எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 11 ஜனவரி, 2017

சிவப்புப் பட்டுக் கயிறு - நமது மண்வாசத்தில் விமர்சனம்.


  எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட தேனம்மை லெக்ஷ்மணன் பல்வேறு இதழ்களில் எழுதி வெளியான  கதைகளின் தொகுப்பு இந்த சிவப்பு பட்டுக்கயிறு நூல். 

புத்தகத் தலைப்பாகியுள்ள சிவப்புப் பட்டுக் கயிறு கதையானது மனதை உலுக்குகிறது.

 "தாய் வீடு சொந்த சுவாசம் போலவும், மாமியார் வீடு கொஞ்ச காலத்துக்கு ஆக்சிஜன் சிலிண்டரில் சுவாசிப்பது போலவும் இருக்கிறது.  வீட்டின் கதவுகள், ரூம்கள், அலமாரிகள், பொருட்களுடனான பரிச்சயம் அதிகமானபின் அதுவும் இன்னொரு சுவாசமாய் ஓடிக்கொண்டு இருக்கிறது" என மணமான புதிதில் பெண்கள் புகுந்த வீட்டில் சுவாசிப்பது பற்றி தேனம்மை எழுதி இருப்பது ரசிப்பிற்குரியது.

     சூலம் கதை ஆரம்பக் காட்சிகளை ஒரு திரைப்படக் காட்சி போல வர்ணிக்கிறார்.   கத்திக் கப்பல் ஒரு உணர்வுபூர்வமான கதை. கணவன் தவறு செய்துவிடுவானோ என்று தோழியால் ஏற்படுத்தப்பட்ட பயம் - அதனாலேயே அவனுக்கு ஆபத்து வந்துவிட்டதோ என்று பதறி, அது இல்லை என்றானதும் அதனால் ஏற்படும் நிம்மதியும், பின்னர் மற்ற பாதிப்பாளர்கள் மேல் ஏற்படும் கரிசனமும். 

பட்டாம் பூச்சிகளும் பூக்களும் கதையில் வர்ணனையில் அசத்துகிறார். ”ஓய்வில்லாத உழைப்பில் ஒருநாள் ஓய்வு இப்படியா கிடைக்க வேண்டும் ?” வலுவான வார்த்தைகள்.




ஒரு நாள் வாழ்ந்தாலும் சந்தோஷமாக வாழ்ந்த ஒரு குட்டிப் பெண்ணின் உணர்வுகள் ‘சொர்க்கத்தின் எல்லை நரகம்’ சிறுகதையில் “குடும்ப வன்முறைச் சட்டம் எல்லாம் பெண்ணுக்குச் சாதகமாகவே இருக்கிறது.  கணவனின் பக்கத்தை அது அதிகம் அலசி ஆராய்வதில்லை. “ ஆண் மட்டும்தான் வன்கொடுமை செய்வான் “ எனச் சட்டமும் முடிவெடுக்கிறது. “ என்கிறார் பெண் எழுத்தாளரான தேனம்மை. 

2016 ல் வெளிவந்த சிறந்த சிறுகதைத் தொகுப்புகளில் இந்த நூலுக்கும் இடமுண்டு. 

ஆசிரியர் :- தேனம்மை லெக்ஷ்மணன்.
டிஸ்கவரி புக் பேலஸ்.
விலை ரூ 80/-.
பக்கங்கள் 104. 

டிஸ்கி:- இந்த நூல் சென்னை புத்தகத் திருவிழாவில் டிஸ்கவரி புத்தக அரங்கு எண் 193- 194, 215 - 216. இல் கிடைக்கும்.

டிஸ்கி:-  புலம் அரங்கு எண் 35 இல் அகநாழிகையின் வெளியீடான எங்கள் நூல்கள் - ”அன்ன பட்சி” - கிடைக்கும். 

-- நன்றி எங்கள் ப்ளாக் & ஸ்ரீராம். உங்கள் விமர்சனம் நமது மண்வாசத்தில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. :) 

7 கருத்துகள்:

  1. மிகவும் சந்தோசம்...

    வாழ்த்துகள் சகோதரி...

    பதிலளிநீக்கு
  2. மண் வாசத்தால் .... சிவப்புப் பட்டுக் கயிறு மேலும் பளபளப்பாக மின்னுகிறது. பாராட்டுகள் + நல்வாழ்த்துகள், ஹனி மேடம். :)

    பதிலளிநீக்கு
  3. மண்வாசம்? அப்படி ஒரு பத்திரிகையா?

    நன்றி, தகவலுக்கும், பகிர்விற்கும்.

    பதிலளிநீக்கு
  4. சிவப்புப் பட்டுக் கயிறு
    அருமையான பதிவுகளின் திரட்டு

    பதிலளிநீக்கு
  5. நன்றி டிடி சகோ

    நன்றி விஜிகே சார்

    நன்றி ஸ்ரீராம் ஆமாம் !

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...