எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 18 ஜூன், 2015

அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

261. கண்ணுக்குக் கண் , பல்லுக்குப் பல் மாதிரி ஆயிடுது சில லைக்குக்கு லைக். :) மொய் லைக் ..:)

262. கசியும் புன்னகைக் கீற்றொன்று போதும் மனிதர்களைப் ப்ரகாசமாக்க.

263. கொஞ்சம் அக்கறை, கொஞ்சம் முயற்சி கூட எல்லாவற்றையும் சாதிக்கும்

264. நட்புடா நண்பேன் டா என்பதெல்லாம் சினிமாவில்தான். உரிய நேரத்தில் போடாத ஒற்றை லைக் முறித்துவிடுகிறது முகநூல் நட்புக் கிளையை.

265. சில கதைகள் கட்டுரைகள் மொழிபெயர்ப்புகள் படிக்கும்போதே அதன் தாக்கத்தில் மனச் சிக்கலுக்கு ஆளாகி விடுவோம்
போலிருக்கிறதே. சிறந்த எழுத்து என்பது என்ன..? இதுதானா. ?

266. think twice b4 sharing. _ எனக்கு சொல்லிக்கிட்டேன். :)

267. அப்போதைய பிள்ளைகளுக்கு பெரியவர்களிடம் பயம் இருந்தது.
இப்போதைய பெரியவர்களுக்குப் பிள்ளைகளிடம் பயம் இருக்கிறது.
ஆகக்கூடி இருக்கும் ஒரே விஷயம் பயம் மட்டுமே.

268. முகநூல் வந்தபிறகு எல்லா உணர்வுகளையும் ஒரு லைக்கில் அல்லது கமெண்டில் சட் சட்டென்று கடக்க முடிகிறதே. ஹ்ம்ம்

269. உறவுகள் மட்டுமல்ல.. நட்புகளின் முக்கியத்துவத்தையும் உணர்த்திய வருடம் 2013. அனைவரையும் ஒரு கூட்டில் இணைக்கச் செய்த வருடம்.. சில இழப்புக்களையும் சில ஞானத் தெளிவையும் கொடுத்த வருடம். பொறுமையைப் போதித்த போதி மரம்.. ஏனோ ஒரு வலி இருக்கிறது என் நடுத்தம்பியில்லாமல் அடுத்த வருடத்தை எதிர்நோக்க.. அனைவரின் ஆயுளுக்கும் ஆரோக்கியத்துக்கும் பிரார்த்தனை செய்யத் தூண்டிய வருடம்.. வருடங்கள் மாறலாம். சில வருடங்கள் மட்டும் வடுக்களாய்..

270.எத்தனை மலாலா வந்தாலும் திருத்தமுடியாது. பேட்டி என்னும் பேரில் எத்தனை கச்சடாக்களை இந்தத் தொலைக்காட்சிகள் ஒலிபரப்புகின்றன. விநாசகாலே விபரீத புத்தி.

271.தொலைக்காட்சியும் பெண்ணும் ஒண்ணு.
..
.அவங்க மட்டும் பேசுவாங்க. நாம் கேக்கலாம். ஆனா உரையாட முடியாது. :) :) :)  

272. ஆளாளுக்கு கொஞ்சம் ஐஸ் போட்டுக்குவோம். ஐ மீன் லைக் போட்டுக்குவோம். :) :) :)

273.எல்லாப் பூக்களையும் ஒரே சரத்தில் சேர்க்கும் வித்தை மிக நல்ல எழுத்தாளனுக்கும் வாய்க்கிறது.

274.மிகக் கம்பீரமாகத் திகழ்ந்தவர்களையும் குழந்தைகளாக்கி விடுகிறது முதுமை.

275. பகல்கம்பளம் சுருட்டி
இரவுப்பாய் விரித்துக் கொண்டது
நிலவு.

276. புற்களுக்கு வியர்வை
பனித்துளி
பூக்களுக்கு வியர்வை
தேன்துளி.

277. என்னது இன்னிக்கு எல்லாரும் சிக் லீவா.

ஆமா செமிஃபைனல் பார்க்க லீவ் கேட்டா கொடுப்பீங்களா அதான். smile emoticon
‪#‎எங்கும்_க்ரிக்கெட்_எதிலும்_க்ரிக்கெட்‬ :)

278.பையன் கல்யாணத்துக்கு மாமியார் சீர் ஏதும் வாங்கலையே நல்ல மாமியார்தான்.

ஆனா ஃபேஸ்புக்ல மாமியார் அப்டேட் பண்ணும்போதெல்லாம் பொண்ணு வீட்டுக்காரங்க எல்லாரும் லைக் போட்டுறணும்னு கண்டிஷனாம். :)

279. மகளிர் அணித் தலைவி வர்றாங்க தொகுதிக்கு .. எல்லா வாழ்த்தும் எழுதி வரவேற்றாச்சு புதுசா ஏதும் சொல்லுங்க வரவேற்பு ஆர்ச்சுல எழுதணும்.

அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணியே வருக வருகன்னு போடுங்க. :)

280. உலகக் கோப்பைக் க்ரிக்கெட் போட்டியில் ஜன கண மன பாடும்போது அட்டென்ஷன்ல நின்னேன். ரொம்ப நாள் கழிச்சு தேசிய கீதம் கேக்கும்போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும். 

31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.
7 கருத்துகள்:

 1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 2. லைக்கிட்டேன் --சரஸ்வதிராசேந்திரன்

  பதிலளிநீக்கு
 3. நிலவும் தேன்துளியும் ஆகா....!

  மலச் சிக்கல் ஆகாமல் இருந்தால் சரி... ஹிஹி...

  பதிலளிநீக்கு
 4. இது மொய் லைக்கில்லை நிஜமாகவே லைக்கிட்டோம் சகோதரி!

  மொய் லைக் ..:)// ஹஹஹஹ்

  266 ஆமாம் சரிதானே ...இது எங்களுக்குச் சொல்லிக் கொண்டோம்

  277 ஹஹஹஹ்

  278 , 279 ஹஹஹஹ் செம கலக்கல் போங்க...

  பதிலளிநீக்கு
 5. நன்றி சரஸ் மேம் :)

  ஹாஹா டிடி சகோ

  நன்றி தளிர் சுரேஷ்

  நன்றி துளசி & கீத்ஸ். :)

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...