எனது பதிநான்கு நூல்கள்

வியாழன், 27 பிப்ரவரி, 2020

கசாக்கின் இதிகாசம் – ஒரு பார்வை.


கசாக்கின் இதிகாசம் – ஒரு பார்வை.

ரவி என்னும் பெயரை மலையாளிகள் ரெவி என்று அழைக்கக் கேட்டிருக்கிறேன். இதில் வரும் ரவியை இரு பெண்கள் ரவி என்றே விளிக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் தமிழ்ப் பெண்களாய் இருக்கலாம் ( சின்னம்மா, பத்மா ). இந்து, முஸ்லீம் மக்கள் இவர்களூடே நாத்திகம், கம்யூனிஸத்தின் தாக்கம், கல்வியின் முக்கியத்துவம் பற்றிய அறியாமை , மலை/கிராம மக்கள் அவர்களின் பாசிபடிந்த வாழ்க்கை, பெண்களின் நிலை, பெண்களைப் பயன்படுத்தும் நிலை, எந்த மனக்கிலேசமும் இல்லாமல் பெண்களுக்கும் பல்வேறு ஆண்களுடனான உறவுகள் ஆகியன சித்தரிக்கப்படுகின்றது இந்த நாவலில். 

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

ஆசிரியரைத் தொழுத ஆந்த்ரபூரணர். தினமலர் சிறுவர்மலர் - 53.

ஆசிரியரைத் தொழுத ஆந்த்ரபூரணர்.
பொதுவாகவே சின்னக் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் என்றால் பிடிக்கும். மிகப் பிடித்த ஆசிரியர் என்றால் அவர்களுடனே இருக்க விரும்புவார்கள். அதே போல் முற்காலத்திலும் ஒருவர் இருந்தார். தன் வாழ்நாள் முழுவதையும் ஆசிரியருக்காகவே அர்ப்பணித்து அவரோடே வாழ்ந்து அதன் பின்னும் அவரது பாதுகைகளுக்கு சேவை செய்து மறைந்தார்.  
எல்லாரும் கடவுளைத் தொழுவார்கள், ஆனால் அவர் தன் ஆசிரியரைக் கடவுளாகத் தொழுதார். ஆசிரியரது பாதுகைகளைக் கூட அவர் தன் கடவுளாகப் பாவித்தார். அப்படிப்பட்ட அதிசய மனிதர் யார் என்று அறிய ஆவலாய் இருக்கிறீர்கள்தானே குழந்தைகளே வாருங்கள் பார்ப்போம்.
கர்நாடக மாநிலத்தில் திருநாராயணபுரம் அருகேயுள்ள சாலிகிராமம் என்ற இடத்தில் பிறந்தவர் ஆந்த்ரபூரணர். இவரது இன்னொரு பெயர் வடுகநம்பி. கி.பி. 1079 ஆம் ஆண்டு கிருமிக்கண்டச் சோழன் என்பவரது ஆட்சிக்காலத்தில் இராமானுஜர் தன் சீடர் குழாமோடு இத்திருநாராயணபுரம் என்ற ஊருக்கு வந்ததோடு இந்த சாலிகிராமத்துக்கும் வருகை புரிந்தார்.

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020