எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 23 ஜூன், 2015

கல்கி கவிதைக்கு வாசகர் கடிதங்கள். - பாகம் 1.

எல்லாப் புகழும் சுசீலாம்மாவுக்கே !!!. :)

கல்கியில் ”கிராமத்துத் திருவிழா “ கவிதை வெளிவந்தவுடன் வாசகர் கடிதங்கள் வரத் தொடங்கின. முதன் முதலில் பாராட்டு மழை.. ஒரே இன்ப வெள்ளம். :) இதை  எல்லாம் சுசீலாம்மாவிடம் சொன்னபோது அவர்கள் வந்த கடிதங்களை எல்லாம் ஃபைல் பண்ணி வைக்க சொன்னார்கள். அந்த ஃபைலில் இருந்து ஒரு பதினைந்து கடிதங்களைப் பகிர்கிறேன்.

நிறையப் பேர் கவிதையாகவே கடிதம் எழுதி இருக்கின்றார்கள். சிலர் தாங்கள் இயற்றிய கவிதைகளையும் பார்வைக்கு அனுப்பி இருந்தார்கள். !

இது பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் கல்வியியல் கல்லூரியில் இருந்து மஹிலா என்பவர் எழுதியது. சில சமயம் இது ஒருவரா மூன்று பேரா என்று யோசித்திருக்கிறேன் :)

ஈரோடு, ”நேற்று” இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த திரு கே இரவிச்சந்திரன் அவர்களின் கடிதம்.


இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரிந்த தனரட்சகன் என்பவரது கடிதத்தில் ஓவியம் வரைந்த உமாபதியையும்  பாராட்டி இருக்கிறார்.

அத்தை மாமன் அக்கா மகள்களை வட்டமிட்டு வரும் வாலிபர் கூட்டமும், நெஞ்சில் நின்றோனை மஞ்சள் நீர் கொண்டு குளிப்பாட்டி விடும் குமரியர் கூட்டமும் இவரது கண்களில் தென்பட வில்லையா இல்லை மனமறிந்தும் மறந்துவிட்டாரா எனத் தன்குறையாகக் கேட்டுள்ளார்.மதுரையைச் சேர்ந்த ரகுராம் என்பவர் எழுதிய கடிதம். இதில் அவர் ஒரு தலைப்பு கொடுத்து கவி எழுதச் சொல்லி இருக்கிறார் :) !!!
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நரசிம்மன் என்பவர் எழுதிய கடிதம் . பெரும்பாலானவர்கள் கடிதம் எழுதியதைத் தவறாகக் கருத வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். மேலும் அவர்களின் கவிதை பற்றிய கருத்தை எழுதி அனுப்பச் சொல்லி இருக்கின்றார்கள். :)மிக்க நன்றி கல்கிக்கும், சுசீலாம்மாவுக்கும் ஃபாத்திமா கல்லூரிக்கும் எனது பெற்றோருக்கும். :)

9 கருத்துகள்:

 1. மஹிலா அவர்களின் ஒவ்வொரு வரியும் நறுக்... சுருக்...

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்கள்...வாசகர் கடிதங்களை வாசிக்க தந்தமைக்கு நன்றி.

  என்னுடைய கல்லூரி நாட்களில் கல்லூரியில் நிகழ்ச்சிகளில் வாசித்த கவிதைகளை, மற்றும் சில கவிதைகளையும் விட்டு விட்டேன். நோட்டில் எழுதியது இருக்கிறது. திருமணம் ஆகி நிறைய நாட்கள் கழித்து எழுதிய கவிதைகள், சாமிபாடல்கள், யோகிராம் சுரத்குமார் பஜனைப்பாடல்கள் என எழுதிய டைரியை படிக்க கேட்ட பெரியவருக்கு கொடுத்தேன். அதுவரை யாருக்கும் டைரியை வீட்டுக்கு படிக்க கொடுத்தது இல்லை. அவர் மறந்து விட்டார். டைரி போய் விட்டது. மொத்தம் 81 அதில் எழுதி இருந்தேன்.

  தாங்கள் அனைத்தையும் பத்திரமாக வைத்து இருக்கிறீர்கள். நன்று.

  இப்போது ப்ளாக் எழுத ஆரம்பித்ததில் இருந்து இதில் சேமித்து வைக்கிறேன். கிட்டத்தட்ட ப்ளாக் எனக்கு டைரி போல. சமையல், கவிதை,கதை,பார்த்த இடங்கள்,அனுபவங்கள் என நிரப்பிக் கொன்டு இருக்கிறேன். ப்ளாக் ஒரு அருமையான தளம் என்போன்றோர்க்கு. ஏதோ எனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கும் சில உபயோகமாக இருக்கும் என நினைத்து அத்தளம் வழியே நடந்து கொண்டு இருக்கிறேன்.

  ஆஹா....என்னமோ,,,எழுதிட்டே இருக்கேனே....ஓகே...வரட்டா...

  பதிலளிநீக்கு
 3. அனைத்துப் பாராட்டுக் கடிதங்களும் மிக அருமையாக எழுதப்பட்டுள்ளன. என்னைப்போலவே, தாங்களும் அவற்றைப் பொக்கிஷமாக சேமித்து வைத்துள்ளது நினைக்க சந்தோஷமாக உள்ளது. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 4. உண்மையிலேயே பத்திரிக்கையில் பிரசுரமானால் வாசகர் வட்டம் கூடும் ஒரு ஒளிவட்டமும் பிரகாசிக்கும். வாழ்த்துக்கள் வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்குக.

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துகள். இத்தனை வருடங்களாக அனைத்தையும் பொக்கிஷமாக வைத்திருக்கும் உங்களுக்கு பாராட்டுகளும்!

  பதிலளிநீக்கு
 6. முதல் கடிதம் கவிதையாக எழுதி கலக்கி இருக்கிறார்! அருமையான பகிர்வு! நன்றி!

  பதிலளிநீக்கு
 7. ஊடகங்களில் வெளியானால் பலரையும் சென்றடையும்! அத்தனையையும் பொக்கிஷமாக வைத்திருக்கும் உங்களுக்கு பாராட்டுகள்!

  மகிலா அவர்களின் கருத்து கலக்கல்ஸ் சகொதரி!

  நாங்களும் இப்படி பல முன்பு கல்லூரி காலத்தில் எழுதி பரணில் போட்டு காணாமல் போனவை போக மீதம் இருந்தவை அவ்வப்போது கதைகளாக வருவதுண்டு.....எங்கள் தளத்தில்

  பதிலளிநீக்கு
 8. நன்றி டிடி சகோ

  நன்றி உமையாள் சகோ. எனக்கும் உங்கள் பகிர்வுகள் மிகப் பிடித்தவை சரளமான மொழியில் நீங்கள் பகிரும் அனைத்தையும் படித்து ருசிப்பேன். :) நினைவில் மிச்சம் இருக்கும் கவிதைகளைப் பகிருங்கள் சகோ.

  நன்றி விஜிகே சார்

  அஹா பாலா சார் வலைத்தளப் பின்னூட்டம் அதிகமானாலும் ஒளிவட்டம் கூடும் :) நன்றி சார்

  நன்றி வெங்கட் சகோ

  நன்றி தளிர் சுரேஷ்

  நன்றி துளசி சகோ & கீத்ஸ்

  பதிலளிநீக்கு
 9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...