எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 10 ஜனவரி, 2017

தங்கல் - குஸ்தி யுத்தம் - ஒரு பார்வை. (REVIEW OF DANGAL )

காரைக்குடி போன்ற ஊர்களில் ஜேம்ஸ்பாண்ட் போன்ற ஆங்கிலம் >தமிழ்  மொழிமாற்றப் படங்களே வருவது அரிது. அதில் ஒரு ஹிந்திப்படம் செகண்ட்ஷோவில் கூட ஹவுஸ்ஃபுல்லாக சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ( படம் பார்த்துப் பத்து நாளாச்சு. புதியமாதவியின் பதிவு பார்த்ததும் எழுதத் தோன்றியது :) :) :)

ஐந்து தியேட்டர்களே உள்ள மாபெரும் நகரமான காரைக்குடியில் ( சத்யம், சிவம், பாண்டியன், நடராஜா, இராமவிலாசம் - இதில் இராமவிலாசம் மூடிக் கிடக்கு ) சத்தியமும் நடராஜாவும் நவீனமயமாக்கப்பட்டிருக்கின்றன. சீட்டிங் எல்லாம் வசதியா இருக்கு. மினி தியேட்டர் கெட்டப்புக்கு மாறிடுச்சு. ஆனா டிக்கெட் விலைதான் 100 ரூ. குடும்பத்தாரோடு குதூகலமா போனா ஆயிரக்கணக்குல டிக்கெட்டுக்கு குடுக்கணும். இந்தப் படத்துக்கு தமிழ்நாட்டுலயும் வரிவிலக்கு கொடுக்கலாம்.

பெண்குழந்தைகள் இறப்பும், கல்வி மறுப்பும் அதிகமான வட இந்திய நகரங்களில் இப்படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கு. தமிழ்நாட்டுல அப்பிடி இல்லைன்னு கொடுக்கலை போல .

இது மாஹாவீர் சிங் என்ற ஒரு தனி மனிதரின் சாதனைக் கதை. தன்னுடைய பெண் குழந்தைகள் நால்வரோடு தன் தமையனின் குழந்தைகளையும் குஸ்தியில் ஈடுபடுத்தி தங்கம் வெள்ளி மெடல்கள் ஜெயிக்க வைத்திருப்பது அசாதாரண சாதனை.

படத்தின்படி கீதா பபிதா என்ற இரு பெண் குழந்தைகள் குஸ்திப் போட்டியில் ஈடுபட்டு கஷ்டப்பட்டு ஜெயிக்கிறார்கள். தங்கள் தந்தை கொடுமைக்காரர் என அவர்கள் வருந்த திருமணமாகப் போகும் அவர்கள் வகுப்புத் தோழி தன் மகள்களை ஆண்குழந்தை போல வளர்க்க விரும்பும் இப்படிப்பட்ட தந்தை கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் எனச் சொல்கிறார்.

குழந்தைகள் சிந்திக்கிறார்கள். ஆண் குழந்தையின் மூலம் தன் குறிக்கோளை நிறைவேற்ற விரும்பிய தந்தையின் கனவுகளை நனவாக்கக் கடுமையாகப் பயிற்சி செய்கிறார்கள். கடினமான சூழ்நிலைகளுக்குப் பின் வெல்கிறார்கள்.

மஹாவீர் சிங்குக்கும் ஸ்போர்ட்ஸ் அதாரிட்டிக்கும் நடைபெறும் உரையாடலில் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் செலக்‌ஷன் முறை, அதன் நிதி உதவி பற்றி  எள்ளலும் எதார்த்தமும்  வெளிப்படுகிறது.

சிறு பெண்கள் என்றாலும் ஆண்களுடன் சரிக்குச் சரியாக சமமாகப் போரிடுவது சிறு கிராமத்தில் இருக்கும் பெண்களுக்கு எவ்வளவு சிரமமான காரியமாக இருந்திருக்கும். கிராமத்தாரின் கிண்டலையும் ஏச்சு பேச்சுக்களையும் மீறி தன் மகள்களை ஜெயிக்க வைத்த மஹாவீர்சிங் உண்மையிலேயே வணக்கத்துக்குரியவர்.

படத்தில் இளம் மஹாவீர் சிங்காக வரும்போது தன் உடற்கட்டாலும் குஸ்தி யுத்தத்தாலும் பிரமிக்க வைக்கிறார் அமீர் கான்.  அதே மனிதன் தன் மகளோடு குஸ்தி செய்யும் இடத்தில் லேசான தொப்பையோடு முழுமையான உடையணிந்து திணறுவது போல தோள்கள் நழுவ நடித்திருப்பது நெகிழ வைத்தது.

கண்ணோரம் எப்போதும் சிதறிக் கொண்டிருக்கும் சிறிய நையாண்டியும் குறும்புத்தனமும் கலந்தது போன்ற சிரிப்பு அவர் ஸ்பெஷல். படத்துக்காக தன் வயதையும் மீறிய ஒரு ரோலை சிறப்பாகச் செய்து முத்திரை பதித்திருக்கிறார். இந்தப் படத்தைப் பார்த்து நிறையப் பேர் தங்கள் பிள்ளைகளை இது போன்ற விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிக்கக் கூடும்.

வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. சில சிரிக்கவும் சில சிந்திக்கவும் சில கண்ணீர் விடவும் கூட. தமிழ் வசனங்கள் ராஜேஷ் மலர்மன்னன். மிக அருமையாக இயல்பாக மொழி பெயர்த்திருக்கிறார். தலேர் மஹந்தி ஒரு பாடல் பாடி இருக்கிறார்.  அம்மாவாக வரும் சாக்‌ஷி தன்வர் கச்சிதம். கண்ணாலேயே நடிக்கிறார்.

லூதியானாவின் செங்கல் பாவிய தெருக்களில் கீதா பபிதா ஓடுவதும், மணல் தெறிக்க குஸ்தி வளையத்தில் ஆண்களுடன் நிகழ்த்தும் சண்டையும், பெண்களுக்கே உரித்தான மெல்லிய நாணத்துடன் கீதா ( ஃபாத்திமா ஸனா ஷேக் ) பாட்டியாலா பயிற்சி நிலையத்தில் ஓடுவதும், தன்னை அழகு படுத்திக் கொள்வதும், தந்தை “ பயில்வான்’ என அழைக்கும்போது வெட்கத்துடன் மென்னகை புரிவதும் அழகோ அழகு. ஆமா சிறுபிள்ளையில் இல்லாத கன்னக் குழி பெரிய பெண்ணானதும்  வந்தது எப்படி  :)

டைரக்டர் நிதிஷ் திவாரியிடம் ஒரு சில கேள்விகள் மிச்சம் இருக்கின்றன.  சில ஆண்டுகளுக்கு முன்பு என்றால் இரு கரங்களையும் தட்டி இப்படம் ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் என்றிருப்பேன்.

1. மஹாவீர் தன் அண்ணன் மகனை ஏன் அடிமை மாதிரி நடத்த வேண்டும். பெண் குழந்தைகள் முன்னேறும்போது ஆண் குழந்தைகள் பின்னேற வேண்டுமா.

2. பெரியப்பா குடிக்கும்போது அவனும் கோப்பையை ஏந்துவதும் மறுநாள் குப்புறக்கடித்துத் தூங்குவதுமான சீன் தேவையா

3. தன் குழந்தைகள் பயிற்சியில் ஈடுபட அண்ணன் பையன் ஏன் கோழி சமைக்கணும். ஏன் அந்தப் பெண்களே தனக்கானதை தயாரித்துக் கொள்ளக் கூடாதா.

-- இது காரைக்குடி பத்தி.

இன்னும் தியேட்டர்களில் சீட்டில் உக்கார்ந்து காலாட்டிக்  கொண்டிருப்பவர்களும் முன்னே இருக்கும் அடுத்தவர் சீட்டில் காலைப் போட்டுத் தட்டிக் கொண்டிருக்கும்  அநாகரீக வாதிகளும் , ராத்திரியில் சரக்கடித்து விட்டு தியேட்டரில் வந்து கத்தும் விசிலடிச்சான் ரவுடிகளும் தியேட்டர் என்னதான் அற்புதமாக இருந்தாலும் படம் பார்க்கும் நல்ல எண்ணத்தைக் கெடுத்து விடுகிறார்கள்.

திருட்டு விசிடி பெருகவும், டவுன்லோட் செய்து பெரும்கும்பல் சினிமா பார்ப்பதற்கும் இதுவும் ஒரு காரணம்.

படத்தின் ஆரம்பத்தில் தியேட்டர்காரர்கள் இப்பவெல்லாம் புதுசா தேசிய கீதம் போடுகிறார்கள். அனைவரும் எழுந்து நிற்கிறோம். படத்தின் க்ளைமாக்ஸில் காமன்வெல்த் கேம்ஸில் இந்தியா ( கீதா ) ஜெயித்ததற்காக தேசிய கீதம் இசைக்கப்படுகிறது . அப்போது அடைபட்டிருக்கும் மஹாவீர்சிங் போல நமக்கும் ஒரு குழப்பம். நாம் அமர்ந்து சினிமா பார்ப்பதா இல்லை எழுந்து மரியாதை செலுத்துவதா. :)

மொத்தத்தில் அருமையான படம் . அனைவரும் பார்க்கலாம்.

என்னுடைய மதிப்பீடு :- நாலு  ஸ்டார்  ****

9 கருத்துகள்:

  1. விமர்சனத்தை விட, உங்களின் மூன்று கேள்விகளுக்கு *****

    பதிலளிநீக்கு
  2. ஹிந்தியில் பலசிறப்பான படங்களை நாம் தவற விட்டு விடுகிறோம். சிறப்பான ஒரு பட அறிமுகத்துக்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு...நல்ல கேள்விகள் எனக்கும் இந்த கேள்விகள் இருந்தன..

    பதிலளிநீக்கு
  4. அருமையான படம் ! எங்களுக்கும் அந்த மூன்று கேள்விகள் எழுந்தன......அருமையான விமர்சனம்....

    பதிலளிநீக்கு
  5. நல்ல விமர்சனம்..... படம் பார்க்கவில்லை.

    பதிலளிநீக்கு
  6. "இன்னும் தியேட்டர்களில் சீட்டில் உக்கார்ந்து காலாட்டிக் கொண்டிருப்பவர்களும் முன்னே இருக்கும் அடுத்தவர் சீட்டில் காலைப் போட்டுத் தட்டிக் கொண்டிருக்கும் அநாகரீக வாதிகளும் , ராத்திரியில் சரக்கடித்து விட்டு தியேட்டரில் வந்து கத்தும் விசிலடிச்சான் ரவுடிகளும் தியேட்டர் என்னதான் அற்புதமாக இருந்தாலும் படம் பார்க்கும் நல்ல எண்ணத்தைக் கெடுத்து விடுகிறார்கள்..." என்ற வரிகள், காரைக்குடிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பொருந்தும். திருட்டு விசிடி வளர்வது இவர்களால் தான்.

    நல்ல படத்திற்கான நல்ல விமர்சனம்! - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    பதிலளிநீக்கு
  7. நன்றி டிடி சகோ

    நன்றி ஆல் இஸ் வெல் !

    நன்றி செல்வகுமார்

    நன்றி துளசி சகோ

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி வெங்கட் சகோ. கட்டாயம் பாருங்க

    நன்றி செல்லப்பா யக்ஞசாமி சார். :)

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...