எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
யூரோப் டூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யூரோப் டூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 ஜூன், 2026

இத்தாலியில் இருந்து பாரீஸுக்கு

 யூரோப் டூரின் ஏழாம் நாள் இரவு.


 இத்தாலியின் பெஸ்ட் வெஸ்டர்ன் பார்க் ஹோட்டலில் தங்கினோம்.





 மறுநாள் காலை அங்கிருந்து பாரிசுக்குப் புறப்பட்டோம்.







 நிறைய மலைகள் 

எழிலான சாலைகள் இவற்றைக் கடந்து வந்தோம் 

நடுவில் டோலோபிட்டி என்ற அழகான நகரம் வந்தது 








ஹிமாச்சல் பிரதேஷ் போன்ற அழகான ஊர் அது 

எங்கள் கோச் முன் நின்று ஒரு புகைப்படம்.




 நடுவில் ஒரு காபி ஷாப்பில் காபியும் அதன் பின் இன்னொரு இடத்தில் உணவும் சாப்பிட்டோம். வேஃபில்ஸ் ருசி.






பஸ்ஸுக்குள் அமர்ந்து சில புகைப்படங்கள் 





அன்று மதிய உணவு டூர்ஸ்காரர்கள் வழங்காததால் நாங்கள் ஹாட் டாக் வாங்கி சாப்பிட்டோம் 


அத்துடன் ஆளுக்கு ஒரு கொலம்பஸ் காபி.



மிக நிதானமாக 




பேட்டிக்ஸ் மவுசஸ் இருக்கும் இடத்திற்கு 





மிக மிக அழகான எழிலான பாரிஸ் நகருக்குள் சைன் ரிவர் அருகில் வந்து சேர்ந்தோம்

வியாழன், 26 பிப்ரவரி, 2026

இத்தாலியின் சாலைகள் மலைகள் டனல்கள்

 இத்தாலியின் சாலைகள் மலைகள் டணல்கள் 

யூரோப் டூரின் ஐந்தாம் நாள் மற்றும் ஆறாம் நாள் இத்தாலியில் பயணம் செய்தோம்.

இது மர்மோல்ஸ் மேன் என்ற பிரபலமான மார்பிள் விற்கும் கம்பெனியின் தொழிற்சாலை


செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

பைசா நகரத்து சாய்ந்த கோபுரம்

யூரோப் டூர் சென்றிருந்தபோது இத்தாலியின் பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தையும் பைசா கதீட்ரலையும் பார்த்தோம்.

பக்கவாட்டில் பாஸ்டர் போல ஒரு கோட்டை அமைப்பு அதன் கீழே வரிசையாக கடைகள்


செவ்வாய், 27 ஜனவரி, 2026

புதன், 11 அக்டோபர், 2023

ஈஃபில் டவரிலிருந்து ஒரு பருந்துப் பார்வை

 கோடிக்கணக்கான உல்லாசப் பயணிகளை ஈர்த்த ஈஃபில் டவரில் ஏறி பாரீஸ் மாநாகரத்தைப் பருந்துப் பார்வையில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது யூரோப் டூரின் போது. நான் பார்த்த இடங்களை என் காமிராக் கண்ணின் மூலம் நீங்களும் பார்க்கலாம் வாங்க. 

வருடா வருடம் கோடிக்கணக்கான பயணிகளை ஈர்க்கும் ஈஃபில் 2019 இல் எங்களையும் வரவேற்றது. இதுதான் ஈஃபிலின் முதல் தளம். நல்ல உறுதியான எஃகிரும்பினால் வார்க்கப்பட்ட இரும்புத்தளவாடங்கள், இரும்பு ஆணிகள் கொண்டு பகுதி பகுதியாக செய்யப்பட்டு இங்கே கொண்டு வந்து பொருத்தப்பட்டிருக்கு. 

திங்கள், 10 ஜூலை, 2023

ரோமாபுரியில் ஒரு உலா.விக்டர் இம்மானுவேலும் ட்ராஜன்ஸ் தூணும் புனித பேதுரு ஆலயமும்.

 யூரோப் டூரின் ஆறாம் நாள் இத்தாலியின் ரோம் நகருக்கு வந்தோம். ரோம் நகரம் ஒரே நாளில் கட்டப்படவில்லை என்ற வார்த்தைக்கு ஏற்ப வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களினால் கட்டப்பட்ட ரோம் நகரைச் சுற்றிப் பார்த்தோம். நடந்து நடந்து சலித்தோம். பார்த்துப் பார்த்து அசந்தோம். இறப்பதற்கு முன் ரோமைப் பார்க்கவேண்டும் என்ற வாக்கியத்தை மெய்ப்பித்து விட்டோம்.:) 

கொலோசியத்துக்குப் போய்வந்த பின் பொடிநடையாக இங்கே வந்தோம். இது ரோம் ஃபாரம் என்னும் இடத்துக்குச் செல்லு வழியில் உள்ளது என நினைக்கிறேன். ரோம் நகரத்தின் ஒவ்வொரு துணுக்கிலும் வரலாறு புதைந்துள்ளது.  

விக்டர் இரண்டாம் இம்மானுவேலுக்கான நினைவுச் சின்னம் இது. குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர். தனித்தனியாய் இருந்த இத்தாலியை ஒருங்கிணைத்து ஆட்சி புரிந்தவர். எனவே மிகப்பெரிய நினைவுச் சின்னமாக அமைத்திருக்கின்றார்கள். 

தூண்களுடன் மாபெரும் அரங்குகளை அமைப்பது அப்போதைய கட்டிடக் கலையாக இருக்கும் போல. இதற்குப் பல்வேறு பாணிகளும் அவற்றிற்கான தனித்தனிப் பேரும் சொல்கிறார்கள். பொதுவாக க்ளாசிக்கல் க்ரீக் ஆர்க்கிடெக்ஸர் பயன்பாட்டில் உள்ளது. 

இது புனிதபேதுரு ஆலயத்தின் குவிமாடம். 

ஞாயிறு, 25 ஜூன், 2023

இரவில் மின்னும் ஈஃபில் டவர்

ILLUMINATION OF EIFFEL TOWER. இதைத்தான் நாங்க அந்த இரவில் பார்த்தோம்.

பாரீஸ் பை நைட் நிகழ்ச்சியில் இதைப் பார்த்தோம். 

நள்ளிரவில் முழு ஈஃபில் டவரும் ஜொலி ஜொலித்தது ஐந்து நிமிடம். ஸீன் நதியில் அதன் அழகுக் காட்சி ஜாஜ்வல்யமாக மிக மிக அருமை. கோடி மின்னலைக் கொட்டியது போல், மில்லியன்கணக்கில் மின்மினிகள் மொய்த்தது போல் இருந்தது அக்காட்சி. 

தூரத்தே புனித பேதுரு பேராலயத்தின் குவிமாடம் தெரிகிறது. 

புதன், 21 ஜூன், 2023

ஈஃபில் டவர்

ஒரு சாதாரண வானொலி ஒலிபரப்பி உலகப் புகழ் பெற முடியுமா ? பெற்றிருக்கிறதே. பிரான்ஸின் பாரிஸில் உள்ள இந்த ஈஃபில் டவர்தான் அந்தப் புகழுக்கு உரியது. 1930 வரை உலகின் மிகப்பெரிய கோபுரம் என்ற பெருமையையும் பெற்றிருந்தது இது. 

யூ ரோப் டூரின் எட்டாம் நாள் மாலை நாங்கள் பாரீஸ் வந்தடைந்தோம். பொன்னிற வெய்யிலில் வெள்ளி நிறத்தில் தகதகத்து நின்றிருந்தது ஈஃபில் டவர். அதில் ஏறிப் பார்க்க 18 யூரோ கட்டணம் ஒரு நபருக்கு. 

ஸ்டார் ட்ராவல்ஸின் டூரில் முன்பே பணம் செலுத்தி விட்டதால் அங்கே போய் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் க்யூவில் நின்று மேலே மின் தூக்கி மூலம் சென்று வந்தோம். முதல் தளம் வரையே போக முடிந்தது. இரண்டாம் தளத்திற்குச் செல்ல அன்று அனுமதி கிடைக்கவில்லை. எனவே அதற்கான பணத்தை ஸ்டார் ட்ராவல்ஸார் திருப்பி அளித்தார்கள். 

கொஞ்சம் வித்யாசமான அனுபவம்தான். ஏறும்வரை லிஃப்டில் - ஓடிஸ் கம்பெனியின் எலிவேட்டரில்  - விஞ்ச் போல் உள்ளது . இதில் அமர்ந்து  பின்புறமாக மேலேறிச் சென்றோம். 

ஞாயிறு, 28 மே, 2023

ஃப்ளாரன்ஸ் கதீட்ரல்.

 பன்னிரெண்டாம் நூற்றாண்டில்  (கிபி 1296 ஆம் ஆண்டு ) இத்தாலியில் பியாஸ்ஸா டெல் டியாமாவில் ( ஃப்ளாரன்ஸில் ) அராபிய மேற்கத்திய ஐரோப்பியக் கட்டிடக் கலை அமைப்பில் கட்டப்பட்ட சர்ச் , கதீட்ரல் ஒன்றை எங்கள் யூரோப் டூரின்போது பார்த்தோம். 27.7.2023 அன்று ரோமைப் பொடிநடையாகச் சுற்றி வாடிகன் மற்றும் மைக்கேலேஞ்சலோவின் ஓவியங்கள் உஃபிஸி கேலரியும் வஸாரி கேரிடாரையும் மற்றும் ஃப்ளாரன்ஸ் கதீட்ரலையும் பார்த்தோம். இதில் யுனெஸ்கோவில் உலகப் பாரம்பரியத் தளத்தின் பகுதியாகிய  பாப்டிஸ்டிரி, ஜியோட்டோஸ் கேம்பைனல் ஆகிய கட்டிடங்களும் அடங்கும். 

1296 இல் தொடங்கப்பட்ட இது 1436 இல் ஃபிலிப்போ ப்ருனெல்லெச்சியால் வடிவமைக்கப்பட்ட குவி மாடத்துடன் பூர்த்தி அடைந்தது. கட்டிடத்தின் உள்ளும் வெளியும் இளம் பச்சை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்திலான மார்பிள் கற்களால் வடிவமைக்கப்பட்டது. இதன் முகப்பு 19 நூற்றாண்டில் கோதிக் கலைப் பாணியில் அழகுற செதுக்கப்பட்டது. இந்த பசிலிக்காவில் கட்டப்பட்ட இந்த டோம் செங்கற்களால் அமைக்கப்பட்டது. 

மிகப் பிரம்மாண்டமா கதீட்ரல் மற்றும் அதன் சுற்றிலும் பல்வேறு சரித்திரப் புராணக் கட்டிடங்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...