எனது நூல்கள்.

வெள்ளி, 2 அக்டோபர், 2015

எல்லாம் தெரிஞ்ச எளவட்டப் புள்ள.

எல்லாம் தெரிஞ்ச எளவட்டப் புள்ள.:-

எல்லாம் தெரிஞ்ச எளவட்டப் புள்ள
இதுக்கு மேலே நானென்ன சொல்ல.

கைக்குழந்தையா என் கண்ணுக்குத் தெரிவே.
கமலஹாசனைப் போல ஒலகுக்குத் தெரிவே.

கணினி தொட்டு கத்துக் கொடுத்தே
காலித் ஹொசைனி படிக்கக் கொடுத்தே

நடப்பு ஒலகை புட்டுப் புட்டு வைப்பே
நான் இருந்தத விடவும் தெளிவா இருக்கே

எனக்கும் மேலே அறிவா இருக்கே
எல்லாரும் வேணும்னு பிடிவாதமாவும் இருப்பே.

உன் இளைய உலகுக்குள்ள எனை எடுத்துப் போனே.
இடுக்கண்ணிலும் நகைக்கவைச்சு எனை அழகு பார்ப்பே. 

இடுப்பிலயும் முதுகுலயும் மனசுலயும் சுமப்பேன்
உன் ஒவ்வொரு தடத்தையும் உத்துத்தான் பார்ப்பேன்.

மது மாது சூது  உன்னை மயக்காம இருக்கட்டும்.
எப் போதையும் தாக்காம பயந்தோடிப் போகட்டும். .

பஞ்சமா பாதகங்கள் உன்னைப் பற்றாமல் போகுக..
பாவி மகன் இவனென்று தூற்றாமல் ஆகுக.

குடும்பம் குழந்தை குட்டின்னு கூடித்தான் போகும்.
கூடி வாழ்தல் என்னிக்கும் கோடிச் செல்வம் ஆகும். 

மனம் போல வாழு. மகிழ்வாக வாழு
மக்களை உய்விக்க வந்த மகராசனா வாழு.

கையெடுத்து என் சாமிகளைக் கிடையாக் கேக்குறேன்
கண்ணுக்குள்ள கண்ணா உனை என் கடவுள்கள் காக்கட்டும்.

பண்பாடு தெரிஞ்ச பணிவான புள்ள
இதுக்கெல்லாம் மேலே நானென்ன சொல்ல.


-- - 1. இது எனது சொந்தப் படைப்பே என உறுதி கூறுகிறேன்.

(2) இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது”

(3)“இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ என்னும் உறுதிமொழி அளிக்கிறேன். 


4.நிறைவுத் தேதி. 2. 10. 2015
 வகை-(4) புதுக்கவிதைப் போட்டி

முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25 வரிகளில் - அழகியல் மிளிரும் தலைப்போடு...
5. “வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகளுக்காக எழுதப்பட்ட கவிதை .   

டிஸ்கி :- இவ்விடுகை வெளியிடக் காரணமாயிருந்த துளசி சகோ & கீத்ஸுக்கு நன்றி :)  


7 கருத்துகள் :

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை சொன்னது…

நன்றி...

நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html

புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
http://dindiguldhanabalan.blogspot.com

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரியாரே

‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

அருமை! வாழ்த்துக்கள்!

பரிவை சே.குமார் சொன்னது…

அருமை அக்கா...
வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சரஸ்வதி ராஜேந்திரன் சொன்னது…

அருமை தேன் வெற்றி பெறவாழ்த்துக்கள் =சரஸ்வதி ராசேந்திரன்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வலைப்பதிவர் சந்திப்பு - 2015 & டிடி சகோ

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி சுரேஷ் சகோ

நன்றி குமார் சகோ

நன்றி சரஸ் மேம் :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...