எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 28 ஜூன், 2017

திருமயம் கோட்டையில் ஒரு உலா.



சிலநாள் முன்பு திருமயம் கோட்டைக்குச் செல்ல வாய்ப்புக் கிடைத்து. அங்கே இரு கோயில்கள் இருக்கின்றன. அவற்றில் பெருமாள் கோயிலை முன்பு பார்த்திருக்கிறேன்.






இந்த முறை கோயில் உலா இல்லை. இது கோட்டை உலா மட்டுமே.


 ஹைவேஸில் காரில் இருந்து எடுத்தேன்.






ரங்க்ஸுக்கு மலையேறுவதில் காதல் என்றால் எனக்குக் கோட்டைகள் மீது காதல் J




மலை மேலே செல்லக் கோணல் கோணலாகப் படிக்கட்டுகளும் அந்தரத்தில் தொங்கும் கம்பிகளும் எதுக்கு. இன்னும் ஸ்லிப்பாகவா.



இதுக்கு உள்ளே போக எண்ட்ரன்ஸ் டிக்கெட் ஒரு ஆளுக்குப் பதினைந்து ரூபாய்.



இது பதினாறாம் நூற்றாண்டில் ராமநாதபுரம் ராஜா சேதுபதி அவர்களால் கட்டப்பட்டதாம். கோட்டை என்றால் இது போருக்கு மட்டும்தான். இங்கே பீரங்கிகளும் பாறைக்குள் குடைவரை சிவலிங்கக் கோயிலும் வீரபாண்டிய கட்டபொம்மன் அடைக்கலமான இடமும் இருக்கிறதென்று சொன்னார்கள்.

முத்தரையர்களும் இங்கே உள்ள கோயில்களுக்குத் திருப்பணி செய்திருக்கிறார்களாம்.






மேலே ஒரு பெரிய புளிய மரமும் இரண்டு வெண்ணெய்ப் பாறைகளும் இருக்கு. மலையுடன் ஒற்றை இடத்தில் ஒட்டினாற்போல.





பைரவர் கோயில் ஒன்று இக்கோட்டையின் வடக்கு வாசலில் புதுக்கோட்டை சாலையில் கம்பீரமாகக் காட்சி அளிக்கும். இவர்தான் கோட்டையின் காவல் தெய்வமும், வாகன ஓட்டிகளுக்கு வழித்துணையும். இங்கே அனைத்து வாகனத்துக்காரர்களும் நின்று சிதர் தேங்காய் உடைத்துக் கும்பிட்டுவிட்டுத்தான் போவார்கள். எதிர்த்தாற்போல் ஒரு பெரிய கம்மாய் இருக்கும்.




இக்கோட்டையே வட்ட வடிவமான கோட்டையாக இருக்கு. இதில் ஏழு மதில்கள் இருந்ததாம். சரிவரத் தெரியாட்டாலும் மலை பூரா மதிலால்தான் மூடி இருக்கு. அதன் பக்கவாட்டுகளில் அகழி ஓடுது.




படிப்படியா படிப்படியா ஏறினா சுட்டெரிக்கும் வெய்யிலில் உச்சியில் கல்லுக்குண்டுக் கணக்கா இரும்புல செம ஸ்ட்ராங்கா இருக்கு வெள்ளைக்காரனை மிரட்டிய ஒரு விஷயம். 




அது பத்தி அடுத்த இடுகையில் சொல்றேனே


7 கருத்துகள்:

  1. அழகிய படங்களுடன்...திருமயம் கோட்டையின் அழகை ரசித்தோம்....அருமை...

    பதிலளிநீக்கு
  2. பலமுறை திருமயம் சென்றுள்ளேன். கோட்டையையும், கோயில்களையும் பார்த்துள்ளேன். வெள்ளைக்காரனை மிரட்டியது உயர்ந்த தளத்தில் வைக்கப்பட்டுள்ள பீரங்கிதானே?

    பதிலளிநீக்கு
  3. plastic free zone - பக்கத்துலேயே அண்ணே, கையில .... ஹிஹிஹி

    பதிலளிநீக்கு
  4. ஜூலை மாதம் புதுக்கோட்டை செல்ல இருக்கிறோம். பார்க்க வேண்டிய பட்டியலில் திருமயமும் இருக்கிறது. இங்கே பார்த்ததை அங்கே ரசிக்கச் செல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. பல வருடங்களுக்கு முன் பார்த்து இருக்கிறேன்.
    படங்கள் அழகு..

    பதிலளிநீக்கு
  6. NANDRI ANURADHA

    AAM JAMBU SIR

    NANDRI DD SAGO

    HAHA THANNEER KUDIKA EDUTHU SENDROM VISU SIR. BOTTLE AI DISPOSE SEIYA ALLA :)

    PARTHEENGKALA JAYA

    NANDRI GOMATHI MAM :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...