எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வியாழன், 17 ஜனவரி, 2019
கார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் விமர்சனம்.
செவ்வாய், 23 மே, 2017
அகல்யா :-
அங்கங்கே வட்டம் போட்டு அமர்ந்து நாலைந்து வாலிபர்கள் பாட்டில்களைக் கவிழ்த்துத் தானும் மட்டையாகிக் கிடந்தார்கள். சேஃப் கார்டுகளின் விசில்களில் அலைகளில் ஆடியவர்கள் அவ்வப்போது பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள். ஹெனின்கைனும் கிங்ஃபிஷரும் பட்வைஸரும் கடலின் உப்புநீருடன் கசப்புநீராய்க் கலந்துகொண்டிருந்தன. தூரத்தில் ஒரு பெண் நீச்சல் உடையுடன் தண்ணீருக்குள் தற்கொலைக்கு முயல்பவள் போல கைகளை நீட்டியபடி பாய்ந்து சென்றுகொண்டிருந்தாள்.
மணலும் நீரும் சேருமிடத்தில் லேசாகக் காலை நனைத்தபடி சொன்னான் கபிலன். ” அப்பாவுக்கு ரெண்டு தரம் அட்டாக் வந்திருச்சு இனி எங்க அப்பா அம்மா என் கூடத்தான் இருப்பாங்க.”.
”ஹ்ம்ம். நல்லதுதான் ஆனா பார்த்துக்க முடியுமா. டயப்படி மருந்து கொடுக்கணும். சாப்பாடு ஜூஸ், சூப் கொடுக்கணும். நீங்க இந்தியாவுல இருந்தா பரவாயில்லை. நான் வேற வேலைக்கு போறேன். ””.
“பார்த்துக்கத்தான் வேணும். வேலையை விட்டுடு. நான் அனுப்புறது போதும். வீடு துடைக்க, பாத்திரம் கழுவ, மேவேலைக்கு ஒரு ஆள் போட்டுக்க. வாஷிங் மெஷின் போட்டு சமையல் செய்றதுமட்டும்தானே . உனக்கு ஈஸிதான். “
வெள்ளி, 25 நவம்பர், 2016
கல்கியின் ஐந்து நாவல்கள் ( வால்யூம் 2 ) – ஒரு பார்வை.
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் பார்த்திபன் கனவு ஆகியவற்றின் ரசிகை நான். அதே போல் முன்பே அலை ஓசை, தியாகபூமி, கள்வனின் காதலி, பொய்மான் கரடு, மோகினித் தீவு படித்திருந்தாலும் திரும்ப ஒரு முறை இப்போதும் ரசித்துப் படித்தேன். படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.
வியாழன், 8 செப்டம்பர், 2016
கல்கி பவளவிழாக் கொண்டாட்டங்கள்- சில படங்கள்.
சுதாசேஷய்யன் அவர்கள் பேசியபோது எடுத்தது.
கோகுலம் சார்பாக நடத்தபட்ட நிகழ்ச்சிகள் உணவுக்குப் பின் மாலைதான் தொடங்கின. எனவே முன்னே சென்று அமர்ந்து புகைப்படம் எடுத்தோம்.
குழந்தைகள் நடனம், குறும்படம் என்று சிறப்பாக இருந்தது நிகழ்வு.
ஃபோல்க் டான்ஸ்,
ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016
பரவசத்தில் ஆழ்த்திய பவளவிழாக் கொண்டாட்டங்கள் - கல்கி பவளவிழா மலரில்.
75 ஆண்டுகள்;, முக்கால் நூற்றாண்டு..!! வெற்றிகரமாகப் பத்ரிக்கைப் பணியில் கோலோச்சி வரும் கல்கி குழுமப் பத்ரிகைகள், வேரூன்றிப் பாய்ந்திருக்கும் தமிழ் விருட்சத்தின் அற்புதக் கிளைகள். கல்கி குழும ஊழியர்களின் குழந்தைகளிடமும் தமிழ் விதையைத் தூவவும், ஆலம் விழுதாய்த் தமிழை ஊன்றவும் பவளவிழா ஆண்டு நிறைவை ஒட்டி கோகுலத்தின் சார்பில் குழந்தைகளுக்காக ஜூன் 11 ஆம் தேதியன்று பாரம்பரியப் பெருமை மிக்க கல்கி வளாகத்தில் தமிழ் செழிக்கப் பல்வேறு போட்டிகளும் குதூகலமாய் நடைபெற்றன.
வாழ்வியல் நெறிகள் பொதிந்த திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டிகள் முதலிலும் அதன் பின் வார்த்தை விளையாட்டு என்ற நிகழ்ச்சியும், பாடல் போட்டியும் நடந்தது. மினிஷா நாயர் தொகுத்து வழங்க மலேஷியா சங்கர் மாஜிக் ஷோவும் மிமிக்ரியும் நடத்தி அனைவரையும் குழந்தைகளாக்கினார்.
கல்விக்கூடங்களே திருக்குறளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத போது கோகுலம் பத்ரிக்கை முக்கியத்துவம் அளித்து குழந்தைகள் திருக்குறளை அறிந்து கொள்ளவும் அதன்நெறிகளைப் பின்பற்றவும் வழிகோலியது மிகவும் பாராட்டத்தக்கது. அம்முன்னேடுப்பில் முதன்மையாக இருக்கும் கல்கி குழுமத்தில் அங்கம் வகிக்கும் அனைவரும் பெருமைக்குரியவர்களே
திங்கள், 20 ஜூன், 2016
கல்கியும் நானும் & FIVE - D - THEORY. யும்
///சரித்திரப் புதினங்களில் சாண்டில்யன் ராஜா என்றால் கோவி மந்திரி எனலாம். ஆனால் சக்கரவர்த்தி என்றால் அது கல்கிதான்.. அல்லியும் ஆம்பலும் கொட்டிக்கிடக்கும் வாவிகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு வலிமையான மாமல்லரும்.. நளினமான சிவகாமியும்தான் நினைவில் மலருவார்கள்..அவரின் இளவல் கல்கி கி. ராஜேந்திரன் (இவரை தளபதி எனலாம்) எழுதிய சரித்திரப் புதினம் ரவிகுல திலகன்..சிங்கக் குட்டியல்லவா பதினாறு அடி பாயாவிட்டாலும்..சிங்கம் பாய்ந்த தூரத்தைத் தொட முயன்றிருக்கிறது..///
கல்கி பவள விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோகுலத்தின் சார்பாக கல்கி நிறுவன ஊழியர்களின் குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் சக வலைப்பதிவர் மாயவரத்தான் அவர்களும் நானும் ஜூன் மாதம் 11 ஆம் தேதி நடுவராக அழைக்கப்பட்டிருந்தோம்.
அந்நிகழ்வில் திருக்குறள் போட்டி, ஒரு நிமிடம் உரையாடல், பாட்டுப் போட்டி, மாஜிக் ஷோ, மிமிக்ரி ஆகியன இடம்பெற்றிருந்தன. முடிவில் மாயவரத்தான் அவர்களும் நானும் உரை நிகழ்த்த அழைக்கப்பட்டோம்.
மாயவரத்தான் அவர்களும் குழந்தைகளுக்குத் தேவையான கருத்துக்களைச் சிறப்பாகக் கூறி அமர்ந்தார். அடுத்து நான் அழைக்கப்பட்டேன். அங்கே பகிர்ந்த கருத்துக்களையும் கூற விட்டுப் போன சிலவற்றையும் இங்கே பதிவு செய்கிறேன். {{அன்று எனது திருமண நாள், எனது ஐந்தாவது புத்தகமான சிவப்புப் பட்டுக் கயிறைப் புத்தகத் திருவிழாவில் வெளியிடும் நாள், மேலும் கோகுலம் சார்பாக நடுவராகக் கலந்து கொள்ளும் நாள் என முப்பெரும் விழாவாக அது எங்களை ( எனது கணவரையும் ) மகிழ்வித்தது. - கல்கியில் எனது முதல் கவிதை வெளிவந்தது - கிராமத் திருவிழா என்ற கவிதை மாணவர் பக்கத்தில் வெளியானது . அதற்குக் கொடுக்கப்பட்ட - பி. எஸ். மணி என்ற எடிட்டர் கையெழுத்திட்ட காசோலையையும் - 15 வாசகர் கடிதங்களையும் ( வாசகர் கடிதங்கள் பாகம் - 1, வாசகர் கடிதங்கள் பாகம் -2 ) என் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளேன். பெருமிதமாக உணர்கிறேன். அதன் பின் கல்கியின் கவிதை கஃபேயில் சென்ற வருடங்களில் நான்கு கவிதைகளும் வெளியாகி உள்ளன. - இரவு, மெழுகின் முணுமுணுப்பு, மீன்கள், கோதுதல் }}
பாரம்பரியப் பெருமை மிக்க கல்கி நிறுவனத்தின் இந்த பவளவிழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்பது குறித்து மகிழ்ச்சி. சின்னப் பிள்ளையில் இருந்து வாசித்து மகிழ்ந்த கல்கி, கோகுலம் , மங்கையர் மலர் ஆகிய பத்ரிக்கை அலுவலகத்தில் நின்று பேச முடியும் அதன் சிறப்பு விருந்தினராக வரமுடியும் என்பதே பெருங்கனவாகத் தோன்றுகிறது. அதை சாத்தியப்படுத்தி மாபெரும் பெருமையை வழங்கிய கோகுலத்தின் பொறுப்பாசிரியர் உயர்திரு லதானந்த் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
செவ்வாய், 14 ஜூன், 2016
கல்கி பவளவிழா - கோகுலம் - குதூகலப் போட்டிகள்.
குமுதம், அவள் விகடன், குமுதம் பக்தி ஸ்பெஷல், குங்குமம் தோழி, புதிய தரிசனம், சென்னை அவென்யூ, கொளத்தூர் டைம்ஸ், தேவதை ஆகியவற்றில் எழுதி இருந்தாலும் என்னவோ சமையல் ரெசிப்பிஸ் எழுதுவதில் கொஞ்சம் தயக்கமாகவே இருந்தது. கவிதை கதை கட்டுரை போல சமையல் குறிப்பு எழுதுபவர்களை யாரும் ஒரு எழுத்தாளராக ஒப்புக் கொள்வதில்லை என்ற தயக்கம் தொடர்ந்து நீடித்து இருந்தது மனதில் . இருந்தும் எனது வலைத்தளத்தில் அவ்வப்போது உணவுக் குறிப்புகள் வெளியிட்டே வந்திருக்கிறேன்.
செவ்வாய், 30 ஜூன், 2015
செவ்வாய், 23 ஜூன், 2015
கல்கி கவிதைக்கு வாசகர் கடிதங்கள். - பாகம் 1.
கல்கியில் ”கிராமத்துத் திருவிழா “ கவிதை வெளிவந்தவுடன் வாசகர் கடிதங்கள் வரத் தொடங்கின. முதன் முதலில் பாராட்டு மழை.. ஒரே இன்ப வெள்ளம். :) இதை எல்லாம் சுசீலாம்மாவிடம் சொன்னபோது அவர்கள் வந்த கடிதங்களை எல்லாம் ஃபைல் பண்ணி வைக்க சொன்னார்கள். அந்த ஃபைலில் இருந்து ஒரு பதினைந்து கடிதங்களைப் பகிர்கிறேன்.
நிறையப் பேர் கவிதையாகவே கடிதம் எழுதி இருக்கின்றார்கள். சிலர் தாங்கள் இயற்றிய கவிதைகளையும் பார்வைக்கு அனுப்பி இருந்தார்கள். !
இது பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் கல்வியியல் கல்லூரியில் இருந்து மஹிலா என்பவர் எழுதியது. சில சமயம் இது ஒருவரா மூன்று பேரா என்று யோசித்திருக்கிறேன் :)
வெள்ளி, 12 ஜூன், 2015
திங்கள், 1 ஏப்ரல், 2013
செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011
திங்கள், 27 ஜூன், 2011
வியாழன், 9 ஜூன், 2011
திங்கள், 16 மே, 2011
திங்கள், 14 ஜூன், 2010
ரவிகுல திலகன்..-ஒரு பார்வை..
ரவிகுல திலகன்
வானதி பதிப்பகத்தின் வரலாற்று நூல் இது... அணிந்துரை சுந்தா..
சரித்திரப் புதினங்களில் சாண்டில்யன் ராஜா என்றால் கோவி மந்திரி எனலாம். ஆனால் சக்கரவர்த்தி என்றால் அது கல்கிதான்.. அல்லியும் ஆம்பலும் கொட்டிக்கிடக்கும் வாவிகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு வலிமையான மாமல்லரும்.. நளினமான சிவகாமியும்தான் நினைவில் மலருவார்கள்..அவரின் இளவல் கல்கி கி. ராஜேந்திரன் (இவரை தளபதி எனலாம்) எழுதிய சரித்திரப் புதினம் ரவிகுல திலகன்..சிங்கக் குட்டியல்லவா பதினாறு அடி பாயாவிட்டாலும்..சிங்கம் பாய்ந்த தூரத்தைத் தொட முயன்றிருக்கிறது..
புதன், 9 ஜூன், 2010
கிராமத் திருவிழா..
சக்கர இதழ்களினால்
ரோட்டுக் காதலனை
முத்தமிடும்..
புழுதி
உல்லாசமாய்...
விசிலடித்துப் பறக்கும்..
மந்தைகள்
மஞ்சள் பூசிக்குளித்துக்
குங்குமமிட்டு
மங்கலப் பெண்களாக வரும்..










