கோடிக்கணக்கான உல்லாசப் பயணிகளை ஈர்த்த ஈஃபில் டவரில் ஏறி பாரீஸ் மாநாகரத்தைப் பருந்துப் பார்வையில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது யூரோப் டூரின் போது. நான் பார்த்த இடங்களை என் காமிராக் கண்ணின் மூலம் நீங்களும் பார்க்கலாம் வாங்க.
வருடா வருடம் கோடிக்கணக்கான பயணிகளை ஈர்க்கும் ஈஃபில் 2019 இல் எங்களையும் வரவேற்றது. இதுதான் ஈஃபிலின் முதல் தளம். நல்ல உறுதியான எஃகிரும்பினால் வார்க்கப்பட்ட இரும்புத்தளவாடங்கள், இரும்பு ஆணிகள் கொண்டு பகுதி பகுதியாக செய்யப்பட்டு இங்கே கொண்டு வந்து பொருத்தப்பட்டிருக்கு.எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
புதன், 11 அக்டோபர், 2023
ஞாயிறு, 25 ஜூன், 2023
இரவில் மின்னும் ஈஃபில் டவர்
ILLUMINATION OF EIFFEL TOWER. இதைத்தான் நாங்க அந்த இரவில் பார்த்தோம்.
பாரீஸ் பை நைட் நிகழ்ச்சியில் இதைப் பார்த்தோம்.
நள்ளிரவில் முழு ஈஃபில் டவரும் ஜொலி ஜொலித்தது ஐந்து நிமிடம். ஸீன் நதியில் அதன் அழகுக் காட்சி ஜாஜ்வல்யமாக மிக மிக அருமை. கோடி மின்னலைக் கொட்டியது போல், மில்லியன்கணக்கில் மின்மினிகள் மொய்த்தது போல் இருந்தது அக்காட்சி.
தூரத்தே புனித பேதுரு பேராலயத்தின் குவிமாடம் தெரிகிறது.புதன், 21 ஜூன், 2023
ஈஃபில் டவர்
ஒரு சாதாரண வானொலி ஒலிபரப்பி உலகப் புகழ் பெற முடியுமா ? பெற்றிருக்கிறதே. பிரான்ஸின் பாரிஸில் உள்ள இந்த ஈஃபில் டவர்தான் அந்தப் புகழுக்கு உரியது. 1930 வரை உலகின் மிகப்பெரிய கோபுரம் என்ற பெருமையையும் பெற்றிருந்தது இது.
யூ ரோப் டூரின் எட்டாம் நாள் மாலை நாங்கள் பாரீஸ் வந்தடைந்தோம். பொன்னிற வெய்யிலில் வெள்ளி நிறத்தில் தகதகத்து நின்றிருந்தது ஈஃபில் டவர். அதில் ஏறிப் பார்க்க 18 யூரோ கட்டணம் ஒரு நபருக்கு.
ஸ்டார் ட்ராவல்ஸின் டூரில் முன்பே பணம் செலுத்தி விட்டதால் அங்கே போய் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் க்யூவில் நின்று மேலே மின் தூக்கி மூலம் சென்று வந்தோம். முதல் தளம் வரையே போக முடிந்தது. இரண்டாம் தளத்திற்குச் செல்ல அன்று அனுமதி கிடைக்கவில்லை. எனவே அதற்கான பணத்தை ஸ்டார் ட்ராவல்ஸார் திருப்பி அளித்தார்கள்.
கொஞ்சம் வித்யாசமான அனுபவம்தான். ஏறும்வரை லிஃப்டில் - ஓடிஸ் கம்பெனியின் எலிவேட்டரில் - விஞ்ச் போல் உள்ளது . இதில் அமர்ந்து பின்புறமாக மேலேறிச் சென்றோம்.சனி, 5 நவம்பர், 2022
புரட்சிச் சதுக்கம் - கில்லெட் - லக்ஸர் ஸ்தூபி (PLACE DE LA CONCORDE,PARIS,LUXOR OBELISK)
யூரோப் டூரின் ஒன்பதாம் நாள். பூலோக சொர்க்கமாம் பாரிஸில் இருந்தோம்.
முதல் நாள் இரவு பார்த்த இந்த லக்ஸர் ஸ்தூபியின் அருகில் உள்ள (ப்ளேஸ் டி லா கன்கார்ட் ) ப்ரெஸ்ட் சிலையின் அருகில்தான் பதினாழாம் நூற்றாண்டில் நடந்த பிரஞ்சுப் புரட்சியில் அதன் அக்கிரம ஆட்சியாளர்கள், பிரபுக்கள் கில்லட் கொண்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள். விக்டர் ஹியூகோ எழுதிய ( லே மிஸரபிள்ஸ்) ஏழை படும் பாடு நாவலில் வரும் ஜீன் வால் ஜீன்( ஜான் வல் ஜான்/ ழான் வல் ழான் ) , கோஸ்த் எல்லாம் ஞாபகம் வந்தார்கள்.
இந்த இடத்தின் பெயரே புரட்சிச் சதுக்கம்தான். இங்கே இருக்கும் இந்த லக்ஸர் ஸ்தூபி இரு நாடுகளுக்கிடையேயான நல்லெண்ண அடிப்படையில் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 1830 இல் எகிப்தின் ஒட்டாமான் பேரரசின் அதிபர் முகம்மத் அலி பாஷாவிடமிருந்து பரிசாகக் கிடைத்தது இந்த லக்ஸர் ஸ்தூபி.
இதுக்குப் பதில் பரிசா ஃப்ரான்ஸ் ஒட்டாமான் அரசுக்கு 1840 இல் ஒரு மெக்கானிக்கல் கடிகாரத்தை வழங்கியது. அதுக்கு இன்றையப் பெயர் கெய்ரோ சிட்டாடல் க்ளாக்.
செவ்வாய், 20 செப்டம்பர், 2022
ப்ளேஸ் டி லா கன்கார்ட் - லக்ஸர் ஸ்தூபி ( இரவில்) - PLACE DE LA CONCORDE - LUXOR OBELISK.
யூரோப் டூரின் எட்டாம் நாள் இரவு ஃப்ரான்ஸ் சென்றபோது முதலில் சென்ற இடம் இந்த லக்ஸர் ஸ்தூபிதான். ப்ளேஸ் டி லா கன்கார்டில் அமைந்துள்ளது.
பதினேழாம் நூற்றாண்டின் ஃப்ரெஞ்சுப் புரட்சியில் முக்கியப்பங்கு வகித்த இடம்.
கில்லட் எனப்படும் வெட்டும் இயந்திரத்தால் ஆட்சியாளர்கள், பிரபுக்களின் தலைகள் வெட்டுப்பட்ட இடம்.
நகரின் நடு மையத்தில் அமைந்துள்ள இவ்விடம் ஒரு அச்சமிகு அமைதியில் உறைந்திருந்தது. நாலாபக்கமும் சாலைகள். வண்டிகள் போக்குவரத்து இருந்தும்.
அந்த வண்டிகளும் இந்த இடத்தைக் கண்டதும் தப்பித்தோம் பிழைத்தோம் என்பது போல் ஓடின.