ஞா. கலையரசி. இவர் எனக்கு வலைப்பூவின் மூலம்தான் அறிமுகம். எனது அன்னபட்சியைப் படித்து மிகச் சிறப்பாக அறிமுகம் செய்திருந்தார். அட நம் கவிதை நூலுக்கு எங்கிருந்தோ ஒரு அங்கீகாரம் அதுவும் ஒரு வலைப்பதிவரிடமிருந்து என ஆச்சர்யமாக இருந்தது. மிக அருமையான விமர்சகர்.
இவரது சொந்த
ஊர் காரைக்கால். புதுச்சேரியில் கணவருடன் வசிக்கிறார். இரு குழந்தைகள். இருவருக்கும் மணமாகிவிட்டது. கலையரசி ஸ்டேட்பாங்கில் சீனியர் ஸ்பெஷல்
அசிஸ்டென்ட் ஆகப் பணிபுரிகிறார். வாசிப்பும், எழுத்தும் இவருக்கு மிகவும்
பிடித்தமானவை; இரண்டுக்கும் ஆசான் இவரது தந்தையே எனக் கூறுவார். . இவரது தந்தை சொ. ஞானசம்பந்தன் அவர்கள் இலக்கியச்சாரல் எனும் வலைப்பூவை நடத்துகிறார்கள். நம்ம கீத்ஸ் என்னும் கீதமஞ்சரி கீதா மதிவாணன் இவரின் சொந்த தம்பி மனைவி. அவங்களும் சகலகலாவல்லி :)
தன்னைப் பற்றிக்கூறும்போது ஞா கலையரசி அவர்கள் “ உள்ளத்தனையது உயர்வு என்பது என் அசைக்க முடியா நம்பிக்கை. இயற்கையில் மிகுந்த ஈடுபாடு உண்டு. ” என்கிறார். அருமையான நம்பிக்கையும் ஈடுபாடும். வாழ்த்துகள் கலை.
என் ப்லாகுக்காக சாட்டர்டே போஸ்ட் ஏதும் எழுதித்தாங்க என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் எழுதியது இங்கே.
///தட்டச்சு
நினைவலைகள்
கணிணி
புழக்கத்துக்கு வரத் துவங்கிய பிறகு, தட்டச்சு இயந்திரத்தின் பயன்பாடு வெகுவாகக்
குறைந்தது. அக்காலத்தில், அலுவலகப் பணிகளில், இந்த இயந்திரம் பிடித்திருந்த
முக்கிய இடத்தை, இப்போது கணிணி பிடித்து விட்டது.
இதன்
காரணமாக, மும்பையில் 1900 ஆண்டு முதல் இயங்கி வந்த
’கோத்ரெஜ்
அண்ட் பாய்ஸ் கம்பெனி,’ 2011 ஆம் ஆண்டு மூடப்பட்டது.