எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 2 அக்டோபர், 2015

எல்லாம் தெரிஞ்ச எளவட்டப் புள்ள.

எல்லாம் தெரிஞ்ச எளவட்டப் புள்ள.:-

எல்லாம் தெரிஞ்ச எளவட்டப் புள்ள
இதுக்கு மேலே நானென்ன சொல்ல.

கைக்குழந்தையா என் கண்ணுக்குத் தெரிவே.
கமலஹாசனைப் போல ஒலகுக்குத் தெரிவே.

கணினி தொட்டு கத்துக் கொடுத்தே
காலித் ஹொசைனி படிக்கக் கொடுத்தே

மலைகளைக் கிள்ளும் எலிகளும் நீராதாரங்களைக் கூறாக்கும் நரிகளும்.

சரித்திரப் பிரசித்திபெற்ற கோட்டைகளுடன் கூடிய மலைகளை அறிந்திருக்கலாம். ஆனால் பூகோளத்தில் ஒரு காலத்தில் இடம்பெற்றிருந்தும் கடல் விழுங்காமல் காற்றுக் குடிக்காமல் சிதறிச் சரிந்த மலைகள் மதுரை செல்லும் வழியிலும் திருச்சி செல்லும் வழியிலும் உண்டு.

ஆட்டுக்கிடாய்களின் உப்புக்கண்டக் கவிச்சியைப் போல வெய்யிலில் காயும் வெண் துண்டங்களைக் கண்டு மனம் பதறியதுண்டு. வெட்டிச்சாய்க்கப்பட்ட மரங்களைப் போல வீழ்ந்து கிடக்கும் மலைகளைக் கண்டு கண்கசிந்ததுண்டு.

மழை வளம் , நீர் வளம் , நில வளம் இயற்கை வளம், மூலிகை வளம், வனவிலங்குகள் வளம், மேய்ச்சல் நிலம், அபூர்வ தாவரங்கள், அருவிகள், சுனைகள் இவை எவையுமே இல்லாமல் வெறும் மொட்டைப் பாறைகளாக நின்றாலும் அவை நம் எக்கோ சிஸ்டத்தில் முக்கியப் பங்கு வகிப்பவை.

திங்கள், 21 செப்டம்பர், 2015

இணைந்து அளவளாவல், கூட்டு வாழ்வு, தோழமை வாழ்வு (டேட்டிங், லிவிங் டுகெதர், கம்பானியன்ஷிப் )– ஆன்மநேயக் காதலா.

டேட்டிங், லிவிங் டுகெதர், கம்பானியன்ஷிப் – ஆன்மநேயக் காதலா.

”கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே வழி வழி வந்திருக்கு அது வாழ்வும் தந்திருக்கு டேக் இட் ஈஸி” என்று சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் 70 களில் ஆடிய கமலஹாசன் 90 களிலேயோ ”கல்யாணம் கச்சேரி கால்கட்டு எல்லாமே ரயில் ஏறிப் போயாச்சுடி.” என்று அவ்வை ஷண்முகியில் ஆடி இருப்பார். அது உண்மைதான்.

104 வது சர்வதேச மகளிர் தினத்துக்கான கருப்பொருளாக ஐநா அறிவித்துள்ள – தீம் - ”மகளிரை மேம்படுத்துவது மனிதத்தன்மையை மேம்படுத்துவதாகும் . இதை நினைவில்கொள்ளுங்கள்.” இதுதான்.  Empowering Women, Empowering Humanity: Picture it!

Related Posts Plugin for WordPress, Blogger...