எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 1 ஜூன், 2017

என்னை வளர்த்த புத்தகங்கள்.

2010 இல் இருந்து இன்று வரை நான் எழுதிய சில பத்ரிக்கைகள்.

இன்று கிட்டியிருக்கும் இவ்வுயரத்துக்கு இவைதான் காரணம்.

வெளிநாடுகளில் தாங்க்ஸ் கிவிங் டே என்று அக்டோபர் நவம்பரில் கொண்டாடுவார்கள்.

நாம் நம்மை வளர்த்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க நாளென்ன கோளென்ன. இன்றே தெரிவிப்போமே. :)

என்னை முதலில் அழைத்த கிரிஜா ராகவன் மேடத்துக்கு முதல் வணக்கமும் நன்றியும்.

இரு முறை நான் பேட்டி எடுத்த சாதனை பெண்மணிகளை அட்டைப்படத்தில் போட்டு கௌரவித்தவர் அவர்.

பெண் ஆட்டோ ஓட்டுநர் - சிஐடியூவின் மாநிலக்குழு உறுப்பினர் சாந்தி


இருளர் இனத்தலைவி வசந்தி. 


முதன் முதலில் என்கவிதை வெளியான கல்கி இதழ் - 1985 ஃபிப். 10. அந்த அட்டைப்படத்தில் சுசீலாம்மா என் பெயரை எழுதி இருக்கின்றார்கள். !

சுசீலாம்மாவின் மூலம் கிடைத்ததுதான் கல்கியின் அறிமுகம். :)

சுசீலாம்மாவுக்கு நன்றியும் அன்பும்.



என் கல்லூரிக் கால டைரிகள். இவைதான் டைரிக்கிறுக்கல்களாக உருமாறியுள்ளன.


கல்லூரிப் பருவத்தில் எழுதிய படைப்புகள் வெளியான நூல்கள்.

மேரிலாண்ட் எக்கோஸ் - 1 & 2 , ஸ்நேக சிரிப்புகள், கல்கி, நம்வாழ்வு, லீவ்ஸ் ஆஃப் ஐவி, புதிய பார்வை, சிப்பி, தேன்மழை, ( வைகறை , புரவி, பூபாளம் எல்லாம் இடம்பெறவில்லை )


சமுதாய நண்பனில் இடம் பெறச் செய்த திரு ரத்னவேல் ஐயா அவர்களுக்கு நன்றியும் அன்பும்.

கல்கியின் மெயில் ஐடி கொடுத்து அனுப்பச் சொன்ன ராமலெக்ஷ்மிக்கு நன்றியும் அன்பும்.

மல்லிகை மகள் இதழில் இடம் கிடைத்தமைக்கு நன்றி. ( யார் ஐடி அனுப்பினாங்கன்னு மறந்துவிட்டது )

தேவதையில் இடம் கிடைத்தமைக்கும் நன்றி ( இதுக்கும் ஐடி அனுப்பியவர் யார்னு தெரில )



விகடனுக்கு மெயிலில் கவிதை அனுப்பியபோது திரு சுகுணா திவாகர் தொடர்பு கொண்டார். அவருக்கும் விகடன் குழுமத்துக்கும் நன்றி.


குமுதத்தில்  இரு பக்கங்கள் குழந்தைக் கவிதைகள் வெளியிட்டுச் சிறப்பிடம் அளித்த எடிட்டர் திரு ப்ரியாகல்யாணராமன் சார் அவர்கட்கு நன்றி.


பக்தி ஸ்பெஷலில் தொடர்ந்து பிரசாதங்களும் கோலங்களும் வரைந்து அனுப்பச் சொல்லி  என் நேரத்தை நல்ல வழியில் செலவிட உதவிய திரு ப்ரியா கல்யாணராமன் சார் அவர்கட்கு மீண்டும் நன்றி.

மேலும் இந்தியா டுடேயில் கருத்துக் கேட்ட திரு  ஆழி செந்தில்நாதன் அவர்கட்கும், அவள் விகடனுக்கும் , யுகமாயினி நண்பர் சித்தனுக்கும், ஹெல்த் ப்ளஸுக்கும், புதிய ழ மணிவண்ணனுக்கும் நன்றி.


சூரியக்கதிரில் இடம் அளித்த எடிட்டர் திரு. மை பாரதிராஜாவுக்கு நன்றி.

நம் தோழியில் இடம் பெறச் செய்த எடிட்டர் திரு முருகேஷ் பாபு அவர்களுக்கு நன்றி.

குங்குமத்தில் இடம் பெறச் செய்த எடிட்டர் திரு வள்ளிதாசன் அவர்களுக்கு நன்றி.

ஆஸ்த்ரேலியத் தமிழ் நண்பன் மெல்லினத்தில் இடம் பெறச் செய்த ஃப்ரெஷ் ஜாஸ்மின் நிறுவனத்தாரான திரு. கலைச்செல்வன் கார்மேகம் அவர்களுக்கும், திரு மணிமாறன் அவர்களுக்கும், திரு வெங்கடேஷ் மகாதேவன் அவர்களுக்கும் நன்றிகள்.

திரு வெங்கடேஷ் மகாதேவன் அவர்கள்தான் முதன் முதலில் முகநூலில் என் எழுத்தைப் பார்த்துத் தொடர்பு கொண்டவர்கள். இதில் கிட்டத்தட்ட 44 கட்டுரைகள் & படைப்புகள் வெளிவந்துள்ளன. இவைதான் பெண்மொழி என்ற தொகுப்பாக புஸ்தகாவில் வெளியாகி உள்ளன. 



தினமணிக்கதிர் சிறுகதைப் போட்டிக்கு நன்றி. மேலும் தோழர் மபா அவர்களுக்கும் நன்றி.


லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் ரீ எண்ட்ரீ :)


லேடீஸ் ஸ்பெஷல் 20 இதழ்கள் மட்டுமல்ல இன்னும் பல இதழ்களும் இருக்கும் எடுத்தவை இவ்வளவுதான்.



திரும்ப இவள்புதியவள் பாரதிராஜாவுக்கும், ஞானதேசிகனுக்கும் நன்றி.


குங்குமம் தோழிக்காகத் திரும்பவும் வள்ளிதாசன் சாருக்கு நன்றி.


ஆழி செந்தில்நாதன் சாருக்கு நன்றி.


மாபெரும் பத்ரிக்கையாளர் பத்மாமணி மேமுக்கு நன்றியும் அன்பும் :)


முப்பெரும் தலைவர்களுடன்  இடமளித்த புதிய தரிசனம் & மகளிர் தரிசனம் எடிட்டர் திரு ஜெபக்குமார் சாருக்கு நன்றி.







இந்தப் புகைப்படங்கள் அனைத்துமே 2010 - 2013 வரை மட்டுமே எடுக்கப்பட்டவை. பழைய லாப்டாப்பில் இருந்து கிடைத்தன. மிச்சத்தை ஸ்கேன் செய்ததால் தனித்தனியாக இருக்கின்றன.

 

1. குங்குமம்:- வலைப்பூக்கள் பற்றிஇணையதள எழுத்தாளர்என்ற தலைப்பில் குங்குமத்தில் எழுதி உள்ளார் .

குங்குமத்தில் மேலும் 4 சிறுகதைகளும், 3 கவிதைகளும் வெளிவந்துள்ளன.
வலைப்பேச்சு பகுதியில் இவருடைய  முகநூல் ஸ்டேடஸ்கள்  வெளியாகி உள்ளன..

அரட்டைக் களமா, ஆபாசத் தளமாஎன்ற தலைப்பில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் பிரபல பதிவர்களின் கருத்து என்ற தலைப்பில் இவருடைய கருத்தும் இடம் பெற்றுள்ளது.


2. -
குங்குமம் தோழி:- இரண்டு பக்கங்கள் குழந்தைக் கவிதைகள் வெளிவந்துள்ளன.”ஒரு மனசு , ஒரு கேள்விபகுதியில் ஷேர் ஆட்டோ பற்றிய கருத்து வெளியாகி உள்ளது.

குங்குமம் தோழி இணைப்புகளில் சமையலறை டிப்ஸ்கள் வெளியாகியுள்ளன.

.
குங்குமம் தோழியின் முகநூல் பக்கத்தில் இவருடைய கவிதைகளும், சமையல் குறிப்புக்களும், “நானென்பது யாதெனில்என்ற தலைப்பில் கட்டுரைகளும் முகநூல் ஸ்டேடஸ்களும் வெளியாகி உள்ளன.

செட்டிநாடு ஸ்பெஷல் என்ற குங்குமம் தோழி சமையல் இணைப்புப் புத்தகத்தில் இவரது 30 சமையல் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

குங்குமம் ஸ்டார் தோழியாக 2015 ஜனவரி இதழில் சிறப்பிடம் பெற்றிருக்கிறார்

3.-
குமுதம். :- 4 கவிதைகள் வெளியாகி உள்ளன.
இதில் முதலில் வந்த கவிதை குமுதத்தில் இரண்டு பக்கங்களில் வெளிவந்தது
. 11
ஹைக்கூக்கள் அடங்கியஅம்மா யானைஎன்ற தலைப்பில் குழந்தைக் கவிதைகள். சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

. 4.
குமுதம் பக்தி ஸ்பெஷல்:- இரு கட்டுரைகள் வெளிவந்துள்ளன
.
திருவாசகம் பற்றியும், குன்றக்குடியின் குடைவரைக் கோயில்கள் பற்றியும் . ”பூஜையறைக் கோலங்கள்என்ற தலைப்பில் 400 கோலங்கள் வரை வெளிவந்துள்ளன. விநாயகர், சிவன், முருகன்,அம்மன், ஐயப்பன்,சித்திரை, ஆயுள் , ஆரோக்கியம், அருள், பொருள், ஸ்தல விருட்சம், காவிக்கோலங்கள், கிராமத்து தெய்வங்கள், இராசிக் கோலங்கள், படிக்கோலங்கள், நவராத்திரி, ஓணம், தீபாவளி, ஆனித் திருமஞ்சனம், பொங்கல்,அட்சய திரிதியை, ராம நவமி, புத்தாண்டு என பல தீம்களில் கோலங்கள் வெளியாகி உள்ளன.

குமுதம் பக்தி ஸ்பெஷலில் தீபாவளி, நவராத்திரி, மகான்கள் பற்றிய சமையல் குறிப்புகள் 3 தனி இணைப்புப் புத்தகங்களாக வெளிவந்துள்ளன.

5-
குமுதம் ஹெல்த் ஸ்பெஷலில்மேக்கப்புக்கு பேக்கப்என்ற தலைப்பில் இவருடைய கருத்து வெளியாகியுள்ளது.

6-
ஆனந்தவிகடன் சொல்வனத்தில் 8 கவிதைகள் வெளிவந்துள்ளன.

7.
கல்கியில் 5 கவிதைகள் வெளியாகியுள்ளன.

கல்கியின் பவளவிழா மலரில் கோகுலம் விழா பற்றிய இவரது கட்டுரை வெளியாகி உள்ளது.

கல்கி தீபாவளி மலரில் கோகுலம் பக்கங்களில் பண்பு நிறைந்த பாத்திரங்கள் என்ற தலைப்பில் இவரது கட்டுரை இடம் பெற்றுள்ளது. 

8.
இந்தியா டுடே ரஜனி சிறப்பிதழில் ரஜனி பற்றி இவர் கூறிய கருத்து வெளியாகி உள்ளது.

9. -
அவள் விகடனில் அம்மா பற்றி ஒரு கவிதை வெளியாகியுள்ளது. இவருடைய வலைப்பூவை அறிமுகப்படுத்திவலைப்பூவரசிஎன்ற பட்டம் கொடுத்துள்ளார்கள்.

பொங்கல் பானைபற்றிய ஒரு கட்டுரையும் ( செட்டிநாடு சார்ந்து ) வெளியாகி உள்ளது

10 -
தேவதையில் இரு கவிதைகள் வெளியாகியுள்ளன.
ப்ளாகர் அறிமுகம் பக்கத்தில் வலைப்பூக்களும் படைப்புக்களும் பகிரப்பட்டுள்ளன
.
11
மல்லிகை மகளில் இரு கவிதைகள் வெளியாகி உள்ளன.
ஒரு பக்கம் முழுக்க 9 குட்டிக் குழந்தைக் கவிதைகளும் வெளியாகி உள்ளன.

12. ”
மெல்லினம்இதழில் ( ஆஸ்த்ரேலியாவிலிருந்து வெளிவருகிறது )   “பெண் மொழிஎன்ற தலைப்பில் 38  கட்டுரைகளும், ஒரு கவிதையும் எழுதி உள்ளார். இவரது முகநூல் ஸ்டேடஸ்களும் வெளியாகி உள்ளன

. 13.“
இன் அண்ட் அவுட் சென்னை” – ஃபோர்ட்நைட்லி இதழில் இவருடைய 10 கட்டுரைகளும், 8 பிரபலங்களின் அறிமுகங்களும் இடம் பெற்றுள்ளது.

.14. ”
சென்னை அவென்யூ” – ஃபோர்ட்நைட்லி இதழில் 2 கட்டுரைகளும், 2 சமையல் குறிப்புக்களும் ஒரு பேட்டிக் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது.

.15.
யுகமாயினியில் ஒரு கவிதை இடம் பெற்றுள்ளது.

16 -
பூவரசி காலாண்டிதழில் ஒரு கவிதையும் ஒரு கட்டுரையும், ஒரு புத்தக விமர்சனமும் இடம் பெற்றுள்ளது.

17-
பரிவு என்னும் இதழில்என் முதல் புத்தக வெளீயீடுஎன்ற தலைப்பில் கருத்தும் இரு கவிதைகளும் வெளியாகி உள்ளன

18 -
சமுதாய நண்பனில் 9 கவிதைகள் வெளியாகியுள்ளன.

19 -
நம் தோழியில் ஒரு கவிதையும், ஒரு பேட்டிக் கட்டுரையும், “ மாதவிடாய் என்ற குறும்பட விமர்சனமும் இடம் பெற்றுள்ளன. “நகரத்தார் திருமணம்என்ற கட்டுரையும் திருமண சிறப்பிதழில் வெளியாகி உள்ளது.

20-
லேடீஸ் ஸ்பெஷலில் 20 போராடி ஜெயித்த பெண்கள் பற்றிக் கட்டுரை எழுதியுள்ளார் . 7 மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. 20 பெண் வலைப்பதிவர்களையும், 7 ஆண் வலைப்பதிவர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இவருடைய ஒரு சினிமா விமர்சனமும், அம்மா பற்றியும், சொர்ணலிங்கேஸ்வரர் பற்றியும், தீபலெக்ஷ்மி பற்றியும் கட்டுரைகள் வெளியாகி உள்ளன. 3 கவிதைகளும் வெளிவந்துள்ளன.

21 -
சூர்யக் கதிரில் வடிவுக்கரசி, ஊர்வசி, பாத்திமா பாபு, பாரதிமணி, பாடலாசிரியர் விவேகா, மாணிக்க விநாயகம், ரெனினா ரெட்டி, லெக்ஷ்மி ராமகிருஷ்ணன், ஹூசைனி, வினோ சுப்ரஜா ஆகியோரை பேட்டி எடுத்துள்ளார் 3 கவிதைகள் வெளியாகியுள்ளன.

.22.
இவள் புதியவளில்வலைப்பூக்களில் கலக்கி வரும் புயல் பூக்கள்என்ற தலைப்பில் பேட்டி எடுத்து வெளியிட்டிருந்தார்கள்.

பெண்கள் சுய உதவிக் குழுக்கள், மருத்துவர்கள் பேட்டி, பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், பள்ளிப் பிள்ளைகள், வி ஆர் எஸ், பண்டிகைப் பலகாரங்கள், பொங்கல் பற்றிக் கட்டுரைகள் வெளியாகி உள்ளன.

23-
திருச்சி பதிப்பு தினமலர் பெண்கள் மலரில் இவரு டைய பட்டாம்பூச்சிக் கவிதைகள் வெளிவந்துள்ளன.

24-
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்யாகுமரி, நாகர் கோயில், திருவனந்தபுரம், ராமநாதபுரம் தினமலர் எடிஷனில்ஹலோ சரண்யாஎன்ற சிறுகதை ( இரு வாரங்கள் ) வெளியாகி உள்ளது.”நான் மிஸ்டர் எக்ஸ்என்ற சிறுகதையும் வெளியாகி உள்ளது.( மின்சாரக் கண்ணா என்ற சிறுகதையும், தினமலர் வாரமலரில் “ திருநிலை “ என்ற கதையும் ( ஃபேஸ்புக் பிரபலங்களின் கதைகள் என்ற பெயரில் ) வெளியாகி உள்ளது. கூந்தலின் ஆயுள் ஆயில் சார்ந்ததா என்ற கட்டுரையும் வெளியாகி உள்ளது. )

25-
தினகரன் வசந்தத்தில்இணையத்தில் கலக்கும் இலக்கியப் பெண்கள் என்ற தலைப்பில் இவரைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்இவரது வலைத்தளம் சும்மா பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ”தாய்மொழிப்  பயன்பாடுபற்றிய கருத்தும் வெளியாகி இருக்கிறது.

தினகரனில் இவரது நிலா கவிதை வெளியாகி உள்ளது.

26.
பாக்யாவில் எதிரொலி நாயகியாக சிறப்பிக்கப்பட்டுள்ளார். ”மக்கள் மனசுபகுதியில் ஈழத் தமிழருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரும் விஷயத்தில் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

27.
தினமணிக் கதிர்- சிவப்பு பட்டுக் கயிறு என்ற சிறுகதைக்கு ஊக்கப்பரிசு கிடைத்தது. தினமணி நாளிதழில் அதனால் சிறப்பிடம் கிடைத்தது. தினமணிக்கதிரில் ராமாயணம் பாராயணம் பற்றிய பதிவு இடம் பெற்றுள்ளது.

28.
புதிய தரிசனம். - புதிய தரிசனத்தில் 10 கவிதைகளும், ஒரு சிறுகதையும் அன்ன பட்சி பற்றிய இரு விமர்சனங்களும், இரு சமையல் குறிப்புகளும் ( கீரை வெரைட்டீஸ், நவதான்ய சமையல் குறிப்பு ) ஒரு கட்டுரையும் இடம் பெற்றுள்ளது

29.
பெண்கள் ராஜ்ஜியம் - பெண்கள் ராஜ்ஜியத்தில்பிள்ளைக்கறிஎன்ற சிறுகதை வெளியாகி உள்ளது.

30.
புதிய தலைமுறை - பெண்கள் டைரி என்னும் பகுதியில் எழுதி உள்ளார்.

31.
ஆச்சி வந்தாச்சு.- இவரது சிவப்புப் பட்டுக் கயிறு என்னும் சிறுகதை இதில் மறு பிரசுரம் ஆகி உள்ளது.

32.
புதிய பயணி - புதிய பயணியில் இரண்டு பயணக்கட்டுரைகள் எழுதி இருக்கிறார் (குவாலியர் கோட்டை & பிதார் கோட்டை பற்றி. )

33.
ஷெனாய் நகர் டைம்ஸ் - இதில் இவரது 2 கட்டுரைகளும் நான்கு பயணக் கட்டுரைகளும்  ஒரு சமையல் குறிப்பும் வெளியாகி உள்ளது.
  
34.
அமீரகத்தின் தமிழ்த் தேர் - தாய்மை & காதல் இனிது.ஆகிய தலைப்புகளில் இவரது கவிதைகள் பிரசுரமாகி உள்ளன.

35.
நமது மண் வாசம். - இதில் ஆறு கவிதைகளும் ஒரு கட்டுரையும் இடம் பெற்றுள்ளது.

36. கோகுலத்தில் குழந்தைப் பாடல்களும், குழந்தைகளுக்கான சமையல் குறிப்புகளும் ஒருவருடமாக இடம்பெற்று வருகின்றன.

விடுதலை வேந்தர்கள்” என்னும் தலைப்பில் கோகுலத்தில் ஒரு வருடத்துக்கான தொடர் எழுதிவருகிறார்.

37. ஹாலிடே நியூஸ் பத்ரிக்கையில் பயணக் கட்டுரைகள் இடம்பெற்று வருகின்றன. 5 பயணக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

38. கொளத்தூர் மெயிலில் சில சமையல் குறிப்புகளும் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

39. மங்கையர் மலரில் இவரது 32 செட்டிநாட்டு காரசார ரெசிப்பீஸ் உணவுக் குறிப்புகள் தனி இணைப்பாக இடம்பெற்றுள்ளன. 32 வகையான பழ உணவுகள் தனி இணைப்பாக வெளியாகி உள்ளது

40. ஐபிசிஎன்னுக்காக சாதனை நகரத்தார்களைப் பற்றி எடுத்த பேட்டி ஒன்று ஆகஸ்ட் 2016 ஐபிசிஎன் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இதே கட்டுரை ஆச்சி வந்தாச்சு இதழிலும் வெளியாகி உள்ளது. இன்னும் இரு சாதனையாளர்களின்  கட்டுரைகளும் வெளியாகி உள்ளன. மொத்தம் ஐந்து சாதனையாளர்களை ஐபிசின்னுக்காகப் பேட்டி எடுத்திருக்கிறார்.  

41. நமது மண்வாசம் இதழில் பெண்களுக்கான உதவிச் சட்டங்களும் உதவும் திட்டங்களும் என்ற கட்டுரையும் , 4 கவிதைகளும், மரபும் அறிவியலும் என்ற தலைப்பில் பல கட்டுரைகளும் வெளியாகி வருகின்றன.

42. ”மகளிர் தரிசனம்” என்ற நூலில் இவரது பேட்டிக் கட்டுரைகளும் விழிப்புணர்வுக் கோலங்களும் சமையல் குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

43. ”சென்னை ஸ்கூப்” என்ற ஃபோர்ட் நைட்லி இதழில் இரு கட்டுரைகள் வெளியாகி உள்ளன. 

என்னை வளர்த்த புத்தகங்களில் 43 இல் மேலே இருக்கும் இந்தப் புத்தகங்கள் மட்டும்தான் கிடைத்தன. 

மனமார்ந்த நன்றி அனைத்துப் பத்ரிக்கைகளுக்கும், இதழ்களுக்கும். 


2 கருத்துகள்:

  1. அடேங்கப்பா ..... அடேங்கப்பா ..... நீங்க எங்கேயோ போய்ட்டீங்கோ ...... !!!!!

    மென்மேலும் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகள்.

    எழுத்துலக சாதனை அரசிக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. ahaa ahaa thank you thankyou VGK sir :) ungka blessings enakku avasiyam thevai. nandri nandri :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...