எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 11 அக்டோபர், 2023

ஈஃபில் டவரிலிருந்து ஒரு பருந்துப் பார்வை

 கோடிக்கணக்கான உல்லாசப் பயணிகளை ஈர்த்த ஈஃபில் டவரில் ஏறி பாரீஸ் மாநாகரத்தைப் பருந்துப் பார்வையில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது யூரோப் டூரின் போது. நான் பார்த்த இடங்களை என் காமிராக் கண்ணின் மூலம் நீங்களும் பார்க்கலாம் வாங்க. 

வருடா வருடம் கோடிக்கணக்கான பயணிகளை ஈர்க்கும் ஈஃபில் 2019 இல் எங்களையும் வரவேற்றது. இதுதான் ஈஃபிலின் முதல் தளம். நல்ல உறுதியான எஃகிரும்பினால் வார்க்கப்பட்ட இரும்புத்தளவாடங்கள், இரும்பு ஆணிகள் கொண்டு பகுதி பகுதியாக செய்யப்பட்டு இங்கே கொண்டு வந்து பொருத்தப்பட்டிருக்கு. 
முதல் தளத்தைப் பாருங்க. வித்யாசமா இருக்குல்ல.

இங்கே வர ஓடிஸ் கம்பெனியின் லிஃப்ட், எலிவேட்டர் இருக்கு. 
தரை வித்யாசமா கண்ணாடி போல இருக்கு.. சுற்றுச் சுவர்களும் கண்ணாடிதான். 
அந்தத் தரைமீது பிரமிப்புடன் நிற்கும் நாங்கள். இரும்பின் மேலே இதயம் படைத்த மனிதர்கள் :)
இந்த இடத்தில் கொஞ்ச நேரம் நிற்கக் கூட சிறிது மிரட்சியாவும் அச்சமாவும்தான் இருந்தது. உயரத்தைப் பார்த்தாலே கிலி நமக்கு. ஆனால் இதில் இரண்டாம் தளத்தில் இதை வடிவமைச்ச அலக்ஸாண்டர் கஸ்டவ் ஈஃபிலுக்கு ஒரு அபார்ட்மெண்டே இருக்காம் !

நாமளும் விடாம ஈஃபிலைப் பல்வேறு கோணங்களில் படம் பிடித்தோம். சென்றிருந்த அனைவருமே அப்படித்தான். 
எதிரே தெரியும் கண்ணாடித் தளங்களும் கீழே தரைத்தளமும். 
பயணியர் வரும் பாதையும் ஒரு அழகான நீர் நிலையும் இருந்தன. 
மேலே இன்னும் நாம். முதல் தளம் வரைதான் அன்று அனுமதி. 

100 அடி ரோடு போல் பெரிதாகவும் அகலமாகவும் இருந்தது இந்தக் காரிடார். 
ஆனால் ஒன்று. நடக்கும் போதெல்லாம் வழுக்கிக் கொண்டெ இருந்தது. ஜாக்கிரதையா இருக்கணும். 

எங்கள் மூத்த மகனாருடன். 
ஈஃபிலில் பேஸ்மெண்டின் நான்கு தூண்களில் ஒன்றைப் படம் பிடித்தேன். வித்யாசமான அனுபவம். தென்கிழக்கிலும் வடமேற்கிலும் ஈஃபில் டவரின் முதல் இரண்டாம் தளங்களுக்குச் செல்ல எலிவேட்டர் இருப்பதால் அங்கே பெருங்கூட்டம் நிற்கிறது பாருங்கள். ஆகையால் நாங்கள் இறங்கும்போது படிக்கட்டு வழியாக இறங்கி விட்டோம். சுமார் 600 படி இருக்கும். 
பாரீஸ் மாநகரரும் ஸீன் நதியும். 
ஸீன் நதியில் குறுக்குப் பாலங்களும், படகுப் போக்குவரத்தும். இவர்கள் நின்றிருந்த இடத்துக்குச் சற்று மேலே இருந்து எடுத்தது. கேஃப்டீரியாவில் 6 யூரோவுக்கு ஒரு காஃபி வாங்கிக் கொண்டு இருக்கும்போது ஒரு க்ளிக். 
முதலில் எடுத்தது ஈஃபிலின் உட்புறம். இது ஈஃபிலின் வெளிப்புறச் சுவர். 

உள்ளே சுவர் கண்ணாடிகளால் ஆனது. இங்கே தளமும் சுற்றுச் சுவரும் இரும்பினாலானது. 

ஸீன் நதி மற்றும் நகரின் கவின் மிகு காட்சி. 
ஈஃபிலின் கோபுரத்தின் நிழல் நகரின் மேல் அரவணைப்பாய் விழுகிறது.
எங்கெங்கும் கட்டிடங்கள். நடுவில் ஆங்காங்கே நதி மற்றும் பசுமை. 
மிகப் பிரம்மாண்டமான நகரம் பாரீஸ். இடைவிடாத கட்டிடங்கள். ஃபேஷன் நகரமல்லவா. ஃபேஷன் டிவி ஷோக்கள் எல்லாம் இங்கே பார்க்கலாம். பாரீஸ் பை நைட்டில் மற்ற லைட்டிங், ம்யூசிக், டான்ஸ்  நிகழ்ச்சிகள் பார்க்கவில்லை. 
பருந்துப் பார்வையின் இன்னொருபக்கம். 
பனோரமிக் வியூ என்று இதன் வெப்சைட்டில் இந்த வியூ பற்றிப் போட்டிருக்காங்க..

பார்த்ததும் பெருமையாயிருந்தது. அட நாமளும் சிறந்த ஃபோட்டோகிராஃபர் மாதிரி இந்த வியூவில் எடுத்திருக்கமேன்னு. ஆனா என்ன ஈஃபிலின் நிழலில் மயங்கி இந்த பனோரமிக் வியூவை சிறிது கட் செய்து எடுத்துவிட்டேன். அதனாலென்ன நீங்களும் என் கூடப்பருந்துப் பார்வையில் ஈஃபிலில் இருந்து பாரீஸ் நகரத்தைப் பறந்து பார்த்தீங்கதானே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...