அசைவ உணவுகள் வாரத்துல ஒரு நாள் சமைப்பாங்க வீட்டுல. அதுனால சாப்பிட்டுப் பழகிடுச்சு. இன்னிக்கு என்னன்னா பேலியோ டயட்டுல தோல், கொழுப்போட சமைச்சு சாப்பிட சொல்றாங்க. இதுனால உடல் எடை குறையுதாம்.
மட்டன் சிக்கன் போன்றவற்றை சாதம் அல்லது சப்பாத்தி, இட்லி, தோசை கூட சாப்பிடும்போது எடை கூடிவிடும். மீன் இறால் நண்டு போன்ற கடல் உணவுகள் வெயிட் போடாது. ஆனால் உப்பு அதிகம் உள்ள கருவாடு , உப்புக் கண்டம் போன்றவை தோல் அலர்ஜி, சிறுநீரகக் கோளாறு ஆகியவற்றுக்கு ஆகாது என்பார்கள்.
மட்டன், சிக்கன், வஞ்சிர மீன், முட்டை, கருவாடு ( நெத்திலி , நெய்மீன் ), இறால், நண்டுஆகியன சாப்பிட்டு இருந்தாலும் மிச்சதெல்லாம் ( இனி என்ன மிச்சம் இருக்குங்கிறீங்களா.. :) சாப்பிட்டதில்லை.
ஆங். மறந்துட்டேன். சின்ன வயசில் ஒரு முறை புறாக்கறியும் ( மாமாவின் கால் வலிக்காக சமைக்கப்பட்டது ), முயல்கறியும் ( அதன் ரத்தம் முடி வளர்ச்சிக்கு உதவும்னு சொல்லி வளர்க்கப்பட்டது ) சாப்பிட்டதுண்டு. ஆனா இதுவரை பீஃபும், போர்க்கும் (பேகானும்) சாப்பிட்டதில்லை.
வீட்லயும் சமைச்சாலும் சிலப்போ விருப்போடயும் சிலப்போ ஏனோ ஒரு பிடிக்காத தன்மையோடும் சாப்பிட்டதுண்டு. ( சமைச்சதுனால வந்த எஃபக்டோ என்னவோ :)
ஆனா பசங்க கூட சாப்பிட்டா எல்லா சாப்பாடும் அருமையாதான் இருக்கும். அது நூடுல்ஸோ, பாஸ்டாவோ, ஃபாஸ்ட் ஃபுட்டோ, நான்வெஜ்ஜோ, எல்லாமே ருசிக்கும். தனியா சாப்பிட்டா அமிர்தமே ஆனாலும் அது எல்லாமே வெஷந்தான்.
பசங்க பெரியவங்களாயிட்டாங்க. அதுனால இது எல்லாம் எனக்கு இப்போ விஷமாயிடுச்சு. சரி விஷம்னாலும் வலைத்தளத்துக்கான விஷயம் கிட்டியிருக்கே விட முடியுமா. சமைச்சத எடுத்தது ஹோட்டல்ல சாப்பிட்டது , உறவினர், நண்பர்கள் வீட்ல சாப்பிட்டது எல்லாம் வரிசையா வருது.
என் தம்பி துபாய் அழைச்சிட்டுப் போயிருந்தான். என் பையன் கூடப் போகும்போது எமிரேட்ஸ் ஃப்ளைட்ல நான் முஸ்லீம் மீல் புக் பண்ண சொன்னேன். என் பையன் எனக்கு முஸ்லீம் மீல் புக் பண்ணிட்டு அவனுக்கு ஃப்ரூட் ப்ளேட்டர் ஆர்டர் பண்ணிட்டான். பையன் ரொம்ப ஹெல்த் கான்ஷியஸ் ஆயிட்டான்.
எங்க அம்மா அப்பாவுக்கு ( ஏஷியன் வெஜிடேரியன் மீல் ) ஜீரா ரைஸும், டம் ஆலுவும், ஃப்ரூட் & வெஜ் சாலட்டும் , பனீர் டிக்காவும் வந்தது. எனக்கு குட்டி ப்ளேட்ல பிரியாணி வந்து அத ஆனியன் ரெய்தா, சின்ன பீஸ் சிக்கன் லாலிபாப், குட்டியூண்டு லாம்ப் மசாலா, குட்டித் துண்டு ஃபிஷ் கட்லெட், பாயில்ட் எக், வெஜ்சாலட்டோட வெட்டினப்போ ஏக்கமா பார்த்தான்கிறது தனிக்கதை. :) ஹிந்து மீலாவது ஆர்டர் பண்ணி இருக்கலாம். :) அதுல கொஞ்சம் நான்வெஜ்ஜும் இருக்கும்.
அது சரி, நான்வெஜ் எல்லாமே விஷம்னு ஒதுக்கிடாதீங்க. கூட்டமா வந்து சாப்பிட்டுப் போங்க. ஏன்னா எங்க கைப்பக்குவம் அப்பிடி. விஷத்தைக் கூட அமிர்தம் மாதிரி சமைப்போமாக்கும் :)
சிக்கன் லாலி பாப், வெஜ் பிரியாணி, வெங்காயத் தயிர்ப்பச்சடி, ஸ்லைஸ் ஆனியன், லெமன் ரிண்ட்.
நளாஸ் ஆப்பக்கடையில் ஒரு மதிய உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டோம். எக் ஃப்ரைட் ரைஸ், மட்டன் பிரியாணி, போன்லெஸ் சில்லி சிக்கன், ஃபிஷ் ஃப்ரை, ப்ரான் ஃப்ரை, மட்டன் க்ரேவி, சிக்கன் குருமா, பரோட்டா, ரெய்தா , சிக்கன் மஞ்சூரியன்.