எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 13 ஜூன், 2015

சாட்டர்டே போஸ்ட். டி வி என் சாரின் இன்னும் சில பகிர்வுகள். ரிலாக்ஸ் ப்ளீஸ்.

///முகநூலில் எனது பெருமதிப்பிற்குரிய நண்பர் திரு நாராயணன் சார் அவர்கள் தினமும் அன்பான வாழ்த்துகளைப் பகிர்ந்து இருப்பார்கள். அந்த இன்சொற்களையும் வாழ்த்துகளையும் படிக்கும்போதே நாட்கள் இனிமை மயமாகிவிடும். மனிதநேயமிக்க பண்பாளர். :)

 அவர் எனக்கு அனுப்பிய இன்னும் சில பதிவுகளை இங்கே பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.  ////

 *********************************************************

எனதன்புக்கும் மரியாதைக்கும் உரிய தேனம்மை அவர்களே..
இறைவன் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் சகல
நன்மைகளும் அருள் பாலிப்பாராக.!


தங்களை முகநூலில்  மட்டுமல்ல, நேரிலும் சந்திக்க எங்கள்
குடும்பத்தார் அத்துணை பேருக்கும் விருப்பம்.
விரைவில் நிறைவேற வேண்டும் என்று நம்புவோம்.
பெற்றோரிடம் எங்களது அன்பையும் மரியாதையையும்
தெரிவித்துக் கொள்கிறோம்..

நான் எழுதுவதை எப்போது வேண்டுமானாலும்
சேர்த்துக் கொள்ளுங்கள். தோன்றும் போது எழுதி விடுகிறேன்.
உங்கள் வசதிக்கேற்ப செய்து கொள்ளுங்கள்.

என்றும் பிரார்த்தனையும் வாழ்த்துக்களும் உங்களுக்காகவும்
குடும்பத்தாருக்காகவும், அனுதினமும் எங்களிடம் உண்டு.

வாழ்க, வளர்க, வெல்க!

 


தமாஷ் - ரிலாக்ஸ் ப்ளீஸ்......(நகைக்காக மட்டும், பகைக்கல்ல)
------------------------------

-------------------------------------------------------------------------

1. ஏங்க குடிச்சு குடிச்சு ஒங்க மூளயக்
கெடுத்துக்கிறீங்க..?
.

.
.
.குடிக்கறதுக்கு முன்னாடி மட்டும்
மூளை இருந்துச்சுன்னு சொன்னியா?
???2. பாடும் போது பாகவதர் வாய்க்குள்ளே
வண்டு போயிடுச்சே...?
.
.
.
அவர் தேனொழுகப் பாடினாரில்லயா..அதான்!


--------


3. தாத்தா: பேராண்டி, ரிசல்ட் வந்தாச்சேடா..
உன் நம்பரைக் காணலியே?
.
.
.
.
அது வந்து தாத்தா... எனக்கு ஸ்பான்சர் கிடைக்கல!
????

-----


4. ஏம்பா...காப்ஃபியில உயிரில்லையே?
.
.
.
எப்படிச் சொல்றீங்க?


.
அதான், நுறை தள்ளுதே!

-------5. துணி வைத்துத் தைப்பவர் டெய்லர்;
துணியில்லாம தைப்பவர், ஃபேஷன் டெய்லர்!


----------6. கஷ்டம் என்றால் என்ன, நஷ்டம் என்றால் என்ன?
.
.
.
முதல் மனைவியுடன் இருப்பது கஷ்டம்;
இரண்டாம் மனைவியுடன் வாழ்வது, நஷ்டம்!

----------


7. சார்... கதை என்றால் என்ன,
நிஜம் என்றால் என்ன?

.
.
.
.
கதை என்றால் டைரக்டர்;
நிஜம் என்றால் ப்ரட்யூசர்!


---------


8. கழுதை: என்ன நான் துன்னறதெல்லாம்
 நீ துன்னரே?

.
.
.
.
மாடு: நான் துன்னறதத் தான் மனுஷன்
திண்ணுப்புடறானே..அப்புறம் நான்
எங்க போறது?

------------


9. கமலா டாக்டர்:   நான் உங்களை பரிபூரணமாக்
குணமாக்கிட்டா என்ன தர்ரீங்க?
;
;
;
நோயாளி: என்னையே  தர்ர்ரேன்....டாக்டர்!

??????


-------------


*****************************************************


சில பண்பாட்டுச் சிந்தனைகள்:

1. போதி’ மரம் சொன்னா, நிற்கும்;
போதை மனம் சொன்னா, தடுமாறும்!


2. பொய்யை மருந்தாக்கின், ‘போலி’,
மெய்யை வருந்தக் கால், நீ  ‘காலி ‘
(மோட்சம்)!


3. உழைப்பவனை விட தெய்வம் மகிழும்
நபர் வேறு யாராகவும் இருக்க முடியாது;
தன்னம்பிக்கையே உன்னை உயர்த்தும் -
ஆண்டவன் பால் ஈர்க்கும்!


4. உன்னால் முடிந்ததைப் பிறருக்குக் கொடு;
இறைவனும், அதைத்தான் எதிர் பார்க்கிறான்!


5. உன் செய்கையில் உயர்வினை நிறுத்து;
உன் பிள்ளைகள், நீ சொல்வதைக் கேட்பதை விட
நீ நடந்து கொள்வதைத்தான் உன்னிப்பாகக்
கவனிக்கிறார்கள்!


6. சுடு சொல்லும் வசை மொழியும் சொல்பவனை
இடு காடும் ஏற்காது!7. இன்னும் வேண்டும்’ என்பது ஆசை,
‘இதுவே போதும்’- என்பது வாழ்க்கை!8. உன்னிடமிருந்து அகலா நினைவு, ’அன்பு’  ஒன்றாகத் தான்
இருக்க வேண்டும். இன்னபிற அனைத்தும் இங்கேயே
விட்டுச் செல்ல வேண்டியவை தாம்!9. சிறிய விஷயங்களில் கவனம் செலுத்தும் போது தான்,
பெரிய விஷயங்களை அனாயாசமாகச் செய்ய முடியும்!10. தாயை .நேசி... உனக்கு முதலில் அன்பு
போதித்த தெய்வம், அவர் தாம்!!நன்றி...விடுமுறை நாள் வாழ்த்துக்கள்.
வாழ்க, வளர்க, வெல்க!
*****************************************************

பண்பாட்டுச் சிந்தனைகள்
------------------------------------------


அன்பு இருக்கும் இடத்தில் ,அறிவு
மழுங்குவது கூட ஒரு நிறைவைத்
தரும் நிகழ்வே!


அன்பிலா அறிவு, தீர்க்கப் படாத
சூனியம்!
(பூஜ்ஜியம் என்று கொள்க).


முடியாததை முயலுங்கள்,
முயன்றது முடியும்!


கடந்து வந்த பாதை.....
கற்றுக் கொடுக்கும் கீதை!

நன்றிகள் பல!!!!!

***************************************

உறியேறி விளையாடும் விலை வாசிதனைப் பாராய்,
பாரெங்கும் பாராய் (BAR) தர்பாரொடு தடுமாற,
கல்வியதுவும் கனவாய்ப் போன பிஞ்சுகளையும் பாராய்;
தனிமனித சுதந்திரம் எதிலுமில்லை கேளாய்...
(உறியேறி.......தடுமாற)

ஏற்றத் தாழ்வதனைக் குடைப் பிடித்து
ஏமாற்றும் எத்தரவர், ஏனோ...?
நன்றுணர்ந்து நல்லவை தெளிந்து,
நமக்கென்று காலம் வருமென்று..  (உறியேறி....தடுமாற)


தங்கமதன் விலையோ தாருமாறாயத் திரிய ,
தவிக்கும் நம் பெண்டிர் கரை சேர்வதெக்காலம்!
காய்கறியும் மணிப் பருப்பும் விஷமான உணவாச்சே
கனிந்தொரு காலம் நமக்கு விடிவதென்று கூறாய்! (உறியேறி..தடுமாற)


அரசர்க்குக் கொடி பிடிக்கும்
ஆளுபவர் இருக்க, ஆளுபவர் இருக்க -
அனைவருக்கும் பவிஷு வாழ்வதனைக் கேட்டு,
ஆண்டி என்று மீள-, ஆறுமுகா!...  ஆண்டி என்று மீள!!!


ஏறுமிந்த பாதகங்கள் காணா நிற்கும் ஆறுமுகம்,
என்றும் விடியல் வேண்டி எங்கள்
வாழ்வு சிறக்க வேணும்... ;நீதான் வந்தருளி, - ஆறுமுகா,
நல்வழி காட்ட வேணும்...ஆறுமுகா!!


(நீதான் வந்தருளி, நல்வழி காட்டவேணும்)
(உறியேறி.......தடுமாற)!!!!!


முற்றும்..
நன்றி!!!!!

****************************************************


நன்றிகள் பல, ரசித்தமைக்கு!

அருள்நிதி டி.வி. நாராயணன்
அருள்நிதி கிரிஜா நாராயணன்

டிஸ்கி :-

நன்றி டிவிஎன் சார் & கிரிஜா மேம்  :) 

இதையும் பாருங்க மக்காஸ். 

சாட்டர்டே போஸ்ட். டி வி என் சாரின் கவிதைகள். - கடிகாரமும் கடவுளும்.4 கருத்துகள்:

 1. துணுக்குகள் செம...

  சிந்தனைகள் அற்புதம்...

  பதிலளிநீக்கு
 2. //2. பாடும் போது பாகவதர் வாய்க்குள்ளே வண்டு போயிடுச்சே...?

  அவர் தேனொழுகப் பாடினாரில்லயா..அதான்!//

  ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

  தேனின் இந்தப்பதிவும் தேனாக இனிக்கிறது. :)
  அதனால் வண்டாக நானும் நுழைந்துள்ளேன்.

  பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 3. நன்றி டிடி சகோ

  நன்றி விஜிகே சார்

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...