எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

புத்திசாலித்தனத்தால் ஜெயித்தவள். தினமலர். சிறுவர்மலர் - 37.


புத்திசாலித்தனத்தால் ஜெயித்தவள்.

வ்வளவுதான் கற்றறிந்திருந்தாலும் சமயோஜிதமான நடவடிக்கையால் நாம் நமக்கு வரும் இடர்களைக் களைய முடியும். அப்படித்தான் சாவித்ரி என்னும் பெண் தனக்கு வந்த கஷ்டத்தைத் தன் புத்திசாலித்தனத்தால் ஜெயித்தாள். அது எப்படி என்று பார்ப்போம் குழந்தைகளே.

மத்ராபுரி என்னும் நாட்டை அஸ்வபதி என்னும் மன்னர் ஆண்டு வந்தார். நெடுநாளாகக் குழந்தைப்பேறில்லாமல் இருந்த அவர் பல யாகங்கள் பூஜைகள் செய்ததன் பலனாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்குச் சாவித்ரி என்று பெயரிட்டு சீரோடும் சிறப்போடும் வளர்த்து வந்தார்.

பெண்குழந்தை என்று எண்ணாமல் நாட்டின் இளவரசியாக அவளுக்கு சகல உரிமைகளையும் கொடுத்திருந்தார். எனவே அவள் தோழிகளுடன் நகர் உலா வருவாள். ஒருமுறை அவர்கள் தங்கள் நகர் உலாவிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டார்கள். கானகம் ஆரம்பமாகிவிட்டது.

அக்கானகத்தில் ஒரு அழகான இளைஞன் தன் கண்ணிழந்த பெற்றோருக்குச் சேவை செய்வதைப் பார்த்தாள். அவனுடைய பணிவும் அன்பும் தொண்டுள்ளமும் சாவித்ரியைக் கவர்ந்தது. அவன் சாளுக்கிய தேசத்து அரசன்  சத்யவான் எனவும் பகைவர்களுடன் நடந்த போரில் நாட்டைவிட்டு வந்துவிட்டார்கள் எனவும் அறிந்தாள்.

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

யார் உயர்ந்தவர் ? தினமலர் சிறுவர்மலர் - 36.

நதிகள் சொல்லித்தந்த பாடம்.

யார் உயர்ந்தவர்?

னிதர்களுக்குள்ளே யார் உயர்ந்தவர் என்ற போட்டி பொறாமை ஏற்படுவதுண்டு. ஆனால் ஒருமுறை நதிகளுக்குள்ளே யார் உயர்ந்தவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதை யாரிடம் சொல்லித் தீர்வு காணலாம் என யோசித்தன. அந்த நேரம் பார்த்து திருக்கழுக்குன்றம் என்ற ஊரில் ஒரு புஷ்கரமேளா நடைபெறவிருந்தது.

அனைத்து நதிகளும் அத்திருக்கழுக்குன்றத்தில் கோயில் கொண்டிருக்கும் வேதபுரீஸ்வரரிடம் சென்று யார் உயர்ந்தவர் என்பதைக் கேட்கலாம் என முடிவு செய்தன. வாருங்கள் குழந்தைகளே நாமும் சென்று யார் உயர்ந்தவர் என்று வேதபுரீஸ்வரர் கூறினார் எனப் பார்ப்போம்.

புதன், 19 செப்டம்பர், 2018

கோவர்த்தன வில்லை ஒடித்த விதுரர். தினமலர் சிறுவர்மலர் - 35.


கோவர்த்தன வில்லை ஒடித்த விதுரர். :-

சீதையை மணக்க ராமபிரான் வில்லை ஒடித்தது தெரியும். ஆனால் மகாபாரதத்தில் விதுரர் வில்லை ஒடித்தார். அது எதற்கென்று தெரியுமா.? அதைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள் குழந்தைகளே.

ஸ்தினாபுர அரண்மனை. அரசிளங்குமரிகளான அம்பிகை, அம்பாலிகை ஆகியோரின் புத்திரர்கள் திருதராஷ்டிரனும் பாண்டுவும் ஆவார்கள். அவர்களின் தம்பி விதுரன். ஆனால் அவரது தாயார் ஒரு பணிப்பெண். அதனால் அவருக்கு நாடாளும் யோகம் கிட்டவில்லை. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் சித்தப்பாவான அவர் தான் வகுத்த விதுரநீதியைக் கூறி அவர்களை நெறிப்படுத்தி வந்தார்.

விதுரர் சிறந்த வில்வித்தை வீரர். சிறந்த விஷ்ணு பக்தரான விதுரருக்கு விஷ்ணு கோவர்த்தன் என்ற வில்லைப் பரிசாகக் கொடுத்தார். அந்த வில் அர்ஜுனனின் காண்டீபம் என்னும் வில்லை விட வலிமை வாய்ந்தது. அதற்கு இணையான சக்தி கொண்ட வில் எதுவுமே கிடையாது.  விதுரர் நேர்மை தவறாதவர். வாக்கும் தவறமாட்டார். பொறுமையும் பண்பும் மிக்கவர்.

பாண்டுவின் புத்திரர்களான பாண்டவர்களுக்கு அரசாளும் உரிமையை மறுத்தார்கள் திருதராஷ்டிரனும் கௌரவர்களும். அவர்களுக்காகப் பரிந்து பேசிவந்தார் விதுரர்.

காரைக்குடிச் சொல்வழக்கு :- சிவபதவியும், சிவப்பு மாத்தும்.

1041. சிவபதவி/ சிவபதவி வண்டி - ஒருவர் இறந்ததும் அவர் சிவபதவி ( சிவனின் திருவடி ) அடைந்தார் என்று கூறுவது வழக்கம். சிவபதவி வண்டி என்பது அவரது பூத உடலை மயானம்/ மின் மயானம் / சுடுகாடு / இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் வண்டி. 

1042. கேதம் - மரணம், துக்கம், சாவு, இறப்பு, இழவு, ஈமக் கிரியை. 

1043. துட்டி, துஷ்டி - துக்கம், இறப்பு, விபத்தின் மூலம் மரணம் போன்ற துக்க நிகழ்வு. 

1044. சாரித்தல் - துக்கம் விசாரித்தல், இழவுகார வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரிப்பது. போகும்போது சொல்லிக் கொண்டு போக மாட்டார்கள். ( அதாவது போயிட்டு வரேன் என்றோ வரேன் என்றோ சொல்லிக் கொண்டு போக மாட்டார்கள். ) சொல்லிக் கொள்ளாமல் போவார்கள் அல்லது போறேன் என்று சொல்லிப் போவார்கள். ( அடுத்தும் அவர்கள் வீட்டில் துக்கம் திரும்ப வந்துவிடக்கூடாது என்ற நல்ல எண்ணம் ) .

1045. பதனப்படுத்துதல் - இப்போது எல்லாம் ஐஸ் பாக்ஸ் வந்துவிட்டது. அப்போது எல்லாம் இறப்பு நிகழ்ந்ததும் குளிப்பாட்டி விபூதி பூசி சிவப்புத்துணியால் உடலைச் சுத்தி கை காலைக் கட்டி வைப்பார்கள். மகன் மகள் போன்ற நெருங்கிய உறவினர்கள் வர தாமதமாகும் என்றால் உள்ளுறுப்புகள் காற்று ஏறி ஊதிப்போகா வண்ணம் மண்ணெண்ணெய், உப்பு ஆகியவற்றைக் கொண்டு கிட்டித்து  நவதுவாரங்களை அடைப்பார்கள். கண்கள் மூடியிருக்க சந்தனம் வைத்து, காதிலும் மூக்கிலும் பஞ்சால் அடைப்பார்கள். சுற்றிலும் பன்னீர் தெளிப்பார்கள். சில இடங்களில் விராட்டியும் வைப்பதுண்டு. தெற்கில் தலைவைத்துப் படுக்க வைத்துத் தலைமாட்டில் ஒற்றை முகமாக குத்துவிளக்கை ஏற்றி வைப்பார்கள். 

1045. தண்டக்காரன் - இறப்பு நிகழ்வுகளின் போது இறப்புச் சடங்குகள் , ஈமக் கிரியைகள் செய்ய உதவுபவர். சங்கூதுதல், பாடை கட்டுதல், தலையில் எண்ணெய் சீயக்காய் தொட்டு வைக்கச் சொல்லுதல், குளிப்பாட்டுதல், பட்டம் சுத்தச் சொல்லுதல், பந்தகால் நடுதல், இறந்த உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்லுதல். 

திங்கள், 17 செப்டம்பர், 2018

பனகல் பார்க்கில் ஒரு பொடி நடை.

சிலஆண்டுகளுக்கு முன் காலையில்  கட்டாய வாக்கிங் செல்லும் பழக்கம் இருந்தது. சென்னை டி நகர் , பி கே ஆரில் தங்கியிருந்தபோது பக்கத்தில் இருக்கும் பனகல் பார்க்கில் வாங்கிங் சென்று வந்தோம். ரொம்பப் புத்துணர்வா இருந்தது. இப்ப எல்லாம் மக்கள் ஹெல்த்துக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. மூத்த குடிமக்கள் அநேகர் அங்கே கான்வாஸ் ஷூ போட்டு வாக்கிங் போயிட்டு இருந்தாங்க. சிலர் உடற்பயிற்சி செய்துட்டு இருந்தாங்க. அங்கே வாக்கிங் செய்த்துட்டு வந்தப்புறம். காலை நேரப் புத்துணர்வு வெகு நேரம் நீடித்தது.

சுமார் ஒன்றேகால் கோடி ரூபாயில் 2009இல் இது புதுப்பிக்கப்பட்டிருக்கு. 3 பக்கமும் எண்ட்ரி ஆகலாம். நாலாபக்கமும் சாலைகள், சொல்லப்போனா ஆறு பக்கம் பெரிய சாலைகள் இருக்கு.

உஸ்மான் ரோடு, வெங்கட்ரமணா சாலை, ஜி என் செட்டி சாலை, தியாகராஜா சாலை, தெற்கு உஸ்மான் ரோடு, துரைசாமி சாலை என்று.

பரபரப்பான சென்னை மாநகரின் நடு மையத்தில் அமைந்திருக்கும் இந்தப் பூங்காவை உருவாக்கியவர் சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சரா இருந்த பனகல் அரசர். அதுனால அவருக்கு அங்கே சிலை ஒண்ணு எழுப்பி இருக்காங்க. ( விவரத்தைத் தெலுகுல எழுதி இருக்காங்க.)


நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும்.

மகனதிகாரமும் மாத்தூர் விருட்சமும்.

1881. சிகப்புக் கண் கொண்டு விழிக்கிறது புண். சுய சொறிதல் வலித்தாலும் உயிர்த்தல் உணர்கிறது மனம்.

1882. நெறி பிறழ்ந்த காதல்களையே அதிகம் பேசி இருந்தாலும் லா ச ரா , தி ஜா ரா, ஸ்டெல்லா புரூஸ், தஞ்சை பிரகாஷ் ஆகியோரின் எழுத்தின் மாய வசீகரம் என்ன. எல்லாவற்றையும் ஏற்க முடியாவிட்டாலும் புரிந்து கொள்ள முடிகிறதே அதுதான் அதன் வலிமையா.

1883. மழையின் துளியில் லயமிருக்குது. துளிகள் இறங்கி குடைபிடிக்குது..

1884. எனக்குப் பிடித்த ஸ்தலமும் விருட்சமும் :) எந்த ஊர்னு சொல்லுங்க பார்ப்போம். :)

1885. சிலவற்றைப் படித்தால் மனம் துணுக்குறுகிறது, இப்படியும் உண்டாவென. கட்டாய உறவுகள் குழந்தைக் கொலையில் முடியுமா.. கடவுளே.

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

காரைக்குடிச் சொல்வழக்கு :- குடி ஊதுதலும் கொட்டிக் கொடுத்தலும்.


1021. மேப்பாத்தல் - வீட்டில் நடக்கும் தினசரி விஷயங்களையும் சரி அனுவல் அல்லது அலுவலகத்தில் மற்றவர்கள் செய்யும் செயல்கள் ஒழுங்காக நேரப்படி நடக்கின்றனவா என்று ஒழுங்குபடுத்துதல்/ கண்காணித்தல் மேப்பாத்தல் எனப்படும். 

மிக அதிகமாக கவனம் எடுத்து மேப்பாத்து அனைவரையும் படுத்துபவர்களையும் சரி, ஒரு விஷயத்தை அதீதமாக ஊதிப் பெருக்கிப் பேசுபவர்களையும் சரி மேப்போனவன் என்பார்கள். 

1022. பூடகமாய்ப் பேசுதல் - ஒரு விஷயத்தை உடைத்துப் பேசாமல் உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறுதல். மனதில் ஒன்றை நினைத்துக் கொண்டு அடுத்தவரைத் தவறாக நினைத்து அவர் மேல் பழி போடுதல். 

1023. படிச்சுக் கொடுத்தல் - கணக்கு வழக்குப் பார்த்தல் போன்றவற்றை அல்லது புதிதான ஒரு விஷயத்தை அடுத்தவருக்குக் கற்றுக் கொடுப்பது. 

1024. சொணங்குதல் - தாமதித்தல். ஒரு விஷயத்தைச் சொல்ல அல்லது செய்ய சுணங்குவது. மனதால் அல்லது உடல் நோவால் சுருங்கிப் போவதும் சொணங்குதல்தான். 

1025. மொனங்குதல் - ஒரு விஷயத்தை உரக்கக் கூற முடியாமல் முனகுதல். எதிர்ப்பைக் காட்ட முடியாமல் அல்லது அதிருப்தியைப் பதிவு செய்ய முணுமுணுப்பது மொனங்குதல் ஆகும். 

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

அருகி வரும் சீர் செனத்தி.

திருமணப் பெண்ணுக்கு சீர் செனத்தியாக சாமான் வைப்பது அருகி வருகிறது. புழங்கும் சாமான் போக அனுவலுக்கு எடுக்கும் அனைத்துப் பொருட்களும் வைப்பதுண்டு. இப்போது இவை யாவுமே கிடையாது. மேலும் வரதட்சணை போல வது தட்சணை கொடுக்கும் காலம் வந்துகொண்டிருக்கிறது. மாப்பிள்ளைக்கு உடைகள், டேபிள் சேர், மின் விசிறி, டேப்ரெக்கார்டர், வாசனைத் திரவியங்கள் அலங்காரப் பொருட்கள் போன்றவையும் மாமியாருக்கு என்று சில பொருட்கள், கோலக்கூட்டு, அடுப்பு, பொங்கல் தவலை போன்றவையும் கொடுப்பதுண்டு. இதில் மாமியாருக்குக் கொடுப்பதும் பெண்ணுக்குக் கொடுக்கும் வெள்ளிச் சாமான்கள் மட்டுமே தற்போது பெண் வீட்டார் பரப்புகிறார்கள்.

ஆனால் மாப்பிள்ளை வீட்டில் பெண்ணுக்குப் பொருட்கள் பரப்புவது குறையவில்லை.  ஆறேழு பட்டுப் புடவைகள் , ஏழெட்டு சிந்தடிக் பட்டுகள், நைட் ட்ரெஸ்கள்,உள்ளாடைகள், கர்சீஃப், குடை, செருப்பு,வாளி, கப், அண்டா, சாப்பிடும் தட்டு, சூட்கேஸ்கள், வெள்ளிச் சாமான்கள், தங்க நகைகள் ( அல்லது வைர நகைகள் ) கொடுக்கிறார்கள். திருமணத்தில் பெண்ணுக்கு சீதனமாகக் கொடுக்கப்படும் பணத்தைப் பெண்ணின் பேரிலேயே போட்டு விடுகிறார்கள்.

கழுத்திருவுக்குப் பொன் உருக்க பெண்ணின் அப்பா அம்மாவிடம் ஒரு பவுனில் இருந்து 3, 5, 16, அண்ட் சோ ஆன் விகிதத்தில் பணமாகவோ, தங்கக் காயினாகவோ ( 24 கேரட் ) மாப்பிள்ளை வீட்டார் கொடுத்துவிடுகிறார்கள்.

மாமியார் சாமான், பின் முறை, மாப்பிள்ளை சாமான், பெண்ணுக்குப் பரப்பும் சீர் சாமான் எல்லாமே பெண் வீட்டார் பெண்ணுக்குக் கொடுக்கும் சீதனப் பணத்தில் அடங்கி விடுகிறது. அது எத்தனை லட்சமாக இருந்தாலும் இன்றைக்கு இதை அநேகம் மாப்பிள்ளை வீட்டினர் பெண்ணின் பேரிலேயே டெபாஸிட்டாகப் போட்டு விடுகின்றார்கள்.

பெண் போட்டு வரும் நகைகள் பற்றி ஏதும் கேட்பதும் இல்லை. அதெல்லாம் அந்தக் காலம். பெண் வீட்டார் என்ன போடுகின்றார்களே அது அவர்களின் பிரியத்தையும், அன்பையும் கொடுக்கும் சக்தியையும் காட்ட ..மேலும் அது பெண்ணுக்குத்தான் நமக்கெதுக்கு அது பற்றி என்ற எண்ணம் வேரோடுகிறது.

ஓரிரு இடங்களில் இன்னும் பழம் பெருமையை விட்டுக் கொடுக்காமல்  பெண்ணுக்குச் சாமான் பரப்பி வருகிறார்கள் அதை ஆவணப்படுத்தவே இதை எல்லாம் எடுத்திருக்கிறேன். கோபால் சார் சொன்னது போல் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் பேர் இருக்கிறது. அதையும் ஒரு முறை ஆவணப்படுத்துவேன்.

இதில் சில்வர், பித்தளை, மங்கு, மரச்சாமான்கள், நவீன வீட்டு உபயோக சாதனப் பொருட்கள் உள்ளன. பொதுவாக வீட்டின் மேல் மாடியில் சாமான் பரப்புவார்கள்.


பித்தளைச் சாமான்கள். :- காசாணி அண்டா,  21 குழி இட்லி சட்டி , உயர அடுக்கு - 7 , தராசு, குத்து விளக்கு, கேரளா விளக்கு, தண்ணீர்க்கிடாரம், குப்பை எடுக்கும் ( ஓவல் ) தொட்டி, தெக்களூர் தவலை சின்னம் பெரிசு மூடியுடன்  5, தண்ணீர்த்தவலை  மூடியுடன் 5, தூக்குச்சட்டிகள், வடிகட்டி,  சோத்துத் தவலை, டம்ளர், வாளி அடுக்கு, கரண்டி , எண்ணெய்த்தூக்குகள், டிஃபன் கேரியர்.

புதன், 5 செப்டம்பர், 2018

சூதாட்டம் கேடு செய்யும். தினமலர். சிறுவர்மலர் - 34.


சூதாட்டம் கேடு செய்யும்.

நீதி நெறி தவறாமல் நாட்டை பரிபாலனம் செய்து பார்புகழும் ராஜாவா இருந்தும் என்ன, சூதாட்டம் ஆடியதால் நாடு மனைவி பிள்ளைகளை மட்டுமல்ல உருவம் கூட கூனிக்குறுகி கருப்பாக ஆன ஒரு ராஜாவின் கதை பத்தி பார்க்கப் போகிறோம் குழந்தைகளே. பன்னிரெண்டு வருடத்துக்குப் பின்னாடி அவர் தன் சுய உருவம் பெற்று இழந்த அனைத்தையும் அடைந்தார் என்றாலும் அந்தப் பன்னிரெண்டு வருட காலமும் ஏகப்பட்ட கஷ்டத்தை அனுபவிச்சாரு.  எல்லாம் சூது  படுத்திய பாடு. அது என்னன்னு பார்ப்போம் குழந்தைகளே.

நிடாத நகரை ஆண்ட நிசத் என்ற அரசருக்கு இரு மகன்கள். நளன் மற்றும் குவாரா. இந்த நளன்தான் இக்கதையின் நாயகன். ஒரு முறை நளன் தன்னுடைய தோட்டத்தில் உலவும்போது சில அன்னபட்சிகளைக் கண்டான். அவற்றுள் ஒன்று நளனின் அழகைக் கண்டு வியந்து ’அவனுடைய அழகுக்கீடானவள். அவனுக்கு மனைவியாகும் தகுதிவாய்ந்தவள் விதர்ப்பதேசத்து அரசிளங்குமரி தயமந்தியே’ என்று கூறியது. தமயந்தியிடமும் தூது சென்று நளனின் அழகு பற்றி சிலாகித்தது.

திங்கள், 3 செப்டம்பர், 2018

கோலமிட்டு சாந்தமடைவோம்.

ஸைமாட்டிக்ஸ் என்னும் தனிப்பிரிவு அதிர்வுகளுக்கும் கோலங்களுக்கும் உள்ள உறவை விளக்குகிறது.

///ஒரு உலோகத் தகட்டில் சிறிது மணலைத் தூவி அதை அதிர்வு ஏற்படுத்தக் கூடிய ஜெனரேட்டரோடு இணைத்தால் ஒவ்வொரு ஒத்ததிர்வுக்கும் ஏற்ப மணல் துகள்கள் வெவ்வேறு வடிவமைப்புப் பெறுகின்றன. இப்படி அதிர்வானது வெவ்வேறு வடிவமைப்புகளை உருவாக்குவது போல இந்த வடிவமைப்பில் அமைந்த கோலங்களைப் பார்க்கும் மனிதருக்குள் அவை நல்ல அதிர்வுகளை உருவாக்கும். அமைதியான, மகிழ்ச்சியான மனநிலையைக் கொடுக்கும். இதைக் கொண்டு சிக்கலான மனநிலை வியாதி கொண்டவரையும் குணமாக்கப் பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். வண்ணங்கள் வடிவங்கள் கொண்டு மனித மனங்களில் மாற்றங்கள் நிகழ்த்த இயலும் என்று நரம்பியல் அறிவியல் நிரூபித்துள்ளது. இதற்கு ஸைமோதெரஃபி என்று பெயர். ////

எனவே கோலமிட்டு சாந்தமடைவோம் அன்புத் தோழியரே. 

இது இருதய கமலம் கோலம். இருதயம் சிறப்பாக ஆரோக்கியமாக செயல்பட இந்தக் கோலத்தைப் பூஜையறையில் போட்டு வணங்கினால் நல்லது.

காரைக்குடிச் சொல்வழக்கு - ஒவகாரமும் ஒவத்திரியமும்.


1001. வெள்ளன்னவே - சீக்கிரமாகவே. விடியற்காலையிலேயே, அதி விரைவாக.

1002. தொட்டுக்க - இட்லிக்கு சாதத்துக்குத் தொட்டுக்க வைக்கும் பதார்த்தைக் குறிப்பது. வெஞ்சனம், துவையல், அவியல், குருமா, சாம்பார், பச்சடி, சட்னி, குழம்பு,  அல்லது க்ரேவி போல.  


1003.அவங்காய்ந்தது - காணாததைக் கண்டது போல் நடந்துகொள்பவர்களைக் குறிப்பது. குறிப்பாக உணவு கிடைக்கும்போது.,  உணவுக்கில்லாமல் பட்டினி கிடந்தது போல் நடந்து கொள்ளும் முறை. வரட்சி, தீசல் பிடித்தது. 


1004. அண்டசாரல - பத்தவில்லை. ஒருவருக்கு எதையாது கொடுக்கும்போது அதை அவர் போதாது என கொடுத்தவரை உணர வைத்தல். அல்லது உணர்தல். ஒரு பொருள் எவ்வளவு உண்டாலும் அல்லது கிடைத்தாலும் ஒருவருக்கு அதில் திருப்தி இல்லை/பத்தவில்லை. அல்லது அது உடம்பிலோ மனசிலோ சாரவில்லை என்றும் கொள்ளலாம். 


1005. பச்சைவாடை அடிக்குது - குழம்பு கொதிக்கும்போது பச்சைவாடை போகும் வரை அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு இறக்கச் சொல்வார்கள். மசாலா வேகாத வாடைதான் ”பச்சை வாடை”. குழம்பில் மல்லித்தூள் பச்சை வாடை அடிக்கும் எனவே புளி சாம்பார்ப்பொடி போட்டு நன்கு கொதித்த பின் இறக்கச் சொல்வார்கள். வெங்காயக் கோஸ், குருமா போன்றவற்றிலும் தேங்காய் வரமிளகாய் சோம்பு மசாலா நன்கு கொதித்த பின் இறக்கவேண்டும். இல்லாவிட்டால் பச்சை வாடை அடிக்கும். உண்ண முடியாது. தந்தை சொல்லைக் காத்தவன்/தந்தை சொல்மிக்க மந்திரமில்லை. தினமலர். சிறுவர்மலர் - 33.


தந்தை சொல்லைக் காத்தவன்/தந்தை சொல்மிக்க மந்திரமில்லை.

ந்தை சொல்லைக் காக்கவேண்டும் தாயையும் காக்க வேண்டும். என்ன செய்வது?  முதலில் தந்தை சொல்லைக் கேட்போம் பின் தாயைக் காப்போம் என முடிவெடுத்துக் கீழ்ப்படிந்தான் ஒரு இளம் துறவி. அவன் பெயர் பரசுராமன். அவன் சந்தித்த இக்கட்டு என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

திரேதாயுகத்தில் ஜமதக்கினி என்ற முனிவர் இருந்தார். அவர் மனைவியின் பெயர் ரேணுகாதேவி. அவர்களுக்கு நான்கு மகன்கள். நான்காவது மகனின் பெயர்தான் பரசுராமன். அவன் தாய் தந்தை இருவர் மேலும் பாசம் கொண்டிருந்தான்.

சிவபெருமானை நோக்கித் தவமிருந்து அவருக்கு கோடாலி போன்ற பரசு என்றொரு ஆயுதம் கிடைத்தது. அந்த ஆயுதத்தைத் தன் வலது கையில் எப்போதும் வைத்திருப்பார். தலையில் ஜடாமுடியும் துறவிகளுக்கே உரிய காவி உடையும் அணிந்திருப்பார். உடல்பலமும் மனோபலமும் மிக்கவர்.
Related Posts Plugin for WordPress, Blogger...