAMMAILAKSHMANAN, 

திங்கள், 8 மே, 2023

கனவுகளை விதைத்துக் காத்திருக்கும் காரைக்குடித் தென்றல்

 கனவுகளை விதைத்துக் காத்திருக்கும் காரைக்குடித் தென்றல்காரைக்குடி கார்த்திகேயன் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார் தென்றல். இது அண்ணஞ்சார் என்று அனைவராலும் அன்பால் விளிக்கப்படும் இவரது தாத்தாவால் தொடங்கப்பட்டது. எப்போதும் சுறுசுறுப்பாகவும் பளிச்சென்றும் இருக்கும் தென்றல் கொரோனா காலத்தில் கூட வாட்ஸப்பில் தேவதைக் கூட்டம் என்றொரு குழு ஆரம்பித்துப் பயிற்றுவித்தார், கொரோனா தொடரவும் வாசல் பள்ளி என்று அவரவர் வீட்டுக்கே சென்று பயிற்றுவித்தார். அவரிடம் நம் லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிக்கைக்காகப் பேட்டி கேட்டபோது இதுவரை அறியாத அவரின் பன்முகத் திறமைகளையும் தடை தாண்டி வரும் அவரது வெற்றி ஓட்டங்களையும் கண்டு பிரமித்தேன். அவர் மொழிகளிலேயே அதைத் தருகிறேன்.

”நான் 12ஆம் வகுப்புப் படித்து முடித்த போது,  அயல் நாட்டுத் தூதுவராகவரவேண்டும்என்பதே என் மிகப்பெரிய கனவாக,  இலட்சியமாக இருந்தது. ஆனால் ஐந்து பெண் குழந்தைகளையும் படிக்க வைத்து, வேலை வாங்கிக் கொடுத்து, திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றதொரு நிலையான கொள்கையுடன் என் அப்பா வாழ்க்கையை நகர்த்தியதால், அவரின் விருப்பப்படி ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்க்கப்பட்டேன்.ஆனால், சில நாட்களிலேயே, "கிட்டாதாயின் வெட்டென மற" என்பதை மனதில் கொண்டு என்னைத் தேற்றிக்கொண்டு, ஈராண்டுகள் நன்றாகப் படித்து மாவட்ட அளவில் ரேங்க் பெற்று, பள்ளியில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றேன்.

திருமணம் ஆகும்வரை பெரிதாக எந்தக் கஷ்டமும் தெரியவில்லை. பிறகுதான் வாழ்க்கையின் இன்னொரு பக்கம் கரடுமுரடான பாதையாகத் தெரிந்தது.  அந்த முகம்  அச்சுறுத்தலாகவே இருந்தது. அடுத்தடுத்து மூன்றாண்டு கால இடைவெளியில் இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்ட போதும், கடுமையான போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.

யூ ட்யூபில் 1331 - 1340 வீடியோக்கள்.

1331.எனக்கும் இடமுண்டு l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Ss330gTqzyA


#எனக்கும்இடமுண்டு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKSHMANAN, 1332.குன்றக்குடியில் முருகோனே l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=2O763bwJEHo


#குன்றக்குடி, #முருகன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KUNDRAKUDI, #MURUGAN, #THENAMMAILAKSHMANAN,

ஞாயிறு, 7 மே, 2023

மூலிகை மருத்துவம்

மூலிகை மருத்துவம்


1.அரசு :- இலைக்கொழுந்து கசாயம் சுரம், தொண்டைப்புண் ஆற்றும். தளிரை அரைத்துப் பூசினால் கால் வெடிப்பு குணமாகும்.

யூ ட்யூபில் 1321 - 1330 வீடியோக்கள்.

 1321.தினமும் காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய பாடல் l  தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=FgsrSDA74Og


#தினமும்சொல்லவேண்டியபாடல், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#SIVA, #THENAMMAILAKSHMANAN,


1322.ஸ்ரீ பார்த்தசாரதி மாலை - 24 l  சௌரியப்பெருமாள் தாசர் l  தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/beVWKLRhIhc


#ஸ்ரீபார்த்தசாரதிமாலை, #சௌரியப்பெருமாள்தாசர்,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIPARTHASARATHIMALAI, #SAURIYAPERUMALDASAR, #THENAMMAILAKSHMANAN,

யூ ட்யூபில் 1311 - 1320 வீடியோக்கள். கோலங்கள்.

1311.கோலங்கள் - 161 l சித்ரா பௌர்ணமி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=s_JGRAgo2Ak


#கோலங்கள், #சித்ராபௌர்ணமி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #CHITHIRAI, #THENAMMAILAKSHMANAN, 1312.கோலங்கள் - 162 l வைகாசி விசாகம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=sobHZnYZKRk


#கோலங்கள், #வைகாசிவிசாகம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #VAIKASIVISAKAM, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 5 மே, 2023

6.அதிக இரத்தப் போக்கும் இரத்த சோகையும்

 6.அதிக இரத்தப் போக்கும் இரத்த சோகையும்


மாதவிடாய்க் காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய அன்றாடக் கடமைகளைச் செய்யவிடாமல் முடக்குவதில் அதிக இரத்தப் போக்கும் பங்கு வகிக்கிறது. வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு இரத்தப் போக்கு மற்றும் அது அதிக நாட்கள் நீடித்தால் அதை மெனோராஜியா என்று குறிப்பிடுகிறார்கள். மெட்ரோராஜியா என்றால் இரு மாதவிடாய்களுக்கு இடையிலும் ரத்தப் போக்கு ஏற்படுதலைக் குறிக்கிறது. அதிக அளவு இரத்த இழப்பால் இரத்த சோகையும் ஏற்படுகிறது.

மாத விலக்கின் போது அதிக இரத்தப் போக்கினால் அடிக்கடி நாப்கின்களை மாற்ற வேண்டிவரும். இதனால் தொடைகளில் உராய்வு மற்றும் அசௌகரியம் ஏற்படும். எங்கே சென்றாலும் இரண்டுமணி நேரத்திற்கு ஒருமுறை ரெஸ்ட் ரூம் சென்று பேடை மாற்றவேண்டி வருவதால் வெளியே செல்வதே சிரமம் கொடுப்பதாய் இருக்கும். இதனால் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டி வரும்..

யூ ட்யூபில் 1301 - 1310 வீடியோக்கள்.

1301.சின்னச் சின்ன பாலன் - 2 l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=0DSxqg3PHBY


#சின்னச்சின்னபாலன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#CHINNACHINNABALAN, #THENAMMAILAKSHMANAN,1302.தேடுகின்ற கண்களுக்குள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=61K9zGtZ-64


#தேடுகின்றகண்களுக்குள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AIYYAPPAN, #THENAMMAILAKSHMANAN,  

வியாழன், 4 மே, 2023

அட்சய திரிதியைக் கோலங்கள்

 அட்சய திரிதியைக் கோலங்கள் 


இந்தக் கோலங்கள்  27. 4. 2023  குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை


யூ ட்யூபில் 1291 - 1300 வீடியோக்கள்.

1291.குமரேச சதகம் - 99 l பெரியோர் இயல்பு l குருபாத தேசிகர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/yVjcEhbccT8


#குமரேசசதகம், #குருபாததேசிகர், #தேனம்மைலெக்ஷ்மணன் 

#KUMARASASATHAGAM, #GURUPADADESIKAR, #THENAMMAILAKSHMANAN,1292.ஸ்ரீ பார்த்தசாரதி மாலை - 14 l  சௌரியப்பெருமாள் தாசர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/V5wkd3_BAro


#ஸ்ரீபார்த்தசாரதிமாலை, #சௌரியப்பெருமாள்தாசர்,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIPARTHASARATHIMALAI, #SAURIYAPERUMALDASAR, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 1 மே, 2023

மகளிர் மட்டும் ஊர்வசி

 மகளிர் மட்டும் ஊர்வசி


மேடம் ஒரு பேட்டி வேணுமே” இது நான்.

இப்போ செங்கல்பட்டில் ஒரு ஷூட்டிங்கில் இருக்கேன்சென்னை வந்ததும் சொல்றேன் வாங்க.” இது ஊர்வசி.

மேடம்போன்லயே நீங்க நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொன்னாப் போதும்அப்படியே எழுதி ஆர்டிகிளா அனுப்புறேன் மெயில்லஉங்க அனுமதிக்குப் பிறகு பத்திரிக்கை அலுவலகத்துக்கு ஃபார்வேர்ட் பண்ணுறேன்.”

என்னது போன்ல பேட்டியாநீங்க யாரு எவருன்னே தெரியாதுநேர்ல வந்து பார்த்தாத்தான் பேட்டியே” என்று கறாராகப் போனை வைத்து விட்டார்ஊர்வசி.

2010 களில் சென்னையின் கே கே நகரில் இருந்தபோது லேடீஸ் ஸ்பெஷல்இவள் புதியவள்சூரியக்கதிர்நம் தோழி போன்ற பத்திரிக்கைகளுக்கு ஃப்ரீலான்சர் ஜர்னலிஸ்டாகப் பேட்டிகள் எடுத்து அனுப்பிக் கொண்டிருந்தேன்புயல்வேகத்தில் ஸ்டெனோகிராஃபர்போல போனை ஒரு கையில் பிடித்து நோட்டில் குறிப்புகள் எடுத்து பல்வேறு சினிமா பிரபலங்களையும்மருத்துவர்களையும் பேட்டி எடுத்து அதை லாப்டாப்பில் டைப் செய்து மெயிலில் அனுப்பி உள்ளேன்ஆனால் ஊர்வசிதான் நோ சொல்லி விட்டார்.

விக்கிரமாதித்தன் போல் மனதைத் தளர விடாமல் என் கேள்வி வேதாளங்களைச் சுமந்துகொண்டு வேளச்சேரியில் இருக்கும் அவர் வீட்டுக்கு ஒரு பொன்மாலைப் பொழுதில் சென்றேன்அப்போதுதான் ஃப்ளைட்டில் இருந்து இறங்கி வீட்டுக்குள் அடி எடுத்து வைத்திருந்தார்தொடர் பேட்டியில்  என்னுடன் கனிவான மொழியில் உரையாடினாலும் அவரை ஃபோட்டோ எடுத்துக் கொள்ள மறுத்து விட்டார்.

யூ ட்யூபில் 1281 - 1290 வீடியோக்கள்.

1281.ஸ்ரீ பார்த்தசாரதி மாலை - 11 l  சௌரியப்பெருமாள் தாசர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/lUQONbG2ZXw


#ஸ்ரீபார்த்தசாரதிமாலை, #சௌரியப்பெருமாள்தாசர்,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIPARTHASARATHIMALAI, #SAURIYAPERUMALDASAR, #THENAMMAILAKSHMANAN,1282.திருவாசகம் l திருச்சாழல் l  பூசுவது வெண்ணீறு l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=spIEpzfyOUU


#திருவாசகம், #திருச்சாழல், #பூசுவதுவெண்ணீறு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUVASAGAM, #THIRUCHALAL, #POOSUVATHUVENEERU, #THENAMMAILAKSHMANAN,

Related Posts Plugin for WordPress, Blogger...