எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கோலங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோலங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 செப்டம்பர், 2018

கோலமிட்டு சாந்தமடைவோம்.

ஸைமாட்டிக்ஸ் என்னும் தனிப்பிரிவு அதிர்வுகளுக்கும் கோலங்களுக்கும் உள்ள உறவை விளக்குகிறது.

///ஒரு உலோகத் தகட்டில் சிறிது மணலைத் தூவி அதை அதிர்வு ஏற்படுத்தக் கூடிய ஜெனரேட்டரோடு இணைத்தால் ஒவ்வொரு ஒத்ததிர்வுக்கும் ஏற்ப மணல் துகள்கள் வெவ்வேறு வடிவமைப்புப் பெறுகின்றன. இப்படி அதிர்வானது வெவ்வேறு வடிவமைப்புகளை உருவாக்குவது போல இந்த வடிவமைப்பில் அமைந்த கோலங்களைப் பார்க்கும் மனிதருக்குள் அவை நல்ல அதிர்வுகளை உருவாக்கும். அமைதியான, மகிழ்ச்சியான மனநிலையைக் கொடுக்கும். இதைக் கொண்டு சிக்கலான மனநிலை வியாதி கொண்டவரையும் குணமாக்கப் பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். வண்ணங்கள் வடிவங்கள் கொண்டு மனித மனங்களில் மாற்றங்கள் நிகழ்த்த இயலும் என்று நரம்பியல் அறிவியல் நிரூபித்துள்ளது. இதற்கு ஸைமோதெரஃபி என்று பெயர். ////

எனவே கோலமிட்டு சாந்தமடைவோம் அன்புத் தோழியரே. 

இது இருதய கமலம் கோலம். இருதயம் சிறப்பாக ஆரோக்கியமாக செயல்பட இந்தக் கோலத்தைப் பூஜையறையில் போட்டு வணங்கினால் நல்லது.

சனி, 31 டிசம்பர், 2016

நாலு புள்ளியில் ஐம்பத்தைந்து கோலங்கள்.

நாலு புள்ளி நாலுவரிசையில் கோலங்கள் போட்டு அனுப்புங்க அக்கா என்று ஸ்ரீதேவி செல்வராஜன் எனக்குக் கட்டளை இட்டிருந்தார். ( போன வருடம் ) . புள்ளைக்குக் கல்யாணமானபுதுசு. என் முகநூல் தங்கையான அவர் என் முகநூல் நண்பரான உதயாவை மணந்திருந்தார். புள்ள வாய்க்கு ருசியா சமைக்கத் தெரியுதோ இல்லயோ கண்ணுக்கு அழகா கோலமாட்டும் வாசல்ல போட்டு அஸ்பெண்டை தாஜா பண்ணுவோம்னு கேட்டிருந்துச்சு போல :)

கொசுறா ஒரு புள்ளிக் கோலமும் போட்டு அனுப்பினேன். காலை பிஸியில் ஏதோ ஒரு புள்ளிய வைச்சுக் கோலம் போட்டுடலாம்ல. ஃப்ளாட் வாசல்கள்ல அவ்ளோதானே இடம் இருக்கும் :) :) :)

இப்போ அவங்களுக்கு ஒரு குட்டிப் பொண்ணு பிறந்திருக்கா. இந்த இனிப்பான தருணத்துல அவங்கள வாழ்த்துறதோட இந்தக் கோலங்களையும் பகிர்கிறேன்.

அப்புறம் முக்கியமான விஷயம். உதயசங்கர் கோலங்களுக்காக ஒரு வெப்சைட்டே வைச்சிருக்கார் :)

சாட்டர்டே போஸ்டுக்காக ப்ராமி கல்வெட்டுக்கள் பத்தியும் ப்ராமி எழுத்துருக்கள் பத்தியும் கேட்டிருந்தேன். முன்னேயே பிஸி. இப்போ பாப்பா வேற வந்தாச்சா. என்ன சொல்ல. அதுனால மெயில்ல கிடைச்சத இங்கே போட்டிருக்கேன். நீங்களும் அவர் வெப்சைட்ஸ் பக்கம் போயிப் பாருங்க. !

அருமையா கோலம் போட சொல்லித்தராங்க. !

செவ்வாய், 14 ஜூன், 2016

நல்ல காலம் பிறக்குது. நல்ல கோலம் பிறக்குது.

ஒவ்வொரு வெள்ளியன்றும் வாசலில் மாக்கோலம் போடுவது வழக்கம். அதை எல்லாம் சேகரித்துப் போட்டுள்ளேன். இது பச்சரிசி மாவை அரைத்துக் காயவைத்துக் கோலக்கூட்டுன்னு வைச்சிருப்பாங்க. இதைக் கரைத்துத் துணியால நனைத்து மோதிர விரலால இழை இழுத்துக் கோலம் போடுவோம் எளிமையான என் கோலங்கள் இங்கே உங்க பார்வைக்காக. :)

கோலம் தீமையை அண்டவிடாமல் தடுக்கும்னு இந்து மத நம்பிக்கை. இதுல மயில் கோலம் வீட்டில் திருப்புகழ் பாராயணம் செய்த அன்னைக்குப் போட்டது. :)

சனி, 25 அக்டோபர், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். கோமதிஅரசுவும் கருத்துக் கோலங்களும்.


கோமதி மேம். நான் பெரிதும் மதிக்கும் வலைப்பதிவர். அவரது கோலங்கள் தொடர்பான ஈடுபாடு பாராட்டுக்குரியது. லேடீஸ் ஸ்பெஷலில் கோலங்கள் தொடர்பாக இவர் வலைத்தளம் குறித்துப் பதிவு ( மிகச் சிறப்பான இடுகை அது ) வாங்கியிருந்தாலும் இவரின் வலைத்தளத்தில் சுலோகங்களும் புகைப்படங்களும் இன்னொரு வசீகரம். எனக்கும் கோலங்களில் ஈடுபாடு உண்டு என்பதால் அவரிடம் சும்மாவுக்காக கோலங்கள் தொடர்பான ஒரு கேள்வி.