அதென்னவோ தெரியலை. விநாயகரை ( பிள்ளையார்பட்டி விநாயகர் படம் தவிர ) இங்கே உள்ள வீடுகளில் ஓவியமா பார்ப்பது அரிதாயிருக்கிறது.
கிட்டத்தட்ட நூறாண்டுகள் நூற்று நாற்பதாண்டுகள், இருநூறு ஆண்டுகள் தாண்டிய வீடுகள் இங்கே இருக்கின்றன. இவற்றில் தேக்குமர வேலைப்பாட்டுக்கே ஒருவர் ஆயுள் முழுதும் சம்பாதிக்க வேண்டும்.
அந்தக் காலத்தில் ரங்கோன்/மியான்மரிலிருந்து தேக்குக் கட்டைகளைக் கப்பலில் அனுப்பி அவற்றை வெட்டித் தொண்டி துறைமுகத்துக்கு படகில் எடுத்து வந்து அதன் பின் மாட்டு வண்டியில் வீடு வந்தடைந்து செதுக்கி தூண்கள் கடைந்திருக்கிறார்கள்.
மேல்தளம், ரீப்பர்கள், தூண்கள், சப்போர்ட் அலங்காரங்கள், இன்னபிற செய்த தச்சர்கள் என்ன ஆனார்களென்றே தெரியவில்லை.. இதேபோன்ற ஒன்றே ஒன்றைக்கூட இன்றிருக்கும் தச்சர்களால் உருவாக்க முடியாது.
மர வேலைப்பாடுகளின் வரலாறாவது கொஞ்சம் புரிபடலாம்.
ஆனால் இந்த இயற்கை வண்ண ஓவியங்கள் யார் வரைந்தது என்றே தெரியவில்லை. இதன் பின் பெரும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்.
பெரும்பாலும் ஸ்ரீதேவி பூதேவியுடன் கருடனில் பறக்கும் பெருமாள், தான்ய லெக்ஷ்மி, தனலெக்ஷ்மி, தாமரைப் பூவிலமர்ந்த மஹாலெக்ஷ்மி, மயில்மேலமர்ந்த முருகன் வள்ளி தெய்வானை, வெண்ணெய்த்தாழிக் கிருஷ்ணன், பாமா ருக்மணியுடன் கிருஷ்ணன், ராதையுடன் கிருஷ்ணன், கோபியருடன், யசோதையிடம் பாலருந்தும் பாலகனாக, ஆவினங்கள் சூழ என அநேகம் கிருஷ்ணனைச் சுற்றியே அமைந்துள்ளன.
ஓரிரு ஓவியங்கள் மட்டுமே வட்ட டிசைன்கள், பூக்கள், இலைகள், யாழ் வாசிக்கும் இரு மகளிர், அதன் மேல் விளிம்பில் குதிரையும் சிங்கமும் கொடிபிடிக்கும் தோற்றம், என வித்யாசமாக உள்ளது.
மஹாலெக்ஷ்மி
பாலகிருஷ்ணன்
ரத்னஹாரமும் பூமாலையும் கூட அழகாக வரையப்பட்டுள்ளன. வசுதேவர் யசோதா மட்டுமல்ல. ஆவினங்கள்கூட காதலோடு நோக்குவது அழகு.
பாமா ருக்மணி சமேதராக சப்ரமஞ்சத்தில் வீற்றிருக்கும் கிருஷ்ணர். பக்கத்தில் தும்புருவும் நாரதரும். மேலே கொடிபிடிக்கும் சிங்கங்கள். ( ஆங்கிலேய ஆட்சி பாதிப்போ என்னவோ :)
சேரநன்னாட்டிளம் பெண்கள்.
ஸ்வர லெக்ஷ்மி ?! . கதாகாலட்சேபமா ..
மழலை கிருஷ்ணரும் யசோதையும்.
ஓவிய தேவதைகள். ( ஹாஃப் நியூட் !!! )
கஜலெக்ஷ்மி ( கோபமாயிருக்காங்களோ. எம்மாம் பெரிய கண்ணு :)
சிம்மத்தின் மேல் அன்னங்கள். ரெட்டைப் பெண் தேவதைகள். ( சிம்மத்தின் முகம் ஆண் முகம் போல் தெரிவது எனக்கு மட்டும்தானா. ??)
பாமா ருக்மணி சமேத கொழு கொழு கரு கரு கிருஷ்ணன்.
அடியவர்கள் சூழ நீலமயில் வாகனத்தில் வள்ளி தெய்வயானையுடன் முருகன்., மால் மருகன். மாலுக்குத் தப்பாத மருகன் :)
டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

அனைத்துப்படங்களும் மிகவும் அழகோ அழகாக கலை நுணுக்கங்களுடன் உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குTHANKS VGK SIR !
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!