எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 25 ஜூன், 2023

இரவில் மின்னும் ஈஃபில் டவர்

ILLUMINATION OF EIFFEL TOWER. இதைத்தான் நாங்க அந்த இரவில் பார்த்தோம்.

பாரீஸ் பை நைட் நிகழ்ச்சியில் இதைப் பார்த்தோம். 

நள்ளிரவில் முழு ஈஃபில் டவரும் ஜொலி ஜொலித்தது ஐந்து நிமிடம். ஸீன் நதியில் அதன் அழகுக் காட்சி ஜாஜ்வல்யமாக மிக மிக அருமை. கோடி மின்னலைக் கொட்டியது போல், மில்லியன்கணக்கில் மின்மினிகள் மொய்த்தது போல் இருந்தது அக்காட்சி. 

தூரத்தே புனித பேதுரு பேராலயத்தின் குவிமாடம் தெரிகிறது. 



ஈஃபில் டவரின் அமைப்பு, கட்டுமானம் பற்றி எல்லாம் முன் கட்டுரையில் எழுதி விட்டேன். 
ஈஃபிலின் பளபளப்பின் முன் 

இது கட்டப்பட்ட சில நாட்களுக்குப் பின் ஒருகண்காட்சியின்பொழுது இருட்டிற்குப் பிறகு, கோபுரம் நூற்றுக்கணக்கான எரிவாயு விளக்குகளால் ஒளியூட்டப்பட்டது.  மேலும் ஒரு கலங்கரை விளக்கம் சிவப்பு, வெள்ளை மற்றும் நீல ஒளியின் மூன்று கதிர்களை அனுப்பியது. ஒரு வட்ட ரயிலில் பொருத்தப்பட்ட இரண்டு தேடுதல் விளக்குகள் கண்காட்சியின் பல்வேறு கட்டிடங்களை ஒளிரச் செய்ய பயன்படுத்தப்பட்டன. கண்காட்சியின் தினசரி திறப்பு மற்றும் மூடல் மேலே ஒரு பீரங்கி மூலம் அறிவிக்கப்பட்டது
விதம் விதமா இதை வைச்சுக் கொண்டாடித் தீர்த்திருக்கிறாங்க பாரீஸ்காரங்க. 
சொந்தக் காரர்களின் பெருமை :)
வெறும் வானொலி கோபுரம் தன் பிரம்மாண்டத்தால கிட்டத்தட்ட வருடா வருடம் மில்லியன் கணக்குல உல்லாசப் பயணிகளை ஈர்த்திருக்கு. 
இதைப் புதுப்பிக்க 60 டன் பெயிண்ட் பயன்படுத்துறாங்களாம்.

இந்த டவர்ல கிட்டத்தட்ட 72 இத்தாலிய விஞ்ஞானிகள், கணித மேதைகள் , பொறியாளர்களின் பேர் பொறிக்கப்பட்டிருக்காம். இவங்க எல்லாம் இந்த டவர் உருவாக உதவி செய்தவங்க.



ஐந்து நிமிடம் ஜொலி ஜொலிச்சதும் இங்கே ஸீன் நதியின் மறு பாலத்திலிருந்து நாங்க எல்லாம் சந்தோஷக் கூச்சலிட்டோம். பாரீஸ்வாசிகள் எல்லாம் காரில் பறந்து கொண்டு இருந்தாங்க. அது அவங்களுக்கு தினப்படி நிகழ்ச்சிதானே !


மறக்கவே முடியாத இந்நிகழ்வை யூ ட்யூபில் வீடியோவாகவும் போட்டிருக்கேன். மகனார் எடுத்தது. 
இது நாங்கள் நின்றிருந்த பாலத்தின் மேலிருந்த சிலை. 

கோவிட்னால பயணிகள் வருகை குறைஞ்சாலும் வருடா வருடம் கிட்டத்தட்ட 6 மில்லியன் மக்கள் இங்கே விசிட் செய்றாங்க. ஃப்ரான்ஸ் தேசத்துக்கு அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொடுக்குது ஒன்றரை நூற்றாண்டைக் கடந்த இந்த ஈஃபில் டவர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...