சுமாரா 2005 லேருந்து வலைப்பூவுல எழுதிக்கிட்டு இருக்கார் நண்பர் விசுவநாத். ஆனா போனவாரம்தான் ஒரு பின்னூட்டம் மூலம் அவரோட ஹாஸ்ய உணர்வைத் தெரிஞ்சிக்கிட்டேன். மஹாராஷ்ட்ரால வசிச்சாலும் தாய் மண்ணையும் மொழியையும் மறக்காம ப்லாக் எழுதிட்டு இருக்கார் .
ப்லாகில் போய் பார்த்தா மனுஷன் நாலடியார், கபீர்தாஸ், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை, ஆண்டாள் திருமொழி, அருணகிரிநாதர் திருப்புகழ், கீத கோவிந்தம், சுப்ரபாதம், நாச்சியார் திருமொழி, மதுராஷ்டகம், கந்தபுராணம், அய்யப்பன், பக்த ப்ரகலாதன் , சுதாமர், உத்தவ கீதை, அமர்நீதி நாயனார், மெய்ப்பொருள் நாயனார், கண்ணப்ப நாயனார், வள்ளி திருமணம், சிவபுராணம், ஏனாதி நாயனார், அரிச்சந்திரன், திருவாசகம், சுப்ரமண்ய புஜங்கம் என எல்லாவற்றுக்கும் எளிய முறையில் விளக்கம் அளித்திருக்கிறார். அத்தோடு மட்டுமல்ல. தான் வரைந்த தெய்வத் திரு உருவங்களையும் இணைத்திருக்கிறார். அரிய சேவை !!
அதுனால அவர்கிட்ட அவரோட பெயிண்டிங் இண்டரஸ்ட் பத்தி சாட்டர்டே ஜாலிகார்னருக்காகக் கேட்டிருந்தேன். திருவிளையாடல் தருமி சிவன் பாணியில் அவர் அனுப்பிய கேள்வி பதில் வடிவம் பார்த்து அசந்துட்டேன். செம !!! . யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். :)அப்புறம் ஒரு விஷயம். யார் தருமி யார் சிவன்னு கேக்கக்கூடாது. ஏன்னா ரெண்டுமே அவர்தான் :)
உங்களப்பத்தி கொஞ்சம் :
மேடம்
உங்களுக்கு ராஜராஜ சோழன் தெரியுமா ?