எனது பதிமூன்று நூல்கள்

சனி, 31 அக்டோபர், 2015

சாட்டர்டே ஜாலி கார்னர். அமெரிக்காவும் தெலுங்கானாவும். - காந்திமதி அம்மாவுக்கு உதவிய கிருஷ்ணன்.

முகநூலில் சொற்ப காலமே இருக்கும் நட்பில் இணைந்து. ஆனால் முதன்முதல் நட்பான போதே ஒரு ஹார்மனி இருந்தது காந்திமதி மேமுடன் :) அமைதியும் ஆனந்தமும் ஞானமும் மிளிர்ந்த முகம். அவர்கள் தலைமையாசிரியையாக இருந்தவர்கள் என்பதைப் பின்னர் அறிய நேர்ந்தது. ஆனால் அது ஒரு முக்கிய காரணமாயிருக்கலாம்.  ஏனெனில் ஆசிரியைகளை நமக்குப் பிடிக்கும்தானே :) 

அப்புறம் இவரோடு நெருக்கமாக அன்பாகத் தோளில் கைபோட்டு அணைத்து நிற்பது மகளென்று நினைத்திருந்தேன். ஆனால் மருமகள். மகள் போல மருமகள் அமைந்திட்ட இவருக்கு வாழ்த்துகள்.  மாமியார் மருமகள் இருவரும் பரஸ்பரம் அன்பா இருந்தாதான் அம்மா என்றே அழைக்க முடியும். இந்த நெருக்கமும் பிறக்கும்.

எல்லாவற்றையும் பாசிட்டிவாகப் பார்க்கும் அவர்களிடம் ஒரு சில கேள்வி.

அன்பு காந்திமதி மேம்..
உங்களைக் கவர்ந்த ஏதேனும் ஒரு விஷயத்தை என் ப்லாகின் சாட்டர்டே போஸ்டுக்காக எழுதித்தர முடியுமா.? பறவைகள் பற்றி அல்லது தலைமை ஆசிரியையாக இருந்து சந்தித்த சவால்கள் , இனிமையான சம்பவங்கள் பற்றி
அப்படியே உங்களைப் பற்றிய சிறிய சுயவிவரக்குறிப்பும், ஒரு புகைப்படமும் வேண்டும்.

மேம் :-  எழுதுகிறேன்.,ஏற்புடையதெனில் ஏற்றுக்கொள்க.

வெள்ளி, 30 அக்டோபர், 2015

பெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)

நல்ல ரோஸ் & பிங்க் கலரில் கண்ணைக் கவர்ந்த இவர்களை கவர்ந்துகொண்டேன் என் சின்னக் காமிராவுக்குள். :)

தூள்’85

நீங்கள்
குளத்தோரக் கல்
அறைந்து துவைப்பேன்.

முருகன் கோலங்கள் & நிவேதனங்கள்.


1.வள்ளிக்கிழங்கு பொரியல்
2.வாழைப்பூ பால் கூட்டு
3.கத்திரிக்காய் வாழைக்காய் கூட்டி அவிச்சுக் குழம்பு.
4.மரக்கறிக்காய் தோசை.
5.தேன்குழல்
6.மனகோலம்.
7.முறுக்குவடை.
8.சிவப்பரிசி அவல் பொரி உருண்டை.
9.முந்திரி பக்கோடா
10.பாதாம் பூரிப் பாயாசம்.

1.வள்ளிக்கிழங்கு பொரியல்

தேவையானவை:-

வள்ளிக்கிழங்கு - 1 துண்டு, மஞ்சள் பொடி - 1 சிட்டிகை, எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், வரமிளகாய் – 1, கருவேப்பிலை - 1 இணுக்கு, உப்பு - 1/2 டீஸ்பூன்.

வியாழன், 29 அக்டோபர், 2015

தனிமை:-31.1.86.

தனிமை:-

பூமிக்கும்
வானுக்கும்
இடைப்பட்ட கறுப்பாய்.

சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்கா SINGAPORE - JURONG BIRD PARK.

”சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்காவும் ஃப்ளெம்மிங்கோக்களின் நடனமும். ” என்ற இந்த இடுகை என்னுடைய "உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்" என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.

புதன், 28 அக்டோபர், 2015

சோர்வு.7.5.86.

31. *ஒரு பயிர் இன்று
சோர்ந்திருக்கும்.

பழம்பொரியும், சிக்கன் கறியும்.

சென்ற வருடம் திருவனந்தபுரமும், பாலோடும்  பொன்முடியும் சென்றிருந்த போது விதம் விதமான கேரள உணவுகளை ருசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

அவற்றுள் கப்பக்கிழங்கு மசியல், கேரள சிவப்பரிசி ( கொட்டையரிசி ) சாதம், தேங்காய் எண்ணெயில் சிவப்பு மிளகாய் கிள்ளிப் போட்டு வறுத்த கோழிக்கறி, சிக்கன் க்ரேவி, மத்திமீன் ஃப்ரை , பழம் பொரி ( ஏத்தக்காயப்பம் ), உன்னியப்பம், இலைக் கொழுக்கட்டை,  நேந்திரன் சிப்ஸ், எளக்கி வாழைப்பழம், சீரக வெள்ளம் ( அட சீரகம் போட்டுக் காய்ச்சிய தண்ணிதாங்க ! ) , அப்புறம் ஏதோ மரப்பட்டையைப் போட்டுக் காய்ச்சிய தண்ணீரும் கிடைச்சுது.

நம்ம தமிழ்நாட்டு நாக்குக்கு அதெல்லாம் வித்யாசமா இருந்துச்சு. நாம முன்னே கடலை எண்ணெய் அப்புறம் நல்ல எண்ணெய் அது கசந்ததால பின்ன ரிஃபைண்ட் ஆயில்னு மாறிட்டோம். ஆனா மலையாளீஸ் இன்னும் சமையல் தேங்காய் எண்ணெயிலதான்.

நாங்கள் சென்னையில் இருந்தபோது கேரளாவில் ஒரு முறை வெள்ளம் வந்ததை டிவியில்   கீழ்வீட்டுத் தோழி ரஜிதாவுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அந்த வெள்ளத்திலும் ஒரு பெண் தேங்காய் உடைத்துத் திருகி ( மெய்யாலுமே ஒரு பாறையின் மேல் அமர்ந்து சுற்றி நீர் ஓடிக் கொண்டிருக்க ) அருகாமணையில் தேங்காய் திருகிக் கொண்டிருந்தது. அப்போது அவர் “ பாரு எவ்ளோ வெள்ளம் வந்து என்ன . தேங்காய் திருவிகிட்டு இருக்கு மலையாளீஸுக்குத் தேங்காய் இல்லாம சமைக்கத் தெரியாது என்றார் !”

அதென்னவோ தேங்காயிலும் தேங்காய் எண்ணெயிலும் விதம் விதமாகப் பொரித்தும் வறுத்தும் வதக்கியும் அரைத்தும் அவர்கள் சமைக்கும் உணவுகளின் ருசிக்கு ஈடு இணை இல்லைதான்.

மத்தி மீனைக் கீறி மிளகாய்ப் பொடி போட்டு உரசி தேங்காய் எண்ணெயில் வறுத்திருந்தார்கள். பயங்கரக்காரம். அது மறுநாள்தான் தெரியும் :) :) :)

செவ்வாய், 27 அக்டோபர், 2015

சுருளும் சுயங்கள்4.5.86.

26. *கூலிக்காரனை அழுத்தும்
பாரங்களாய்
என் மனப்பெட்டிக்குள்
உன் கடிதங்கள் வழியும்.

சிக்ரிட் அண்ட்செட். SIGRID UNDSET.

இலக்கியத்தில் பெண் விடுதலைக்காகப் பாடுபட்டவர்களில் முக்கியமானவர் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த  சிக்ரிட் அண்ட்செட்.

இவர்  டென்மார்க்கில் 20 மே, 1882 இல்  பிறந்த நாவலாசிரியை. 1928 இல் இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றவர்.

திங்கள், 26 அக்டோபர், 2015

சித்திரை உற்சவர்3.5.86.

25. * செடிகள் காத்திருக்க
பாலைக்கு அறுவடைக்குப்
போகும் சூரியன்.

மலேஷியா பாகம் - 3. கெந்திங் ஹைலாண்ட்ஸ். MALAYSIA - GENTING HIGHLANDS.

”மனம் கவரும் மலேஷியா. பாகம்  - 3. கெந்திங் ஹைலாண்ட்ஸ்.” என்ற இந்த இடுகை என்னுடைய "உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்" என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.இது செம்பருத்தி அல்ல :) !


ஞாயிறு, 25 அக்டோபர், 2015

குவாலியர் விவஸ்வான் மந்திர்


”குவாலியர் விவஸ்வான் மந்திர். (சூரியனார் கோவில்).GWALIOR VIVASWAN MANDIR.” என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.

சனி, 24 அக்டோபர், 2015

பூக்கள் பயணிக்கின்றன:-

பூக்கள் பயணிக்கின்றன:-
*********************************
பூத்து தினம்
உதிர்க்கிறீர்கள் பூவை.
கொஞ்சம் போதும்
உங்கள் ஆன்மதிருப்திக்கு

கண்டதை கேட்டதை
நினைத்ததை உணர்ந்ததை
அறிந்ததை தெரிந்ததை
எல்லாம் பூவாக்குகிறீர்கள்
எருவடித்தோ உரமடித்தோ

கண்டமேனிக்கு விளைந்து
பின் பூக்காடாய்
மடியும் பிணக்குப்பைகளை
பாதுகாக்கிறீர்கள்
புஷ்கரணியில் போடலாமென.

வெள்ளி, 23 அக்டோபர், 2015

அறுபடை முருகன் கோயில்கள். - திருப்பரங்குன்றம்.

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும். என்ற பாடலை உச்சஸ்தாயியில் ரசித்துப் பாடியதுண்டு. சகோதரன் குடும்பத்தாரோடு அறுபடை முருகன் கோயில்களுக்கும் சென்று தரிசனம் செய்யும் வாய்ப்புக் கிட்டியது. முருகன் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். முதலில் மதுரை. அங்கே இரு படை வீடுகள். முதலில் முதலாம் படை வீடு திருப்பரங்குன்றம். அடுத்தநாள் காலையில் ஆறாவது படை வீடு பழமுதிர் சோலை.

அது ஒரு ஆடி மாசம் என்றாலும் கோயில்களில் கூட்டம் அள்ளியது. மதியத்தில் காரைக்குடியில் இருந்து புறப்பட்டு முதலில் திருவாதவூர் சென்று மாணிக்க வாசகரின் திருக்கோயிலையும் அங்கே இருந்த மாபெரும் சிவன் கோயிலுக்குச் சென்று ( அருள்மிகு வேதநாயகி அம்பாள் சமேத திருமறைநாத சுவாமி ) சிவனையும் தரிசித்தோம். நரியைப் பரியாக்கிய கதை ஞாபகம் வந்தது. :)

செடிகள்3.5.86. 11.30 a.m.

24. * இந்தச் செடிகள்
என் ஆன்மா
உடலும் உயிருமாய்
கம்பிகளுக்குள்
நானும் அதுவும்.

வரலெக்ஷ்மி விரத ரெசிப்பீஸ் & கோலம்ஸ்.வரலெக்ஷ்மி விரத ரெசிப்பீஸ். VARALAKSHMI VIRATHAM RECIPES.1.தேங்காய்த் திரட்டுப்பால்
2.மோத்தி பாக்
3.எள்ளுப் பூரணக் கொழுக்கட்டை
4.ஓட்ஸ் வெஜ் கொழுக்கட்டை
5.கோதுமை ரவை இட்லி.
6.கற்பூரவல்லி/ஓமவல்லி பஜ்ஜி
7.மதுர் வடை.
8.தேன் பழப் பாயாசம்
.

புதன், 21 அக்டோபர், 2015

மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸ் . MALAYSIA - PETRONAS, MASJID NEGARA, JAMEK MOSQUE.

  ”மனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸும் நேஷனல் ( மஸ்ஜித் நெகாரா ), ஜேமெக் மசூதிகளும்” என்ற இந்த இடுகை என்னுடைய "உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்" என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.
செவ்வாய், 20 அக்டோபர், 2015

தீம் ம்யூசிக் & டாங்கோ. THEME MUSIC & TANGO.

 எனக்குப் பிடிச்ச சில படங்களோட தீம் ம்யூசிக் & டாங்கோ டான்ஸை ஷேர் செய்திருக்கேன்.

 #007 ஜேம்ஸ் பாண்ட்.
உழைப்பின் சிறகுகள்2.5.86.

22. ஜன்னலோரத்தில்
பூத்து நிற்கும்
மஞ்சள் மகரந்தம்,
தினமும் ஒரு
புத்துணர்ச்சியை
என்னுள் விதைக்கும்.

அமீரகத் தமிழ்த்தேருக்காக - காதல் இனிது.

காதல் இனிது:-
**********************
கட்டிக் கரும்பெனவும்
கெட்டிச் சமத்தெனவும்
தொட்டுக் கலந்த அவன்
தொடாமல் சொல்லும்போது
காதல் இனிது.

திங்கள், 19 அக்டோபர், 2015

நான் கவிதையான போது2.5.86.

21. நான் கவிதையான போது
சில பத்ரிக்கைகள்
என்னை வாங்கிக்கொண்டன.

முதிய பூ - நமது மண் வாசம் இதழில்.

பன்னிரெண்டு வயதிருக்கும்
தொலைந்தபோது.


விழிக் கண்ணாடியில்
அழகான பிம்பமாய் உறைந்துவிட்டாய் நீ.


திரும்பத் தேடிக்கொண்டிருக்கிறேன்
இரட்டைப் பின்னலில் ஒன்று
உருவித் தொங்க
வாயெல்லாம் வழியும் சிரிப்பையும்
அரைக்கால் பாவாடையில்
உன் குதியாட்ட நடையையும்.


பெரிய பெண்ணாகிவிட்டாயாம்
சுருக்கிவிட்டார்கள் உன் உலகத்தை
சுருங்கிக்கிடக்கிறாய்
உலக்கைக்குப் பின்.

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

நான் காகிதமானபோது.
2.5.86.

20. நான் காகிதமானபோது.

பேனாக்கள்
என் முன்னே
அணிவகுத்துப் பேனாக்கள்
காகிதமாய் நான்.

அழைப்பிதழ்கள். !

லேடீஸ் ஸ்பெஷல்  சார்பாக நவராத்திரி அங்காடியில் மகளிர் சுயதொழில் விழிப்புணர்வு விழா.

பல்லாண்டுகளுக்குப்பின் முதல் மேடையேற்றம்

சனி, 17 அக்டோபர், 2015

துணிகள்.28. 4. 86.

19. துணிகள்
துணிகள்
துவைபடுவதற்காய்

திருவேங்கடநாதனின் தமிழ் சுப்ரபாதம்.

திருமலையில் குடிகொண்டிருக்கும் பெருமாளுக்கும் மகான் ராகவேந்திரருக்கும் பூர்வீகத்தில் திருவேங்கடநாதன் என்னும் திருப்பெயர் உண்டு. இருவருமே என் வணக்கத்துக்கும் ப்ரார்த்தனைக்கும் உரியவர்கள்.

எப்போது சுப்ரபாதத்தைக் கேட்டாலும் ஒரு பரவசம் ஏற்படும். ஆனால் அது முழுக்க முழுக்க சமஸ்கிருதத்தில் சொல்லப்படுவதால் முழுமையாகப் புரியாது. ஆனால் 98 ஆம் வருடம் என் அம்மா எம் எஸ் அம்மாவின் குரலில் தமிழில் ஒலிப்பதிவு செய்த இந்த சுப்ர பாதத்தை வழங்கினார்கள்.

அதைக் கேட்டதும் திருவேங்கடநாதனின் பேரழகும் பெருமாட்சியும் கவர டேப் ரெக்கார்டரை நிறுத்தி நிறுத்தி இதைக் கேட்டு பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டேன். டேப் ரெக்கார்டரில் தினம் காலை சுப்ரபாதம் போடும் போது கூடவே சொல்லியும் பழகிக் கொண்டேன்.

கிட்டத்தட்ட 18 வருடங்களாக மனப்பாடமாக தன்னையறியாமல் கடகடவென்று நான் சொல்லி வந்த ( அவ்வப்போது சில மாதங்கள் சொல்ல விட்டுப் போவதும் உண்டு ). சுப்ரபாதத்தை இந்த மாத பக்தி ஸ்பெஷல் இணைப்பாகப் பார்த்ததும் மகிழ்ந்தேன்.நான் ஒரு வேங்கடேச அடிமை :) சொந்தக்காரர்களுக்கு எல்லாம் நான் படி எடுத்ததை ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்தேன்.

இந்த தமிழ் சுப்ரபாதம் பாடவும் கேட்டவும் இனிமை மிக மிக இனிமை. இன்பத் தமிழில் தேனும் பாலும் பாய்வது போல இருக்கும்.


வெள்ளி, 16 அக்டோபர், 2015

விசுவாசம்28. 4.86

18. நாம் ஒரு
அழகிய கனவுக்குள்
பொதிந்திருந்தோம்
வெளிப்படுத்தப்பட்டு விட்டொம்.

சம்மர் ஸ்பெஷல் ரெசிப்பீஸ் & கோலம்ஸ். SUMMER SPECIAL RECIPES & KOLAMS.சம்மர் ஸ்பெஷல் ரெசிப்பீஸ். :-

1 . நுங்குப் பாயாசம்
2. மாங்காய் ஜூஸ் – பன்னா.
3. மிண்ட் லெமனேட்
4. நன்னாரி/வெட்டிவேர் சர்பத்
5. கத்திரி முருங்கை கீரைத்தண்டு பலாவிதை சாம்பார்
6. மிக்ஸ்ட் வெஜ் ரெய்தா
7. தேன்குழல் வற்றல்
8. கறிவடகம்
9. வெள்ளைமிளகாய் ஊறுகாய்

1.நுங்குப் பாயாசம்.

தேவையானவை :-
இளநுங்கு – 5, பால் – அரை லிட்டர், சர்க்கரை – ஒரு டேபிள் ஸ்பூன். அரிசி மாவு – 1 டீஸ்பூன், ஏலப்பொடி – 1 சிட்டிகை.

வியாழன், 15 அக்டோபர், 2015

சிகரம் தொட்டாலும்..'சிகரம் தொட்டாலும்
சிறகாய் நீ வேண்டும்..
சிறகாய்ப் பறந்தாலும்
காற்றாய் நீ வேண்டும்
காற்றாய் இருந்தாலும்
கனலாய் நீ வேண்டும்
கனலாய் நான் ஒளிரப்
பெருமழையாய் நீ வேண்டும்

காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.

துர்க்கா லெக்ஷ்மி சரஸ்வதிப்யோ நமஹ..

அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகள்.

காரைக்குடி வீடுகள் தேக்குமரக் கதவுகள், சிற்ப வேலைப்பாடுகள் , ஆத்தங்குடி/இத்தாலியன் மார்பிள்ஸ், பெல்ஜியம் கண்ணாடிகள், வடிவழகோடு அமைக்கப்பட்ட பித்தளைத் தாழ்வாரங்கள், மரச் செதுக்கல்கள், ப்ளாச்சுகள் இவற்றோடு ரசிக்க வேண்டிய இன்னொரு அம்சம் அதன் 182. ஓவியங்கள்.

சுவற்றில் மேலே வரந்தையாக  மற்றும் வாசல் நிலைகளில் ,ஜன்னல் நிலைகளில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் சரித்திர இதிகாச புராண முக்கியத்துவம் வாய்ந்தவை, மேலும் வாழ்வியல் நிகழ்வுகள், யோகா, தியானம், வாழ்வியல் இச்சை, விலங்குகள், பூக்கள், பறவைகள், தெய்வத் திரு உருவங்கள் போன்றவையும் இடம் பெறும்.

183. வசிஷ்டரும் காமதேனுவும். :-

இங்கே வசிஷ்டரும் காமதேனுவும் ஹோமத்தின் முன்னால். ஒரு வனமே கண்முன் விரிகிறதல்லவா. காமதேனுவிடம் பாலருந்தும் நந்தினி கன்றுக் குட்டியும் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது.184/ தனலெக்ஷ்மி :-

புதன், 14 அக்டோபர், 2015

மலேஷியா - பாகம் 1. பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

”மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.” என்ற இந்த இடுகை என்னுடைய ”உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்” என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.


திங்கள், 12 அக்டோபர், 2015

பட்டாம்பூச்சிகளும் பூக்களும்..

வண்ணத்துப் பூச்சிகள் பல வண்ணங்களில் பறந்து கொண்டிருந்தன.தோட்டம் முழுமைக்கும் எந்த வாசனைப் பூவில் எந்த மாதிரித் தேன் இருக்கும் என கணித்தது போல ஒவ்வொரு பூவின் அருகிலும் சென்று ஒவ்வொரு மொழியில் பேசிக் களித்துக் கொண்டிருந்தன. அந்தப் பூக்களும் அதை ரசித்தது போல சிரித்துக் கொண்டிருந்தன., இரவானதும் வாடினாலும் தினமும் புதிது புதிதாய் பூக்களை உண்டுபண்ணும் செடிகளில் அமர்ந்தபடி அரசோச்சும் தங்கள் ஸ்தானத்தை பெருமிதமாய் நினைத்தது போல.

எத்தனை கதாநாயகிகள் பார்த்தாலும் அத்தனை பேரோடும் கூடிக் களிக்கும் கதாநாயகர்களின்  மனநிலையில் வண்ணத்துப் பூச்சிகள் சுற்ற உணர்ந்த பூக்களுக்கும் தெரியும் இந்த மயக்கம் எல்லாம் தேனிருக்கும் வரை மட்டுமே. பளபளப்பு தீர்ந்தவுடன் கசங்கிய ஜிகினா காகிதமாய் குப்பையாய் வாடிப் போய் விடுவோம் என்று.  .

புதன், 7 அக்டோபர், 2015

செம்மாதுளைச் சாறு

அந்த வங்கிக்குள் நுழைந்தாள் அவள். வாடிக்கையாளர் சேவையில் புகழ்பெற்றுக் கோலோச்சிக் கொண்டிருந்தது அந்த வங்கி.

அவள் ஒரு திராவிடப் பெண்மணி - அது போதும் அவளைப் பற்றிய மேலதிகத் தகவல்களை நீங்களே ஊகித்துக் கொள்வீர்கள். பெரிய சரீரம், கறுத்த நிறம், கீரைக் கட்டாய்க் கூந்தல். கருநிலவுகளாய் உருண்டு கொண்டிருக்கும்  கண்கள்.  பொருத்தமாய் இருந்தாலும் ஏதோ ஒரு ஜவுளிக்கடையில் எடுக்கப்பட்டிருந்த ஒரு ரவிக்கையும் புடவையும்.

அனைத்துப் பணியாளர்களும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்க, ஒவ்வொருவரையும் பார்த்த அவள் மேனேஜருக்காகக் காத்திருந்தாள். முன்பே தெரிந்தவள் என்பதால் ஒவ்வொருவராக குசலம் விசாரித்தும், புன்னகை சிந்தியபடியும் சென்றார்கள். மிக அதிகமான அளவு டெப்பாசிட் வைத்திருப்பவர்களை அனைவருக்கும் பிடிக்கும்தானே.

செவ்வாய், 6 அக்டோபர், 2015

ட்ரான்ஸ்போர்ட்டர் - 4. TRANSPORTER - 4 REFUELED - REVIEW.

விர்ர்ரூரூம்ம்ம் விர்ர்ர்ரூரூரூம்ம்ம்ம் என்று கார் அதிரும்போதெல்லாம் ஜேசன் ஸ்டேதம் ( JASON STATHAM ) போல ஒரு விறுவிறுப்பை எதிர்பார்த்து இந்தப் படத்துக்குப் போயிருந்தீங்கன்னா உங்களுக்கு ஏமாற்றம்தான் . பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்கிறோம் என்பார்களே அதைப் போல ஜேசன் ஸ்டேதம் இடத்தில் எட் ஸ்க்ரைன்.( ED SKREIN )

போதாக்குறைக்கு ஹீரோயின் அன்னா  ( லோன் செபனால்- LOAN CHABANOL )  வேறு எட் ஸ்க்ரைனை பச்சா மாதிரி ட்ரீட் செய்கிறார்.  மிக வசீகரமாக இருந்தாலும் எட் ஸ்க்ரைன் சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளை மாதிரி எடுக்கப்பட்டிருப்பது இந்தப் பட தொடர் அணிவகுப்பில் கொஞ்சம் பின்னடைவுதான். ஆனா லோன் செபனால் கொள்ளை அழகு. அதுவும் அவர் வில்லனால் முதன் முதலில் தொழிலுக்கு  நிற்கவைக்கப்படும் இடத்தில் நடிப்பிலும் அழகிலும்  பிரமிப்பூட்டுவார்.

புள்ளிகளில் நானும் ஒரு புள்ளியாக ! :)

புள்ளிகள் கோடுகள் கோலங்கள் நூலில் பாரதி மணி சார் எனக்கும் ஒரு சிறப்பிடம் கொடுத்து நான் அவரிடம் எடுத்த பேட்டியை வெளியிட்டு இருக்கின்றார்கள்.

திங்கள், 5 அக்டோபர், 2015

மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகன். MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

”மனம் கவரும் மலேஷியா  - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும்.”  என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.


ஞாயிறு, 4 அக்டோபர், 2015

அம்மா இலக்கிய விருது:-

அம்மா இலக்கிய விருது.

வரும் சித்திரைத் திருநாள் பெண்களுக்கு இன்னும் சீரையும் சிறப்பையும் கொண்டு வருகிறது.அம்மா இலக்கிய விருது, சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது ( 10 பேருக்கு ) , உலகத் தமிழ்ச்சங்க விருது என முப்பெரும் விருதுகளை அறிவித்து நம் தமிழக முதல்வர் என் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஜெயா அம்மா மகளிருக்கு ஊக்கம் கொடுத்திருக்கிறார்கள். வாழ்த்துகள் அவர்களுக்கும் பரிசு பெறப்போகும் எழுத்துலக ஜாம்பவதிகளுக்கும். :)

வீடு எரிகிறது.:-26. 4. 86.

17. வீடு எரிகிறது.:-

எரியூட்டப்படுகின்றன
நமது சுயங்கள்

பற்றியெரியும்
சட்டங்களாய்
நமது கனவுகள்

நீர்த்துளியா தேன்துளியா..

தேன் சிந்துதே வானம்.. இதழ்களில்... சனி, 3 அக்டோபர், 2015

பொறி26.4.86.

16. என் மனமெல்லாம்
நெருப்பு
பார்வைத் திராவகம்
ஊற்றாதே.

சிறுகதைக்கு வாசகர் கடிதம். !

காரைக்குடி புத்தகத்திருவிழாவும் தினமணியும் இணைந்து நடத்திய  சிறுகதைப் போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற  சிவப்புப் பட்டுக் கயிறு சிறுகதைக்கு வந்த வாசகர் கடிதம். !


வெள்ளி, 2 அக்டோபர், 2015

எல்லாம் தெரிஞ்ச எளவட்டப் புள்ள.

எல்லாம் தெரிஞ்ச எளவட்டப் புள்ள.:-

எல்லாம் தெரிஞ்ச எளவட்டப் புள்ள
இதுக்கு மேலே நானென்ன சொல்ல.

கைக்குழந்தையா என் கண்ணுக்குத் தெரிவே.
கமலஹாசனைப் போல ஒலகுக்குத் தெரிவே.

கணினி தொட்டு கத்துக் கொடுத்தே
காலித் ஹொசைனி படிக்கக் கொடுத்தே

மலைகளைக் கிள்ளும் எலிகளும் நீராதாரங்களைக் கூறாக்கும் நரிகளும்.

சரித்திரப் பிரசித்திபெற்ற கோட்டைகளுடன் கூடிய மலைகளை அறிந்திருக்கலாம். ஆனால் பூகோளத்தில் ஒரு காலத்தில் இடம்பெற்றிருந்தும் கடல் விழுங்காமல் காற்றுக் குடிக்காமல் சிதறிச் சரிந்த மலைகள் மதுரை செல்லும் வழியிலும் திருச்சி செல்லும் வழியிலும் உண்டு.

ஆட்டுக்கிடாய்களின் உப்புக்கண்டக் கவிச்சியைப் போல வெய்யிலில் காயும் வெண் துண்டங்களைக் கண்டு மனம் பதறியதுண்டு. வெட்டிச்சாய்க்கப்பட்ட மரங்களைப் போல வீழ்ந்து கிடக்கும் மலைகளைக் கண்டு கண்கசிந்ததுண்டு.

மழை வளம் , நீர் வளம் , நில வளம் இயற்கை வளம், மூலிகை வளம், வனவிலங்குகள் வளம், மேய்ச்சல் நிலம், அபூர்வ தாவரங்கள், அருவிகள், சுனைகள் இவை எவையுமே இல்லாமல் வெறும் மொட்டைப் பாறைகளாக நின்றாலும் அவை நம் எக்கோ சிஸ்டத்தில் முக்கியப் பங்கு வகிப்பவை.

கல்யாண சமையல் சாதம் :) WEDDING SPECIAL.

கல்யாண சமையல் :-
1. அசோகா
2. வெஜ் பட்டர் ஊத்தப்பம்
3. மஷ்ரூம் பிரியாணி.
4. தென்னம்பாளைப் பொடிமாஸ்
5. இங்கிலீஷ் காய்கறி பிரட்டல்
6. மிக்ஸட் தால் பாயாசம்.

திசையெட்டும் கொட்டட்டும் நமது திருவிழாவுக்கான முரசு.

புதுகையில் நமது திருவிழா. - 2015. ( நான்காம் ஆண்டு உலக வலைப்பதிவர் மாநாடு. )

வலைப்பூ சாமிக்குப் புதுகையில் தேரோட்டம்.
கூகுளாண்டவருக்கு உவகையில் கொண்டாட்டம்.

அக்டோபர் 11, ஞாயிறு அன்று காலையில் ஆரோக்கியமாதா மக்கள் மன்றத்தில் காலை 9 முதல் மாலை 5 வரை உலகத்தையும் உள்ளத்தையும் வலையில் வரையும் வலைப்பதிவர் மாநாடு நடக்க இருக்கிறது.

அதற்கு வலைப்பதிவர்களாகிய நாங்கள் அனைவரும் உங்களை வரவேற்கிறோம். ப்லாகர், கூகுள் ப்ளஸ், ஃபேஸ் புக், ட்விட்டர், வாட்ஸப் ஆகியவற்றில் நிகழ்வுகளைப் பகிர்ந்து நிறையப் பேருக்குக் கொண்டு செல்லுங்கள். திசையெட்டும் கொட்டட்டும் நமது திருவிழாவுக்கான முரசு.


போட்டிகளும் பரிசுகளும்  கவிதை ஓவியங்களுமாகக் காத்துக் கொண்டிருக்கிறது புதுகை. இணையத்தோடு இணைந்து தமிழ் இணையக் கல்விக் கழகமும் கைகோர்க்க ஐந்து போட்டிகள்., ஐம்பதாயிரம் ரூபாய் பரிசுகள்.!!! முதன் முறையா தமிழ்நாடு அரசும் இதன் மூலமா நம்மை கௌரவிச்சிருக்காங்க. அப்புறம் வேறென்னங்க வேணும்.

Related Posts Plugin for WordPress, Blogger...