எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 12 ஜூன், 2023

ஜெர்மனி கொலோனில் ரைன் நதி

 ஜெர்மனி சென்றிருந்தபோது கொலோன் கதீட்ரலுக்கும், ரைன் டவருக்கும் சாக்லேட் ஃபேக்டரிக்கும் விசிட் செய்தோம்.

ரைன் நதியின் மேலேயே அமைந்துள்ளது சாக்லேட் ஃபேக்டரி. 

இந்த ரைன் நதி ஐரோப்பா முழுமைக்கும் பல்வேறு நாடுகளைத் தொட்டு ஓடுகிறது. இங்கே ரைன் நதியில் செல்லும் கப்பல்கள் எல்லாம் பயணியர் கப்பல் மட்டுமல்ல. சரக்குக் கப்பல்களும்தான். 

வாருங்கள் சாக்லேட் ஃபேக்டரியைச் சுற்றி ரைன் நதியில் ஒரு உலா வருவோம். ( முன்பே சாக்லேட் ஃபேக்டரியைப் பற்றி 3 இடுகைகளும், கொலோன் கதீட்ரல் பற்றி மூன்று இடுகைகளும், ரைன் நதி, டவர் பற்றி மூன்று இடுகைகளும் வெளியிட்டு உள்ளேன். ) 


இது ஒரு பயணியர் கப்பல்

எதிரே தெரிவது சாக்லேட் ஃபேக்டரி. ரைன் நதியின் மேலேயே தில்லாக அமைத்துள்ளார்கள். 
அதோ தூரத் தெரிவது ரைன் நதியின் குறுக்கே கட்டப்பட்ட கம்பிப்பாலம். நடுவில் மட்டுமே பில்லர் !. 
இது துறைமுகப் பகுதி. மனிதர் ஏறவும், சரக்குகள் ஏற்றவும். இங்கே எங்கெங்கும் இரும்பின் ஆட்சிதான். 
துருப்பிடிக்காத இரும்பு படைத்த இரும்பு ஜெர்மனி :)

பாதுகாப்புத் தடுப்பு அனைத்தும் இரும்புக் கம்பிகளே. 


இது டூயிஸ்பர்க்கிலிருந்து கொலோன் வரும் வழியில் ரைனைக் கடந்தபோது.

தூரத்தே பிரசித்தி பெற்ற பிரம்மாண்டமான கொலோன் கதீட்ரல்.


இதோ சாக்லெடன் ஃபேக்டரி. ரைனைக் கடந்து ஒரு குட்டி செயற்கைத் தீவில் அமைந்துள்ளது. 

அதன்பக்கவாட்டில் படிகளைப் பாருங்கள். பார்க்கும்போதே சிலிர்க்கிறது. !

பாலத்தின் நடுவிலிருந்து சாக்லேட் ஃபேக்டரியும் கவின்மிகு கொலோன் நகரமும். 
பாலத்தில் நடந்து செல்கின்றார்கள் என் மக்கள். 
பக்கத்தில் வெண்மையாகத் தெரிகிறதே.. !! இது ஒரு கப்பல். எம்மாம் நீளம். !!!
தூரத்தே தெரிவது சரக்குக் கப்பல்
இங்கே பாலங்கள் வெகு உயரம் என்பதால் கப்பல்கள் சரளமாக வந்து செல்ல முடிகிறது. 

சாக்லேட் ஃபேக்டரிக்கு எதிர்த்தாற்போல் அந்தக்காலப் போர்க் கோட்டை போல் ஒன்றும் உப்பரிகையும். 

நேரே பாருங்கள் ஒன்றை ஒன்று முந்தி வரும் கப்பல்கள் !
சாக்லேட் ஃபேக்டரியின் மேல்தளத்துக்குச் செல்லும் படிக்கட்டுக்கள். 

மிக அழகான இந்த சாக்லேட்ஃபேக்டரியையும், இந்த ரைன் நதியையும் கவின் மிகு கொலோன் நகரையும் ஜெர்மனி சென்றால் பார்க்கத் தவறாதீங்க. !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...