எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 28 ஜனவரி, 2019

மகனைக்கூடத் தண்டித்த மனுநீதிச் சோழன்:- தினமலர் சிறுவர்மலர் - 2.

மகனைக்கூடத் தண்டித்த மனுநீதிச் சோழன்:-
மாபெரும் குற்றம் செய்தவர்கள் ராஜாவின் பிள்ளையானால் தண்டனையிலிருந்து எப்படியோ தப்பி விடுவார்கள். ஆனால் ஒரு ராஜா குற்றம் செய்தவன் தன் மகன் என்று தெரிந்ததும் நீதி கேட்ட ஒரு பசுவின் கன்றுக்காக தன் மகனை ஈடு கொடுக்கிறார். அந்தக் கதை என்னவென்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
சோழ நாட்டினைத் திருவாரூரில் இருந்துகொண்டு ஆட்சி செய்து வந்தான் ஒரு மன்னன். நீதி நெறி வழுவாமல் ஆட்சி செய்து வந்ததால் அவன் மனு நீதிச் சோழன் என்று அழைக்கப்பட்டான்.  அவனது பிரியத்துக்குரிய மகன் பெயர் வீதிவிடங்கன் என்றழைக்கப்படும் பிரியவிருத்தன். மன்னனுக்கு மகன் மேல் அளவிடமுடியாத பாசம் உண்டு.

சனி, 26 ஜனவரி, 2019

சாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் சார் சொல்லும் நமக்கு நாமே திட்டம்.

இந்த வாரமும் சாட்டர்டே போஸ்டில் பெரியவர்கள் அத்யாவசியமாக தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் ஒன்றை திரு விவிஎஸ் சார் கூறியுள்ளார். படித்துப் பயனடையுங்கள்.

நமக்கு நாமே திட்டம் !

”ஹலோ ஸார்,  எங்கப்பா எல் ஐ சி-ல போட்டிருக்காரே ஜீவன் அக்‌ஷை பாலிஸி.  அதுக்கு என்ன ரேட் ஆஃப் இண்டரஸ்ட் வருது ஸார் ?”
“12 %”
“பூ, இவ்ளோதானா.  ஸார் பேசாம அத ஃபோர்கிளோஸ் பண்ணி செக் வாங்கி குடுத்துடுங்க.  அத அமவுண்ட்ட என் பிசினஸ்ல போட்டுக்கறேன்.  ஃபிஃப்டீன் பர்சண்ட் எங்கப்பாவுக்குக் கொடுத்துடறேன்”
“ஸார்,  பேங்க் எஃப்டீ மாதிரி அப்படி நெனச்ச ஒடனே கிளோஸ் பண்ண முடியாது.  அவருக்கு ஏதாவது சர்ஜரி மாதிரி மெடிக்கல் நீட் இருக்கணும்.  அப்பத்தான் ஃபோர்கிளோஸ் பண்ண முடியும்.  அதுக்கும் மெடிக்கல் ரிப்போர்ட் காபீஸ் கொடுக்கணும்”

புதன், 23 ஜனவரி, 2019

செவ்வந்திச் சரங்களும் சிறுமுயல் குட்டிகளும்.

2021. ஆங்கிலப் புத்தாண்டுக்கு ஆந்திராவுலயும் கர்நாடகாவுலயும் வங்கிகள் லீவ் இல்ல.
#Desi_Ppl. !

2022. எல்லாரும் பொறுப்பா போஸ்ட் போடும்போது  நாம மட்டும் நாடோடி மாதிரி போஸ்ட் போடுறமே.. ஹாஹா கொஞ்சம் கில்டியாதான் இருக்கு.

2023. இன்னும் துவங்கவே இல்லை
அனைத்தும் சொல்லி முடித்துவிட்டதுபோல் இருக்கிறது.

2024. கூடா காமம் விளக்கும் கதைகள் அதிகம் சிலாகிக்கப்படுகின்றன, வாசிக்கப்படுகின்றன. கரமுண்டார் வீடு, மாதொரு பாகன், அபிதா, மோகமுள்.

2025. அதாண்டா இதாண்டா அலமாண்டா இதாண்டா. :) காலை வணக்கம் மக்காஸ்.

திங்கள், 21 ஜனவரி, 2019

சூதால் வென்ற துஷ்டச் சகுனி. :- தினமலர் , சிறுவர்மலர் - 1.

சூதால் வென்ற துஷ்டச் சகுனி. :-
த்தினாபுரம் அரண்மனை. ‘தாயம்.. தாயம்.’. என்று சொல்லி நெற்றியில் தட்டிக்கொண்டு தாயக்கட்டைகளை உருட்டிப் போடுகிறான் ஒருவன். அவன் சொன்னபடியே தாயம் விழ. கௌரவர்கள் குதூகலிக்கிறார்கள். பாண்டவர்களோடு பீஷ்மர் விதுரர் துரோணர் கிருபர் ஆகியோரும் அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள். குள்ளநரிப்புன்னகையோடு இவர்கள் நடுவில் அமர்ந்து தாயம் உருட்டும் அவன் தான் சகுனி. சூதால் அவன் செய்த வினை கொஞ்சமா நஞ்சமா. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று பார்ப்போம் குழந்தைகளே.
திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி காந்தார நாட்டில் பிறந்தவள். தந்தை சுவலன். அவளுக்கு நூறு சகோதரர்கள். அவர்களின் ஒருவன் சகுனி. திருதராஷ்டிரனுக்கு மணம் முடிக்கு முன்பு காந்தார தேசத்தில் அவளுக்கு திருமணதோஷம் இருந்ததால் ஒரு ஆட்டுக்கு மணம் செய்து தோஷம் கழித்தார்கள். இது பீஷ்மருக்குத் தெரியவர அவர் கோபமாக காந்தாரியின் தந்தை சுவலனையும் அவரது பிள்ளைகள்  நூறுபேரையும் சிறையில் அடைக்கிறார்.
போதிய உணவு இல்லாமல் அனைவரும் சிறையில் வாடுகிறார்கள்.  தங்களுக்குக் கொடுக்கப்படும் உணவை அவர்கள் சகுனிக்குக் கொடுத்துத் தாங்கள் மரிக்கிறார்கள். சகுனியின் தந்தை சுவலன் சாகும் தருவாயில் சகுனியின் கணுக்காலை அடித்துஉடைத்துத் ” நம் வம்சத்தைச் சிறையில் சாகடித்த குருவம்சத்தைப் பழிவாங்கவேண்டும்” என்று கோபமாய்ச் சொல்கிறார்.

சனி, 19 ஜனவரி, 2019

சாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் ஸாரின் சுட்ட பணமும் சுடாத பணமும்.

திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் இந்த வாரமும் பண நிர்வாகம், சேமிப்பு பற்றிக் கூறி இருக்கின்றார்கள். படித்துப் பாருங்கள்.

சுட்ட பழம் வேணுமா ? சுடாத பழம் வேணுமா ?
”அதோ சைக்கிள்ல வராரே, அவர் பேரு என்னன்னு தெரியுமா ஸார் ?” என்று சஸ்பென்ஸ் வைத்தார் முத்தையா.

நானும் அவரும் நடந்து வந்து கொண்டிருந்தோம். தென்காசி பஸ் ஸ்டாண்ட் அருகில். நான் வங்கியில் பணியாற்றிய 1980 இல்.

“ஊஹூம். தெரியாது” என்றேன்.

“லட்சாதிபதி ஸார்.”

வியாழன், 17 ஜனவரி, 2019

கார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் விமர்சனம்.

விடுதலை வேந்தர்கள் – புத்தகம் பற்றிய எனது பார்வை

புத்தகத்தைப் பற்றி
கல்கி குழும பத்திரிக்கையான கோகுலத்தில் ஒரு வருடகாலம் கட்டுரைகளாக வெளிவந்தவற்றை தொகுத்து இப்பொழுது புத்தகமாக வெளியிட்டுள்ளார். கட்டுரையாக வெளியிட்ட கல்கி குழுமத்திற்கும்,புத்தகமாக கொண்டு வந்த “படி வெளியீடு” நிறுவனத்திற்கும் நன்றிகள்.  நாட்டு விடுதலைக்காக இருமுறை சிறை சென்ற திரு. கல்கி அவர்களுக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்திருப்பது வெகு சிறப்பு !

புதன், 16 ஜனவரி, 2019

குங்குமப் பொட்டின் மங்கலம்.


குங்குமப் பொட்டின் மங்கலம்.

”குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம், குங்குமம் மதுரை மீனாக்ஷி குங்குமம்” என்ற பாடலும், குங்குமப் பொட்டின் மங்கலம் நெஞ்சமிரண்டின் சங்கமம் என்ற பாடலும் குங்குமத்தின் மங்களகரத்தை அறிவிக்கின்றன.

”மனாலக்கலவை” என்று குங்குமத்தை புலவர் குமட்டூர் கண்ணனார் பதிற்றுப்பத்தில் விவரிக்கிறார்.

”மலைபடு திரவியம்” என்று மிளகு அகில் குங்குமத்தை தமிழ் இலக்கிய அகராதி தெரிவிக்கிறது. இவற்றிலிருந்து மணமான மகளிர் வகிட்டில் குங்குமம் வைக்கும் பழக்கம் சங்ககாலத்தில் இல்லாதிருந்தும் குங்குமத்தின் பயன்பாடு இருந்திருக்கிறது எனத் தெரிகிறது.

-- இக்கட்டுரை அமேஸான் கிண்டிலில் வெளியாகி உள்ள எனது “ மஞ்சளும் குங்குமமும் - மரபும் அறிவியலும் “ என்ற நூலில் இடம் பெற்றிருப்பதால் இங்கிருத்து எடுத்துள்ளேன். மன்னிக்கவும் மக்காஸ். 

ஞாயிறு, 13 ஜனவரி, 2019

யசோவர்மனின் குறை தீர்த்த அருணன். தினமலர் சிறுவர்மலர் - 52.

யசோவர்மனின் குறை தீர்த்த அருணன்.

தாயின் கர்ப்பத்திலிருந்து வெளியேறும் முன்பே சாபம் பெற்ற ஒருவன் இன்னொருவரின் குறையைத் தீர்க்க முடியுமா ? அதுவும் தான் பிழைப்பதே அரிதாக இருந்தபோது எப்படி இன்னொருவருக்கு ஆரோக்கியத்தை அளித்தான் ஒருவன் என்று பார்ப்போம் குழந்தைகளே.
விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் உருவானவர் பிரம்மா. இவரது மகன்கள் சப்தரிஷிகள் எனப்படும் எழுவர். அவர்களின் ஒருவரான மரீசி என்பவரின் மகன் கசியபர். இவர் மனைவியின் பெயர் அதிதி. இவர்கள் இருவரும் ஒரு கானகத்தில் வசித்து வந்தார்கள்.
தர்மம் தவறாமல் வாழ்ந்து வந்தார்கள் அத்தம்பதிகள். சிறிது நாட்களில் அதிதி கர்ப்பமுற்றார். ஒரு நாள் கசியபர் உணவு அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் வீட்டுக்கு ஒரு முதியவர் வந்து யாசகம் கேட்டார். கர்ப்பத்தின் காரணமாக அதிதியின் வயிறு பெரிதாக இருந்ததால் உடனே எழுந்து சென்று அந்த முதியவருக்கு உணவு படைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

சனி, 12 ஜனவரி, 2019

சாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் ஸார் கூறும் பாப்பாவுக்கு ஒரு பாலிஸி.

வழக்கம் போல் இந்த சாட்டர்டே போஸ்டிலும் இன்சூரன்ஸ் பாலிசி போடுவது பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றை திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் பகிர்ந்துள்ளார்கள். படித்துப் பாருங்க. :)

சைல்டிஷ் ஜோக் ! ”ஹலோ, ஸ்ரீனிவாசன் ஸார், பாப்பாவுக்கு ஒரு பாலிஸி போடணும். ஒடனே வாங்க.” நண்பர் சுரேஷ் பாபு அவசரப்படுத்தினார். சுரேஷ் என் நீண்ட கால நண்பர். வங்கியில் பணி. நானும் போனேன். ஆனால் குழந்தைகளுக்குப் பாலிஸி போடுவது என்பது இரண்டாம் பட்சம்தான். முதலில் குடும்பத் தலைவருக்கு. பிறகுதான் பிள்ளைகளுக்கு. குழந்தைகள் பாலிஸியில் ஒரு அட்வாண்டேஜ் உண்டு. பாலிஸி எடுத்த அன்றே என்ன தொகை எப்போதெல்லாம் பணம் திரும்ப வரும் என்று சொல்லி விடுவார்கள். அஷ்யூர்ட். தொகை. கியாரண்டீட் அடிஷன் என்பார்கள். மற்ற பாலிஸிகளில் அப்படியில்லை. வருடா வருடம் போனஸ் கொடுப்பார்கள். அது அந்த வருடம் காப்பீட்டு நிறுவனம் ஈட்டும் லாபத்தைப் பொருத்தது. பரமபத விளையாட்டின் பாம்பு ஏணி போல் ஏறலாம். இறங்கலாம்.

வெள்ளி, 11 ஜனவரி, 2019

மாதொருபாகன் – ஒரு பார்வை.


மாதொருபாகன் – ஒரு பார்வை.இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஆறாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

ஜுமைரா சிட்டி & புர்ஜ் அல் அராப் - JUMEIRAH CITY & BURJ AL ARAB.

ஜுமைரா சிட்டி & புர்ஜ் அல் அராப் - JUMEIRAH CITY & BURJ AL ARAB.
திங்கள், 7 ஜனவரி, 2019

வலிமை மிக்க வாலி.! தினமலர் சிறுவர்மலர் - 51.

வலிமை மிக்க வாலி.!
லவான் என்றால் வலிமை உடையவன். வலிமை என்றால் சாதாரண வலிமை அல்ல. நேர்மையும் வீரமும் கொண்ட ஒருவன் பத்துத்தலை உள்ள ஒருவனைக் கைக்குள் பிடித்து அடக்க முடியுமா. அடக்கி இருக்கிறானே. அந்தப் பத்துத்தலை கொண்டவனும் வீரதீரப் பராக்கிரமம் மிக்கவன்தான். அதெப்படி முடியும் என்று நினைக்கிறீர்கள்தானே. அந்த பலவான்களைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
கிஷ்கிந்தை என்றொரு நாடு இருந்தது. அதை நிரஜன் என்னும் வானர அரசன் ஆண்டுவந்தான். அவனது மகள் விரஜா மிக மிக அழகி. அவளை நிரஜன் ருஷீடன் என்ற வானர அரசனுக்கு மணம் செய்து கொடுத்தான். இவர்களுக்கு வாலி, சுக்ரீவன் என்ற இரு வானர இளவரசர்கள் பிறந்தார்கள்.
வாலி மிகுந்த வலிமை வாய்ந்தவன். இவன் சுவேஷன் என்ற வானர அரசனின் மகளான தாரையை மணந்தான். கேசரி என்ற வானரனுக்கும் அவனது மனைவி அஞ்சனைக்கும் பிறந்த அனுமன் பிறந்தார். கிஷ்கிந்தையை வாலி ஆட்சி செய்துவர அனுமன் அவருக்கு மந்திரியாக ஆலோசனை வழங்கி வந்தார்.
து இப்படி இருக்க இந்த தசமுகன் என்பான் யார் என்று பார்ப்போம். இவன் பத்துத்தலை கொண்டவன். இலங்காதிபதி. சிறந்த சிவபக்தன். வீணை இசைப்பதில் வல்லவன். இவன் பாடிய சாமகானத்தைக் கேட்டு சிவன் மகிழ்ந்து பல வரங்கள் கொடுத்திருக்கிறார்.
இவன் திக்பாலகர்களை வெற்றி கொண்டவன். தோல்வி என்பதே அறியாதவன். மூன்று லோகமும் இவன் காலடியில். நவக்ரகங்களும் இவனது சிம்மாசனப்படியில் . இப்படியான கீர்த்திகளைக் பெற்ற இவன் வாலியின் வலிமையைக் கேள்விப்பட்டு அவனை அடக்க வேண்டும் என எண்ணினான்.

சனி, 5 ஜனவரி, 2019

சாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “!

வாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றார்கள். படித்துப் பயன் பெற வேண்டுகிறேன் மக்காஸ். 

எல்லோருக்கும் தேவை ”காஃப்ஃபீடு” !

ஸார்,  இன்ஷுரன்ஸ் எல்லாம் வேஸ்ட் ஸார்.   முப்பது வருஷம் கழிச்சி பணத்துக்கு மதிப்பே இருக்காது.  ஒங்களுக்குத் தெரியுமா அன்னைக்கு ஒரு கப் காஃபி ஆயிரம் ரூபா ஆகிடும்.

ஏன்யா சேமிக்கலைன்னு கேட்டா வீல்பர்ரோ எக்கனாமிக்ஸ் பத்திப் பேசுவாங்க. 

இதோ படத்தில் இருக்கிறதே வண்டி நிறைய பணம்.  அதைத் தள்ளிக் கொண்டு போகிறார் ஒருவர்.

திடீரென எங்கிருந்தோ வந்து குதிக்கிறார்கள் சில வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள்.  செல்வந்தரிடமிருந்து வண்டியைப் பிடுங்கிக் கொள்கிறார்கள்.  அடுத்து ஒரு காரியம் செய்கிறார்கள்.  அதுதான் ஆச்சரியமே.  வண்டியில் உள்ள பணத்தைத் தெருவில் கவிழ்த்துக் கொட்டுகிறார்கள்.  பணத்தை விட்டு விட்டு வண்டியைத் தள்ளிக் கொண்டு ஓடி விடுகிறார்கள்.   

ஏனென்றால் பணத்தை விட வண்டி மதிப்பு மிக்கது.  இதையே “WHEELBARROW” பொருளாதாரம் என்று சொல்வார்கள்.

வியாழன், 3 ஜனவரி, 2019

ஹோகனேக்கல் தொங்கு பாலம்.- HOGENAKKAL HANGING BRIDGE.

ஹோகனேக்கல் - காவிரி ஆறு பாயும் தமிழக கர்நாடக எல்லையில் இருக்கும் ஊர். இங்கே வட்டு எனப்படும் பரிசல் ப்ரயாணம் பிரசித்தம். இந்தியாவின் நயாகரான்னு கூட சிலாகிக்கிறாங்க. தர்மபுரியிலேருந்து பக்கம்.

அங்கே தொங்கும் பாலத்துல போய் பார்த்ததையும் அங்கே இருந்த பச்சைப் புல்வெளிகளையும் என் காமிரா கண்ணால பார்த்து எடுத்துட்டு வந்திருக்கேன் உங்களுக்காக மக்காஸ்.

தமிழ்நாடு வனத்துறை போர்டு.

வனவிலங்குகள் செல்லும் பாதை என்பதால் முன் அனுமதி பெற்றே போகணும்.

புதன், 2 ஜனவரி, 2019

தந்தைக்கு நிகராக உயர்ந்த மைந்தன் க்ருதவர்மா. தினமலர். சிறுவர்மலர் - 50.

தந்தைக்கு நிகராக உயர்ந்த மைந்தன் க்ருதவர்மா:-
ருப்பாக இருக்கிறான் என்று ஒரு குழந்தையை அவனைப் பெற்ற தந்தையே வெறுக்க முடியுமா. ஆனால் வெறுத்துவிட்டாரே. அவர்தான் சூரிய பகவான். அதோ காலைச் சாய்த்து சாய்த்து மனவருத்தத்தோடு நடந்து செல்கிறானே ஒரு சிறுவன், அவன்தான் அவரது புத்திரன் க்ருதவர்மா என்ற சனி. தன்னை அடியோடு வெறுத்த தந்தையிடம் நற்பெயர் வாங்க அவன் பட்டபாடு கொஞ்சமா நஞ்சமா. அதனால் சூரியன் மனம் மாறினாரா எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
சூரியனின் மனைவி பெயர் உஷாதேவி. அவர்களுக்கு முன்று குழந்தைகள் பிறந்தபின்பு உஷாதேவியால் சூரியனின் வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. தன்னைப் போல உருவம் கொண்ட ஒரு பெண்ணைப் படைத்து அவளை சூரியனுடன் குடும்பம் நடத்தச் சொல்லிவிட்டு தவம் செய்யப் பூலோகம் சென்று விட்டாள். அவள்தான் சாயாதேவி.
சூரியனுக்கும் சாயாதேவிக்கும் இரண்டு குழந்தைகள் பிறக்கிறார்கள். அவர்கள் கிருதவர்மா என்ற ஆண் குழந்தையும் , தபதி என்ற பெண் குழந்தையும். உஷாதேவியின் நிழலிலிருந்து உருவானவர்தான் சாயாதேவி என்பதால் அவருக்குப் பிறந்த கிருதவர்மா என்ற சனீஸ்வரன் கருமை நிறமாகப் பிறக்கிறார்.
Related Posts Plugin for WordPress, Blogger...